Sunday, November 23, 2008

காணாமல் போன பின்னணி பாடகிகள்:

கொஞ்ச காலங்களுக்கு முன் பல மறக்க முடியாத பாடல்களை பாடி, இன்று வாய்ப்புகள் இல்லாமலோ அல்லது குறைந்தோ போன பின்னணி பாடகியரை பற்றிய ஒரு சிறு நினைவூட்டலே இந்த பதிவு.

ஜென்ஸி:

1980 களின் ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான ஒருசில படங்களில் நிறைய அசத்தலான பாடல்களை பாடிய தேன் குரலுக்குச் சொந்தக்காரர். பாடிய அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டானது வேறெந்த பாடகிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு. கேரளாவில் அரசு வேலைக் கிடைத்ததும் அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் வெளியான இவரின் பேட்டியில் மீண்டும் பாடுவதற்கு ஆவலாக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் "சரவெடி" படத்தில் பாடப்போகிறார் என்ற செய்தி வெளியாகிருக்கிறது.வந்து கலக்குங்க மேடம்.

இவர் பாடிய பாடல்கள் சில:

தெய்வீக ராகம் -உல்லாச பறவைகள்
என் வானிலே - ஜானி
என் உயிர் நீதானே-ப்ரியா
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் மலர்களே,இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள்.

உமா ரமணன்:
இசைப்பிரியர்கள் பலருக்கு விருப்பமான பாடலாக இருக்கும் 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலை பாடியவர். இவர் பாடும்போது வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மிகத் தெளிவாக இருக்கும். ஹைபிட்ச் பாடல்களை இவர் பாடும் விதம் அருமையாக இருக்கும்.ஏனோ இவர் பெரிதாக அங்கீகரிக்கப் படவில்லை என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையில் புதையல் படத்தில் 'பூத்திருக்கும் மனமே' பாடலை பாடினார்.இவர் சமீபத்தில்(?) திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு' பாடலை பாடியிருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் சில:

பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்
ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
பொன்மானே கோபம் ஏனோ-ஒரு கைதியின் டைரி
கஸ்தூரி மானே கல்யாண தேனே-புதுமைப் பெண்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு- மெல்ல பேசுங்கள்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு
ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
நீ பாதி நான் பாதி கண்ணா - கேளடி கண்மணி

பி.எஸ்.சசிரேகா:
மெல்லிசை மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரின் திறமைக்கு, இளையராஜாவின் இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இவர் பாடிய 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' பாடல் ஒரு சோறு பதம்.ஒரு காலத்தில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியான் இசையில் வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடிய இவர் கடைசியாக திரையில் பாடியது கிழக்குச் சீமை படத்தில். சிறிது நாட்களுக்கு முன் எஸ்.பி.பியுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றபோது எஸ்.பி.பி இவரிடம் ”இப்போ உள்ள சில பாடகிகளை ஒப்பிடும்போது உன்னோட திறமைக்கு உனக்கு இன்னும் குறைந்தது 500 பாடல்களாவது பாடும் வாய்ப்பு வந்திருக்கணும்” என்றதைக் கேட்டதும் மெலிதாக சிரித்தார் இருந்தாலும் அந்தச் சிரிப்பில் உரிய அங்கிகாரம் கிடைக்காத வேதனையேத் தெரிந்தது.இன்னும் அதே குரல்வளத்தோடு பாடுகிறார்.தற்போது மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்தவா - செந்தூரப் பூவே
மாமரத்து பூவெடுத்து,ராத்திரி நேரத்து பூஜையில் - ஊமை விழிகள்
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி - உயிருள்ளவரை உஷா
வரகு சம்பா முளைக்கலே  - உழவன் மகன்
 தென்றல் என்னை முத்தமிட்டது  - ஒரு ஓடை நதியாகிறது 

எஸ்.பி.ஷைலஜா:
எஸ்.பி.பியின் தங்கையான இவர் எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியவர். மெலடி மற்றும் குத்து இரண்டுக்குமே மிகப் பிரமாதமாக பொருந்தக் கூடிய வளமான குரலுக்குச் சொந்தக்காரர்.இவர் தனது அண்ணனோடு இணைந்து நிறைய டூயட் பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாநகரக் காவல் படத்தில் வரும் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர' பாடலைச் சொல்லலாம்.

