Sunday, December 28, 2008

மலையாள படங்களும்,பி.வாசுவும் பின்னே ஒரு அப்பாவி ரசிகனும்..!

1985லிருந்து 1995 வரை மலையாள சினிமாவின் பொற்காலம் என்பார்கள், அந்த காலகட்டத்தில் பத்மராஜன், பரதன், ஐ.வி.சசி, சிபிமலயில், ஃபாசில், பிரியதர்ஷன் என பெரும் இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள்தான் இன்றளவும் மலையாள சினிமாவுக்கென்று ஒரு மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கிறதென்றால் மிகையில்லை.

நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்,தூவானத் தும்பிகள், தசரதம், தேவாசுரம், மணிசித்ரதாழு,பரதம், அமரம், ஒரு வடக்கன் வீர கதா,தனியாவர்த்தனம் என கணமான கதைகளை கொண்ட படங்களும்,கிலுக்கம்,சித்ரம், வந்தனம், வடக்கு நோக்கி எந்திரம்,நாடோடிக் காட்டு,அக்கரே அக்கரே போன்ற இன்றைக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படங்களும், கோபால கிருஷ்ணன் எம்.ஏ, மிதுனம், வரவேழ்ப்பு, வெள்ளானக்கலுடே நாடு போன்ற நடுத்தர குடும்பங்களின் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக அனுகிய படங்களும் இந்த காலக் கட்டத்திலேயே வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன.

தமிழில் இதே காலகட்டத்தின் பிற்பகுதியில் செந்தமிழ்ப் பாட்டு, வால்டர் வெற்றிவேல் என மிகவும் தரமான படங்களை(?!!) தந்து கொண்டிருந்தார் இயக்குனர் பி.வாசு.(இந்த படங்களெல்லாம் எப்படி வெற்றிப் படங்களாச்சுங்கிறது இன்றுவரை ஒரு புரியாத புதிர்தான்).வாசு சார், நீங்க ஒரு நல்ல ரசிகர் என்பது மணிசித்ரதாழு, பரதம், கத பறயும்போள் ஆகிய படங்களை தமிழில் கொண்டு வந்து நல்ல படங்களை எல்லோரும் ரசிக்க வேண்டுமென்கிற உங்க ஆர்வத்திலேயே தெரிகிறது,ஆனால் நீங்க என்ன செய்தீங்க?

மேற்சொன்ன மலையாளப் படங்கள் தமிழில் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டு, அந்த சமயத்தில் முதலில் உங்க பார்வை பதிந்தது "பரதம்"படத்தில்,இந்த படத்துக்காகத் தான் மோகன்லால் முதல் தேசிய விருதை பெற்றார்.அண்ணன் தம்பிக்கு இடையேயான ஈகோ பிரச்சினையை மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசிய இந்த படத்தில் மோகன்லாலும், நெடுமுடி வேணுவும் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது அந்தக் குடும்பத்தில் நம்மையும் ஒரு நபராக உணரச் செய்யும்படி இருக்கும் அப்படத்தின் திரைக்கதை,ஆனால் தமிழிலில் நீங்களும்,கார்த்திக்கும் நல்லாவே மொக்கை போட்டிருப்பீர்கள்.(கார்த்திக் ஒரு நல்ல நடிகர் ஆனாலும் வாசு படத்தில் மோகன்லாலே நடித்தாலும் மொக்கை போட்டுத்தானே ஆகணும்.) படத்தை நீங்க ரீமேக் செய்யப் போகும் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தபோதே அந்த படத்தின் ரிசல்ட்டும் தெரிந்துவிட்டது, நான் நினைத்தைப் போன்றே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ரணகளமாக்கி "சீனு" என்ற பெயரில் வெளியாகி அட்டர் ஃபிளாப்பானது.பரதம் படத்தை இயக்கிய சிபி மலயில் சீனுவை பார்த்திருந்தால் கண்டிப்பாக ரூம் புக் பண்ணியிருப்பார்.

