நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி போய் பார்ப்பவரா நீங்கள், அப்படியெனில் உங்களுக்காத்தான் இந்த பதிவு.தமிழில் இதுவரை வெளியான படங்களில் மறக்க முடியாத படங்களென்றும், பார்க்க வேண்டிய படங்களென்றும் பெரும்பாலானோர் சொல்வது முள்ளும் மலரும், உதிரி பூக்கள்,மூன்றாம் பிறை,நாயகன்,16 வயதினிலே மற்றும் சில பாலச்சந்தர் திரைப்படங்கள் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த காதல், வெயில், பருத்தி வீரன் இப்படி சிலவும் இந்த பட்டியலில் உண்டு.இவைத் தவிரவும் நான் ரசித்த எல்லோரும் பார்க்க வேண்டும் என நினைக்கிற சில படங்களும் உண்டு.
அந்த வகையில் நல்ல கதையம்சம் மற்றும் வித்யாசமான திரைக்கதையில் வெளிவந்த அறுவடை நாள்,ஒருவர் வாழும் ஆலயம் மற்றும் சின்னத்தாயி படங்களை பற்றிய ஒரு பார்வை.இம்மூன்று படங்களும் மேற்சொன்ன படங்களை போல பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் உங்களுக்குள் ஒரு சின்ன அதிர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
அறுவடை நாள்:
G.M.குமாரின் இயக்கத்தில் பிரபு,ராம்குமார், பல்லவி, R.P.விஸ்வம், வடிவுக்கரசி, ராசி ஆகியோரின் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் கதை புதுமையாக இல்லாவிட்டாலும்,கதைக் களம் வித்யாசமானதாய் இருக்கும்.கதை வடிவுக்கரசியின் பார்வையில் தொடங்கும், ஒரு கிராமம், அதில் ஒரு பண்ணையார்(விஸ்வம்), அவரின் வெகுளித்தனமான மகன்(பிரபு), அவ்வூர் தேவாலயதின் பாதிரியார்(ராம்குமார்),மருத்துவ சேவை செய்ய வரும் ஒரு கிறித்துவப் பெண்(பல்லவி) மற்றும் பிரபுவின் முறைப் பெண்ணான ராசி இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கன்னியாஸ்திரியாகும் எண்ணத்தோடு இருக்கும் பல்லவிக்கு, பெற்ற தந்தையாலேயே அடிமைபோல் நடத்தப்படும் பிரபு மீது இயல்பாய் பிறக்கிற இரக்கம் நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர காரணமாயிருக்கிறது . இவர்களின் காதலுக்கு பாதிரியார் ராம்குமார் துணையாக நிற்கிறார். விஷயம் பண்ணையாருக்கு தெரியவரும்போது தனது குள்ளநரித்தனத்தால் பிரபுவுக்கே தெரியாமல் மைனர் பெண்ணான ராசியை திருமணம் செய்து வைத்துவிடுகிறார். ராசியுடன் தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா,பல்லவியுடனான காதல் என்னானது என்பதையெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இப்படத்தின் தலைப்பு இக்கதைக்கு எவ்வளவு பொறுத்தமானது என்பதை படத்தின் முடிவில் உணர்வீர்கள்.
இந்த படத்தில் என்னை கவர்ந்த விஷயம் ராம்குமாரின் கதாபாத்திரமும் மற்றும் அவர் பேசும் வசனங்களும். ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம். ஆனால் யாருடைய நடிப்பும் இதுதான் முதல் படம் என்பதுபோல் தெரியாது. இளையராஜாவின் இசையில் "தேவனின் கோவில் மூடிய நேரம்" என்ற அற்புதமான பாடலும் உண்டு. பாடல்கள் கங்கை அமரன்,கதை லிவி ,வசனம் R.P.விஸ்வம்.
கொசுறு:இப்படத்தின் இயக்குனர் G.M.குமார் பின்னர் இப்படத்தின் கதாநாயகியான பல்லவியை மணந்து கொண்டார்.வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.
