தனியாவர்த்தனம் , 1987 ம் ஆண்டு சிபிமலையில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான மம்முட்டியின் குடும்பத்தில் வழி வழியாய் யாரேனும் ஒருவர் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார்கள். அப்படி மனநிலை பாதிப்புள்ளாகி தனியறையில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருக்கும் மம்முட்டியின் மாமா ஒரு தருணத்தில் இறக்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் அடுத்து மனநிலை பாதிப்பிற்குள்ளாகப் போவது மம்முட்டிதான் என ஊர்மக்கள் தொடங்கி உறவினர்கள்வரை அனைவரும் நம்பத் தொடங்குகின்றனர். அதன் பின் நடக்கும் சம்பவங்களால் மம்முட்டி என்னவாகிறார் என்பது கதை.
தான் பைத்தியம் இல்லையென்பதை நிரூபிக்க மம்முட்டி செய்யும் செயல்களும் கூட சூழ்நிலையால் அவரை எல்லோரின் முன்பும் பைத்தியக்காரனாகவே காட்டும்போதும், பாடம் எடுக்கையில் மாணவர்கள் பயந்து நடுங்கும்போதும், தலைமையாசிரியர் மம்முட்டியின் செயல்களை கவனிக்க ஒளிந்து நின்று ஜன்னல் வழியாக பார்க்கும்போதும் என படம் நெடுக நடிப்பில் தனியாவர்த்தனம் நடத்திக்காட்டியிருக்கிறார் மம்முட்டி.
அப்படத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்து வெளிவர எனக்கு சில நாட்கள் ஆனது. காரணம் மனதை கனக்கச் செய்யும் இறுதிக் காட்சிகள். நிஜத்தில் யாருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்று பதறும்படியான கிளைமேக்ஸ்.
1989ல் ஐ.வி சசியின் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் வெளிவந்த மிருகயாவில் மம்முட்டியின் கதாபாத்திரத்தைச் சுருக்கமாகச் சொன்னால் மனித வடிவில் மிருகம். ஊருக்குள் அடிக்கடி புகுந்துவிடும் புலியை வேட்டையாடுவதற்கென வரவழைக்கப்படும் மம்முட்டியின் செயல்களைப் பார்த்து இவனுக்கு புலியே பரவாயில்லையென நினைக்க வைக்கும்படியான கேரக்டர். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவத்தில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாகிவிடுகிறார் மம்முட்டி. அச்சம்பவத்தைத் தொடர்ந்து மம்முட்டிக்குள் இருக்கும் மனிதம் வெளிப்படுவதால் ஏற்படும் மாற்றங்களே மீதி படம். இந்தப் படம் தனியாவர்த்தனம் அளவிற்கு என்னை கவரவில்லையெனினும் இந்தக் கதாபாத்திரம் ரொம்பவே புதுமையாக இருந்தது.
தனியாவர்த்தனம் படத்தின் கிளைமேக்ஸ் அப்படியே இயக்குனர் பாலாவின் நந்தாவின் கிளைமேக்ஸ் ஆனால் கதையும் சரி களமும் சரி முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மிருகயாவின் மம்முட்டி ஏற்று நடித்த வருண்ணி கதாபாத்திரத்தை பிதாமகன் விக்ரம் கதாபாத்திரத்தோடு சில இடங்களில் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. குறிப்பாய் விக்ரம் ஊருக்குள் நுழைந்து பரோட்டாக் கடையில் சண்டையிடும் காட்சி மிருகயாவில் கள்ளுக் கடையில் நடப்பது போன்று இருக்கும். அச்சண்டைக் காட்சியில் மம்முட்டியின் மேனரிஸமும் விக்ரமின் மேனரிஸமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும். ஆனாலும் இங்கும் கதையும் களமும் வேறு. ஒரு வேளை நந்தாவிற்கும் , பிதாமகனுக்கும் இந்த இரு படங்களும் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாமோ என்பதுதான் எனக்கு தோன்றிய மேற்சொன்ன விஷயம்.
15 comments:
athu sari...
appadikkuda irukkalamo...
irunthalum nalla padangalai koduththa Balavukku oru salam.
படம் பார்த்திருக்கிறேன்... நீஙகள் சொல்வது கிட்டத்தட்ட பொருந்துகிறது...
பிதாமகனில் கடைக்காரனை பிடித்து அடிப்பார் விக்ரம்... மிருகயாவில் அந்த ஏரியா தாதாவாக தன்னைக் காட்டிக்கொள்ளுபவனை நொறுக்கிதள்ளுவார்... மற்றப்படி பெரிதாக ஏதும் பொருந்துவதாக தோன்றவில்லை...
