Friday, October 23, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க 24/10/09

நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக்கொண்ட இரு நண்பர்கள் பழைய கதையெல்லாம் பேசி முடித்து சகஜ நிலைக்குத் திரும்பியதும் பேசிய டயலாக்,

நண்பர் 1:மாப்ள உன்னையெல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமான்னு பல தடவை ஏங்கியிருக்கேண்டா.

நண்பர் 2: விடுடா அதான் இப்போ பார்த்தாச்சுல்ல.

நண்பர் 1: அதில்லடா உன்னை பார்த்த பிறகுதானே புரியுது பேசாம ஏங்கிக்கிட்டே இருந்திருக்கலாம்னு.

நன்பர் 2:??????

@@@@@@@@@@@@

ஆயுத பூஜையன்று ஊருக்குச் சென்றிருந்தேன்.நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது அருகில் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டம் என்னிடம், ”அண்ணே எங்க கோயில் நல்லாயிருக்கான்னு வந்து பாருங்க” என்றனர். என் நண்பர்களில் ஒருத்தன் "போங்கடா போயி விளையாடுங்க பேசிட்டிருக்கோம்ல" என்றான். நானோ "இருடா ஆசையா கூப்பிடுறானுங்க போய் பார்த்துட்டு வறேன்" என்று கிளம்பினேன். கூடவே என் நண்பர்களும் வருவதற்காக எத்தணிக்க அத்தனை சிறுவர்களும், ”அண்ணன் மட்டும் வந்தா போதும் பெரிய ஆளுங்க வேண்டாம்” என்றனர். இவ்வளவுக்கும் அந்த கூட்டத்தில் வயதில் மூத்தவன் நான் தான். அது என்னவோ தெரியல சின்ன பசங்க என்னை அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள். நானும் பெரிதாய் வித்தியாசம் தெரியாமல் அவர்களோடு விளையாடுவேன். அன்று என்னை அழைத்த சிறுவர்களின் சிலரின் தந்தைகள் எனக்கு ஒரு சில வருடங்களே சீனியர்கள், அவர்களுடனும் நான் விளையாடியிருக்கேன். இப்போ என் வயது நண்பர்களின் வாரிசுகளும் வந்துவிட்டார்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்களுடனும் விளையாடுவேன்னு நினைக்கிறேன் பார்க்கலாம்.(சின்ன பசங்க சகவாசம் எனக்கு மட்டும் இது வரை பிரச்சனையில்லை).

@@@@@@@@@@@@@@@@

பதிவுலகில் நாளுக்கு நாள் ஜால்ரா பதிவுகளும், குழுமனப்பான்மையும்(இது தவறு கிடையாது இருப்பினும் அக்குழுவில் இல்லாதவர்களும் தொடர்பவர்களாக இருப்பதால் சில விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது, மற்றபடி அவரவர் விருப்பம்) நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போன்றே நல்ல புதிய எழுத்துக்களோடும் பலர் பதிவுலகில் இணைந்த வண்ணம் இருப்பது ஆறுதல். அவ்வகையில் எனக்குப் பிடித்த சில புதிய பதிவர்கள்,

ஆரூரன் விசுவநாதன்:தங்கமணி பதிவில் இருந்து திராவிட சிந்தனை வரை எல்லாவிதமான இடுகைகளும் எழுதுவது இவரின் ஸ்பெஷாலிடி.இவரின் சில இடுகைகளில் நகைச்சுவை நடையில் கலக்கியிருப்பார் .

நாகா:இவரின் பதிவுகளை மிகச் சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் அனுபவ பகிர்வுகள் ஆனாலும் ரசனையான நடையில் வசிகரிக்கிறார். கவிதையிலும் அசத்துகிறார்.

இவர்களை நீங்களும் படித்து உற்சாக படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். மேலும் சில பதிவர்கள் அடுத்த நொறுக்குத்தீனியில் .

