Showing posts with label பாட‌ல். Show all posts
Showing posts with label பாட‌ல். Show all posts

Sunday, May 22, 2011

கண்ணே கட்டிக்க வா..






விக்ரம் படத்தின் ”வனிதாமணி வனமோகினி” மெட்டுக்கு எனது முயற்சி...


கயலோ விழி

கரும்போ மொழி
கொல்லாதே..

குறும்பாய் சிரி
உடும்பாய் பிடி
தள்ளாதே..

ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
என்னைச் சேரடி..

ரசிக்கிறான்
கண்ணில் வலை விரிக்கிறான்..ஓஓஓ..

சிரிக்கிறாள்
கன்னம் ரெண்டில் சிவக்கிறாள் ஓ ஓ ஓ..

கனலாய் கனா தினம் எனை வாட்டாதோ..
புனலாய் வரும் வெள்ளம் வெப்பம் தீர்க்காதோ..

அதரம் வழி
மதுரம் சுவை
வகையாய் எனை அணை

அணைத்தால் உனை
திறக்கும் அணை
இனி நான் உந்தன் துணை..

போதும் போதும்
போதையேறும்
பேதை தாங்காது.. (கயலோ விழி..)


இளமையாய்.
எங்கும் இனிமையாய்.. ஓஓஓ..

திறமையாய்
எல்லாம் திருடினாய்..ஓஓஓ

அடியே என்னில் என்ன புது பூகம்பம்
அடடா பொறு இது வெறும் ஆரம்பம்

இடம் வலம் எது
புரியா நிலை
புதிராய் இன்று
பெண்ணே..

தினம் தினம் இனி
இதுதான் நிலை
புலரி வரை
அன்பே..

ஏழை தேகம்
வேளை பார்த்து
சொர்க்கம் சேராதோ.... (கயலோ விழி..)

Friday, April 15, 2011

ஏதோ மோகம் ஏதோ தாகம்...

”ஏதோ மோகம் ஏதோ தாகம் ” - கோழி கூவுது பாடலின் மெட்டுக்கு வரிகள் எழுத முயன்றதன் விளைவு கீழே.

மாலை வேளை
வ‌ந்தான் காளை
தேக‌மெங்கும் தென்ற‌ல் தொட‌
தேவியிவ‌ள் நெஞ்ச‌ம் சுட‌
மோக‌ம் மெல்ல‌..
என்ன‌ சொல்ல‌....

மாலை வேளை
வ‌ந்தாள் பாவை
க‌ன்னியிவ‌ள் க‌ண்க‌ளிலே
காம‌ன‌வ‌ன் அம்புக‌ளை
க‌ண்டேன் நானே
சொர்க்க‌மிங்கே..!

அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்
அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்

வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்
வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்

பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்
பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்

செண்டு ம‌ல்லி பூவின் வாச‌மே
ரெண்டு நெஞ்சிலே பார‌மேற்றுமே

(மாலை வேளை...)
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து

கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து
கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து

உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே
உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே

அந்தித் தென்ற‌ல் மெல்ல‌ வீசுதே
வ‌ஞ்சி நெஞ்சிலே ஆசை பூக்குதே..
(மாலை வேளை...)

குறிப்பு:இப்படியான விபரீத முயற்சி இன்னும் தொடரும்.

Friday, August 13, 2010

ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை

ஆட்டோ ராஜா பட‌ பாட‌லான‌ ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை மெட்டுக்கு வ‌ரிக‌ள் எழுத‌ முய‌ன்ற‌த‌ன் விப‌ரீத‌ விளைவு கீழே.

ஆண்:என்செய்தாய் ஏதேதோ செய்தாய்
என்னைத்தான் நீ சொல்லடி.
கண்வைத்தேன் கண்ணுக்குள் வைத்தேன்
உன்னெஞ்சில் எனைத் தள்ளடி (எனை என்செய்தாய்)

ச‌ர‌ண‌ம் 1

பொன் தேகம் நான் தீண்டும் வேளையில்
வெட்கப்பூ நீ சூடுவாய்
சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்
பொன்னந்தி .... நிறம் அள்ளி
நாணத்தால் புதுக் கோலம் பூணுவாய்..
பாவத்தால் எதிர் காலம் காட்டுவாய்..

ச‌ர‌ண‌ம் 2:
பெண்:என்னை நீ பார்க்கின்ற‌ வேளையில்
என்னுள் தீ எழுகின்ற‌தேன்
பின்னால் நீ தொட‌ர்கின்ற‌ வேளையில்
என் கால்க‌ள் ந‌டை ம‌ற‌ந்து போவ‌தேன்?
அன்பே உன்........ பொன்மார்பில்....
நான் சாயும் நாள் பார்த்துச் சொல்லிடு
மஞ்சத்தில் எனைச் சேர்த்துக் கொன்றிடு..

கண்ணோடு கண் பேசும்போது
மௌனம்தான் மொழியானதோ
பூவைதான் பூவைக்கும்போது
பூவாய்த்தான் நான் மாறவோ

கொசுறு:பாட‌லில் மூன்று ச‌ர‌ண‌ம் இருக்கும் இந்த‌ இர‌ண்டு ச‌ர‌ண‌த்திற்கே உங்க‌ளுக்கு க‌ண்ணைக் க‌ட்டியிருக்கும் என்ப‌தால் இத்தோடு ரூமை காலிசெய்து வ‌ந்துவிட்டேன்.:))‌