Wednesday, November 4, 2009

பிடித்த/பிடிக்காத 10

தோழர் மாதவராஜ் ஆரம்பித்த இத்தொடர் விளையாட்டு நண்பர் ஈரோடு கதிர் மூலமாக என்னிடமும் வந்திருக்கிறது.

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : யாருமில்லை என்று சொல்ல நினைச்சேன் ஸ்டாலினை கொஞ்சம் பிடிக்கும்.

பிடிக்காதவர் : வை.கோ(ஒரு காலத்தில் இவரை ரொம்ப நம்பினேன்).

எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ரா,கி.ரா

பிடிக்காதவர் : பாலகுமாரன்(கல்லூரி நாட்களில் இவரின் சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் அப்போது புரியவில்லை,இப்போது படித்து பார்ப்போமே என்று முயற்சித்தேன் இப்போதும் முடியவில்லை,பெரிய பெரிய பத்தியாக வேறு எழுதுகிறார்,ஒரு வேளை இன்னும் மெச்சூர்ட் ஆகி படித்தால் விளங்குமோ என்னவோ)

கவிஞர்

பிடித்தவர் : மு.மேத்தா,வைரமுத்து,ந.முத்துக்குமார்

பிடிக்காதவர் : கபிலன்(நல்ல சிந்தனையாளர் ஆனால் ஓவரா குத்துப்பாட்டு எழுதவதால் இவர் மேல் ஒரு வெறுப்பு).

இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம்,அமீர்

பிடிக்காதவர் : தங்கர்பச்சான்(கடலூரைத் தாண்டி வெளியில் வந்தா பார்க்கலாம்), பேரரசு(உங்க டைரக்‌ஷனில் சிம்பு,எஸ்.ஜே.சூர்யா,நமிதா நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க,டீ.ஆர் வசனத்தில் ஒரு படம் கொடுங்க ஸார்), சமீபமாக சேரன்(இவர் மாயக்கண்ணாடியில மட்டுதான் முகம் பார்ப்பார் போல).

நடிகர்

பிடித்தவர் : மோகன்லால்,கார்த்தி(க்)

பிடிக்காதவர் : சேரன்,பிரசாந்த்,விஷால்

நடிகை

பிடித்தவர் : அமலா,கோவை சரளா(திறமைக்கேற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நடிகை).

பிடிக்காதவர் : த்ரிஷா(பாருங்க நேற்று வந்த தமனா மொழி தெரியாமல் நடிப்பில் பின்னுகிறார் இவரோ நடிப்பைப் பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை).

இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான்

பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த் தேவா(இவங்க அப்பா கானா பாட்டால் காணாமல் போனது போல் இவருக்கு குத்து பாட்டு),எஸ்.ஏ.ராஜ்குமார்(இவரின் ஆரம்பகால பாடல்களை கேட்கும்போதெல்லாம் இப்படி அருமையான பாடல்களைத் தந்துவிட்டு ஏன் லாலாலா.. போட்டு ஒற்றை ட்யூனையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும்).

பட்டிமன்ற பேச்சாளர்

பிடித்தவர் : அறிவொளி,பாரதி பாஸ்கர்

பிடிக்காதவர் : லியோனி குரூப்பில் பேசுபவர்கள் அத்தனை பேரும்


செய்தி வாசிப்பாளர்

பிடித்தவர் : ஜெயஸ்ரீ சுந்தர்(தெளிவான உச்சரிப்பு).

பிடிக்காதவர் : ஃபாத்திமா பாபு(சீரியலை விட செய்தி வாசிக்கும்போது இவரின் நடிப்பு நன்றாக இருக்கும்,ஓவர் மேக்கப் போட்டு கவனத்தை சிதறடிப்பார்).


ஓவியர்

பிடித்தவர் : மணியம் செல்வன்(இவரின் ஓவியங்களில் கண்கள் குறிப்பாய் பெண்களின் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்),ஷ்யாம்(குவிந்த உதட்டோடு இருக்கும் சுருள் முடி பெண்கள் இவரின் ஓவியங்களில் எனக்குப் பிடிக்கும்)

பிடிக்காதவர் : அரஸ்


அழைக்க விரும்புவது

ஊர்சுற்றி

பீர்

ப்ரியமுடன் வசந்த்

டிஸ்கி:இதற்கு முன் பல தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு திண்ணை என்ற ஒரே ஒரு தொடர் பதிவைத் தவிர எதையும் எழுதியதில்லை. சோம்பலன்றி வேறொன்றும் காரணமில்லை.மேலும் இந்தத் தொடர் மிகச் சிறியதாகவும் பெரிதாய் யோசிக்கத் தேவையில்லாததாகவும் தோன்றியாதால் எழுதிவிட்டேன்.

24 comments:

அப்பாவி முரு said...

அப்பாடா.,

எண்ணியபடியே பயணம் போகிறது.

பிரியமுடன்...வசந்த் said...

எல்லாமே நல்லாயிருக்கு..

குறிப்பா பிடிக்காதவர் லிஸ்ட் காமனா இருக்கு..

