விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று பெரிதாய் எதிர்பார்ப்பின்றி சென்றதாலோ என்னவோ படத்தின் முதல் பாதி பரவாயில்லைங்கிற மாதிரி இருந்தது.பிரபுதேவாவை "கேசினோ ராயல்" படம் ரொம்ப கவர்ந்திருக்கும் போல இடைவேளைக்கு சற்று முன்னும்,பின்னும் வரக்கூடிய காட்சிகளில் ராயலின் சாயல் தெரிகிறது.
"கதை"- தந்தையை தேச துரோகி என்று வீண்பழி சுமத்தி கொன்றவர்களை மகன் பந்தாடும் மற்றுமொரு ரிவெண்ஜ் ஸ்டோரி,அதற்காக ஒரு தெலுங்குத் தனமான ஃபிளாஷ்பேக்.ஓரளவுக்கு ஓடக்கூடிய கமர்சியல் விஷயங்கள் இருக்கும் இப்படம் ஊத்திக்கொண்டால் அதற்கு இந்த பிளாஷ்பேக்கே காரணமாய் இருக்கும்.
விஜய் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான டான்ஸ், காமெடி, சண்டை என தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.காதல் காட்சிகளில் நயன்தாராவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜை சந்திக்கும் இடங்களில் பட்டையை கிளப்பாவிட்டாலும் ஓரளவிற்கு ஏலக்காயையாவது கிளப்பும்படி சுவராஸ்யமாகவே செய்திருக்கிறார்.
நயன்தாரா, விஜய் படங்களில் நாயகிகள் செய்யும் அத்தனை லூஸ் தனங்களையும் செய்கிறார்.சரக்கடித்துவிட்டு ரகளை செய்யும் இடத்தில் உண்மையிலேயே நன்றாக நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து அழகாகவே தெரிகிறார்.எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.
வடிவேலுக்கு இந்த படம் ஒரு பெரிய திருஷ்டி.மொக்கையின் உச்சம். ஆரம்பத்தில் வரும் ஓரிரு காட்சிகளில் கூட லேசாக சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தது.போகப் போக ம்ஹும் ஒன்னும் வேலைக்காகல. வடிவேலுவின் பாணியிலே சொன்னால் ஆரம்பத்திலேயே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பேக்ரவுண்ட் மியூசிக்கில் சில இடங்களில் பில்லாவை நினைவூட்டுகிறது,ஒரு வேளை படத்தின் சில காட்சிகளும் பில்லாவை போன்றே இருப்பதாலோ என்னவோ.(பில்லாவில் பென்டிரைவ் இங்கே டிஸ்க் தேடும் காட்சிகள்).
படத்தில் பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ் இன்னும் சில அல்லக்கைகளும் வில்லன்களாக நடமாடுகிறார்கள் மேலும் இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மகன் விஜயை உயிரோடு புதைக்கும் காட்சியில் அப்பா விஜய் புதையுண்ட இடத்திலிருந்து புறப்படும் புயல்,பிரபுதேவா நடனத்தில் மட்டுமே புயல் என்பதை காட்டுகிறது.குருவி ரயில்வே ட்ராக் ஜம்ப்பைவிட கொடுமை, கொன்னு கொலையில விடுரானுங்களேன்னு இருக்கு இந்த காட்சி.(பிரபு தேவா சார் நீங்க கதையை பற்றிதான் யோசிக்கல அட்லீஸ்ட் எடுக்க போறது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்).
ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜயின் கெட்-அப் "என்ன கொடுமை சார் இது" ரகம்.போக்கிரியின் இறுதில் வாட்ச்மேன் மாதிரி வருவாரே,இதில் ராணுவ உடையில் மற்றபடி படத்தில் காமெடி சீனில் வராத சிரிப்பு சத்தம் இந்த காட்சியில் தியேட்டரில் பரவலாக கேட்டது.
மொத்தத்தில் வில்லு குருவி அளவிற்கு மோசமில்லை.அப்போ பார்க்கலாமான்னு கேட்டால் எவ்வளவோ பார்துட்டோம்ங்கிற மாதிரி இருப்பீர்களேயானால்,"beware of flahback" என்ற எச்சரிக்கையோடு ஒரு முறை பார்க்கலாம் என்பேன்.
டிஸ்கி:பாக்ஸ் டீக்கெட் எடுத்துவிட்டு பஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்,கூட வந்தவரிடம் 40 ரூபாய் வேஸ்ட்டா கொடுத்திட்டோமேன்னு சொன்னேன்,அவரோ படம் முடிந்த பிறகு , இருனூறு ரூபாயும் வேஸ்டா போச்சேடான்னு சொன்னார்.

12 comments:
எங்கே? கமலாவில பார்த்தீங்களா?
//எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.//
இதையேதான் என் நண்பன் சொன்னான் "கொடுத்த காசுக்கு நயந்தாரா மட்டும் ஓகே"
பாவமுங்கண்ணா...........
@முரளி கண்ணன்,
இல்லீங்க,நான் இப்போ சென்னையில் இல்லை.ஏன் நீங்க அங்கேதான் புக் பண்ணியிருக்கீங்களா?
@அத்திரி,
நயன் தாராவுக்காகவே படம் ஓடும் ,பொண்ணு சும்மா ஜில்லுன்னு இருக்கு.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.
அபூர்வ சகோதர்கள்..!!!
தாய் நாடு
பில்லா
கேசினோ ராயல்
அச்சோ பாவம் அண்ணா நீங்க... :)))
இப்படி தெரிந்தே அடிபடும் உங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது...
வேட்டைக்காரனையும் நீங்கள் விடப்போவதில்லையென்றே நம்புகிறேன். இதைப்போன்றே முன்பாகவே பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...
மிக்க அன்புடன் நித்யகுமாரன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நித்தியகுமாரன்.
@ஸ்ரீமதி,
:(
(வேற என்னத்த சொல்றது.)
@SUREஷ்,
:(
@மின்னுது மின்னல்,
இவ்ளோ இருக்கா?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மின்னுது மின்னல்.
Post a Comment