Monday, January 24, 2011

போகிற‌ போக்கில்...

ம‌ச்சான்:என்ன‌ய்யா மாமா பொங்க‌ல் வேலையெல்லாம் ரொம்ப‌ சுறுசுறுப்பா பாக்குற‌ மாதிரி தெரியுது?

மாமா:ஏதோ என்னால‌ முடிஞ்ச‌தை செய்றேன்

ம‌ச்சான்:யோவ் முடிஞ்ச‌தை ஏய்யா திருப்பியும் செய்யிற முடியாம‌ இருக்கிற‌ வேலைய‌ பாப்பியா

மாம‌ன்:????

*****************************
ஃபைனான்ஸ் பார்ட்டி:அண்ணே, தேதி ப‌த்தாச்சு இன்னும் உங்க‌ வீட்டில‌ ப‌ண‌ம் க‌ட்ட‌ல‌..

மாமா:ரெண்டு நாள் பொறுத்துக்க‌ப்பா க‌ட்டிடுறேன்.

ம‌ச்சான்:யோவ் மாமா அவ்வ‌ள‌வோ பெரிய‌ ஆளாய்யா நீ, ப‌ண‌ம் க‌ட்ட‌ ரெண்டு நாள் ஆகுமா?அவ்வ‌ளோ ப‌ண‌மாய்யா வ‌ச்சிருக்க‌ ஊர் ப‌ய‌லுவ‌ க‌ண்ணு ப‌டுற‌துக்குள்ள‌ எல்லாத்தையும் க‌ட்டி வ‌ச்சிருய்யா.

மாமா:????

***************************
மாமா:சாப்பிட்ட‌திலேர்ந்து வ‌யித்த‌ வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு

ப‌ங்காளி:அதுக்குத்தான் சொன்னேன் நைட்டுல‌ முட்ட‌(முட்டை) சாப்பிடாதேன்னு.

ம‌ச்சான்:முட்ட‌(முட்டை) சாப்பிட்டதால‌ இருக்காது, வ‌யிறு முட்ட‌ சாப்பிட்டுருப்பாரு அதான் வ‌லிக்குது.

மாமா:????

******************************
ம‌ச்சான்:இந்த‌ சுப்ர‌ம‌ணி எத்த‌ன‌ சுவ‌ரேறி குதிச்சிருப்பான், அவ‌னுக்கு பாருய்யா அருமையான‌ பொண்டாட்டி , இப்ப‌டி திரியிற‌வ‌ய்ங்க‌ளுக்குதாய்யா ந‌ல்ல‌ புள்ள‌ய‌ளா சிக்கிருது ம்ஹீம்..தான் உண்டு சோலி உண்டுன்னு அமைதியா இருக்குற‌வ‌ய்ங்க‌ளுக்கு பாரு இத்து போன‌து நொந்து போன‌து ஓட்ட‌ ஒட‌ச‌லா வ‌ந்து அமையும்..

மாமா:ஆமாமா, நீயும் தான் எந்த‌ வ‌ம்பு தும்புக்கும் போகாம‌ இருக்குற‌, உன‌க்கு எந்த‌ ஓட்ட‌ ஒட‌ச‌லோ..

ம‌ச்சான்:யோவ் ஒந்த‌ங்க‌ச்சியாதான் க‌ட்டிக்க‌லாம்னு இருக்கேன் நீ இப்ப‌டி சொல்ற‌.

மாமா:?????