@@@@@@@@@@@@@@@@@

சென்னையின் திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த நாட்களில் எனக்கு ஜாவா சொல்லிக் கொடுத்து ஒரு குருவாக அறிமுகமான நண்பர் அர்ஜுனின் அறையில் கதாவிலாசம், துணையெழுத்து என எஸ்.ராவின் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்து ஜாவாவைத் தாண்டியும் எங்களிடம் நிறைய ஒற்றுமை இருப்பதை அறிந்து குரு ஸ்தானத்தில் பார்த்த அவர் நெருங்கிய நண்பரானார். அவசரத் தேவைக்கு பைனான்ஸ் பண்ணும்போது ஒரு அண்ணன் ஸ்தானத்திலும் இருந்திருக்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி அவருடைய நினைவுகளை சில நாட்கள் இழந்திருந்தார். அப்போது அம்மா அப்பாவையே அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டவர் எங்களின் மேன்ஷன் நட்புகளின் பெயர்களை ஞாபகம் வைத்திருந்தார். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அவரோடு தினமும் போனில் பேசுவேன். அப்போது அவரை ஒரு குழந்தையாகவும் பார்த்திருக்கிறேன், அந்த நேரத்திலும் எஸ்.ராவின் எழுத்துக்களை அவரோடு என்னால் சகஜமாக பேசமுடிந்தது. எஸ்.ராவைப் பற்றிப் பேசும்போது உற்சாகமாகிவிடுவார். வலையுலகிற்கு புதியவனாக இருந்தபோது வெறும் காதல் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தவனை,”கவிதைகளோடு மற்ற விஷயங்களையும் எழுதுங்க உங்களால் முடியும்” என தடம் மாற்றியதும் அர்ஜுன்தான். சங்கடமோ, சந்தோஷமோ எதுவாகினும் நான் மனம் விட்டு பேசக்கூடியவர்களில் அர்ஜுன் முக்கியமானவர். தற்போது பிராஜெக்ட் மேனஜராக ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களின் நட்பு இறுகக் காரணமாயிருந்த எஸ்.ராவின் முன்பாக என்னை கொண்டுபோய் நிறுத்தினார் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நண்பர் வெயிலான். எதிர்பாரா சந்திப்பால் என்னால் எதுவுமே பேச இயலாது ஆட்டோகிராஃப் மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். இந்த மனிதரா இப்படியெல்லாம் எழுதறாருன்னு ஆச்சர்யப்படுத்தும் வகையில் அவ்வளவு எளிமையாக இருந்தார்.

@@@@@@@@@@@@@@

விஜய் டி.வியில் ஒளிபரப்பான கமலின் பாராட்டு விழாவில் நடிகை ராதிகாவின் பேச்சு நல்ல சுவாரஸ்யம்.அதில் கமலுடன் அவர் நடித்த சிப்பிக்குள் முத்து படத்தின் ”துள்ளி துள்ளி நீ பாடம்மா” பாடலை படமாக்கிய விதத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள் ரசிக்கும் படி இருந்தது.ராதிகா சொன்னது போல் எப்போது அப்பாடலை கேட்டாலும் தாளம் விட்டு கமல் ஆடும் அந்த நடன அசைவுகள் தான் கண்முன்னே வரும். கமல் ஸார் யூ ஆர் ரியலி கிரேட்.

29 comments:

வெயிலான் said...

நினைவிழந்த நிலையிலும், உங்கள் நண்பருக்கு எஸ்.ராவின் எழுத்துக்கள் நினைவிலிருந்தது என்றால் அவருடைய எழுத்தின் வலிமை எத்தகையது என எண்ணி பிரமித்தேன்/க்கிறேன்.

கதிர் - ஈரோடு said...

ஆரூரன், நாகா

தக்க சமயத்தில் செய்யப்பட்ட அவசியமான அடையாளம்...

தொடருங்கள்...

நர்சிம் said...

நொறுக்குத் தீனி சுகமாய் இருந்தது.

நீங்க யூத்த விட சின்ன வயசுன்னு சொல்றீங்க..ரைட்டு..

அந்தக் குழு மேட்டர்..ம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

எனக்கு உங்க மேலயும் வெயிலான் மேலயும் “காண்டு” ப்பா. எஸ்.ராவை நீங்க மட்டும்... எனக்கு ஒரு போன்.... இருக்கட்டும், இருக்கட்டும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

லீவு முடிஞ்சு திரும்பி வந்துட்டேனே..

ஆமா, ஜால்ரா பதிவர்னு என்னைச் சொல்லலைதானே..

இரண்டாவது பகுதி ரசனை. நான்காவது பகுதி.. முதலில் அப்படித்தான் இருக்கும்.

க.பாலாசி said...

//நண்பர் 1: அதில்லடா உன்னை பார்த்த பிறகுதானே புரியுது பேசாம ஏங்கிக்கிட்டே இருந்திருக்கலாம்னு.//

ஹா...ஹா...

//சின்ன பசங்க என்னை அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள்.//

சின்னப்பசங்கங்கறது சரிதாத்தான் இருக்கு....(சும்மா)

அன்பர் ஆரூரனை அருகிலிருந்து பார்ப்பவனாதலின் நானும் பாக்யவான். நாகாவையும் பிடிக்கும்.

//கமல் ஸார் யூ ஆர் ரியலி கிரேட்.//

சரிதான்...

அனுஜன்யா said...

எஸ்ரா எழுத்து என்றால் எனக்கும் அவ்வளவு பிடிக்கும். பழகுவதற்கும் எளிமையான, இனிமையானவர் என்று பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அனுஜன்யா

கும்க்கி said...