அத்தோடு விட்டீர்களா அடுத்தது பாசிலின் மணிச்சித்தரதாழு, மதுமுட்டம் அவர்கள் எழுதிய இந்த கதையை ஃபாசில் அவர்கள் ரொம்பக் கவனமாக கையாண்டிருப்பார்,கொஞ்சம் பிசகினாலும் காமெடியாகிவிடக் கூடிய அபாயம் உள்ள ஸ்கிரிப்ட்,split personality என்னும் ஒருவகை மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஷோபனா கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருப்பார், ஆனால் உங்க சந்திரமுகியில் ஜோதிகா நன்றாக நடித்திருப்பதாக பலரும் கூறினார்கள், நானும் ஒத்துக்கொள்கிறேன் என்ன ஒன்னு ஷோபனா Split personality என்ற ஒரே ஒரு நோயால் பாதிக்க பட்டவராய் நடித்திருப்பார், ஜோதிகாவோ மல்டிபிள் டிசீஸ் உள்ளவரை போல் நடித்திருப்பார்.(ஜோதிகாவைத் தப்பு சொல்ல முடியாது,எல்லாம் உங்க ஆசிர்’வாதம்’ ). இந்த படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ரஜினி,நயந்தாரா மற்றும் விஜயகுமாரின் காதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் அச்சு அசலாக ஆறாம் தம்புரான் படத்திலிருந்து உருவப்பட்டது. "அத்திந்தோம்"பாடலுக்கான காட்சியும் அப்படியே. கிட்டத்தட்ட சந்ரமுகியின் முதல் பாதி ஆறாம் தம்புரான்,இரண்டாம் பாதி மணிச்சித்ரதாழு. ஒரு சீரியசான படத்தை செம்ம காமெடியாக்கும் வித்தை உங்களுக்கு ரொம்ப இயல்பா கைவருது வாசு சார்,ஹாட்ஸ் ஆப் டூ யூ. இந்தக் கதையை உங்க சொந்த ஸ்க்ரிப்ட்ன்னு சொல்லி உச்சபட்ச காமெடியெல்லாம் வேற பண்ணீங்க. இந்த ஸ்டேட்மெண்டை கேட்ட மதுமுட்டம் எந்த சுவத்துல முட்டிகிட்டாரோ.

கதபறயும் போள் படத்தை குசேலனாக்கி குதறிய கதையை ஏற்கனவே வலையுலகில் பலமுனைத் தாக்குதல் நடந்திருப்பதால் நான் வேறு தனியாச் சொல்ல வேண்டியதில்லை.

மலையாளப் படங்களின் ரசிகரான சுந்தர்.சி உங்களை போன்று ஒரு முழு படத்தையும் ரீமேக் செய்வதில்லை,மாறாக பல வெற்றிப் படங்களிலிருந்து ஒவ்வொரு சீனாக உருவி ஒரு புது படத்தையே ரசிக்கும்படி கொடுத்து விடுவார். உதாரணமாய் "உள்ளத்தை அள்ளித்தா". பழைய சாபாஷ் மீனாவில் தொடங்கி கிலுக்கம்,வந்தனம், சித்ரம் ஆகிய படங்களிலிருந்தெல்லாம் காட்சிகளை சுட்டு அதை இன்னும் மெருகேற்றி ரசிகர்களின் உள்ளத்தை அள்ளினார்.உங்களால முடிஞ்சா அந்த மாதிரி செய்யுங்க, வேண்டாம் வேண்டாம் பேசாம நீங்க நடிக்கிறதையே கண்டினியூ பண்ணுங்க சார்.அதைக்கூட பார்த்துடலாம்.ஆனா மறுபடியும் நீங்க .... சரி வேண்டாம் இத்தோட நிறுத்திக்கிறேன்.


நேத்து இரண்டாவது முறையாக "தசரதம்" படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது,இந்த மாதிரி நல்ல படங்களை பார்க்கும்போது கூடவே ஐயையோ எங்கே வாசுவின் பார்வை இந்த மாதிரி படத்தின் மேலெல்லாம் விழுந்து விடுமோன்னு பயமாகவும் இருக்கிறது. நான் நடைவண்டியில் நடை பழகிய காலத்தில் வெளிவந்த "பன்னீர் புஷ்பங்கள்" என்ற அருமையான படத்தை சந்தான பாரதியோடு இணைந்து தந்த நீங்க அதன் பிறகு எதாவது ஒரு நல்ல படம் கொடுத்துடுவீங்கன்னு ஒவ்வொரு முறையும் நானும் எமார்ந்தது தான் மிச்சம் இப்போ எனக்கு தலைமுடியெல்லாம் ஒன்னு ஒன்னா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு, என்னாலேயே முடியல அடுத்த ஜெனரேஷன் பசங்க பாவம் சார். எனவே வாசு சாரிடம் நான் வைக்கும் ஹம்பிள் ரிக்வெஸ்ட் இதுதான் தயவு செய்து இனிமேல் நீங்க நடிக்கிறத மட்டும் கண்ட்டினியூ பண்ணுங்க சார்.

