தெருவின் துவக்கத்தில்
ஒயின்ஸை நோக்கி தொடங்கிய பயணம்
இடவலமாய் மாறிமாறி குலுக்கியும்
இடைஇடையே இறக்கும் சரக்கில்
இறுதிவரை நிகழவே இல்லை
எதிர்பார்த்த போதை..!
முதல் ரவுண்டின் துவக்கத்தில்
நட்பின் மேல்
துளிர்க்கும் பாசமும் பிடிப்பும்
பற்றுதலும் பிரியமும்
மூன்றாவது ரவுண்டில்
முற்றிலும் நீர்த்துபோகிறது
எந்த மரியாதையுமின்றி....
எல்லா ஒயின்ஸின் வாசலிலும்
வாங்குவதில் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது எல்லோரும்
வாங்கும் முன் வாங்க வேண்டும்
சங்கல்பம் நினைவிற்கு வருகிறது
வழக்கம் போல் முட்டிமோதி
வாங்க யத்தனிக்கும் நேரத்தில்..!
நன்றி கதிர்.
9 comments:
வாழ்க்கைப் பயணத்தில்...
அட்ச்சு விளையாடுங்க....
||பழமைபேசி said...
அட்ச்சு விளையாடுங்க.||
வல்லினம் மிகாதுங்க மாப்பு
’ட்’-க்கு பிறகு ’ச்’ வரலாமா
எப்ப்ப்ப்ப்பூடி!!!!
ஓ ப்-க்கு பிறகு ப் வரக்கூடாதா!?
பாரி..
கவிதை செம மப்புய்யா..
மூன்றாவது ரவுண்டில் நீர்த்துப்போவது.. ம்ம்ம்ம் நல்ல அனுபவம் தான் போல
வீதியோர டாஸ்மாக்கில்
வீடு நோக்கி தொடங்கிய
போதைப் பயணம்
இடவலமாய் மாறிமாறி நிறைகிறது
இடையிடையே விடும் சவுண்டில்
இறுதிவரை இறங்கவேயில்லை
ஏறிய போதை...
போதையின் துவக்கத்தில்
இடுப்புக்கு மேல்
இறுகக்கட்டிய லுங்கியும்
இஸ்திரி சட்டையும்
வெளிவருகையில்
முற்றிலும் அவிழ்ந்து போகிறது
எந்த மரியாதையுமின்றி..
எல்லா வைன்ஸின் கவுண்டரிலும்
ஏற்றிக் கொள்ளப் பரபரப்பு வியாதியாய்
இந்த முறையாவது வாந்தியெடுக்காமல்
போய் படுத்துவிட வேண்டும்
சங்கல்பம் நினைவுக்கு வருகிறது
வழக்கம் போல் வீதியோரம் விழுந்து
வாந்தியெடுக்கும் தருணத்தில்.
நன்றி பழமைபேசி.
நன்றி கதிர்,
( //’ட்’-க்கு பிறகு ’ச்’ வரலாமா//
:))))))))))))))) )
நன்றி வானம்பாடிகள்,(இதுதான் எதிர் கவுஜ.பின்னிட்டீங்க சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணி வந்திடுச்சு).
இலக்கியன்
கவிதை நல்லாயிருக்கு.
கதிர் அண்ணா எழுதுன கவிதைக்கு நீங்கள் அப்புறம் வானம்பாடிகள் ஐயா என் ஆளாளுக்கு கவுஜை பின்னுறீங்க போங்க.
என் மின்னஞ்சல் முகவரி: kumar.rms@hotmail.com
நன்றி சே.குமார்,(ஹி ஹி சும்மா லுலுலாயிக்காக இந்த எதிர் கவுஜ,
மின்னஞ்சல் முகவரி எங்கே என டைப்பிக் கொண்டிருக்கும்போதே அடுத்த கமெண்ட்டில் அனுப்பிடீங்க. நன்றி)
ஒருமுறை வந்து பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!
Post a Comment