நன்றி சே.குமார்.
நன்றி நாஞ்சில் பிரதாப்,(மிருகயாவில் மம்முட்டியின் என்ட்ரியின்போதே எனக்கு பிதாமகன் நினைவிற்கு வந்துவிட்டது என் பார்வைக்கு அந்த கதாபாத்திரத்தின் உடல்மொழி,செயல்களென தொடர்ந்து பிதாமகனை நினைவூட்டியபடியே இருந்தது மற்றபடி அந்த சண்டைக் காட்சியைத் தவிர காட்சியளவில் வேறு ஒப்புமை இல்லை).
பகிர்வுக்கு நன்றிங்க ..... நீங்க சொல்லிய “கலவாணி” படம் பார்த்துவிட்டேன்,,,,, மிக அருமை..... மிக்க நன்றி.
நன்றி கருணாகரசு,(களவாணி பார்த்தாச்சா .. ம்ம்ம் நானும் மறுபடி ஒருமுறை பார்த்துவிட்டேன்).
அப்படத்தைப் பற்றிய சிதனையில் இருந்து வெளிவர எனக்கு சில நாட்கள் ஆனது,காரணம் மனதை கணக்கச் செய்யும் இறுதிக் காட்சிகள். நிஜத்தில் யாருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்று பதறும்படியான கிளைமேக்ஸ்.
...... இதே படத்தின் சிறப்புக்கு சான்று....!!!
நற்பகிர்வு நண்பரே...
‘தனியாவர்த்தனம்,மிருகயா பார்க்காமல் நான் எதுவும் சொல்ல முடியாது..
எனினும் பாலாவை அவை இன்ஸ்பைர் பண்ணி இருக்கலாம்...
அந்தப் படங்கள் லிங்க் தருகிறீர்களா..?
உண்மைதான் நண்பரே தோழி சித்ரா சொன்னதுபோல் அந்த படத்தின் இறுதி காட்சிகள் என்னையும் உலுக்கி சென்றது . பகிர்வுக்கு நன்றி !
நன்றி சித்ரா.
நன்றி தமிழ்ப்பறவை. (கூகிலாண்டவரிடம் முறையிடுங்கள்).
நன்றி பனித்துளி சங்கர்.(தனியாவர்த்தனம் பார்த்துட்டீங்களா நான் பார்த்த இதுவரையிலான மம்முட்டி படங்களில் இதுதான் அவரின் பெஸ்ட் என்பேன்.தேசியவிருது வாங்கிய அமரம் கூட எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.).
நிறுபிக்க, மனதை கணக்கச், // போன்ற பிழைகள், வார்த்தைகளுக்கு இடையே வெளியின்மை போன்றவற்றைக் கவனிக்கலாம் இலக்கியன். ஒழுங்கா எழுதுபவர்களே இப்படிப் பண்ணினால் என்ன அர்த்தம்? எழுதி முடித்த பின்னர் ஒரு முறையாவது வாசிக்கவும்.
மற்றபடி இந்தப் படங்களின் கதைகள் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன. பகிர்வுக்கு நன்றி.
ஆதி வாத்தியார் சொல்லுவதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.
தனியாவர்த்தனம் பாலு மாஷேயை மறக்க முடியுமா? எனக்கும் இறுதிக் காட்சி பாலாவின் நந்தாவை நினைவுபடுத்தியது.
நன்றி ஆதி.(அவசரத்தில் எழுதினேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் எழுதும்போதே 'ன','ண'' 'ரூ''று' குழப்பம் வந்தது ஆனாலும் அசட்டை,இனி கவனமாக இருக்கிறேன்).
நன்றி வெயிலான்,(கண்டிப்பா ஆதியின் கமென்ட்டை கவனத்தில் கொள்கிறேன். 'மிருகயா' பார்த்தாச்சா?)
ம்ருகயா இன்னும் பார்க்கவில்லை. பார்த்த தளத்தைச் சொன்னால், நானும் பார்ப்பதற்கேதுவாயிருக்கும் ;)
@வெயிலான்,
நிறைய தளங்களில் நல்ல மலையாளப்படங்கள் கிடைக்கிறது வெயிலான்.கூகுள் அடிச்சு பாருங்க.ஏகப்பட்ட சுட்டிகள் கிடைக்கும்.
Post a Comment