இவரின் பாடல்கள் சில:

சோலைக் குயிலே - பொண்ணு ஊருக்கு புதுசு
ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் - தனிக்காட்டு ராஜா
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி
மாமன் மச்சான் - முரட்டுக் காளை
கட்ட வண்டி கட்ட வண்டி - சகலகலா வல்லவன்
வா வா மஞ்சள் மலரே- ராஜாதி ராஜா
ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி

சுனந்தா:

இந்தப் பதிவை பற்றிய சிந்தனைக்கு காரணமாய் இருந்தவர்.ரொம்ப பிரபலமான பாடல்களை பாடியிருந்தும் அதிகமாய் அறியப்படாத பாடகி. இவரது குரல் மெலடி பாடல்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும், குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள்.இவர் பாடிய பெரும்பாலான டூயட் பாடல்கள் ஜெயச்சந்திரன் அவர்களோடுதான். இளையராஜாவைத் தொடர்ந்து தேவா இசையிலும் பல தாலாட்டுப் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

காதல் மயக்கம் - புதுமைப் பெண்
பூ முடித்து பொட்டு வைத்த - என் புருஷன்தான் எ.மட்டும்தான்.
ஆனந்தம் பொங்கிட பொங்கிட-சிறைப் பறவை
வெள்ள மனம் உள்ள மச்சான் - சின்ன வீடு
செண்பகமே செண்பகமே- எ.ஊ.பாட்டுக்காரன்
செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
மன்னவா மன்னவா - வால்டர் வெற்றிவேல்
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - உழைப்பாளி


மின்மினி:

ஒரே நேரத்தில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ந்து பல படங்களுக்கு பாடல் பாடும் வாய்ப்பைப் பெற்றவர்.ரோஜாவில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை'க்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதைப் பெற்றவர்.ரொம்பவும் பிஸியாக இருந்த நேரத்தில் குரலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பேசக்கூட முடியாத நிலையில் இசைத்துறையைவிட்டு எதிர்பாராமல் விலக நேர்ந்தது சோகம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மீண்டும் பாடும் வாய்ப்பை பெற்றார்.அந்த பாடல் படத்தில் இருக்கிறதா என தெரியவில்லை.


இவர் பாடிய சில பாடல்கள்:

லவ்வுன்னா லவ்வு - மீரா
காற்றுப் பூவை பார்த்து - ஐ லவ் இண்டியா
மெதுவா தந்தியடிச்சானே - தாலாட்டு
மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி
பச்சை கிளி பாடும் ஊரு - கருத்தம்மா
பார்க்காதே பார்க்காதே - ஜென்டில் மேன்
சித்திரை நிலவு சேலையில் வந்தது - வண்டிச் சோலை சின்ராசு
சம்போ சம்போ - புதிய முகம்


அடுத்த பதிவில் பின்னணி பாடகர்களான தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர்,மனோ(??!!) இவர்களைப் பற்றி பார்ப்போம்.

41 comments:

புருனோ Bruno said...

அருமையான கட்டுரை

தொடர்ந்து இது போல் எழுதுங்கள்

முரளிகண்ணன் said...

அருமையான பதிவு.

SUREஷ் said...

நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே பாட்டில் கடைசி வரி பாடும் பெண்மனி

SUREஷ் said...

இதுல அரசியல் ஒன்னும் இல்லியே

SUREஷ் said...

ஆனால் ஜானகி அவர்களுக்கு நிறைய பாடல் கள் கொடுத்து கடும் வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்

SUREஷ் said...

இன்னைக்கு ஒரு பாட்டுக்கு ஒரு பாடகி

SUREஷ் said...

இளைய தலைமுறைக்கு காற்றினிலே வரும் தீபம் பாடிய பாடகியைக்கூட தெறியாது

நந்தா said...

நல்ல பதிவு.

K.Ravishankar said...

ஜென்சி

அப்போது இருந்த குரல் இப்போது வருமா? சந்தேகமே .

எனக்கு பிடித்த பாட்டு. "தெய்விக ராகம்" ஒரு மனதை வ்ருடிச்செல்லும் பாடல்.

உமா

இவர் ப.சுசிலாவின் சித்தி பெண் போல் குரல். கஷ்டப்பட்டு பாடிய பாடல் "ஆனந்த ராகம்" சிம்மேய்ந்திர மத்யமத்தில் அமைந்தது

பி.எஸ்.சசிரேகா:

முதல் பாடல் "வாழ்வே மாயமா' விட்டு விட்டீர்கள்

தொண்ணூறு சதவீதம் மலையாளிகள்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான பதிவு.

