1.Me.. the first (தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)
ரொம்ப படபடப்போடு இருந்தான் அருண்.நேரம் நெருங்க நெருங்க இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறியது.
இன்னும் ஒரு சில நொடிகளுக்குள் சிக்னல் கிடைத்ததும் கையில் உள்ள பொருளை ராகுலிடம் எவ்வளவு விரைவாக ஒப்படைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொடுக்க வேண்டும்.
"சிக்னல் கிடைத்ததும் தாமதிக்காம கிளம்பிடு அருண், உனக்காக ராகுல் ரெடியா இருப்பான் எந்த சந்தர்ப்பத்திலேயும் பின்னால யாரும் வறாங்களான்னு திரும்பி திரும்பி பார்க்காம போயிட்டே இரு,எதாவது சொதப்பின நாம இத்தனை வருட எடுத்த பயிற்சி,போட்ட திட்டம் எல்லாத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடும்" என்று பாஸ் சொன்னதை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி சுடும் சத்தம்.
சத்தம் கேட்ட நொடியில் கையில் மரக்குழலோடு ராகுலை நோக்கி தனக்கான ட்ராக்கில் ஓடினான் அருண் அந்த மாநிலம் தழுவிய 4x100 ரலே ஓட்டத்தில்,நினைத்தது போலவே முதலிடம் பெற்ற தனது மாணவர்களை ஆரத்தழுவி கொண்டார் அவர்களுடைய கோச் பாஸ் என்கிற பாஸ்கர்.
2.வேலிதாண்டி விளையாடு:(தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)
புறநகர் பகுதியில் இருக்கும் அந்த வீட்டின் வெளிப்புற கேட்டில் பெரிதாக பூட்டு தொங்கியது.காம்பவுன்ட் சுவர் அருகே நின்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான் மணி.ஆள் நடமாட்டம் இல்லை.
"டேய் சீக்கிரண்டா"சொன்னான் அவன் கூட்டாளியான கதிர்.
"கதிரு நல்லா தெரியுமாடா,உள்ள யாரும் இல்லைன்னு"
"தெரியுண்டா,மூனு நாளைக்கு முன்னால எல்லோரும் எங்கேயோ கிளம்பி போனத நான் பார்த்தேன்,இன்னும் வரல"
"வாட்ச்மேன்?"
"இந்த வீட்டுக்கு வாட்ச்மேனே இல்லடா,சும்மா பேசிட்டே இருக்காம யாராவது வரதுக்குள்ள சுவரேறி குதிடா"
"சரிடா"என்று சொன்னபடியே ஒரே ஜம்பில் காம்பவுண்டில் ஏறி உள்ளே குதித்து, பரபரப்பாய் தேடினான், அந்த காம்பவுண்டுக்குள் தவறி விழுந்த கிரிக்கெட் பந்தை.
3. லஞ்சம் வாங்காத போலீஸ் ( தலைப்பு உபயம்-சின்ன அம்மிணி)
வாகனங்கள் அடர்த்தியாய் செல்லும் அந்த ஹைவேயில் ஜான்சனின் பைக் அசுர வேகத்தில் போய்கொண்டிருந்தது,பைக் சிட்டி லிமிட்டுக்குள் நுழைந்தும் அதே வேகம்.
பாதசாரிகள், மின்னல் வேகத்தில் கடந்த ஜான்சனை மிரட்சியோடு பார்த்தனர்.
வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கமால் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே போய்க்கொண்டிருந்த ஜான்சன் அடுத்து எதிர்பட்ட சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்கையும் மதிக்காமல் போனதைக் கண்ட ட்ராபிக் போலிஸ் அவனை விரட்டத் தொடங்கினார்.
கொஞ்சமும் சட்டையே செய்யாமல் போய்கொண்டே இருந்த ஜான்சனை போலிஸ் மிகவும் நெருங்கிவிட, இனியும் தாமதம் வேண்டாமென அவசரமாய் அழுத்தினான் விசைப் பலகையில் உதைப்பதற்கான கட்டளை பொத்தானை, கம்ப்யூட்டரில் ரோட் ரேஸ் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜான்சன்.
4.அ(ட)ப்பாவி ( தலைப்பு உபயம்-நிலோஃபர் அன்பரசு)
பொங்கல் சமயமென்பாதால் பஸ்ஸில் சரியான கூட்டம்.அனேக பயணிகளின் கையில் பர்சேஸ் செய்த பொருட்கள்.
"பையெல்லாம் பத்திரமா வெச்சுகோங்க" கண்டக்டர் அடிக்கடி எச்சரித்தபடியே இருந்தார்.