என்னையும் அழைத்ததுக்கு நன்றி....

ஸ்ரீமதி said...

:)))))))

கதிர் - ஈரோடு said...

//மிகச் சிறியதாகவும்//

ஆஹா

இரும்புத்திரை அரவிந்த் said...

అడ రామ నాన్ ఎలుతినా ఎల్లాం ఉంగలుక్కు ఎతిరావే వారుతూ..

அட ராமா நான் எழுதினா எல்லாம் உங்களுக்கு எதிராகவே வருகிறது..

அ.மு.செய்யது said...

திரிஷா அப்ப‌டி என்ன‌ங்க‌ நடிப்பில‌ குறைஞ்சி போயிட்டாங்க‌ ??

இப்ப‌ இருக்கிற‌ கோலிவுட் ந‌டிகைக‌ளுக்கு யாருக்கு தான் ந‌டிப்பு தெரிஞ்சிருக்கு.
அந்த‌ லிஸ்ட்ல‌ திரிஷா எவ்ளோ ப‌ர‌வாயில்ல‌.

பிரபாகர் said...

ஒரு சில தவிர யாவும் எனக்கும் உடன்பாடுதான் நண்பா...

பிரபாகர்.

பீர் | Peer said...

அப்டியே Ctrl+C, Ctrl+V பண்ணிடவா?

(ஒண்ணுரெண்ட மாத்தினா போதும்)

அழைப்பிற்கு நன்றி சகோதரா, இன்றே எழுதி நாளை வெளியிடுகிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஸ்டாலினை "கொஞ்சம்" பிடிக்கும் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் நண்பா...

மணியன் செல்வம் ரசனையான தேர்வு

வாழ்த்துக்கள்

Cable Sankar said...

எனக்கும் தமன்னா பிடிக்கும் ஆனால் க.காதலில் கொஞ்சம் ஓவர்.

SanjaiGandhi™ said...

குட் குட்.. :)

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு லிஸ்ட்.

நாகா said...

உங்குளுக்குப் புடிக்காத அரசியல் தலைவர் நெறயப்பேருக்குப் புடிக்காமப் போனதுக்கு காரணம் உங்குளுக்குப் புடிச்ச தலைவருதான்

நாஞ்சில் நாதம் said...

:))

கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

நன்றி அப்பாவி முரு.

நன்றி பிரியமுடன் வசந்த்.

நன்றி ஸ்ரீமதி .

நன்றி கதிர்.

நன்றி அரவிந்த்.

நன்றி அ.மு.செய்யது,(பார்வைகள் வேறுபடுவது இயல்புதானே நண்பா,எனது பார்வை இப்படி :) ).

நன்றி பிரபாகர்.

நன்றி பீர்,(நாளைக்கு பார்க்கிறேன் எத்தனை மாறுபடுகிறதென்று).

நன்றி ஆரூரன்,(அரசியலில் பெரிதாய் யாரையுமே பிடிப்பதில்லை, ஜெயலலிதாவை நிவாரண நிதி கொடுக்கும்போது நேரில் சந்தித்தாரா அது போன்ற சில விஷயங்களில் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாகத் தெரிந்தார்,மற்றபடி கேண்டிடேட் பார்த்து ஓட்டு போடுபவன் நான்).

நன்றி கேபிள் சங்கர்,(நான் இன்னும் க.கா பார்க்கவில்லை நண்பரே).

நன்றி சஞ்சய்காந்தி.

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி நாகா,(அட இதை நான் யோசிக்கவே இல்லை).

நன்றி நாஞ்சில் நாதம்.( :)) ).

நன்றி கும்க்கி,(ஏதோ எனக்கு தோனியதை எழுதினேன் இப்படியெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது :) ).

ஆதிமூலகிருஷ்ணன் said...

பேரரசு(உங்க டைரக்‌ஷனில் சிம்பு,எஸ்.ஜே.சூர்யா,நமிதா நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க,டீ.ஆர் வசனத்தில் ஒரு படம் கொடுங்க ஸார்)
//

ஊரு வெளங்கிரும்..

Jawahar said...

பாலகுமாரன் குறித்த உங்கள் கருத்தில் நல்ல நோக்கு இருக்கிறது. பெரிய பாராக்கள் படிக்கிறவர்களை சலிப்படையச் செய்யும் என்பது நிஜம்தான். பாலகுமாரனின் ஆரம்ப கால சிறுகதைகள் படியுங்கள் நன்றாக இருக்கும். நாவல்களில் எனக்கும் அத்தனை ஈடுபாடு கிடையாது.

http://kgjawarlal.wordpress.com

பித்தனின் வாக்கு said...

palakumaran ????????????

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(பிடித்த இயக்குனரில் நான் உங்க பேரை எப்படி மறந்தேன் :) ).

நன்றி ஜவஹர்,(கண்டிப்பா வாசிக்கிறேன் நண்பரே).

நாடோடி இலக்கியன் said...

நன்றி பித்தனின் வாக்கு,(:()

ஊர்சுற்றி said...

பதிவிட்டுவிட்டேன்.
சுட்டி இங்கே.