உங்கள் இப்பதிவினை குழுமங்களிலும் அறிமுகப்படுத்துகிறேன்.

வண்ணத்துபூச்சியார் said...

wow..நல்ல பதிவு..

ஜென்ஸி.. We miss you..

வாழ்த்துக்கள்

யொஜிம்போ..... said...

ந்ல்ல பதிவு....நெறைய தெரிஞ்சுக்கற வாய்ப்பு.....

ஒரு சிறு திருத்தம்.....

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல வர செண்பகமே பாட்டு பாடினது ஆஷா போஸ்லே.....

http://www.raaja.com/ric/film/FL000179.html

அத்திரி said...

அருமையான பதிவு. ஜென்சியையும், சுனந்தாவின் குரலை எளிதில் மறக்க முடியாது.

தொடரட்டும் உங்கள்பணி

நாடோடி இலக்கியன் said...

புருனோ Bruno said...
//அருமையான கட்டுரை//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க புருனோ,

//தொடர்ந்து இது போல் எழுதுங்கள்//

முயற்சிக்கிறேங்க .

முரளிகண்ணன் said...
//அருமையான பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க முரளிகண்ணன் .

SUREஷ் said...
//நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே பாட்டில் கடைசி வரி பாடும் பெண்மனி//

அந்த அளவுக்கு பழைய பாடல்கள் பற்றி எனக்கு தெரியாதுங்க.வேறு யாராவது பதில் சொல்லக் கூடும்.பார்க்கலாம்.

//இதுல அரசியல் ஒன்னும் இல்லியே//

:)

//ஆனால் ஜானகி அவர்களுக்கு நிறைய பாடல் கள் கொடுத்து கடும் வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்//

ஆமாம் சொல்லிக்கிறேன்.

//இன்னைக்கு ஒரு பாட்டுக்கு ஒரு பாடகி//

உண்மைதான்.

//இளைய தலைமுறைக்கு காற்றினிலே வரும் தீபம் பாடிய பாடகியைக்கூட தெறியாது//

எம்.எஸ்.சுப்புலட்சுமி.(நான் இளைய தலைமுறைதாங்க)


முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க SUREஷ்,

நாடோடி இலக்கியன் said...

நந்தா said...
//நல்ல பதிவு//

வாங்க நந்தா,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .K.Ravishankar said...

//ஜென்சி

அப்போது இருந்த குரல் இப்போது வருமா? சந்தேகமே .

எனக்கு பிடித்த பாட்டு. "தெய்விக ராகம்" ஒரு மனதை வ்ருடிச்செல்லும் பாடல்.

உமா

இவர் ப.சுசிலாவின் சித்தி பெண் போல் குரல். கஷ்டப்பட்டு பாடிய பாடல் "ஆனந்த ராகம்" சிம்மேய்ந்திர மத்யமத்தில் அமைந்தது

பி.எஸ்.சசிரேகா:

முதல் பாடல் "வாழ்வே மாயமா' விட்டு விட்டீர்கள்

தொண்ணூறு சதவீதம் மலையாளிகள்.//

வாங்க ரவிஷங்கர்,
//அப்போது இருந்த குரல் இப்போது வருமா? சந்தேகமே //

அந்த அளவுக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை இவருக்கு.40 களின் இறுதியில்தான் இருப்பார்.

//"ஆனந்த ராகம்" சிம்மேய்ந்திர மத்யமத்தில் அமைந்தது //

நான் ஒரு ஞான சூன்யம், இங்கன சொல்லிக்கிறேன்.:)

//முதல் பாடல் "வாழ்வே மாயமா' விட்டு விட்டீர்கள்
//
ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

//தொண்ணூறு சதவீதம் மலையாளிகள்//

ஆமாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//அருமையான பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க எம்.ரிஷான் ஷெரீப் .

//உங்கள் இப்பதிவினை குழுமங்களிலும் அறிமுகப்படுத்துகிறேன்//

மறுபடியும் ஒரு நன்றியை சொல்லிக்கிறேன்.


வண்ணத்துபூச்சியார் said...
//wow..நல்ல பதிவு..

ஜென்ஸி.. We miss you..

வாழ்த்துக்கள்//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க வண்ணத்துபூச்சியார்.

நாடோடி இலக்கியன் said...