கொசுறு 1:லவ் பேட்ஸ் திரைப்படம் வெளிவந்த போது ரசிகர்கள் அடித்த கமெண்ட்,"ஒரு வாசு டைரக்ட் பண்ணாலே தாங்காது,இது நூறு வாசு சேர்ந்து இயக்கிய படம்டோய்". :)

கொசுறு 2:உங்க இயக்கத்தில் வெளியாகி சரியாக போகாத "இது நம்ம பூமி" படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது என்பதையும் நான் இங்கே சொல்லிக்கிறேன்.

24 comments:

Thanjavurkaran said...

நண்பரே,
எங்கிருந்தோ வந்தான் திரைப்பட இயக்கம் P.வாசுவின் நண்பர் சந்தான பாரதி என்றே நினைக்கிறேன்.
ஒரு நல்ல படத்தை எவ்வளவு மோசமாக ரீமேக் பண்ண முடியும் என்பதற்கு உதாரணம் இந்த படம். சத்யராஜ் மற்றும் ரோஜாவின் நடிப்பும் அப்படியே.

பிரபு said...

சித்ரம் படத்தை "எங்கிருந்தோ வந்தான்"ங்கிற பெயரில் தமிழில் உங்களின் திருக்கரங்களால் ரீமேக் என்ற பெயரில் "சித்திர"வதை செய்து,இப்படி ஒரு படம் தமிழில்வந்துச்சான்னு கேட்கும் அளவிற்கு வந்தே சுவடே தெரியாமல் தியேட்டரைவிட்டே ஓடச் செய்த சாதனையைச் செய்தீர்கள்

/////////

நிஜமாத்தான் கேட்கிறேன் அப்படியொரு படம் வந்ததா?

பிரபு said...

வாசுவை திருத்தவே முடியாது
நிச்சயம் மற்றொரு மளையாலப்படத்தோடு மீண்டும் வருவார்

கே.ரவிஷங்கர் said...

சார்,

நல்லா இருக்கு பதிவு.

ஆனா ஒன்னு,நம்ம ரசன வேறு, மலையாள ரசன வேறு.அதனாலதான்
அந்த படங்கள் tamlish ஆயிடுது.

முரளிகண்ணன் said...

தலைவா அருமையான பதிவு.

சத்யராஜ், ரோஜா நடிக்க எங்கிருந்தோ வந்தான் படமும் மலையாள தழுவலே. இங்கு கொத்து புரோட்டா போட்டிருப்பார்கள். சத்யராஜுக்கு பதில் கார்த்திக் நடித்திருந்தால் கூட தப்பித்திருக்கும்

SUREஷ் said...

அண்ணா....... லாவாரிஸ்ன்னு ஒரு படம். பயங்கர சோகம். பார்க்கறவங்கல்லாம். ஒரே அழுகை. அனாதைங்கற உணர்வு எப்படி இருக்கும் அப்படிங்கற உணர்வை மொழிதெரியாத ஆட்களைக் கூட ஏற்படுத்தும் படம். இவன் தன் மகனாய் இருக்குமோ என்ற உணர்வுடன் அனுகும் தன் தந்தை.. பார்ப்பவர்கள் அனைவரையும் கதற அடிக்கும் படம்..


ஆனால் அதே படம் தமிழில் வந்த போது செத்துப் போன தாயைக் காப்பாற்றினார் வாசு. கதாநாயகனை ஒரு மகிழ்ச்சியான மனிதனாக பார்ப்பவர்களை சந்தோஷமாக வைத்திருந்தார். வாசு.. தமிழில் அந்தப் படத்திற்குப் பெயர் பணக்காரன்.

SUREஷ் said...

யாரு கண்டா....


நாந்தான் ஃபர்ஸ்டாஆ.......

அருண்மொழிவர்மன் said...

அது தவிர படங்களில் மிகவும் பிற்போக்கான விடயங்களை தந்தவரும் இவர்தான்... அதாவது செண்டிமெண்ட்கள்.... வெள்ளை புடவை... சின்னதம்பியில் மனோரமாவுக்கு திருமணம் செய்ய முயுலும் காட்சி என்ற்..

ஆளவந்தான் said...

//
ஒரு வாசு டைரக்ட் பண்ணாலே தாங்காது,இது நூறு வாசு சேர்ந்து இயக்கிய படம்டோய்"
//

அடி ரொம்ப பலமா இருந்துச்சோ.

