Tuesday, December 30, 2008

இசைப்பிரியர்களுக்கு ஒரு சவால்...!

பொதுவாக நம்மில் பலர் இசை பிரியர்களாக இருப்போம்,ஆனாலும் ஒரு பாடலில் முதல் நான்கு வரிகளை தாண்டி பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டோம்.அதனால் பாடலின் இடையே வரும் ரசிக்கப்படபட வேண்டிய சில வரிகள் கவனிக்க படாமலேயே போயிருக்கும். எனக்கு பிடித்த திரைப் பாடல்களில் நான் ரசித்த சில வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முடிந்தால் அந்த பாடல்களின் முதல் வரிகளை கண்டுபிடியுங்கள். (சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்குன்னெல்லாம் சொல்லாம சமத்தா பதில் சொல்லுங்க மக்கா).

"நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை"


"எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?"

"உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்க்கவில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை"

"அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை"


"காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு
இடையில் சின்ன கோடு அட அதுதான் ரொம்பப்பாடு"(பெரும்பாடு)

"ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே"

"காதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை"

"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்து
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்"


"பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா"


"உன்னை செய்த பிரம்மனே
உன்னை பார்த்து ஏங்குவான்".


இப்போதைக்கு இந்த பத்து பாடல்கள் போதும்,அடுத்தடுத பதிவுகளில் இன்னும் நிறைய வரிகளை பார்க்கலாம்.

கொசுறு:காதல் பாடல்கள் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல அது நம்மை அறியாம வர்ர விஷயம்.

:)

விடைகள்:

1.அந்த உச்சிமலை -- எங்க தம்பி --
2.சாதிமல்லி பூச்சரமே --அழகன் -- புலமைபித்தன்
3.ஒரு காதல் என்பது -- சின்னதம்பி பெரிய தம்பி --
4.வானமழை போலே -- இது நம்ம பூமி -- வாலி
5.காதல் இல்லாதது -- மணிரத்னம் --
6.வா வா வா --வேலைக்காரன் -- மு.மேத்தா
7.முத்தமிழே முத்தமிழே -- ராமன் அப்துல்லா --அறிவுமதி
8.இளநெஞ்சே வா -- வண்ண வண்ண பூக்கள் -- வாலி
9.நினைத்து நினைத்து -- 7G ரெயின்போ காலனி -- ந.முத்துக்குமார்
10.அதோ மேக ஊர்வலம் -- ஈரமான ரோஜாவே --புலமைபித்தன்

பாடலாசிரியர் பெயர்கள் நினைவில் இருந்ததை மட்டும் எழுதியிருக்கேன், விடுபட்ட பாடல்களின் பாடலாசிரியர் தெரிந்தால் சொல்லிட்டு போங்க.

16 comments:

Anonymous said...

//எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ என்ன கைதியா?"//

சாதி மல்லிப்பூச்சரமே சங்கத்தமிழ்பாச்சரமே

Anonymous said...

//ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே

ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே"
//

வாவாவா கண்ணா வா
தாதாதா

Anonymous said...

//உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்க்கவில்லை

உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை"//

காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது

Anonymous said...

//பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும்சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா//

நினைத்து நினைத்துப்பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்

Anonymous said...

ரெண்டாவதா இருந்தது 'அழகன்' படத்தில் வரும் 'சாதி மல்லி பூச்சரமே' பாடல். மிச்சதெல்லாம் கண்டு பிடிக்கனும்......

முரளிகண்ணன் said...

\\அற்புதம் என்ன உரைப்பேன் இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்கற்பனை கொட்டிக் குவித்து இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்\\

ila nenjee vaa - vanna vanna pookkal

\\"பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும்சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா\\

ninaiththu ninaiththu - 7G rainbow colony

\\"உன்னை தந்த பிரம்மனேஉன்னை பார்த்து ஏங்குவான்".\\

athoo meka uoorvalam - eeramana roojavee

முரளிகண்ணன் said...

