Tuesday, September 22, 2009

வேட்டைக்காரன் என் பார்வையில்

ஒரு பேராழியில் ஏற்படும் மிகப்பெரிய கொந்தளிப்புக் காட்சியோடு தொடங்குகிறது படம். கேமரா சூம் அவுட் ஆக ஆக பரந்து விரிந்ததொரு ஆலமரத்தினடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கும் எணணெய்ச் சட்டிதான் அந்த பெருஞ்சமுத்திரம் எனத் தெரியும்போது ’அட’ என ஆரம்பக்காட்சியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

பாட்டியின் கடையில் வடைக்கு ஏகப்பட்ட கியூ நிற்க, பாட்டியோ தன் பேரன் முதல் போணி செய்தால்தான் மற்றவர்களுக்கு வடையெனச் சொல்லியபடியே தட்டில் வடையை வைத்துக்கொண்டு காத்திருக்க, திடீரென இடியும் மின்னலுமாய் பெருமழைக்கான அறிகுறிகள் தோன்ற எங்கிருந்து வருகிறார் என்றேத் தெரியாமல் மாடுகள் மிரளும், நாய்கள் கண்டால் நாற்பது கிலோமீட்டருக்கு துரத்தும் நிறத்திலான காஸ்ட்யூமில் பாட்டியின் முன்பு தோன்றுகிறார் ஹீரோ.

”வந்துட்டியா ராசா” என்று பாட்டி ஹீரோவின் முகத்தை வருடி திருஷ்டி முறிக்கும்போது மீண்டும் மின்னல் வெட்டி இடியிடிக்கிறது, ஹீரோ தனது தலையைச் சாய்த்து வானத்தை நோக்கி கிராஸாக ஒரு லுக்விட திரண்டிருக்கும் கருமேகக் கூட்டங்கள் பஞ்சாய் திக்கெட்டும் பறக்க, பளீரென வானம் துடைத்து வைக்கப்பட்டதுபோல் ஆகிவிடுகிறது.

இக்காட்சியைக் கண்டதும் விசில் சத்தம் தியேட்டரை நிறைக்கிறது, அந்தச் சத்தத்தோடே தனது அறிமுகக் குத்துப் பாடலை ஆடிமுடிக்கிறார் ஹீரோ.

பாடல் முடிந்ததும் பாட்டியம்மா வடையை ஹீரோவிற்கு ஊட்ட எத்தணிக்கும்போது ஆலமரத்தில் அமர்ந்து ரொம்ப நேரமாக வடைமேலேயேக் கண்ணாக இருக்கும் ஒரு காக்கா இமைக்கும் நேரத்தில் வடையை கவ்விக்கொண்டுச் சென்றுவிடுகிறது.

இதை எதிர்பாரா பாட்டி மற்றும் பேரனின் முகங்களில் அதிர்ச்சி அலைகள். மீண்டும் கார்மேகம் சூழ்கிறது. பாட்டி பத்து கட்டபொம்மி(கள்),ஐம்பது மனோகரா கண்ணாம்பாள்(கள்),நூறு கண்ணகி(கள்)யாக மாறி ”பேராண்டி அந்த காக்காவை சும்மா விடக்கூடாது,அதை சூப் வைத்தேத் தீருவேன். நீ உப்பு போட்டு வடை திங்கறவனாயிருந்தா அந்த காக்காயோட என்னை வந்து பாரு, அப்படியில்ல இந்த ஜென்மத்துக்கும் உனக்கு வடை கிடையாது” என ’வட போச்சே’ என்கிற ஆதங்கத்தில் வீரவசனம் பேசுகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையிலும் பயங்கரமான இடி மின்னல் எஃபெக்ட்டும் அதைவிட பயங்கரமாக ஹீரோவின் குளோசப் ஷாட்களுமாய் பட்டாசாய் இருக்கிறது அக்காட்சி.

பாட்டி தனக்கு சின்ன வயதிலிருந்தே வடை கொடுத்து வளர்த்ததை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டி முடித்து, வடைக்கு விடை தேடும் முயற்சியாக அந்தக் காக்காவைப் பிடிக்க வேட்டைக்காரனாகிறார் ஹீரோ.

இங்கே ஆரம்பிக்கும் பரபரப்பு இறுதிவரை தொடர்கிறது. அதன் பின் ஹீரோ வரும் ஒவ்வொரு காட்சியிலும் பேக்ரவுண்டில் வரும் அந்த ”காரன் காரன் வேட்டைக்காரன்” தீம் மியூசிக் பட்டையைக் கிளப்புகிறது.