நான் ஆதவன் said...

அந்தாளு இதெல்லாம் படிச்சாலும் திருந்தமாட்டாரு..
இப்ப திண்டுக்கல் சாரதின்னு வந்திருக்க படம் சீனிவாசன் நடிச்ச "வடக்கு நோக்கி எந்திரம்" படத்தோட ரீமேக். ஆனா படத்தை நல்லாதான் எடுத்திருக்காங்க..

போன வாரம் கைரளில "தசரசம்" பார்த்தேன். சூப்பர்ங்க..க்ளைமேக்ஸ்ல மோகன்லால் நடிப்பு ரொம்ப அருமையா இருந்தது.

முத்துகுமரன் said...

//கொசுறு 1:லவ் பேட்ஸ் திரைப்படம் வெளிவந்த போது ரசிகர்கள் அடித்த கமெண்ட்,"ஒரு வாசு டைரக்ட் பண்ணாலே தாங்காது,இது நூறு வாசு சேர்ந்து இயக்கிய படம்டோய்". //

இந்த படத்தின் இந்தி தழுவல் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாகவும் ஹிரித்திக் ரோசனுக்கு முதல் படமாகவும் அமைந்தது என்பது வரலாற்று சோகம்!

வாசுவை மதுரைக்காரர்கள் வடை வாசு என்றழைப்பார்கள் :-)

SurveySan said...

:)

hahaha.

நாடோடி இலக்கியன் said...

@தஞ்சாவூர்காரன்.
வாங்க தஞ்சாவூர்காரன்,
"எங்கிருந்தோ வந்தான்" P.வாசு இயக்கமென்றே இதுநாள்வரை நினைத்திருந்தேன்,அந்த படத்தை பற்றி எழுதியதை நீக்கிவிட்டேன் நண்பா,இருந்தாலும் அந்த படத்தின் ரீமேக்கும் பி.வாசு இயக்கியது போல்தான் இருக்கும் :)) .தகவலுக்கு நன்றி.

நாடோடி இலக்கியன் said...

@பிரபு,
ஆமாங்க "எங்கிருந்தோ வந்தான்" வந்த வேகத்திலேயே போயிட்டான். ஆனால் இயக்கம் வாசு இல்லையாமே? :(


//நிச்சயம் மற்றொரு மளையாலப்படத்தோடு மீண்டும் வருவார்//
அப்படி எதுவும் நடந்து விடக்கூடாதுங்கிற பயத்திலதானே இந்த பதிவு.:((

நாடோடி இலக்கியன் said...

@ கே.ரவிஷங்கர்,
வாங்க ரவிஷங்கர்,
மலையாள ரசனை வேறு நம்ம ரசனை வேறு என்பதை ஒத்துக்கொள்கிறேன், "தூவான தும்பிகள்" என்று ஒரு படம்,ரொம்ப அருமையா இருக்கும் ஆனால் தமிழுக்கு ஒத்துவராது.ஆனால் பி.வாசு ரீமேக் செய்த படங்கள் எந்த மொழியிலும் ஹிட்டாகக் கூடிய கதைகளே என்பது என் தாழ்மையான கருத்து.

நாடோடி இலக்கியன் said...

@முரளிகண்ணன் ,
வாங்க முரளி,

ஆமாங்க,அந்த படத்தை பற்றியும் எழுதி,இயக்கம் வாசு இல்லையென்று தெரிந்த பிறகு பிறகு நீக்கிவிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

@SUREஷ் ,

ஹிந்தி படத்தையுமா?

பணக்காரன் படத்தை பற்றிய புதிய தகவலுக்கு நன்றி.
வாசு முதன் முதலாய் தனியாக இயக்கிய படம் பணக்காரன் என்று நினைக்கிறேன் சரியா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Anonymous said...

மணிசித்ரதாழே அதன் உச்சகட்டம் வரையில் மிகவும் நகைசுவையாகத்தான் நகரும். சோபனா ஒரு கையால் அந்த கட்டிலை தூக்கும் வரையில் அந்த நகைசுவை தொடரும். பாசிலின் நகைசுவைகள் அதில் அசாத்தியாக இருக்கும். ஆனால் சந்திரமுகியில் என்ன கொடுமை சரவணா என்று சொன்னது கூட நகைசுவையாக போனதை பார்க்கும் போது மிகவும் வேதனையாத்தான் இருக்கிறது.

பனிமலர்.

SPIDEY said...