முத்து திருதிருவென முழித்துக்கொண்டே பஸ்ஸில் இருக்கும் எல்லோரையும் நோட்டமிட்டபடி இருந்தான்.
பஸ்ஸில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துகொண்டே திரும்பியவன் அந்த இளம்பெண் தன்னை கவனிப்பதை பார்த்தான்.தன்னைத்தான் பார்க்கிறாளா என்பதை அறிய வேறுபக்கமாய் முகத்தைத் திருப்பி சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தான்,இப்போது அவள் அருகே அமர்ந்திருக்கும் அவளது கணவனிடம் இவனைக் காட்டி ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தாள்.
"மாட்டினா தனது நிலை என்னவாகும்"என நினைத்தவன் வேகமாக நகர்ந்து படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டான்.
இப்போது பஸ்ஸில் உள்ள மேலும் சிலர் இவனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாய் உணர்ந்து அடுத்து வந்த ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்கு முன்னமே குதித்து"அப்பாடா" என பெரு மூச்சு விட்டான், பர்ஸை தொலைத்துவிட்டு டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் வித் அவுட்டில் வந்ததால் பயந்த முத்து.
கொசுறு:இங்கே இருக்கும் இந்த நான்கு குட்டி கதைகளுக்கும் என்ன தலைப்பு வைக்கலாமென்று சொல்லிட்டு போங்க நண்பர்களே.பொருத்தமான தலைப்பிற்கு பரிசெல்லாம் கிடையாது,ஆனால் நீங்கள் கொடுக்கும் தலைப்பையே சூட்டி அருகே தலைப்பு உபயம் என உங்கள் பெயரை வலைவெட்டில்(கல்லில் எழுதினா கல்வெட்டு,வலையில் எழுதினா வலைவெட்டுதானே ஹி ஹி) பொறித்துவிடுகிறேன்.அப்படியே கதையை பற்றிய உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க மக்கா.
கொசுறு புதுசு:தலைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
22 comments:
4. திருட்டு
3. வேகம்
2. தாமதம்
1. ஓட்டம்
பொருத்தமா இருக்கான்னு தெரியல.. ஆனா, கதைய படிச்சதும் என் மனசுல தோன்றின தலைப்புகள் இது தான்.. :))நான்கு கதைகளும் நன்று.. :))
ஹை நாந்தான் பஃஸ்ட் :))
@ஸ்ரீமதி,
போஸ்ட் பண்ணி பிரிவியூ பார்த்துகிட்டு இருக்கிறப்போதே பின்னூட்டம் வந்திடுச்சு. தமிழ்மணத்துல போஸ்ட்டை இணைத்துவிட்டு விரிவான பதில் சொல்றேன்.
1. வாழ்க்கையின் எல்லைக்கே ஓடி......
2. வாட்ச்மேன்
3. லஞ்சம் வாங்காத போலீஸ்
4. யார் திருடன்
1.கூட்டாஞ்சோறு
2.ஆளில்லா வீடு
3.ரேஸ் v1.4
4.அ(ட)ப்பாவி
எல்லா கதையுமே நல்லா இருக்கு. முதல் இரண்டு கதைய படிச்சப் பிறகு அடுத்த இரண்டு கதையுடைய முடிவை லேசாக யூகிக்க முடிகிறது.
//ஸ்ரீமதி said...
4. திருட்டு
3. வேகம்
2. தாமதம்
1. ஓட்டம்
//
இந்த அக்கா பயங்கரமான ஆளா இருப்பாங்களோ..?? தலைப்பு ரிப்பீட்டேய்
@ஸ்ரீமதி
நான்கு தலைப்புமே நல்லாயிருக்கு, பார்க்கலாம் வேறு புதிய தலைப்புகள் வருதான்னு.
1. திருப்பாச்சேத்தி
2.அரிவாள்
3. உங்களூரில்...
4. கிடைக்காதா?
@சின்ன அம்மிணி,
வருகைக்கும்,தலைப்பிற்கும் மிக்க நன்றிங்க.3வது தலைப்பு அருமை.
@Nilofer Anbarasu,
வாங்க அன்பரசு,
முதலிரண்டு தலைப்பும் நல்லா இருக்குங்க.
முதல் வருகைக்கும்,தலைப்பிற்கும் மிக்க நன்றிங்க.
// அடுத்த இரண்டு கதையுடைய முடிவை லேசாக யூகிக்க முடிகிறது.//
ஆமாம்,நான் பதிவிடும்போதே இரண்டிரண்டு கதைகளாக பதிவிடலாமா என யோசித்தேன்.
@நர்சிம்,
வாங்க நர்சிம்,
இவன் போட்ட மொக்கைக்கு என்னத்த தலைப்புன்னுதானே இந்த ரிப்பீட்டே போட்டுருக்கீங்க.
