சராசரிக்கும் குறைவான உயரத்தில் இருக்கும் நண்பரொருவர் தனது ஓங்கிவளர்ந்த நண்பனை மூன்றாவது நண்பரிடம் அறிமுகம் செய்தபோது உயரத்தை வைத்து அவர்களுக்குள் நடந்த உரையாடல்.
குட்டை நண்பர்:கேட்க ஆளில்ல அதான் அவன் பாட்டுக்கு வளர்ந்துட்டான் .
நெட்டை நண்பர்:ஆமா என்னைய கேட்க ஆளில்ல,உன்னைய கேட்க நிறைய ஆளு இருந்திருக்கும் போல.
குட்டை நண்பர்:???
இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நவரசம் நிகழ்ச்சியில் நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சிக்கு கம்பெனியிலிருந்து ஓசியில் டிக்கெட் கிடைத்ததால், நம்ம சரித்திரத்திலயும் ஒரு நடிகையை நேரில் பார்த்ததாக இருக்கட்டுமேயென்று அலுவலக நண்பருடன் சென்றேன். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது ஒரு பத்து நிமிஷம் பாத்துட்டு கிளம்பிடலாம் என்றபடியே அரங்கத்தில் நுழைந்தோம்.பாமரனும் ரசிக்கும்படி நிறைய புதுமைகளைப் புகுத்தி இரண்டரை மணி நேரம் ஒட்டு மொத்த அரங்கத்தையும் தன் வசப்படுத்தினார் ஷோபனா. குறிப்பாய் "விஷமக்கார கண்ணன்" என்ற பாடலுக்கு அவர் ஆடியபோது இருமுறை தேசிய விருதை வென்றதற்கான காரணம் புரிந்தது.அப்படியே ஒரு சினிமா பார்ப்பதைப் போன்றே இருந்தது. கிரிக்கெட்,ஃபேஷன் ஷோ போன்ற நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை வந்தேமாதரம் பாடலில் நாட்டியத்தில் கொண்டுவந்தது ரசிக்கும்படி இருந்தது.எட்டு வயதிலிருந்து இருபது வயது வரை மதிக்கும்படி அசத்தலாய் நடனமாடிய அவரின் சிஷ்யைகளைவிடவும் சுறுசுறுப்பாய் சுழன்றார் ஷோபனா. எதிர்பாராத சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது அந்நிகழ்ச்சி.
ஐஸ்கிரீம் பார்லரில் வெணிலா ஐஸ்கிரீம் ஒன்று வாங்கி அதை மெதுவாக பிரித்து நான்கு வயது சிறுவனுக்கு ஊட்டிக்கொண்டிருந்த அவனின் தந்தை மகன் ருசித்து சிரித்து சாப்பிடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசி ட்ராப் வரை ஸ்பூனில் வழித்து ஊட்டிவிட்டு அவனது முகத்தை பொறுமையாய் துடைத்துவிட்டு அழைத்துச் சென்றார். இதிலென்ன விஷேசம் என்கிறீர்களா? இரண்டு வெணிலா ஐஸ்கிரீம் கொடுங்க என்றபடியேதான் கடையினுள் அவர் நுழைந்தார்.வெணிலா ஒன்றின் விலை 15 ரூபாய் என்றதும் தனக்காக கையில் வாங்கிய ஐஸ்கிரீமை திரும்பவும் கொடுத்துவிட்டு ஒன்று போதும் என்று தன் மகனுக்கு மட்டும் வாங்கிக்கொண்டார்.இதே சூழலில் ஒரு அம்மா இருந்திருந்தால் கண்டிப்பாய் ஐஸ்கிரிமை அட்லீஸ்ட் ஒரு வாயாவது சுவைத்திருப்பார். இப்படியெல்லாம் நிறைய விஷயங்களில் குழந்தைகளுக்காக தியாக வாழ்க்கை வாழும் தந்தைகளின் பாசம் தாய்ப்பாசத்திடம் பெரும்பாலும் தோற்றுவிடுவது ஏன்? (இதில் நிறைய விஷயம் இருக்குல்ல).
தளபதி படத்தில் ரஜினி தன் தாயை கண்டுபிடித்ததும்," நான் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல,இது நாற்றமடிக்குமிடம்" என தன்னை வளர்த்துவிட்ட குப்பத்து மக்களை நோக்கி வசனம் பேசியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது நான் மிகவும் விரும்பி படிக்கும் ஒரு பதிவரின் சமீபத்திய இடுகை. அனுபவிப்பவனுக்குத்தான் வலி தெரியும் என்றாலும் இவ்வளவு கேவலமான ஒரு இடுகையை அங்கே எதிர்பார்க்கவில்லை. யாருக்கோ புத்தி புகட்ட எண்ணி பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த பதிவுலகையும் கேவலப்படுத்தும் விதமாகவும் அவர் எழுதியிருந்த சில வார்த்தைகளை படித்தபோது என்னைப் போன்று அவரை ரெகுலராக படிக்கும் பதிவர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாய் இருந்திருக்கும். அந்த குறிப்பிட்ட இடுகை அவரின் மொழியிலேயே சொன்னால் சாக்கடை. அவரின் எத்தனையோ பதிவுகளைப் படித்து ரசித்து நட்பு வட்டத்தில் சிலாகித்திருக்கிறேன், இப்போ அவரே ஒரு தவறு செய்கிறார் எனும்போது அதை சுட்டிக்காட்டுவதுதானே நட்பு.
7 comments:
// இப்படியெல்லாம் நிறைய விஷயங்களில் குழந்தைகளுக்காக தியாக வாழ்க்கை வாழும் தந்தைகளின் பாசம்//
உண்மை... இதுபோல் நிறைய எனது தந்தையிடமும் கண்டிருக்கிறேன்....(அதற்காக தாயையும் குறைகூற முடியாது...)
மூன்று பதிவும் நச்!
பகிர்வுக்கு நன்றிங்க இலக்கியன்.
மூன்றுமே நச்.
நன்றி இலக்கியன்:)
சத்தியமா அந்த அப்பா மேட்டர், சூப்பர் தல. அப்பா அம்மான்னு வரும்போது நான் ஆணாதிக்கவாதி. :-)
தம்பி.,
இன்னும் டீ வரல.
முரளிகுமார் பத்மநாபன் said...
சத்தியமா நான் ஆணாதிக்கவாதி. :-)
நீங்களுமா...?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
Post a Comment