\\எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையாஇருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ என்ன கைதியா?"\\

azakan - saathimalli poo saramee

\\"அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை\\

ithu namma puumi -

நாடோடி இலக்கியன் said...

@சின்ன அம்மிணி,
வாங்க சின்ன அம்மிணி,
நான்கு பாடல்களுமே சரி,மீதி பாடல் கஷ்டமா இருக்க?
முதல் வருகைக்கும்,பதிலுக்கும் நன்றிங்க.


@புகழேந்தி
வாங்க புகழேந்தி,
ஒரே ஒரு பாடலுக்குதான் விடை சொல்லியிருந்தாலும் சரியான விடையே மீதியையும் முயற்சி பண்ணி பாருங்க .

@முரளிகண்ணன்,

வாங்க முரளிகண்ணன்,
ஐந்து விடைகளும் சரியானவை.இன்னும் ஐந்துதானே இருக்கு முயற்சி பண்ணுங்க நண்பரே.

narsim said...

ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்களா.. நல்ல வரிகள்.. சின்ன அம்மிணி பாட்டுல பெரிய அம்மிணியா இருப்பாங்க போல..?

Anonymous said...

ஒரே காதல் ரசம் வழிந்தோடுதே!

வேர்ட் வெரிபிகேசனை எடுத்து விடுங்க.

நாடோடி இலக்கியன் said...

@நர்சிம் ,
//ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்களா..//

இல்லீங்க இப்போதான் நம்ம கடைபக்கமும் நாலுபேரு வர ஆரம்பிச்சிருக்காங்க,
இனிதான் குரூப் அமைக்கணும்.

//சின்ன அம்மிணி பாட்டுல பெரிய அம்மிணியா இருப்பாங்க போல..?//

ஆமாங்க,கண்டுபிடிக்க முடியாதென்று நினைத்த பாடல்களையெலாம் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்து அசத்திவிட்டார்.

ஆமா நர்சிம் வந்தது வந்தீங்க, எதாவது பாடலின் முதல் வரியை கண்டுபிடித்தீர்களா,இல்லையா?ஒன்னுமே சொல்லலையே நண்பா.

Anonymous said...

மீதி பாடல்கள்ல ஒரு 2 மனசுக்குள்ள பாடிப்பாத்திட்டு இருக்கேன். தொண்டை வரைக்கும் இருக்கு. நாக்குக்கு வரமாட்டேங்குது. எல்லாமே அருமையான பாடல்கள்.
நர்சிம் வாழ்த்தினதுக்கு நன்றி

நாடோடி இலக்கியன் said...

@வாங்க வெயிலான்,
இன்ன இன்ன பாடல்களைத்தான் எழுதவேண்டுமென யோசிக்காமல்தான் எழுதினேன்,முடித்துவிட்டு பார்த்தால் அனேக பாடல்களில் காதல்தான் கூத்தாடுகிறது,அது அனிச்சை செயல்மாதிரி ஆகிபோச்சு.நீங்க எதாவது முதல்வரி கண்டுபிடிச்சீங்களா? நீங்க நல்ல
இசைப்பிரியரென தெரியும் இருந்தாலும் ஒரு ஆர்வம்தான்.

நாடோடி இலக்கியன் said...

@சின்ன அம்மிணி,
வாங்க சின்ன அம்மிணி,
மறுவருகைக்கு நன்றி.இன்று மாலைவரை நேரமிருக்கிறது,
பொறுமையா கண்டு பிடிச்சு சொல்லுங்க, இதுவரை ஏழு பாடல்களில் விடை பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது,
மீதம் மூன்றையும் யோசிச்சு சொல்லிடுங்க.

Unknown said...

விடைகள பார்க்காமலே ஏழு பாட்டு கண்டுபிடிச்சேன்.. நான் பாஸா?? பெயிலா?? :))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி
அடுத்த தொகுப்பில் விடை அறிவிக்கும் முன்னரே வந்து கலக்கிடுங்க.போனா போகுது இந்த எக்ஸாம்ல நீங்க பாஸ்.