அவ்வப்போது கூகிள் ப்ளஸில் கிறுக்கியவை சில...
* என்னைப் பற்றி சொல்வதற்கு சிறப்பாய் எதுவுமே இல்லை என்பதுதான் என்னுடைய சிறப்பு.
* எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடுகிறது.
#பிளைன் பிரியாணியில் மட்டன் பீஸ்.
* ஒரு பொண்ணு அழகா இருக்கா என்றோ இல்லை என்றோ சொல்வதற்கு நாம் அழகா இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
#எப்போப்பாரு உன் மூஞ்சிய கண்ணாடியில் பாக்கவே மாட்டியான்றாய்ங்க.
* மாடர்ன் வேல்ட், டெக்னாலஜி புரட்சி பற்றியெல்லாம் ஏதுமறியாது, அதாவது நம் கூற்றுபடி கிணற்றுத் தவளைகளாக இருப்பவர்கள் , அவர்கள் வாழும் சூழலில் எவ்வித குழப்பமுமின்றி அவர்களுக்கான வாழ்க்கையை பெரிதாய் வாழ்கிறார்கள்.
* பால்யகால நட்புகளையும்,அவர்களுடன் கழிந்த பொழுதுகளையும் அசைபோட இனிமையாய் இருக்கும் அதே நேரத்தில் நேரில் பார்க்கும்போது,” நலமா?” என்பதைத் தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லாததாய் இருக்கிறது.
# வயதின் ரசனை மாற்றம்.
* காயிருப்பக் கனி கவர்ந்தற்று.
# பாகற்காய்
* உண்மை, உண்மையாய்த் தெரிய பொய்களின் துணை தேவையாய் இருக்கிறது சமயங்களில்.
* ”கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்”.
#அப்படீன்னா கோபம் என்பது ஒரு குணம் இல்லையா?
* சந்தர்ப்பங்களில் சனியனாய் அமைந்துவிடும் சாதாரணமாய் உதிர்க்கும் வார்த்தைகள்.
#யாகாவராயினும் நா காக்க
* பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருட்டு என்று நினைக்குமாம்.
#திறந்தால் மட்டும் என்று கவுண்டர் விடுவது சாட்சாத் தமிழ்நாட்டு பூனை.
* மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளத் துடிக்கும் தமிழ்த்திரைக் கதாபாத்திரங்களின் கைகளில் சிக்கும் தீப்பெட்டியின் தீக்குச்சிகளில் முதலிரண்டு குச்சிகள் எப்போதும் பதத்து போனவையாகவே இருக்கின்றன.
* ”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்றதும் ”ஏன் மாற்றான் தோட்டத்து ரோஜா மணக்காதா?” என்றோ,”அயன் தோட்டத்து மல்லிகை மணக்காதா?” என்றோ ஃபேஸ் புக்கில் கணக்கில்லாத யாரேனும் சொன்னால் அவர்களிடம் உடனே ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.

4 comments:
ஹா...ஹா.... கலக்கல்...
அட !!
நன்றி தனபாலன்.
நன்றி மோகன் குமார்.
The Casino of Chicago - JTM Hub
JTM's entertainment, dining and nightlife are coming to Chicago. The 전라북도 출장마사지 entertainment, 전라북도 출장안마 dining 여수 출장안마 and nightlife at the JTM Resort & Casino 경상북도 출장샵 in Chicago 창원 출장안마 is
Post a Comment