பொதுவாக பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை பெரும்பாலும் வாசிப்பதில்லை.விகடனில் வெளியான கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் கொஞ்ச வாரங்கள் தொடர்ந்து வாசித்துவிட்டு பிறகு புத்தகம் வந்த பிறகே முழுமூச்சாய் வாசித்து முடித்தேன்.ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் பொறுமை இருப்பதில்லை.
அதே போன்றே வலைப்பூக்களிலும் சிலர் எழுதும் தொடர் புனைவுகள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன ஆனாலும் அவற்றையும் தொடர்ந்து வாசிப்பதில்லை.முழுதாக எழுதி முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன்.(உ.ம்:நர்சிம் அவ்ர்கள் எழுதிவரும் மாறவர்மன்).இப்படி தொடர் கதைகளை வாரா வாரம் காத்திருந்து வாசிக்கும் பொறுமையில்லாத எனக்கு என்னையுமறியாமல் ஒரு தொடர்கதையை தொடந்து ஏழு வாரமாக வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரபலத்தின் எழுத்து.
பொதுவாக வர்ணனை என்றாலே தாண்டி போய்விடும் என்னை இவரின் வர்ணனைகள்,"எங்கே இதை படிக்காமல் தாண்டி சென்றுவிடு பார்ப்போம்? என்று சவால் விடக்கூடிய வகையில் ரசனையாக இருக்கிறது. வாசித்த பின் அந்த காட்சியை ஒட்டிய கற்பனைகளில் ஒரு சில நிமிடங்களாவது வாசிப்போரை சஞ்சரிக்க வைத்துவிடுகிறார்.
அவரின் கதாபாத்திரங்கள் என்னென்ன உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறதோ அதே உணர்ச்சிகளை வாசகனுக்கும் துள்ளியமாக கடத்துகிறது அவரின் எழுத்தின் ஆழுமை.
"விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு. "
"இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்"
"போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்"
"அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்."
"மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்"
"மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன"
"இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்"
"அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்."
மேலே குறிப்பிட்டிருப்பது அக்கதையில் வரும் ஒரு சில வர்ணனைகள்,ஒரு சிலருக்கு இப்போதே புரிந்திருக்கும் எந்த கதையை பற்றி சொல்கிறேனென்று. ஆம் இயக்குனர் திரு.ஷண்முகப்ரியன் அவர்கள் தனது வலைப்பூவான படித்துறையில் எழுதிவரும் "கன்னிகா"வை(வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்) இன்னமும் நிறைய பேருக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு ஆர்வத்தில்தான் சூரியனுக்கு டார்ச் அடிக்கும் வேலையாக இந்த பதிவு. மேலும் தொடர் கதை மட்டுமல்லாமல் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை மிக ஆழமான கருத்துக்களோடும் எழுதிவருகிறார்.அவரின் வலைபூவிற்கு இந்த வழியாக போங்க.
5 comments:
:)))
தலைப்பு நல்லா இருக்கு.. :)) உங்க பெருந்தன்மைய காட்டுது.. :))) மத்தபடி, அந்த தொடர் இதுவரைக்கும் படிச்சதில்ல.. :)) எனக்குமே தொடர்களை எல்லாம் காத்திருந்து படிப்பது பிடிக்காது.. ஒரு நாள் உட்கார்ந்து எல்லாத்தையும் படிப்பேன்.. :)) (அப்போ நீ மட்டும் எழுதலாமான்னு கேட்கக் கூடாது அண்ணா.. ;)))
@ஸ்ரீமதி,
வாங்க ஸ்ரீமதி,
ஷண்முகப்பிரியன் அவர்களின் "கன்னிகா"வை நான் ஒவ்வொரு பாகமாக காத்திருந்து படிக்கவில்லை,இரண்டு நாட்களுக்கு முன் அவர் வலைப்பக்கத்தில் உலவியபோதுதான் கன்னிகா என் கண்ணில் பட்டாள்.இதுவரை ஏழு பாகம் எழுதிருக்கிறார் ஒரே மூச்சாக எழுபகுதியையும் வாசித்துவிட்டு அதன் கிறக்கத்திலேயே கன்னிகாவைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்து இன்று வலையேற்றினேன் இந்த பதிவை.முடிந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
வருகைக்கு நன்றி.
இது வரை படித்தது இல்லை.. படிக்கிறேன்.. அறிமுகத்துக்கு நன்றி நண்பா..
@கார்த்திகைப் பாண்டியன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.
உங்க வலைபக்கம் அசத்தல் நண்பா,கேள்வி பதில் பகுதி கலக்கலா இருந்தது.
Post a Comment