@ரமேஷ் வைத்யா,
வாங்க ரமேஷ் வைத்யா,
ரத்தம் வந்திடுச்சோ.
இதெல்லாம் கண்டுகிட்டா எப்படி.
திருப்பாச்சி அருவாளைவிட ஷார்ப்பான ஆயுதம் இந்த மாதிரி மொக்கை பதிவுகள்னு தெரியாதா?
முதல் வருகைக்கும் அர்த்தமுள்ள கோபத்திற்கும் மிக்க நன்றிங்க.
nice stories
நடோடி இலக்கியன்,
அட்டகாசம்.குமுதம் டைப் ஒரு பக்கக் கதை எழுதுவதற்க்கும் ஒரு skill வேணும்.வாழ்த்துக்கள்.
என் தலைப்புகள்:-
1.Me.. the first
2.வேலிதாண்டி(ய) வெள்ளாடு(விளையாடு)
3.நில் கவனி(விடியோவை) செல்
4.திருட்டுப்(டிக்கட்டில்லாப்)பயலே!
hi..
i think you have remember bike race, v had played in tambaram room and penned this story. am i right?
-viswa
@ரவி ஷங்கர்,
1,2,4 மூன்று தலைப்புகள் கலக்கல்.
//குமுதம் டைப் ஒரு பக்கக் கதை எழுதுவதற்க்கும் ஒரு skill வேணும்//
:(
நாடோடி இலக்கியன்,
நான் தலைப்பு கொடுக்கும்போது எடுத்துக் கொண்ட அளவுகோல்:-
1.கதை சம்பந்தப்பட்டதாக
2.Trendyயாக
3.அழகின் சிரிப்பு,பாவை விளக்கு,
பாண்டியன் பரிசு,ஒட்ட பந்தயம்,தூக்கு
மேடை,திருடன்,முதல் பரிசு,அவன் என்ன செய்து விட்டான்?... போன்ற இலக்கியத் (திராவிட?)தலைப்புகளைக்
“கண்டிப்பாகத்” தவிர்ப்பது.
அடுத்து.... உங்களிடம் சிறுகதை எழுதும் திறமை இருக்கிறது.மேலும்
சொல்ல மறந்து விட்டேன்.சிறு கதைகள் எழுதும் பதிவர்களைப் பற்றி
ஒரு கட்டுரை(6-12-08)எழுதினேன்.
அதில் நான் உங்கள் “மறக்கமுடியுமா” கதையை குறிப்பிட்டிருந்தேன்.
படித்தீர்களா? அந்தபதிவுலேயே கருத்து சொல்லலாம்.
பார்க்க -
http://raviaditya.blogspot.com/search/label/பதிவர்
நன்றி
@ரவிஷங்கர்
வாங்க ரவிஷங்கர்,
மறுவருகைக்கு மிக்க நன்றிங்க.
தலைப்பை தேர்ந்தெடுக்க இவ்வளவு விஷயம் இருக்கா?
"மறக்க முடியுமா" சிறுகைதயைத்தான் தமிழ்மண விருதுக்காக பரிந்துரை செய்திருக்கிறேன்.
வெருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
வாங்க விச்சு,
எப்படி இருக்கீங்க?
இந்த வலைப்பூவின் முகவரி எப்படி தெரியும்.
தாம்பரத்தில் இருந்தப்போ கம்யூட்டரில் கேம் விளையாடுவதை மட்டும்தானே செய்து கொண்டிருந்தோம்,வேற எதற்கும் யூஸ் பண்ணமாதிரி ஞாபகம் இல்லை.
1. சத்யம்
2. துள்ளுவதோ இளமை
3. நாயகன்
4. ரோஜாப்பு ரவிக்கைக்காரி
கதைகள் அனைத்தும் தூள்!!!
@சதிஸ்,
வாங்க சதிஸ்,
நீங்க பட்டியல் போட்டிருக்கிற படங்களெல்லாம் உங்களுக்கு பிடிக்காத படங்களா? சத்யம் படத்தை சொல்லியிருக்கிறத பார்த்தா ரொம்ப மொக்கையா எழுதிட்டேனோ.:(
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
தவறு! நினைத்ததா? நடந்ததா?
எல்லாத்துக்கும் பொதுவான தலைப்பு.
@வெங்கட்ராமன் ,
வருகைக்கும்,தலைப்பிற்கும் மிக்க நன்றிங்க.
U had forgot I think...
When u are in seoul, u gave this blog address and i saved in my system's favourites.
In tambaram v used computer for 2 things playing games and watching movies... :-)
Post a Comment