”ஏதோ மோகம் ஏதோ தாகம் ” - கோழி கூவுது பாடலின் மெட்டுக்கு வரிகள் எழுத முயன்றதன் விளைவு கீழே.
மாலை வேளை
வந்தான் காளை
தேகமெங்கும் தென்றல் தொட
தேவியிவள் நெஞ்சம் சுட
மோகம் மெல்ல..
என்ன சொல்ல....
மாலை வேளை
வந்தாள் பாவை
கன்னியிவள் கண்களிலே
காமனவன் அம்புகளை
கண்டேன் நானே
சொர்க்கமிங்கே..!
அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்
அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்
வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்
வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்
பருவ ராகம் பாடும் நேரம்
இரவு ஏனோ நீளமாகும்
பருவ ராகம் பாடும் நேரம்
இரவு ஏனோ நீளமாகும்
செண்டு மல்லி பூவின் வாசமே
ரெண்டு நெஞ்சிலே பாரமேற்றுமே
(மாலை வேளை...)
ஆளைக் கொல்லும் தேகம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து
ஆளைக் கொல்லும் தேகம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து
கன்னல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காமன் கூத்து
கன்னல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காமன் கூத்து
உன்னைக் கண்ட அந்த நேரமே
தந்தை தாயும் ரொம்ப தூரமே
உன்னைக் கண்ட அந்த நேரமே
தந்தை தாயும் ரொம்ப தூரமே
அந்தித் தென்றல் மெல்ல வீசுதே
வஞ்சி நெஞ்சிலே ஆசை பூக்குதே..
(மாலை வேளை...)
குறிப்பு:இப்படியான விபரீத முயற்சி இன்னும் தொடரும்.
No comments:
Post a Comment