சென்ற வாரம் சன் மியூசிக் இல் சந்திரமுகி வெற்றி விழா ஒளிபரப்பானது அதில் வாசு பின் வருமாறு கூறினார்
நான் ரஜினியிடம் சந்திரமுகி script கூறியவுடன் ரஜினி சொன்னார் "வாசு இது கதை அல்ல காவியம்"
இவருக்கு காவியம்ன என்னன்னு தெரியுமான்னு யாரவது கேட்டு சொல்லுங்க
என்ன கொடுமை சரவணன் இது

சரவணகுமரன் said...

:-))

narsim said...

அலசல் அள்ளுதே தலைவா.. நல்ல பதிவு.. அந்த மாதிரி கவிதை.. கவிதை மாதிரி மேட்டரும் டக்கர்..

KVR said...

பன்னீர் புஷ்பங்கள் இவரும் சந்தான பாரதியும் இணைந்து இயக்கிய படம் தானே? தனியாக இயக்கியது பணக்காரன் தான். அப்பொழுது வரிசையாக ரஜினி படங்கள் அமிதாப்பின் இந்தி படங்களின் ரீமேக்காக வெளிவந்த நேரம்.

பல நல்ல மலையாளப் படங்களைப் பார்க்கும்போது நானும் வாசுவை நினைத்து உங்களை போலவே பயந்திருக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

@அருண்மொழிவர்மன்,
மிகச் சரியாக சொன்னீர்கள்,
தாலி செண்ட்டிமென்டை வைத்து தமிழனின் ரசனையை காலி செய்ததில் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க அருண்மொழிவர்மன்.


@ஆளவந்தான்,

//அடி ரொம்ப பலமா இருந்துச்சோ.//

ஐயையோ கொல கொடுமை, தஞ்சாவூரில் பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகில் உள்ளதால் சாந்தி கமலா தியேட்டரில் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் குறைந்தது 20 நாட்கள் ஓடும்,ஆனால் லவ்பேட்ஸ் அங்கே 4 நாட்கள் மட்டுமே ஓடி பறந்து போன சரித்திரத்தை படைத்திருக்கிறது.

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஆளவந்தான்.


@சர்வேசன்,
வாங்க சர்வேசன்,
வருகைக்கும்,சிரிப்பிற்கும் மிக்க நன்றிங்க.

@முத்துகுமரன்,

//இந்த படத்தின் இந்தி தழுவல் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாகவும் ஹிரித்திக் ரோசனுக்கு முதல் படமாகவும் அமைந்தது என்பது வரலாற்று சோகம்!
//
:((

ஹா ஹா,வடை வாசு நல்லா இருக்குங்க.

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க முத்துகுமரன்.

@நான் ஆதவன்,
வாங்க நான் ஆதவன்,
தசரதம் பார்த்துட்டீங்களா சூப்பர்,கிளைமாக்ஸ் மட்டும் இல்லீங்க ஆரம்பத்திலிருந்தே பின்னியெடுத்திருப்பார். என்னை பொறுத்த வரைக்கும் மோகன்லால் நடிப்பில் இந்த படம்தான் பெஸ்ட் என்பேன்.

@பனிமலர்,
வாங்க பனிமலர்,
மணிச்சித்ரதாழில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காட்சிவரை காமெடியாகவே இருக்கும், அதன் பிறகு படத்தின் சீரியஸ்னஸ் நம்மையும் தொத்திக்கொள்ளும், ஆனால் சந்ரமுகியில் அந்த காட்சிக்கு பிறகுதானே பெரிய பெரிய காமெடியெல்லாம் ஆரம்பிக்கும். :))

நாடோடி இலக்கியன் said...

SPIDEY,
வாங்கSPIDEY,
நானும் பார்த்தேன்,என்னத்த சொல்றது.முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

@சரவணகுமரன்,
வாங்க சரவணகுமரன்,
முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

@நர்சிம்,
வாங்க நர்சிம்,
ஆச்சர்யமான வருகை, கவிதையையும் படிச்சீங்களா, சந்தோஷமா இருக்குங்க.
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.


@KVR
வாங்க KVR,பணக்காரன், உழைப்பாளி எல்லாம் ரஜினியால ஓடிய படங்கள். உங்களுக்கும் மலையாள படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டா,அப்போ கண்டிப்பா வாசுவை பற்றிய பயம் வந்திருக்கும் சந்தேகமே இல்லை. முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Cheekanthu's Thoughts said...

Ithil vedikkai ennavenral P Vasu originally kerlathukaarar enbthu thaan!