யொஜிம்போ..... said...
//ந்ல்ல பதிவு.... நெறைய தெரிஞ்சுக்கற வாய்ப்பு...

ஒரு சிறு திருத்தம்.....

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல வர செண்பகமே பாட்டு பாடினது ஆஷா போஸ்லே.....

http://www.raaja.com/ric/film/FL000179.html
//
வாங்க யொஜிம்போ,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

//எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல வர செண்பகமே பாட்டு பாடினது ஆஷா போஸ்லே.....//

நீங்கள் சொல்வதும் சரி, நான் எழுதியிருப்பதும் சரி.
செண்பகமே செண்பகமே பாடல் அந்த படத்தில் மூன்று முறை வரும்.
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது சோக பாடல் ரேகா பாடுவதுபோல வரும்,நான் குறிப்பிட்டு இருப்பது சந்தோஷமாக வரும் பாடல் நிஷாந்தி பாடுவதுபோல வரும் .மற்றொன்று மனோ பாடியது.
இந்த பாட்டை குறிப்பிடும் போது மேற்சொன்ன செய்திகளை அடைப்புக்குள் குறிப்பிட வேண்டும் என நினைத்தேன்.
நன்றி.

சக்திவேல் said...

அருமையான பதிவு. என் மனங்கவர் பாடகிகளைப்பற்றிய அலசல்களை தந்தமைக்க்கு நன்றி. தொடருங்கள் இதே போல.

குப்பன்_யாஹூ said...

பழையான கழிதலும் புதியன புகுதலும் நன்றே.

இன்று பல புதிய பாடகிகள்- மாதங்கி, ஸ்ரீலேகா , மாலதி, மகதி, மதுமிதா, ஹரிணி...

எ ரர் ரஹ்மான் நிறைய புதிய பாடகிகள், பாடகர்கள் அறிமுகம் செய்து உள்ளார்.

ஹீரோ ஹீரோயினும் நிறைய இப்பொழு, எனவே நிறைய பாடகர்கள், பாடகிகள் தேவை படுகிறார்கள்.

குப்பன்_யாஹூ

மரவண்டு-கணேஷ் said...

அன்புள்ள ரிஷான்

நன்றி .. சுனந்தாவின் புகைப்படம் இட்டமைக்கு :P

சசிரேகா பாடிய பாடல்கள்

இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மானூத்து மந்தையில மான் குட்டி பெத்தமயிலே -
திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா - நாம் இருவர்
தென்றல் என்னை முத்தமிட்டது - ஒரு ஓடை நதியாகிறது
பேசு என் அன்பே - விடியும் வரை காத்திரு
ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை - வீடு ஒரு உலகம்
கூந்தலிலே மேகம் கொண்டு - பாலநாகம்மா
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே - லக்ஷ்மி
நேரம் வரும் புது வாழ்வு வரும் - உயிரே உயிரே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து - அலைகள் ஓய்வதில்லை
0

சுனந்தா பாடிய பாடல்கள்

ஒரு கோலக்கிளி சொன்னதே - பொன்விலங்கு
பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

0


உமாரமணன் பாடிய சில பாடல்கள்

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே - நண்டு
அலைகளே வா அவருடன் நீ வா- கவிதை மலர்
ஓ உன்னாலே பெண்ணானேனே - என்னருகே நீ இருந்தால்


0

ஷைலஜா பாடிய சில பாடல்கள்

மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே - வெளிச்சம்
நதிக்கரை ஓரத்து நாணல்களே -
செவ்வானமே சீர் கொண்டு வா- காதல் கிளிகள்
கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே
ராகம் புது ராகம் - நெஞ்சில் ஒரு முள்
பனி மழை விழும் - எனக்காக காத்திரு
மழை தருமோ என் மேகம் (ஹம்மிங்)
மாமன் ஒரு நாள் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
சீதையம்மா அழக ராமனும் கொண்டாட
மலர்களே இதோ இதோ - தீராத விளையாட்டுப்பிள்ளை
வாலிபமே வா வா - ராம்லக்ஷ்மண்
சாமக்கோழி கூவுதையா
வான் போலே வண்ணம் கொண்டு - சலங்கை ஒலி
பூமாலை போட்டதால - பாசவலை
கோடி இன்பம் மேனியெங்கும் பாய்ந்ததம்மம்மா- நெஞ்சிலாடும் பூ ஒன்று
ஜனனி ஜனனி எனை நீ கவனி - விஸ்வநாதன் வேலை வேண்டும்
ஆனந்த வெள்ளத்திலே - ஆகாய தாமரைகள்

0

மின்மினி பாடிய பாடல்கள்

ஒரு மாலைச்சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ நீ தான் என்ன பண்ணுவ
கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன

என்றும் அன்பகலா
கணேஷ்

நாடோடி இலக்கியன் said...

அத்திரி said...
//அருமையான பதிவு. ஜென்சியையும், சுனந்தாவின் குரலை எளிதில் மறக்க முடியாது.

தொடரட்டும் உங்கள்பணி//

வாங்க அத்தரி,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

சக்திவேல் said...
//அருமையான பதிவு. என் மனங்கவர் பாடகிகளைப்பற்றிய அலசல்களை தந்தமைக்க்கு நன்றி. தொடருங்கள் இதே போல.//

வாங்க சக்திவேல் ,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.


குப்பன்_யாஹூ said...
//பழையான கழிதலும் புதியன புகுதலும் நன்றே.//

வாங்க குப்பன்_யாஹூ,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.
நீங்கள் சொல்லியிருப்பது சரிதாங்க, ஆனால் பழையன ஆவற்கு முன்னமே காணாமல் போனதால்தான் இந்த பதிவேயன்றி இப்போதிருக்கும் பாடகிகளின் திறமையில் சந்தேகமில்லை.

நாடோடி இலக்கியன் said...

மரவண்டு-கணேஷ் said...

//அன்புள்ள ரிஷான்

நன்றி .. சுனந்தாவின் புகைப்படம் இட்டமைக்கு :P//

வாங்க மரவண்டு-கணேஷ் ,

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.
என்னுடைய பதிவில் ரிஷானுக்கு நன்றி சொல்லியிருக்கீங்க.(ஏதோ அவசரம் போலும்).
குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பாடகியும் பாடிய பெரிய லிஸ்டை தந்தமைக்கு மிக்க நன்றிங்க.
மின்மினி பாடியதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ" பாடல் வேடன் படத்தில் இடம் பெற்ற பாடலெனில் அது சித்ரா பாடியதாக நினைவு.
மறுபடியும் ஒரு நன்றி,"ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது" பாடலை நினைவூட்டியதற்கு.இதுமட்டுமல்லாமல் மின்மினி பாடிய இன்னும் நிறைய ஹிட் பாடல்கள் "குறுக்கு பாதையிலே", "ராத்திரியில் பாடும் பாட்டு","வாடி சாத்துக்குடி" இப்படி அந்த பட்டியல் நீளும்.

Anonymous said...

"ஒரு மாலைச்சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே"

இது எந்த படத்தில் வரும் பாடல், பார்த்திபன் படம் என்று நினைவு, ஆனால் படம் தெரியவில்லை. தெரிவிக்கவும், வலையில் எங்கேயும் இந்த பாடல் கிடைக்குமா....

பனிமலர்.

நாடோடி இலக்கியன் said...

மறுவருகைக்கு நன்றி பனிமலர்,
"ஒரு மாலைசந்திரன் மலரைத்தேடுது" பாடல் இடம்பெற்ற திரைப்படம் பார்திபன் நடித்த
"உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்".
பாடல் இங்கே:.

Anonymous said...

நன்றி, நன்றி, நன்றி.......இந்த படத்தின் பாடல்களை தேடிக்கொண்டு இருந்தேன்....பாடலுக்கு நன்றி. இந்த படத்தின் மற்ற பாடல்களும் கிடைத்தால் நன்றாக இருக்கும்........

பனிமலர்.

நாடோடி இலக்கியன் said...

வாங்க பனிமலர்,
இதோ நீங்கள் கேட்ட பாடல்கள்:

நாகா said...

நல்ல கட்டுரை நண்பரே. அதே போல் வாணி ஜெயராம் பற்றியும் எழுதி இருக்கலாம். பாலைவனச் சோலையில் வரும் 'மேகமே மேகமே' பாடல் என்னுடைய All time favourite.

shabi said...

உமா ரமணன் பாடிய நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் பாடல் பாட்டு பாடவா படத்தில் இளையராஜாவுடன் பாடிய பாடல் கேட்டுப் பாருங்கள் http://thiraipaadal.com/albums/ALBIRR00467.html

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாகா.(வாணி ஜெயராம் ஓரளவிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்தப் பாடகி அதனாலேயே அவரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவரின் பாடலில் “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது”,”என்னுள்ளில் எங்கோ”,”நானே நானா”,”கவிதை கேளுங்கள்” பாடல்களும் எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காதவை).

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஷாபி,
இன்று எடிட் செய்யும் போது அந்த பாடலையும் இணைக்க நினைத்து மறந்துவிட்டேன்.நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.அருமையான பாடல் நான் அடிக்கடிக் கேட்கும் 90 ஹிட்ஸ் கலக்‌ஷனில் அப்பாடலும் உண்டு. அதே போன்று ஊரடங்கும் சாமத்திலே என்று ஒரு பாடலிலும் உமாவின் குரல் வசிகரிக்கும்.

நேசன்..., said...

சினிமாவில் திறமையிருந்தால் மட்டுமே போதாது அதிர்ஷ்டமும் நிறைய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறது உங்களின் பதிவு!..

நாடோடி இலக்கியன் said...

நன்றி நேசன்.(நீங்கள் சொல்வது மிகவும் சரி).

Thevesh said...

சினிமா உலகில் முன்னொருகாலத்தில்
குறிப்பிட்டபாடகர்,குறிப்பிட்டபாடகி மட்
டும் கோலோச்சியகாலத்தில் புதியவர்க
ளின் வரவு குறைவாகவே இருந்துள்ளது.
அந்நிலை மாறி இத்தனை இசைக்
குயில்கள் இசைவானில் சிறகடித்துப்
பறந்தது இசைரசிகர்களின் பெரும்
அதிர்ஷ்டமே.உங்கள் பணி தொடர என்
வாழ்த்துகள்.

shabi said...

மணிக்குயில் படத்தில் வரும் தண்ணீரிலே முகம் காட்டும் ஆகாயமே(உமா ரமணன்/ மனோ)/http://thiraipaadal.com/albums/ALBIRR00346.html/

ராக்காயி கோயில் படத்தில் உந்தனின் பாடல் என்னை(உமா/மனோ)http://thiraipaadal.com/albums/ALBIRR00540.html

இந்த இரண்டு பாடல்களும் அவ்வளவு அதிகம் பிரபலமாகவில்லை

ராஜாவின் இசை நன்றாக இருக்கும் கேட்டுப்பாருங்கள்

நாடோடி இலக்கியன் said...

மறு வருகைக்கு மிக்க நன்றிங்க ஷாபி,(உங்களின் ரசனைக் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பா, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பாடல்களையும் கேட்டிருக்கிறேன், மணிக்குயில் படத்தில் வரும் ’காதல் நிலாவே பூவே’ என்ற பாடலும் கூட மனோ,உமா ரமணன் பாடிய மற்றொரு நல்ல பாடல். உமாரமணனின் 90களில் வந்த வேறு சில நல்ல பாடல்களில் பூத்து பூத்து குலுங்குதடி பூவு- கும்பக்கரை தங்கய்யா, ஏ மரிக்கொழுந்து-புது நெல்லு புது நாத்து,கோட்டயவிட்டு-சின்னத்தாயி போன்ற பாடல்களை கேட்டிருப்பீர்கள்,உமா ரமணன் ரொம்பக் கிளியரான ஒரு குரலுக்கு சொந்தக்காரர்).

" உழவன் " " Uzhavan " said...

நல்ல டேடா கலெக்ஷன். அவ்வப்போது தொலைக்காட்சிகளில்தான் இவர்களைப் பார்க்க முடிகிறது.

நாடோடி இலக்கியன் said...

நன்றி உழவன்.(ஆமாங்க சமீபத்தில் ஜென்ஸியை ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது,அதே போன்று மேகா டீவியில் சுனந்தா,ஜெயாவில் சசிரேகா).

mohamed hasan said...

ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .

mohamed hasan said...

S.P. சைலஜா தற்பொழுதும் தெலுங்கு பாடல்கள் பாடி வருகிறார் , சமீபத்தில் புதிய தமிழ் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார் .

Janaki Raman said...

தல...செம்மீனே..செம்மீனே பாடல் ஸ்வர்ணலதா பாடியது. சுனந்தா அல்ல. சுனந்தா போன்றவர்கள் நமது சினிமாவில் அதிகமான பங்களிப்பு செய்ய இயலவில்லை. கிட்டத்தட்ட 30 பாடல்களை சுனந்தா பாடியிருக்கிறார். எனக்கு FAVORITE அவர்....