சின்ன பயக்களோட வெளாட்டு...ம்...

அவிங்க அப்பனோடவும் வெளாட்டு...ஓஹோ...

கூடவுள்ள சிநேகிதகாரனுவளோட சின்ன பயக்களோடவும் வெளாட்டு...அவ்வ்வ்வ்..

இன்னாதிது..?


குழு மனப்பான்மை லேசா புரியுது...ஆனா ஜால்ராவுக்கு விளக்கம் தேவை.

ஜாவா அப்போலயே நிறுத்திட்டாங்களே...மைசூர்ல இருக்கிற அதன் பேக்டரி கூட டி.வி.எஸ் வாங்கிட்டாங்க.
அதயேன் ட்ரிப்ளிக்கேன் கூட்ட நெரிசல்ல கத்துக்கிட்டிங்க....?
நம்மகிட்ட வந்திருந்தீங்கன்னா பை பாஸ்ல நல்லா சொல்லிக்கொடுத்திருப்பனே....(:--))

எஸ்ரா..பந்தா இல்லாம நல்லா பேசுவார்.
ஆனா குறுக்க பேசாம அமைதியா கேட்டீங்கன்னா அருவி மாதிரி கொட்டிகிட்டேயிருப்பார்.

சரி...பெரிய பசங்க வெளாட கூப்புடுதுங்க...வரேன்.

☀நான் ஆதவன்☀ said...

உங்க நண்பர் எந்த அளவிற்கு எஸ் ராவின் எழுத்தை நேசித்திருப்பார் என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பிரபாகர் said...

நொறுக்ஸ் நல்லாருக்கு நண்பா... நண்பர்களுக்குள்... அருமை.

பிரபாகர்.

மங்களூர் சிவா said...

nice!

அகநாழிகை said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
பகர்தலுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெயிலான்,(இனிமேல் எங்கே அழைச்சிட்டு போனாலும் முன்கூட்டியே சொல்லிடுங்க நண்பா, எஸ்.ராவைத்தான் பார்க்கப்போகிறோமென தெரிந்திருந்தால் கொஞ்சம் பிரிப்பேர்டா வந்திருப்பேன்).

நன்றி கதிர்,(கண்டிப்பா நண்பரே வரும் பதிவுகளில் புதிய பதிவர்களை அடையாளப்படுத்துகிறேன்,உங்க பதிவிலும் அடையாளப்படுத்தினால் இன்னும் கூட ரீச் ஆகும் கதிர்).

நன்றி நர்சிம்,(ஆமா நண்பா சின்ன பசங்கக் கூட என்னைய ஒரு ஆளா மதிக்கிறதில்ல :) ).

நன்றி முரளி,(அந்த சமயத்தில் உங்களை எனக்கு அறிமுகம் இல்லை முரளி,நமது சந்திப்பு அதன் பிறகே நிகழ்ந்தது,வரும் நாட்களில் சேர்ந்தே சுற்றலாம்).

நன்றி ஆதி,(வந்தாச்சா சீக்கிரம் ஒரு இடுகையை எதிர்பார்க்கிறேன்.

//ஆமா, ஜால்ரா பதிவர்னு என்னைச் சொல்லலைதானே//

ஏன் நண்பா இப்படி கேட்குறீங்க,அது பொதுவாகத்தான் சொன்னேன் குறிப்பிட்ட யாருக்காகவும் அல்ல,விடுகதை படத்தில் அகத்தியனின் வசனம் ஒன்று ”நாம் செய்வது தப்பில்லையெனினும் அது நாலு பேருக்கு தப்பா தெரிஞ்சா கொஞ்சம் குறைச்சுக்கலாமே” என்று அதை உங்களுக்கான என் பதிலாகவும் வச்சிக்கலாம் :) ).

ஆதிமூலகிருஷ்ணன் said...

”நாம் செய்வது தப்பில்லையெனினும் அது நாலு பேருக்கு தப்பா தெரிஞ்சா கொஞ்சம் குறைச்சுக்கலாமே” என்று அதை உங்களுக்கான என் பதிலாகவும் வச்சிக்கலாம் :)

//
படுபாவி, அப்ப என்னைத்தான் சொன்னீரா.? அவ்வ்வ்வ்..

நாடோடி இலக்கியன் said...

நன்றி பாலாஜி.

நன்றிஅனுஜன்யா.

நன்றி கும்க்கி,(வர வர குசும்பு ஓவர்தாம்யா உமக்கு,இருங்க அடுத்த டூரில் எல்லாத்துக்கும் இருக்கு).

நன்றி நான் ஆதவன்.

நன்றி பிரபாகர்.

நன்றி மங்களூர் சிவா.

