நான்:மணி, மரத்துக்கு எவ்வளவுடா?
மணி:10 ரூவாண்ணே,47 மரம் ஏறியிருக்கேன்.
நான்:முன்னெல்லாம் மரத்துக்கு ஒரு காய்தானே பேச்சு.நீ என்ன மரத்துக்கு 10 ரூபாய் கேக்குற.
மணி:நீ எந்த காலத்திலண்ணே இருக்க,ரெண்டு வருஷமாவே 10 ரூவாதான் வாங்கிட்டு இருக்கேன்,இந்தா காலையில் அம்பலார் வீட்டுக்கு 30 மரம் ஏறினேன் 300 ரூவா கையோடு வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.வேணா 47ல ரெண்டு மரத்த தள்ளிகிட்டு 450 கொடுண்ணே.
நான்:சரி சரி சாயங்காலம் 6 மணிக்கு வந்து வாங்கிக்க,ஆமா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்குறியே எதாவது சேமிச்சு வச்சிருக்குறியாடா, இல்ல எல்லாத்தயும் குடிச்சிடுவியா?
மணி:நீ ஒரு ஆளுண்ணே,எல்லாத்துக்குமா குடிப்பாக,5000 ரூவாய் சம்பாதிச்சு வீட்டுல கொடுத்துட்டு அப்புறமா சின்ன சின்ன வேலையா செஞ்சிகிட்டு ஜாலியா இருப்பேன். மறுபடியும் வீட்டுக்கு எப்போ தேவையோ அப்போ மரம் ஏறுவேன்.
நான்: ஏன்டா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும்போது சம்பாதிச்சு சேமிப்புல வச்சுக்க வேண்டியதுதானே.
மணி:அதெல்லாம் உங்க ஆளுங்களுக்குத்தானே சரிப்பட்டு வரும். காச சேமிச்சு வச்சா பெருசா வீடு கட்டத் தோனும்,நிலம்,தோப்பு தொறவுன்னு சொத்து சேக்க புத்தி போகும்.
நான்:ஏன்டா சொத்து சேர்த்து வச்சா உன் எதிர்காலத்துக்கு நல்லதுதானே.
மணி: ஆமாண்ணே, இந்தா அஞ்சு நாளா தேங்காய் பறிக்க ஆளு கிடைக்காம என் பின்னாலயே சுத்திக்கிட்டு இருக்க. நான் இப்போ உன்கிட்ட பணம் வாங்கிட்டு கிளம்பிடுவேன், நீ இனி இந்த தேங்காய வித்து காசாக்குறதுக்குள்ள ஒரு வழியாயிடுவ, இதெல்லாம் எனக்குத் தேவையா? எங்க ஆளுங்க எல்லாம் தெனமும் உடலை வருத்தி உழைக்கிறோம் அதனால ஒம்போது மணிக்கெல்லாம் அசந்து தூங்கிடுறோம்.உங்க தெருவுல பாருங்க ராத்திரி ஒரு மணிக்கு தூக்கம் வராம கட்டையில் ஒக்காந்து வெட்டி நாயம் பேசிட்டு இருப்பாக.
நான்:வாஸ்தவம்தான்டா.
மணி:என்னைவிட நீ நாலஞ்சு வயசு பெரியவர்,ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, என் பையன் ஸ்கூலுக்கு போகப்போறான். கிட்டத்தட்ட அரைக்கிழவானா ஆகும்போதுதான் உங்கள்ள கல்யாணம் பண்றீங்க, நாங்க 20 வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிடுறோம், எனக்கு 40 வயசாகும்போது எம்மவன் ஆளாயிறுவான்.அதுதாண்ணே சந்தோஷம். அப்புறமா இன்னொன்னு அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய?
நான்: ?????
19 comments:
யதார்த்த வாழ்வு இப்டி சிலருக்குத்தான் வாய்ச்சிருக்கு..! அருமைங்க..!
வாவ் கலக்கல் நடை..........
கடைசி ஒரு சில வரிகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருந்தாலும், அந்த மனிதரின் நேர்மையான வார்த்தைகள் என்னக்கு பிடித்திருக்கிறது நண்பா
நல்லாயிருக்கு பாரி
// அப்புறமா இன்னொன்னு அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய? //
கேட்டாரே ஒரு கேள்வி... சூப்பர் கேள்வி..