ஒருவர் வாழும் ஆலயம்:
சண்முகப் பிரியன் இயக்கத்தில்,இளையராஜாவின் இசையில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரபு, ரஹ்மான், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவக்குமார் ஒரு இசைக்கலைஞன், தன் மனைவிமீது(அம்பிகா) அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறார், தலைபிறசவத்தில் ஒரு பெண்குழந்தையை ஈன்று மனைவி இறந்து போகிறார். மனைவியின் இறப்பிற்கு காரணமாக தனது மகள் ரோகினியை(ராது) நினைக்கும் சிவகுமார் அவரை வெறுக்கிறார், அது அவள் வளர்ந்து குமரியான பிறகும் தொடர்கிறது. இந்நிலையில் சிவக்குமாரிடம் சங்கீதம் பயில வரும் ரகுமானுக்கும், ரோகினிக்குமிடையே மெலிதாக காதல் அரும்புவது தெரிந்து அவசரமாக தனது மகளை பிரபுவிற்கு மணமுடித்து வைக்கிறார்.அதன் பிறகு ரகுமான் ஒருமுறை ரோகினியை பார்க்க நேரிடும்போது ஊர்மக்களால் அவர்களது சந்திப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பிரபுவிடம் சொல்லிவிட பிரபு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். இந்த சூழ்நிலையில் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் ரகுமானை பிரபு காப்பாற்றுகிறார். பிறகு ரகுமான் யாரென்று தெரிந்து பிரபு என்ன செய்கிறார், கதாநாயகி என்ன ஆனாள் என்பதை ஆன்லைனிலோ, டி.வி.டியிலோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் திரைக்கதை, கதையின் ஒருபாதி ரகுமானின் கண்ணோட்டத்திலும்,மறுபாதி பிரபுவின் பார்வையிலும் எடுத்துச் சென்றிருப்பது வித்யாசமாய் இருந்ததால் எனக்கு பிடித்த படமாயிற்று. "மலையோரம் மயிலே","நீ பௌர்ணமி" போன்ற பாடல்களும் உண்டு.
சின்னத்தாயி :
கணேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் அறிமுகமான இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில் வித்யாசமான திரைக்கதையோ, பிரமாண்டமான காட்சி அமைப்புகளோ எதுவுமே இராது, ஆனால் எடுத்துக்கொண்ட கதை சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் இருந்தது. ஊரின் பூசாரியான வினுசக்கரவர்த்தி, அவரின் மகன் விக்னேஷ், அந்த ஊரின் முக்கியஸ்தர் நெப்போலியன், அவரின் கீப்பாக சபிதா ஆனந்த், சபிதா ஆனந்தின் மகளாக கதாநாயகி பத்மஜா(பொற்காலம் ராஜேஸ்வரி) இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கதைப்படி சின்னத்தாயி(பத்மஜா) மற்றும் விக்னேஷ் இருவரும் சிறுவயது முதலே விளையாடித்திரிகிறார்கள்,பருவ வயது வந்ததும் அவர்களிடத்தில் காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் பழக்கம் மெல்ல சபிதா ஆனந்திற்கு தெரியவர தன் மகளை கண்டிக்கிறார். தன் நிலை தன் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கல்யாணத்திற்கு முன்னரே சின்னத்தாயி கர்ப்பமாகிறாள், இதற்கிடையில் சபிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக நெப்போலியனின் கண் சின்னத்தாயின் மீது விழுகிறது, அவரிடத்திலிருந்து தன் மகளை காப்பாற்றும் போராட்டதில் தனது உயிரை விடுகிறார் சபிதா. அதைத்தொடர்ந்து சின்னத்தாயி ஊரைவிட்டு விரட்டப்படுகிறார். ஊர் திருவிழா வருகிறது, எப்போதும் சுடலைமாடன் வேடம் தறித்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை அழிக்கும் வினுசக்கரவர்த்திக்கு(சுடலைமாடன் வேட்டைக்கு போகும்போது அவர் கொலை செய்தால் கூட அது சாமி செய்ததாக நம்புகிற ஊர்) பதிலாக அவர் மகன் விக்னேஷ் சுடலைமாடனாகிறார். ஊரைவிட்டு விரட்டப்படும் சின்னத்தாயி சுடலைமாடன் வேடம் தறித்து வேட்டைக்கு கிளம்பும் விக்னேஷின் முன்னால் பிறசவித்த பச்சை உடம்போடு ( கதைப்படி தீட்டு உடம்போடு) வந்து விக்னேஷிடம் கேட்கும் கேள்விகளும்,அதை தொடர்ந்து வரும் சம்பவங்களும் இந்தப் படத்தை சிறந்த படமாக எனக்கு அடையாளம் காட்டியது.இப்படத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானவை, குறிப்பாக "நான் ஏரிக்கரை மேலிருந்து", "கோட்டையை விட்டு" ஆகிய பாடல்கள்.
கொசுறு:இத்திரைப்படங்களை பாரக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அந்த படங்கள் வெளியான வருடத்தையும் அப்போதுள்ள டெக்னிக்கல் விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.