நன்றி அகநாழிகை வாசுதேவன்.

நாடோடி இலக்கியன் said...

ஆதி,

ஏங்க நன்றி சொல்லி மறுமொழி போட்ட அடுத்த செகண்ட்லயே பின்னூட்டம் வருதே.

அது உங்களுக்கான பதிலில் எல்லோருக்குமான பதிலாகவும் கொள்ளலாம்.

:)

நாகா said...

நன்றி நண்பரே..! தீனியின் சுவைக்கும்

சே.குமார் said...

நொறுக்குத் தீனி சுகமாய் இருந்தது.
பகர்தலுக்கு நன்றி

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாகா,(என்ன நண்பா உங்களை தொடர ஆரம்பித்தைலிருந்து புதிய இடுகைகளையே காணோம்,சீக்கிரமா எழுதுங்க நண்பா).

நன்றி குமார்.

ஸ்ரீமதி said...

1. ஹா ஹா ஹி ஹி :)))))))

2. ஹ்ம்ம் :)). நானும் விளையாடுவதுண்டு... என் அண்ணன சேத்துக்காம இருப்பாங்களா? ஆனா என்ன விளையாட்டுக்கு சேத்துக்கறது எதாவது ப்ரச்சனைனா 'அக்கா நீங்க சொல்லுங்க அக்கா'.. இதுக்கு தான். :))

3. //மேலும் சில பதிவர்கள் அடுத்த நொறுக்குத்தீனியில் .//

எதிர்ப்பார்க்கிறேன். (என் பெயரையும் ;))

4. //சென்னையின் திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த நாட்களில் எனக்கு ஜாவா சொல்லிக் கொடுத்து//

குடுகுடுப்பை அண்ணா பதிவில் இது போல படித்த ஞாபகம். (Plz correct me if am wrong.)

5. எனக்கும் ராதிகா பேச்சு பிடித்திருந்தது. :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,(
1.:)

2.ஹா ஹா.

3.நீங்க வேணா உங்க பதிவில் எனக்கு அறிமுகம் கொடுங்க.:) புதிய பதிவர்கள் மற்றும் கவனிக்கப்படாமல் இருக்கும் நல்ல பதிவர்களை சொல்வதாக உத்தேசம்.நீங்கல்லாம் ஏற்கனவே பி.ப.

4.ஒரு வேளை குடுகுடுப்பை அவர்களும் திருவல்லிக்கேணியில் இருந்திருக்கலாம்,ஜாவா படித்திருக்கலாம்.

5.கலக்கலா பேசுனாங்கல்ல).

விக்னேஷ்வரி said...

முதல் மேட்டர் சூப்பரு.

அது என்னவோ தெரியல சின்ன பசங்க என்னை அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள். //

இன்னும் அரை டவுசர் போட்டுட்டு இருந்தீங்கன்னா அப்படித்தான் நினைப்பாங்க. :D

பதிவர்கள் - நல்ல அறிமுகம்.

அர்ஜுன் - நல்ல நட்பு.

Yes, Kamal is really great.

நாஞ்சில் நாதம் said...

நொறுக்கு தீனி நல்ல கலவையா வந்திருக்கு.

திருவல்லிக்கேணி நண்பர் அர்ஜுன் இப்போ எப்படியிருக்கிறார்

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி நாஞ்சில் நாதம்,(எங்கே ஆளையே காணோம்).

அத்திரி said...

//பதிவுலகில் நாளுக்கு நாள் ஜால்ரா பதிவுகளும், குழுமனப்பான்மையும்(இது தவறு கிடையாது//

ஆஹா........

கார்த்திகைப் பாண்டியன் said...

//இந்த மனிதரா இப்படியெல்லாம் எழுதறாருன்னு ஆச்சர்யப்படுத்தும் வகையில் அவ்வளவு எளிமையாக இருந்தார்.//

thats esraa:-)))))))))

நாடோடி இலக்கியன் said...

நன்றி அத்திரி,(இந்த ஆஹா எதுக்குன்னு புரியலையே நண்பரே).


நன்றி கார்த்திகைப் பாண்டியன்.(அன்றைக்கு கதைகள் பற்றிய அவரின் பேச்சும் அருமை).

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கு நன்றி நண்பா.....

கதிர் அடிக்கடி உங்களைப் பற்றி என்னிடம் சொல்வதுண்டு.

அறிமுக படுத்திய விதம் மிக அருமை. நன்றி.

அன்புடன்
ஆரூர்

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆரூரன்,(நானும் உங்களின் எழுத்தைப் பற்றி கதிரிடம் பேசுவதுண்டு,நல்லா எழுதறீங்க, சீக்கிரம் புது இடுகை ஒன்றை எதிர்பார்க்கிறேன்).