மொக்கை என்றால் என்ன?
வாங்க உங்களுக்கு ஒரு உதாரணம் மூலமாக விளக்குகிறேன்.
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழியை எடுத்துக்குவோம்.
ஆறாம் வகுப்பில் ஆசிரியர் இந்தப் பழமொழியை சொல்லி அதற்கான விளக்கமாக ,”பசங்களா இதுவரைக்கும் நீங்க தெரிஞ்சிக்கிட்டது கை மண் அளவுதான், இனி நீங்க கத்துக்க வேண்டியது உலகளவு ” என்றார்.
ஓகே, அதன் பிறகு ஏழாப்பு,எட்டாப்பு என ஆரம்பித்து மேற்படிப்பு வரைக்கும் படிச்சாச்சு, அப்புறம் வேலையில் சேர்ந்தும் சில வருடங்கள் ஆச்சு. இப்போது கற்றது அட்லீஸ்ட் ஒரு கால்கிலோவாவது இருக்கணும் இல்லையா, இப்பவும் கற்றது கைமண் அளவுன்னா லாஜிக் இடிக்கிற மாதிரி இல்லை என்று தட்டையாய் ஒரு வாதத்தை முன் வைக்கலாம்.
இல்லை, ஆறாப்பு படிச்சப்போ இருந்த கை சைஸ்தான் இப்பவும் இருக்குமா,இப்போ கையும் பெருசா ஆகியிருக்கும், நீ புதுசா கத்துக்கிட்டது இப்போ உள்ள கையளவு மண்ணுக்கு சமம் என்று படிமங்கள்,குறியீடு என பல அடுக்குகளுக்குள் புகுந்து இதை அணுகி லாஜிக் கண்டுபிடித்து மடக்கலாம்.
”அட இருங்கப்பா, என்னுடைய கைமண் அளவையும் சேர்த்ததுதானே உலகளவு என்பது, அப்படி பார்த்தா, கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு - கைமண் அளவுஎன்பதுதானே சரியா இருக்க முடியும்” என்று பழமொழியைச் சொன்ன ஔவையார் கணக்கில் வீக் என்று புரூவ் பண்ணி தீர்ப்பு சொன்னவனுக்கு ஆப்பு வைக்கும் மூன்றாவது கோணத்திற்கும் இந்த பழமொழி விசாலமாய் வாயிலைத் திறந்து வைத்து ஒரு இன்ஃபினிட்டியாய் தொடர்கிறது இல்லையா?
அதனால்தான் ஏற்கனவே இப்படி ஆராய்ஞ்சவய்ங்க சொல்லியிருக்காய்ங்க, ”பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது” என்ற நீதியை.
ஓகே, இப்போது இது மொக்கைதானா என்பதை கீழ்கண்ட சோதனைகள் மூலம் கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்.
1. இதை படிக்க ஆரம்பிச்சு சில நொடிகளிலேயே ”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...முடியல”
2. ஹேய் ஹேஹஹேய்..வன்ட்டாருப்பா பெரிய ...
3.ஏன்டா ரூம்போட்டா யோசிச்ச கொய்யால..
4. இவனையெல்லாம் யோசிக்காம பிளாக் பண்ணா என்ன
இந்த நான்கில் எதாவது ஒன்று உங்களுக்கு தோன்றியிருந்தால் கண்டிப்பா கன்ஃபார்ம் பண்ணிக்கலாம் இது மொக்கை என்று.

No comments:
Post a Comment