மரத்திற்கு மரம் பறந்து எப்படியாது வடையை தின்றுவிட போராடும் காக்காவைவிட பலமடங்கு உயரத்தில் பறந்து பறந்து விரட்டும் ஹீரோவைப் பார்த்து காக்கா மிரளும் குளோசப் ஷாட்களில் கேமரா மேன் சபாஷ் வாங்குகிறார்.

ஹை ஓல்ட்டேஜ் மின்சாரக் கம்பிகளிலெல்லாம் ஹீரோ அனாயசமாக தொங்கிச் செல்லும் காட்சிகளில் ஹீரோவின் பவர் என்ன என்பதை நேரடி வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு ரசிகனுக்கும் புரிய வைப்பது டைரக்டரின் சாமர்த்தியம். இப்படி பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் படமெங்கும் தோரணங்களாய்.

மாற்றி மாற்றிப் பறந்ததில் ஹீரோவும் காக்காவும் ஒரு காட்டிற்குள் வந்துவிடுகின்றனர். காக்கா மிகவும் சோர்வாகி ஆற்றங்கரை மரமொன்றில் அமர்ந்துவிடுகிறது. ஹீரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருகும் மரப்பாலத்தில் நின்று வில்லில் அம்பை வைத்துக் காக்காவை நோக்கி குறிபார்க்கையில் ஒரு கட்டெறும்பு ஹீரோவின் காலைக்கடிக்க ஹிரோ அவசரமாய் காலை சொறியக் குனிகையில் தவறி ஆற்றில் விழப்போகிறார் அப்போது அவ்வழியாய் வரும் காட்டுவாசிப்பெண் ஹீரோவைத் தாங்கிப் பிடிக்கிறார்.

அந்தக் காட்டுவாசிப் பெண்தான் ஹீரோயின்.படம் பார்ப்பவர்களுக்கே நாலைந்து காட்சிகளுக்குப் பிறகுதான் அவர்தான் ஹீரோயின் என்பதே புலப்படுகிறது. மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் ரொம்பவே பொருத்தமாயிருக்கிறார் இந்தக் கதாபாத்திரத்திற்கு.

இதற்கிடையில் கட்டெறும்புக் கடிக்கையில் காக்கா தப்பிவிடுகிறது.அப்போது காக்காவிற்கும் கட்டெறும்புக்குமான நட்பின் ஃபிளாஷ் பேக் ஒன்று வருகிறது. இக்காட்சியின்போது எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் "ஹையா இந்தக் கதை எனக்குத் தெரியும்" என துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இயக்குனர் தானே பலநாள் யோசித்து எழுதிய அருமையான ஃபிளாஷ் பேக் ஒன்று இப்படத்தில் யாரும் யோசிக்காத கோணத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததை இங்கே நினைவுக் கூர்வது அவசியமாகிறது.

இதுவரை விறுவிறுப்பாய் நகரும் கதையில் ஹீரோயின் வந்த பிறகு ஹீரோவை காக்காவை துரத்த வைப்பதா இல்லை ஹீரோயினைத் துரத்த வைப்பதா என்று இந்த இடத்தில் டைரக்டர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். அதைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

சரியாக கதை சிறிது தொய்வாகும் இந்த இடத்தில் ஹீரோயின் ஆற்றில் விழுந்துத் தத்தளிக்கிறார்.ஹீரோவிற்கோ நீச்சல் தெரியாது ஆற்றின் கரையிலேயே நின்று கதறி அழுகிறான், மீண்டும் திரைக்கதை சூடுபிடிக்கிறது. தியேட்டரில் ஆங்காங்கே விசும்பல் சத்தம்.அப்போது ஒரு தேவதை ஆற்றில் இருந்துத் தோன்றி ஹீரோவிற்கு உதவுகிறது. தேவதையைப் பார்த்ததும் எனக்கு அருகில் அமர்ந்திருந்தச் சிறுவன் மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.

ஆனால் புத்திசாலித்தனமாக டைரக்டர் அந்த தேவதையை யூஸ் பண்ணியிருப்பதில் பாஸாகிறார்.தேவதை முதலில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா வழித் தோன்றல்களான இரண்டு கவர்ச்சி கன்னிகளை எடுத்துவந்து இதுதான் உன் காதலியா எனக் கேட்குமிடத்தில் ஹீரோ ஆஹா ஹீரோயினைவிட இது சூப்பராகீதே என்று மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டிருக்கும்போதே வருகிறது அந்த சூப்பர் ஹிட் பாடல் இருவருடனும் தலா ஆளுக்கொரு சரணமாய் பிரித்து செம்ம குத்து குத்துகிறார்.

