Wednesday, February 6, 2013

டைம் பாஸ்-4

அவ்வப்போது கூகிள் ப்ளஸில் கிறுக்கியவை சில...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை- ஔவையார்
# குற்றம் பார்க்காட்டி சோறே இல்லை - சாஃப்ட்வேர் டெஸ்டிங் மக்கள்.


சொல்லாத காதலில் சோகங்களைவிட சுகங்களுக்கான இடம் விஸ்தாரம்.
# ப்ச் அதெல்லாம் உங்களுக்கு புரியாது, அபிராமி அபிராமி

”வேண்டாம்” என்று சொல்லப்படாமல் சேமிக்கும் சொற்கள் வெடித்துச் சிதறிவிடுகின்றன வாக்கியங்களாய்  ஏதோ ஒரு கணத்தில்.
தீபாவளி வரைக்கும் இப்படியே சேமிச்சுகிட்டே இரு , பட்டாசு செலவு மிச்சம்.

பழங்களை தனித்தனியே பிழிந்து சாப்பிட்டால் பழ ஜூஸ். அப்படியே ஒட்டுக்கா அடிச்சு சாப்பிட்டா அது பல ஜூஸ்.
# என்னமோ போடா..


தோல்வியை பழக்கப்படுத்திக்கலாம், வழக்கப்படுத்திக்கத்தான் கூடாது.
# இனிமே நீ இப்படியே பேசுப்பா

குறைகளை உணர்தல் என்பது ஒரு நிலை. அதுவே திருந்துதல் ஆகாது. திருத்திக்கொள்ளுதல் என்பது உணர்தலுக்கு பின்பான போராட்டம். அது கைகூடலாம் கூடாமலும் போகலாம்.
# உணர்ந்ததும் புரிந்ததும்-2012

சராசரி மனிதர்களைக் காட்டிலும் சற்றே வித்தியாசமானவன் என்ற எண்ணம் சராசரியாய் எல்லோரிடமும் இருக்கிறது.
# சாராசரியாக்கூட வேண்டாம் தோராயமா சொல்லு   இப்போ நீ என்ன சொல்ல வர்ர..

”நாம அட்வைஸ் பண்றதால யாரும் திருந்திட மாட்டாய்ங்க, அவனவன் பட்டுத்தான் திருந்துவாய்ங்க .அதனால யாருக்கும் அட்வைஸ் பண்ணாதடா” என்கிறான் நண்பன்.
# இது அட்வைஸ்ல வராது,  போதனை.


புதிது புதிதாய் அறிமுகமாகும் நட்புகள் போலவே கொத்து கொத்தாய் தொடர்பற்றும் போய்க்கொண்டே இருக்கின்றன முந்தைய நாட்களில் கொண்டாடிய நட்புகள்.
# வாழ்க்கை , நீண்டதொரு ரயில் பயணம்.

சூடா பஜ்ஜி சாப்பிடலாம்னு போனா ஆறிப்போனதா வச்சிருக்கானுங்க.. ச்சே பெருத்த ஏமாற்றம்... என்ன ஸ்டேட் கவர்மெண்ட் என்ன செண்ட்ரல் கவர்மெண்ட்..
# இப்படி பொலம்ப விட்டுட்டானுங்களே..

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்?
#பொங்கல் பண்டிகைக்காக வெள்ளிக்கிழமை கோயம்பேட்டில் எப்படியாவது ஒரு பஸ் கிடைச்சிடும் என்று நினைக்கிறதுக்கும், வியாழன் அன்று ஐ.ஆர்.சி.டி.சியில் தட்கலில் டிக்கெட் எடுத்துடுவேன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

No comments: