நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி போய் பார்ப்பவரா நீங்கள், அப்படியெனில் உங்களுக்காத்தான் இந்த பதிவு.தமிழில் இதுவரை வெளியான படங்களில் மறக்க முடியாத படங்களென்றும், பார்க்க வேண்டிய படங்களென்றும் பெரும்பாலானோர் சொல்வது முள்ளும் மலரும், உதிரி பூக்கள்,மூன்றாம் பிறை,நாயகன்,16 வயதினிலே மற்றும் சில பாலச்சந்தர் திரைப்படங்கள் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த காதல், வெயில், பருத்தி வீரன் இப்படி சிலவும் இந்த பட்டியலில் உண்டு.இவைத் தவிரவும் நான் ரசித்த எல்லோரும் பார்க்க வேண்டும் என நினைக்கிற சில படங்களும் உண்டு.
அந்த வகையில் நல்ல கதையம்சம் மற்றும் வித்யாசமான திரைக்கதையில் வெளிவந்த அறுவடை நாள்,ஒருவர் வாழும் ஆலயம் மற்றும் சின்னத்தாயி படங்களை பற்றிய ஒரு பார்வை.இம்மூன்று படங்களும் மேற்சொன்ன படங்களை போல பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் உங்களுக்குள் ஒரு சின்ன அதிர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
அறுவடை நாள்:
G.M.குமாரின் இயக்கத்தில் பிரபு,ராம்குமார், பல்லவி, R.P.விஸ்வம், வடிவுக்கரசி, ராசி ஆகியோரின் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் கதை புதுமையாக இல்லாவிட்டாலும்,கதைக் களம் வித்யாசமானதாய் இருக்கும்.கதை வடிவுக்கரசியின் பார்வையில் தொடங்கும், ஒரு கிராமம், அதில் ஒரு பண்ணையார்(விஸ்வம்), அவரின் வெகுளித்தனமான மகன்(பிரபு), அவ்வூர் தேவாலயதின் பாதிரியார்(ராம்குமார்),மருத்துவ சேவை செய்ய வரும் ஒரு கிறித்துவப் பெண்(பல்லவி) மற்றும் பிரபுவின் முறைப் பெண்ணான ராசி இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கன்னியாஸ்திரியாகும் எண்ணத்தோடு இருக்கும் பல்லவிக்கு, பெற்ற தந்தையாலேயே அடிமைபோல் நடத்தப்படும் பிரபு மீது இயல்பாய் பிறக்கிற இரக்கம் நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர காரணமாயிருக்கிறது . இவர்களின் காதலுக்கு பாதிரியார் ராம்குமார் துணையாக நிற்கிறார். விஷயம் பண்ணையாருக்கு தெரியவரும்போது தனது குள்ளநரித்தனத்தால் பிரபுவுக்கே தெரியாமல் மைனர் பெண்ணான ராசியை திருமணம் செய்து வைத்துவிடுகிறார். ராசியுடன் தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா,பல்லவியுடனான காதல் என்னானது என்பதையெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இப்படத்தின் தலைப்பு இக்கதைக்கு எவ்வளவு பொறுத்தமானது என்பதை படத்தின் முடிவில் உணர்வீர்கள்.
இந்த படத்தில் என்னை கவர்ந்த விஷயம் ராம்குமாரின் கதாபாத்திரமும் மற்றும் அவர் பேசும் வசனங்களும். ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம். ஆனால் யாருடைய நடிப்பும் இதுதான் முதல் படம் என்பதுபோல் தெரியாது. இளையராஜாவின் இசையில் "தேவனின் கோவில் மூடிய நேரம்" என்ற அற்புதமான பாடலும் உண்டு. பாடல்கள் கங்கை அமரன்,கதை லிவி ,வசனம் R.P.விஸ்வம்.
கொசுறு:இப்படத்தின் இயக்குனர் G.M.குமார் பின்னர் இப்படத்தின் கதாநாயகியான பல்லவியை மணந்து கொண்டார்.வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.
ஒருவர் வாழும் ஆலயம்:
சண்முகப் பிரியன் இயக்கத்தில்,இளையராஜாவின் இசையில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரபு, ரஹ்மான், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவக்குமார் ஒரு இசைக்கலைஞன், தன் மனைவிமீது(அம்பிகா) அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறார், தலைபிறசவத்தில் ஒரு பெண்குழந்தையை ஈன்று மனைவி இறந்து போகிறார். மனைவியின் இறப்பிற்கு காரணமாக தனது மகள் ரோகினியை(ராது) நினைக்கும் சிவகுமார் அவரை வெறுக்கிறார், அது அவள் வளர்ந்து குமரியான பிறகும் தொடர்கிறது. இந்நிலையில் சிவக்குமாரிடம் சங்கீதம் பயில வரும் ரகுமானுக்கும், ரோகினிக்குமிடையே மெலிதாக காதல் அரும்புவது தெரிந்து அவசரமாக தனது மகளை பிரபுவிற்கு மணமுடித்து வைக்கிறார்.அதன் பிறகு ரகுமான் ஒருமுறை ரோகினியை பார்க்க நேரிடும்போது ஊர்மக்களால் அவர்களது சந்திப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பிரபுவிடம் சொல்லிவிட பிரபு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். இந்த சூழ்நிலையில் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் ரகுமானை பிரபு காப்பாற்றுகிறார். பிறகு ரகுமான் யாரென்று தெரிந்து பிரபு என்ன செய்கிறார், கதாநாயகி என்ன ஆனாள் என்பதை ஆன்லைனிலோ, டி.வி.டியிலோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் திரைக்கதை, கதையின் ஒருபாதி ரகுமானின் கண்ணோட்டத்திலும்,மறுபாதி பிரபுவின் பார்வையிலும் எடுத்துச் சென்றிருப்பது வித்யாசமாய் இருந்ததால் எனக்கு பிடித்த படமாயிற்று. "மலையோரம் மயிலே","நீ பௌர்ணமி" போன்ற பாடல்களும் உண்டு.
சின்னத்தாயி :
கணேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் அறிமுகமான இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில் வித்யாசமான திரைக்கதையோ, பிரமாண்டமான காட்சி அமைப்புகளோ எதுவுமே இராது, ஆனால் எடுத்துக்கொண்ட கதை சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் இருந்தது. ஊரின் பூசாரியான வினுசக்கரவர்த்தி, அவரின் மகன் விக்னேஷ், அந்த ஊரின் முக்கியஸ்தர் நெப்போலியன், அவரின் கீப்பாக சபிதா ஆனந்த், சபிதா ஆனந்தின் மகளாக கதாநாயகி பத்மஜா(பொற்காலம் ராஜேஸ்வரி) இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கதைப்படி சின்னத்தாயி(பத்மஜா) மற்றும் விக்னேஷ் இருவரும் சிறுவயது முதலே விளையாடித்திரிகிறார்கள்,பருவ வயது வந்ததும் அவர்களிடத்தில் காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் பழக்கம் மெல்ல சபிதா ஆனந்திற்கு தெரியவர தன் மகளை கண்டிக்கிறார். தன் நிலை தன் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கல்யாணத்திற்கு முன்னரே சின்னத்தாயி கர்ப்பமாகிறாள், இதற்கிடையில் சபிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக நெப்போலியனின் கண் சின்னத்தாயின் மீது விழுகிறது, அவரிடத்திலிருந்து தன் மகளை காப்பாற்றும் போராட்டதில் தனது உயிரை விடுகிறார் சபிதா. அதைத்தொடர்ந்து சின்னத்தாயி ஊரைவிட்டு விரட்டப்படுகிறார். ஊர் திருவிழா வருகிறது, எப்போதும் சுடலைமாடன் வேடம் தறித்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை அழிக்கும் வினுசக்கரவர்த்திக்கு(சுடலைமாடன் வேட்டைக்கு போகும்போது அவர் கொலை செய்தால் கூட அது சாமி செய்ததாக நம்புகிற ஊர்) பதிலாக அவர் மகன் விக்னேஷ் சுடலைமாடனாகிறார். ஊரைவிட்டு விரட்டப்படும் சின்னத்தாயி சுடலைமாடன் வேடம் தறித்து வேட்டைக்கு கிளம்பும் விக்னேஷின் முன்னால் பிறசவித்த பச்சை உடம்போடு ( கதைப்படி தீட்டு உடம்போடு) வந்து விக்னேஷிடம் கேட்கும் கேள்விகளும்,அதை தொடர்ந்து வரும் சம்பவங்களும் இந்தப் படத்தை சிறந்த படமாக எனக்கு அடையாளம் காட்டியது.இப்படத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானவை, குறிப்பாக "நான் ஏரிக்கரை மேலிருந்து", "கோட்டையை விட்டு" ஆகிய பாடல்கள்.
கொசுறு:இத்திரைப்படங்களை பாரக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அந்த படங்கள் வெளியான வருடத்தையும் அப்போதுள்ள டெக்னிக்கல் விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.
அந்த வகையில் நல்ல கதையம்சம் மற்றும் வித்யாசமான திரைக்கதையில் வெளிவந்த அறுவடை நாள்,ஒருவர் வாழும் ஆலயம் மற்றும் சின்னத்தாயி படங்களை பற்றிய ஒரு பார்வை.இம்மூன்று படங்களும் மேற்சொன்ன படங்களை போல பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் உங்களுக்குள் ஒரு சின்ன அதிர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
அறுவடை நாள்:

இந்த படத்தில் என்னை கவர்ந்த விஷயம் ராம்குமாரின் கதாபாத்திரமும் மற்றும் அவர் பேசும் வசனங்களும். ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம். ஆனால் யாருடைய நடிப்பும் இதுதான் முதல் படம் என்பதுபோல் தெரியாது. இளையராஜாவின் இசையில் "தேவனின் கோவில் மூடிய நேரம்" என்ற அற்புதமான பாடலும் உண்டு. பாடல்கள் கங்கை அமரன்,கதை லிவி ,வசனம் R.P.விஸ்வம்.
கொசுறு:இப்படத்தின் இயக்குனர் G.M.குமார் பின்னர் இப்படத்தின் கதாநாயகியான பல்லவியை மணந்து கொண்டார்.வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.
ஒருவர் வாழும் ஆலயம்:
சின்னத்தாயி :
கணேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் அறிமுகமான இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில் வித்யாசமான திரைக்கதையோ, பிரமாண்டமான காட்சி அமைப்புகளோ எதுவுமே இராது, ஆனால் எடுத்துக்கொண்ட கதை சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் இருந்தது. ஊரின் பூசாரியான வினுசக்கரவர்த்தி, அவரின் மகன் விக்னேஷ், அந்த ஊரின் முக்கியஸ்தர் நெப்போலியன், அவரின் கீப்பாக சபிதா ஆனந்த், சபிதா ஆனந்தின் மகளாக கதாநாயகி பத்மஜா(பொற்காலம் ராஜேஸ்வரி) இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கதைப்படி சின்னத்தாயி(பத்மஜா) மற்றும் விக்னேஷ் இருவரும் சிறுவயது முதலே விளையாடித்திரிகிறார்கள்,பருவ வயது வந்ததும் அவர்களிடத்தில் காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் பழக்கம் மெல்ல சபிதா ஆனந்திற்கு தெரியவர தன் மகளை கண்டிக்கிறார். தன் நிலை தன் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கல்யாணத்திற்கு முன்னரே சின்னத்தாயி கர்ப்பமாகிறாள், இதற்கிடையில் சபிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக நெப்போலியனின் கண் சின்னத்தாயின் மீது விழுகிறது, அவரிடத்திலிருந்து தன் மகளை காப்பாற்றும் போராட்டதில் தனது உயிரை விடுகிறார் சபிதா. அதைத்தொடர்ந்து சின்னத்தாயி ஊரைவிட்டு விரட்டப்படுகிறார். ஊர் திருவிழா வருகிறது, எப்போதும் சுடலைமாடன் வேடம் தறித்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை அழிக்கும் வினுசக்கரவர்த்திக்கு(சுடலைமாடன் வேட்டைக்கு போகும்போது அவர் கொலை செய்தால் கூட அது சாமி செய்ததாக நம்புகிற ஊர்) பதிலாக அவர் மகன் விக்னேஷ் சுடலைமாடனாகிறார். ஊரைவிட்டு விரட்டப்படும் சின்னத்தாயி சுடலைமாடன் வேடம் தறித்து வேட்டைக்கு கிளம்பும் விக்னேஷின் முன்னால் பிறசவித்த பச்சை உடம்போடு ( கதைப்படி தீட்டு உடம்போடு) வந்து விக்னேஷிடம் கேட்கும் கேள்விகளும்,அதை தொடர்ந்து வரும் சம்பவங்களும் இந்தப் படத்தை சிறந்த படமாக எனக்கு அடையாளம் காட்டியது.இப்படத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானவை, குறிப்பாக "நான் ஏரிக்கரை மேலிருந்து", "கோட்டையை விட்டு" ஆகிய பாடல்கள்.
கொசுறு:இத்திரைப்படங்களை பாரக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அந்த படங்கள் வெளியான வருடத்தையும் அப்போதுள்ள டெக்னிக்கல் விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.
32 comments:
நல்ல தொகுப்பு
நானும் இந்த மூன்று படங்களையும் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக ரசித்திருக்கிறேன்.
ஓரு சில டைரக்டர்கள் ஓரு படத்திலேயே காணாமல் போய்விட்டாலும்.. நீஙக்ள் சொன்ன படங்கள் எல்லாம் நல்ல படங்களே..
ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம்.//////
ராசிக்கு?
வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே. ///
அப்படியா1
சுடலைமாடன் வேட்டைக்கு போகும்போது அவர் கொலை செய்தால் கூட அது சாமி செய்ததாக நம்புகிற ஊர்) ///
?????????????
மூன்று படங்களுமே அவர்கள் கதைக்களத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்திலேயே இருப்பார்கள்
கோட்டைய விட்டு பாடலை கடைசியில் அந்த பெண் பாடுவதாக வரும் காட்சிகளில் ஒரு வேகமும் அதற்கு ஆட்டி வைப்பதை போல் இருக்கும் அந்த பாடலும் பயங்கரம். அந்த பாடலே படத்தின் முன் பாதியில் மென்மையாகவும் வரும்.....
படபிடிப்பில், படபிடிப்பு குழுவில் நிறைய மக்கள் இறந்ததாக ஒரு தகவலும் உண்டு......உண்மையா தெரியாது ஆனால் அன்றைக்கு அப்படிதான் பேசப்பட்டது......
பனிமலர்.
இதில் அறுவடை நாளும் ஒருவர் வாழும் ஆலயமும் பார்த்திருக்கிறேன். ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்தில் உயிரே உயிரே.. பாடலும், சிங்காரப் பெண்ணொருத்தி பாடலும் என் எவர் க்ரீன் ஃபேவரைட்ஸ்
அறுவடைநாள்: இந்த படத்தில் வரும் தேவனின் கோவில் பாடலுக்காகவே இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...நானும் இதப்பத்தி பதிவு எழுதலாம்னு இருந்தேன்..நீங்க கலக்கிட்டீங்க..
நண்பரே..... அருமை...!!!
ஓடிட்டேன்......
சின்னத்தாயி படத்தில்.....
ராதாரவியின் எதார்த்தமான நடிப்பை மறந்து விட்டிர்கலே.....?? :(((
முரளிகண்ணன் said...
//நல்ல தொகுப்பு//
வாங்க முரளி கண்ணன்,
கருத்திற்கும்,தொடர் வாசிப்பிற்கும் மிக்க நன்றி நண்பரே!
Raj said...
//நானும் இந்த மூன்று படங்களையும் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக ரசித்திருக்கிறேன்.//
வாங்க ராஜ்,
முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
cable sankar said...
//ஓரு சில டைரக்டர்கள் ஓரு படத்திலேயே காணாமல் போய்விட்டாலும்.. நீஙக்ள் சொன்ன படங்கள் எல்லாம் நல்ல படங்களே..//
வாருங்கள் கேபிள் சங்கர்,
ஆமாம்,நீங்கள் சொல்வது போல நிறைய இயக்குனர்கள் முதல் படத்திலேயே அசத்திவிட்டு அப்புறம் காணாமல் போயிருக்கிறார்கள்.
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
SUREஷ் said...
//ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம்.//////
ராசிக்கு?//
வாங்க சுரேஷ்,
ராசிக்கு குழந்தை நட்சத்திரத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் குமாரியாக இந்த படத்தில்தான் அறிமுகம்.அறிமுகம் என்றுதான் வருகிறது.
SUREஷ் said...
//வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே. ///
ஆமாம் அவரேதான்,மச்சக்காரன் படத்தில் வில்லனும் இவர்தான்.
//மூன்று படங்களுமே அவர்கள் கதைக்களத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்திலேயே இருப்பார்கள்//
உண்மைதான்,ஆனால் இப்போது வந்த வெயில்,பருத்திவீரன் ரேஞ்சுக்கு தரத்தை எதிர்பார்த்துவிட்டால் அதுக்குதான் முன் அறிவிப்பாக அப்படி சொல்லியிருந்தேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
பனிமலர் said...
//கோட்டைய விட்டு பாடலை கடைசியில் அந்த பெண் பாடுவதாக வரும் காட்சிகளில் ஒரு வேகமும் அதற்கு ஆட்டி வைப்பதை போல் இருக்கும் அந்த பாடலும் பயங்கரம். அந்த பாடலே படத்தின் முன் பாதியில் மென்மையாகவும் வரும்.....//
வாங்க பனிமலர் ,
அந்த பாடல் மென்மையாக வரும் இடத்தில் சிறுவர்கள் ஆடி,பாடுவதை நன்றாக படமாக்கியிருப்பார்கள்..
//படபிடிப்பில், படபிடிப்பு குழுவில் நிறைய மக்கள் இறந்ததாக ஒரு தகவலும் உண்டு......உண்மையா தெரியாது ஆனால் அன்றைக்கு அப்படிதான் பேசப்பட்டது......//
இது எனக்கு புது தகவல்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
அருண்மொழிவர்மன் said...
//இதில் அறுவடை நாளும் ஒருவர் வாழும் ஆலயமும் பார்த்திருக்கிறேன். ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்தில் உயிரே உயிரே.. பாடலும், சிங்காரப் பெண்ணொருத்தி பாடலும் என் எவர் க்ரீன் ஃபேவரைட்ஸ்//
வாங்க அருண்மொழிவர்மன்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
எனக்கும் அந்த பாடல்கள் மிகவும் பிடித்தமானவையே.
சின்னத்தாயி படத்தையும் வாய்ப்புகிடைத்தால் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
அறுவடை நாள் பார்த்துதான் நான் பிரபு ரசிகனானேன்.
நான்கு ஐந்து முறை பார்த்த படம்
நல்ல பதிவு
நான் said...
//அறுவடைநாள்: இந்த படத்தில் வரும் தேவனின் கோவில் பாடலுக்காகவே இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...நானும் இதப்பத்தி பதிவு எழுதலாம்னு இருந்தேன்..நீங்க கலக்கிட்டீங்க//
வாங்க நான் ,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
"அறுவடைநாள்"படத்தை பற்றின உங்கள் பார்வையையும் எழுதுங்களேன்.படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
ஒருவர் வாழும் ஆலயம் எனக்கும் பிடித்த படம், பல முறை பார்த்திருக்கிறேன், கிளைமேக்ஸ் காட்சி மட்டும் வழக்கம் போல் கதாநாயகி கடத்தல் என்று முடியும், சிங்கார பெண்ணொருத்தி அருமையான பாடல். பிரபு பெண்களை கேவலமாக நினைப்பார், ரஹ்மான் பெண்களை மதிப்பார், இரண்டு பேரும் இந்த நிலைக்கு வர காரணம் ஒரே சம்பவம் தான். செந்தில் முதியவர்களை துபாயில் வேலை வாங்கி கொடுப்பதும் ரசிக்கும் படியாக தான் இருந்தது. இந்த படம் ஆன்லைனில் பார்க்க முடியுமா?
Nam-Tamil said...
//நண்பரே..... அருமை...!!!
ஓடிட்டேன்......
சின்னத்தாயி படத்தில்.....
ராதாரவியின் எதார்த்தமான நடிப்பை மறந்து விட்டிர்கலே.....?? :(((//
வாங்க நம் தமிழ்,
//ஓடிட்டேன்...... //
எங்கேங்க?கொஞ்சம் விளக்கமா சொல்லிட்டு போங்க நண்பா,
//ராதாரவியின் எதார்த்தமான நடிப்பை மறந்து விட்டிர்கலே.....?? //
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த படமிது,அப்போது பார்தது,அதன் பிறகு இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால் ராதாரவி என்ன காதாபாத்திரத்தில் வருவாரென்றே மறந்துவிட்டது.இந்த படம் அந்த வயதிலேயே யோசிக்க வைத்ததால்தான் அது எனக்கு மறக்க முடியாத படங்களில் ஒன்றானது.
நல்ல தொகுப்பு...இதுல சின்னதாயி, ஒருவர் வாழும் ஆலயம் இரண்டும் பார்த்திருக்கேன். அறுவடை நாள் மட்டும் பாக்கல...அதையும் தேடி பிடிச்சு பார்த்திடுவோம்
நல்ல பதிவு நாடோடி இலக்கியன்!!
நீங்கள் சொன்ன சின்னதாயி படத்தில் வரும் இரு பாடல்களும் எனக்கு மிக பிடித்த பாடல்கள்! முக்கியமாக நான் ஏரிக்கரை பாடல்...
ஒருவர் வாழும் ஆலயத்தில் உள்ள உயிரே உயிரே பாடலும் மிக அருமை. இநத படத்தை நான் பார்த்த போது (சின்ன வயதில்) நான் வியந்தும், ஆச்சரியத்தோடும், சற்றே புரியாமலும் பார்த்தது சிவக்குமாரின் பாத்திரத்தை...
நல்ல பதிவு!!
\\வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.\\
அட
பாபு said...
//அறுவடை நாள் பார்த்துதான் நான் பிரபு ரசிகனானேன்.
நான்கு ஐந்து முறை பார்த்த படம்
நல்ல பதிவு//
வாங்க பாபு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//நான்கு ஐந்து முறை பார்த்த படம்//
நான் சமீபத்தில்தான் இப்படத்தை பார்த்தேன்,மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்.
nagoreismail said...
//ஒருவர் வாழும் ஆலயம் எனக்கும் பிடித்த படம், பல முறை பார்த்திருக்கிறேன், கிளைமேக்ஸ் காட்சி மட்டும் வழக்கம் போல் கதாநாயகி கடத்தல் என்று முடியும், சிங்கார பெண்ணொருத்தி அருமையான பாடல். பிரபு பெண்களை கேவலமாக நினைப்பார், ரஹ்மான் பெண்களை மதிப்பார், இரண்டு பேரும் இந்த நிலைக்கு வர காரணம் ஒரே சம்பவம் தான். செந்தில் முதியவர்களை துபாயில் வேலை வாங்கி கொடுப்பதும் ரசிக்கும் படியாக தான் இருந்தது. இந்த படம் ஆன்லைனில் பார்க்க முடியுமா?//
வாங்க நாகூர் இஸ்மாயில்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இரண்டு பேரும் இந்த நிலைக்கு வர காரணம் ஒரே சம்பவம் தான்//
ரொம்ப நாளைக்கு முன் பார்த்ததால் சரியாக ஞாபகம் இல்லை,இப்பொழுது உங்களுடைய பின்னூட்டத்தை பார்த்த பிறகு "அட இப்படி கூட எழுதி இருக்கலாமே"என்று தோன்றியது.
நான் ஆதவன் said...
//நல்ல தொகுப்பு...இதுல சின்னதாயி, ஒருவர் வாழும் ஆலயம் இரண்டும் பார்த்திருக்கேன். அறுவடை நாள் மட்டும் பாக்கல...அதையும் தேடி பிடிச்சு பார்த்திடுவோம்//
வாங்க நான் ஆதவன்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
அறுவடை நாள் படம் கூகிளில் தமிழில் அடித்து முயற்சி செய்து பாருங்கள்.சுட்டி கிடைக்கும்.
//எங்கேங்க?கொஞ்சம் விளக்கமா சொல்லிட்டு போங்க நண்பா,//
ஓட்டு + இட்டேன் = ஓடிட்டேன்......
சாரிங்க.... நம்ம தமிழ் அவ்வளவுதான்... ஹீ ஹீ ஹீ.....!!
//நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த படமிது,அப்போது பார்தது,அதன் பிறகு இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால் ராதாரவி என்ன காதாபாத்திரத்தில் வருவாரென்றே மறந்துவிட்டது. //
அட என்னங்க நீங்க...!!! நானும் ஆறாம் வகுப்பில் தான் அந்த படம் பார்த்தேன்...!! ராதாரவி.... ஒரு இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருவார்... கௌவுரவ வேடம்......! மிகவும் எதார்த்த நடிப்பில், ஒட்டு மொத்த படத்திலும் அவர்தான் தெரிவார்...!! மறுபடியும் பாருங்கள் தலைவா... மிகவும் சிறந்த நடிப்பு...!
Nam-Tamil said...
மறுவருகைக்கு நன்றி நண்பா.
//ராதாரவி.... ஒரு இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருவார்... கௌவுரவ வேடம்......! மிகவும் எதார்த்த நடிப்பில், ஒட்டு மொத்த படத்திலும் அவர்தான் தெரிவார்...!! மறுபடியும் பாருங்கள் தலைவா... மிகவும் சிறந்த நடிப்பு...!//
கண்டிப்பாங்க.இந்த படம் முன்னாடி தூர்தர்சன்ல போடுவான்.இப்போ தெரியல?
நரேஷ் said...
//நல்ல பதிவு நாடோடி இலக்கியன்!!
நீங்கள் சொன்ன சின்னதாயி படத்தில் வரும் இரு பாடல்களும் எனக்கு மிக பிடித்த பாடல்கள்! முக்கியமாக நான் ஏரிக்கரை பாடல்...
ஒருவர் வாழும் ஆலயத்தில் உள்ள உயிரே உயிரே பாடலும் மிக அருமை. இநத படத்தை நான் பார்த்த போது (சின்ன வயதில்) நான் வியந்தும், ஆச்சரியத்தோடும், சற்றே புரியாமலும் பார்த்தது சிவக்குமாரின் பாத்திரத்தை...
நல்ல பதிவு!!//
வாங்க நரேஷ்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
அதிரை ஜமால் said...
\\வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.
அட//
வாங்க அதிரை ஜமால் ,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
//அட//
ஆமாங்க..:)
வாங்க சீனு,
"அறுவடை நாள்"பற்றிய எனது எண்ணத்தை எழுவதற்கு முன் வேறு யாரேனும்
பதிவிட்டுருகிறார்களா என இணையத்தில் தேடிய போது உங்கள் பதிவை படிக்க நேர்ந்தது.அப்போதே மிகவும் ரசித்து படித்தேன் உங்கள் பதிவை. எனது பார்வையையும் பதிவிட வேண்டும் என நீண்ட நாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
மூன்று படங்களுமே சிறுவயதில் பார்த்த நினைவு வருகிறது. நல்ல விபவராக எழுதியியிருக்கிறீர்கள். அதிலும் ஜீ.எம்.குமார் தான் பல்லவியின் கணவர் என்ற தெரிந்ததும் ஆச்சர்யம். நல்ல பதிவு ...நன்றி
நன்றி நாஞ்சில் பிரதாப்,(அறுவடை நாள் மிகச் சமீபமாகவே பார்த்தேன், மற்ற இரு படங்களையும் சிறுவயதில் பார்த்தது இப்போது பார்த்தால் இன்னும் கூட சிலாகித்து எழுதியிருக்கலாம் மிஸ் பண்ணாம பாருங்க).
aaLaiyee kaaNoom...
neenga sonna mooNu padamum chinna vayasula paaththathu.ithila 'chinnathaayee' latest... innum manasula irukkuthu.enakkum rompa pidicha padam.
'aRuvaidai naaL' pona vaaram paarkka aarambichaen onlinela. one hour la power poyiduchu.maRupadiyum paarkkaNum. illaenna cd vaanganum...
சன்முகப்ரியனின் பதிவுகளைப் படித்துகொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த ஒரு படம் 'ஒருவர் வாழும் ஆலயம்' . இவ்வளவு நாட்களாய் உங்கள் பதிவிலும் படிக்கவில்லை. சன்முகப்ப்ரியனையும் படிக்கவில்லை. கன்னிகா?! என்ன ஒரு எழுத்தோட்டம்!!!
Post a Comment