என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் பின்னணி பாடகி சித்ரா. குறிப்பாய் ”பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா”, ”மலரே பேசு மௌன மொழி”,”சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” போன்ற அவரது ஆரம்ப கால பாடல்களில் இருந்த அந்த குழந்தைத் தனமான உச்சரிப்பின் மீது பெரிய மயக்கம் உண்டு.
அவரைவிடுத்து மற்ற பாடகிகளை அவர்கள் பாடியிருக்கும் எல்லா பாடல்களிலும் நான் ரசித்தது இல்லை . அதே நேரத்தில் சில பாடல்கள் இவர்களைத் தவிர வேறு யாரும் இத்தனை சிறப்பாய் பாடியிருக்க முடியாது என்றும் அல்லது அந்த பாடலை வேறு குரலில் யோசிக்கவே வேண்டியதில்லை என்கிற மாதிரியும் தோன்றும். உதாரணமாய் சொர்ணலதாவின் என்னுள்ளே என்னுள்ளேவையோ, ஜானகியின் ராசாவே ஒன்ன நம்பியையோ ,உமாரமணனின் மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவேவையோ,வாணி ஜெயராமின் என்னுள்ளில் எங்கோவையோ இன்னொரு குரலில் என்னால் யோசிக்க முடியாது.
இளையராஜா பீக்கில் வந்ததும் எம்.எஸ்.வி காலத்தில் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்த சுசீலாவிற்கு கிள்ளியும், ஜானகிக்கு அள்ளியும் வழங்க ஆரம்பித்ததில் பின்னணி பாடுவதில் முன்னணிக்கு வந்தார் ஜானகி . அள்ளி வழங்கியதாலோ என்னவோ ஜானகி பாடிய சில பாடல்கள் அவருடைய குரலுக்கு அத்தனை பொருத்தமில்லையோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.
ஜானகியின் குரல் குழந்தையாய்,குமரியாய்,கிழவியாய் கொஞ்சி,கெஞ்சி,சிணுங்கி என ஜாலம் செய்து எக்ஸ்பிரஷனில் ஸ்கோர் செய்துவிடும் எனினும் சில பாடல்களில் ஒரே பாடலிலேயே இரண்டு கதாபாத்திரத்திற்கு பாடுவது போல வேறுபட்டு கேட்கவும் செய்யும். ஜானகி பாடிய சில பாடல்களை வேறு யாராவது பாடியிருக்கலாமோ என்கிற எண்ணத்தை உண்டு பண்ணவும் செய்திருக்கிறது. மாறாக வெகு சொற்பமான எண்ணிக்கையிலான பாடல்களையே ராஜாவிற்கு சுசீலா பாடியிருந்தாலும் அந்த பாடல்கள் அனைத்திற்குமே மாற்றாய் வேறொரு குரலை யோசிக்க முடியாதபடியாய் இருக்கும். சுசீலாவின் குரல் ஜானகியின் குரலினைப்போல எக்ஸ்பிரஷன்ஸில் ஜாலங்கள் காட்டாவிட்டாலும் குரலினிமை என்கிற தன்மையில் அடித்து செல்லும். போலவே சில வார்த்தைகளை அவர் உச்சரிக்கும் தொனிகூட வசிகரமாய் இருக்கும். அப்படி ராஜாவிடமிருந்து கிடைத்த வாய்ப்புகளில் சிக்ஸர் அடித்த சுசீலாவின் பாடல்கள் சில youtube இணைப்புடன்.
காலைத் தென்றல் பாடி வரும் :
கற்பூர பொம்மையொன்று:
மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு:
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ:
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்:
சோலை புஷ்பங்களே:
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்:
அரும்பாகி மொட்டாகி பூவாகி:
தில் தில் தில் மனதில்:
முத்துமணி மால:

6 comments:
nice collection.Melodies will melt u unconditionally.Wow and thanks for reminding those honey dew songs.
நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.
அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் கொடுத்துள்ள 12 பாடல்களில்
மண்ணில் வந்த மலரே பாடல் நிலவே மலரே என்னும் படத்திற்கு இசை அமைத்தவர் எம் எஸ் வி. இளையராஜா அல்ல

மிக்க நன்றி நன்றி நண்பரே. அந்த பாடலை நீக்கிவிட்டேன்.
Post a Comment