// .உங்க தெருவுல பாருங்க ராத்திரி ஒரு மணிக்கு தூக்கம் வராம கட்டையில் ஒக்காந்து வெட்டி நாயம் பேசிட்டு இருப்பாக. //
இல்லாட்டி இது மாதிரி பொட்டி தட்டிகிட்டு இருப்பாங்க.
/
அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய?
/
ஹா ஹா
என்னமா வாழ்க்கை தத்துவத்தை புட்டு புட்டு வைச்சிட்டார் மணி.
//மணி:என்னைவிட நீ நாலஞ்சு வயசு பெரியவர்,ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, என் பையன் ஸ்கூலுக்கு போகப்போறான். கிட்டத்தட்ட அரைக்கிழவானா ஆகும்போதுதான் உங்கள்ள கல்யாணம் பண்றீங்க, நாங்க 20 வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிடுறோம், எனக்கு 40 வயசாகும்போது எம்மவன் ஆளாயிறுவான்.அதுதாண்ணே சந்தோஷம். //
அதென்னாவோ சரி தான், என் தம்பி 22 வயதில் திருமணம் முடித்தான், இப்ப அவனுக்கு 13,12 வயது மகன்கள் இருக்கிறார்கள்.
பருவத்தே பயிர் செய்.
கிராமங்களில் இதுபோல்தான் இருகிறார்கள்.
நல்லா சொல்லியிருக்கீங்க.
பிரபாகர்.
//அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய?//
இந்தக் கதையில் திணிக்கப் பட்ட வரிகள் போல இருந்தாலும் பொட்டில் அடித்தால் போல இருக்கிறது.
ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் திருமணம் செய்து கொள்வது என்பதே சரி..,
நன்றாக சம்பாதித்து, வீடு கட்டி அதன்பின் திருமணம் என்றாகிவிட்டால் குழந்தைகளை கரையேற்றுவது என்பது மிகப்பெரிய சிரமம் ஆகிவிடுகிறது. நிறையப் பேர் கையில் காசு இருந்தாலும் குழந்தைகளுக்காக அலைய முடியாதவர்களாக இருக்கப் பார்க்கலாம்.
kalakkal
-:)
எதார்த்த நடை... அருமை...
// அப்புறமா இன்னொன்னு அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய? //
இது என்ன என் கதையா, எனக்கு கூட ஒருத்தர் வாழ்க்கை வரலாறு எல்லாம் எழுதுறார். நல்லா இருக்கு. நன்றி. நான் நாற்பது வயதில் தான் எம் பி ஏ முடித்தேன்.
:)))))))))
நன்றி கலகலப்ரியா,(பிழைக்கத் தெரியாதவன் ஆனால் வாழத்தெரிந்தவன்.நானும் வாழத்தான் ஆசைப்படுகிறேன்,முடியலையே...).
நன்றி அத்திரி(என்ன நண்பா சொல்றீங்க,நக்கல் ஏதும் இல்லையே?) .
நன்றி கார்த்திகைப் பாண்டியன்,(ஏற்றுக் கொள்ள முடியாத வரிகளாக நீங்க நினைப்பது எந்த வரிகளை நண்பா?).
நன்றி கதிர்.
நன்றி ராகவன் நைஜிரியா(ஆஹா).
நன்றி மங்களூர் சிவா(நேரில் வந்தீங்கன்னா இது மாதிரி நிறைய மணிகளை ஊரில் சந்திக்கலாம்).
நன்றி கோவி.கண்ணன்,
நன்றி கே.ரவிஷங்கர்,(அதேதாங்க நண்பரே).
நன்றி பிரபாகர்.
நன்றி சுரேஷ்,(ஆமாங்க நண்பரே இது எனக்கும் மணிக்கும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நடந்த உரையாடல்களின் கலவை, அதனால்தான் திணிக்கப்பட்டு இருப்பது போல் இருக்கிறது).
நன்றிமுரளிக்கண்ணன்.
நன்றி ஞானப்பித்தன்.
நன்றி சே.குமார்.
நன்றி பித்தனின் வாக்கு,( :)))) ).
நன்றி ஸ்ரீமதி.
பட்... அவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு,...
:-)
நன்றி நாஞ்சில் நாதம்(மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?).
நன்றி தமிழ்ப்பறவை.
Post a Comment