தேவதை மூன்றாவதாய் ஹீரோயினை எடுத்துக் கொடுக்கும்போது மற்ற குஜிலிகளையும் பரிசாகக் கொடுத்ததா,ஹீரோ காக்காவைப் பிடித்து பாட்டியிடம் வடையை வாங்கினாரா என்பதை பரபரப்பான இறுதிக் காட்சிகளாக்கி வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.

படத்தின் இறுதிக் காட்சியில் ஹீரோயின் தாய் மாமனான வில்லன் ”ஏண்டா காக்காப் பிடிக்கத் தெரியாத நீயெல்லாம்..”என்று ஆரம்பித்து பேசும்போது வரும் ”காக்கா பிடிக்கத் தெரியாத” என்பதையே தனது கேப்ஷனாக வைத்து புதிய கட்சியை ஆரம்பித்து ஹீரோ அரசியலில் புகுந்து பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தும் காட்சியில் தியேட்டரில் ”தலைவா” என்ற கோஷம் விண்ணைத் தொடுகிறது.

டிஸ்கி:முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட இந்த இடுகையைப் படித்து யாருக்கும் சிரிப்பு வரவில்லையென்றால் ஒரிஜினல் வேட்டைக்காரனுக்கு டிக்கெட் ஃப்ரீயாக தரப்படும்.

பாதுகாப்புக் கருதி நானும் ஒரு வேட்டைக்காரன் ரசிகன் என்ற உண்மையையும் சொல்லிக்கிறேன்.

47 comments:

☼ வெயிலான் said...

// நானும் ஒரு விஜய் ரசிகன் என்ற உண்மையையும் //

இது பொய்!!!!!!! :)

க.பாலாஜி said...

அண்ணா கதையை ரெஜிஸ்டர் பண்ணி வச்சிங்கோங்க....இல்லன்னா விஜய்யின் 50 வது படத்துக்கு இன்னும் கதை கிடைக்கலயாம்....நான் சொல்றத சொல்லிட்டேன்...அப்பறம் உங்க இஷ்டம்...

நல்ல காமடி பதிவு...ரசித்து சொல்லவேண்டிய இடங்கள் நிறைய...குறிப்பாய் ஆற்றில் தேவதை வரும் காட்சி...நல்ல கற்பனை...

கதிர் - ஈரோடு said...

இதற்குத்தான் இத்தனை நாள் ஆச்சா பாரி...

கிட்டத்தட்ட இதுல கொஞ்சம் கூடக் கொறைய படத்தில் இருக்கலாம்...

பாலாஜி சொன்னமாதிரி ரெஜிஸ்டர் பண்ணிடுங்க...
படம் வந்து வழக்கம்போல் ஓடுலைனா...நீங்க கதை உங்களோடதுன்னு ஒரு கேஸ் போட்டு பிரபலப் படுத்திடலாம்

ஏன்னா... நீங்கதான் அவரோட விசிறியாச்சே

ஸ்ரீமதி said...

அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :)))

சூரியன் said...

அவ்வ்வ்வ்வ்

மாளல சமீஇய்ய்ய்ய்ய்..

சூரியன் said...

/இதை எதிர்பாரா பாட்டி மற்றும் பேரனின் முகங்களில் அதிர்ச்சி அலைகள். மீண்டும் கார்மேகம் சூழ்கிறது பாட்டி பத்து கட்டபொம்மி(கள்),ஐம்பது மனோகரா கண்ணாம்பாள்(கள்),நூறு கண்ணகி(கள்)யாக//

ஹ ஹஹ் அ

சூரியன் said...

நல்லா ஓடும் போல? வேட்டைக்கார ஈரோ இந்த படத்துல குத்துபாட்டுக்கு ஆடிட்டு வந்து போனாலும் போவாரு...

SanjaiGandhi said...

ப்ரிவியூ பார்த்துட்டு எழுதின மாதிரி இருக்கே.. :)

தஞ்சாவூரான் said...

இந்தப் படத்துக்காவது, பாஸ்கார் அவார்டு குடுக்கணும்னு பாஸ்கார் கமிட்டிய மன்றாடிக் கேட்டுக்கிறேன்.

பாரி, கதை உங்களுக்கு லீக் ஆன விஷயத்தைச் சொல்லவே இல்ல?? :)

இரா.சிவக்குமரன் said...

ம்.....

இரா.சிவக்குமரன் said...

///ஸ்ரீமதி 22 September, 2009 3:45:00 PM IST
அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :))///

ஐ ஐ .... பொய்தான....

♠ ராஜு ♠ said...

இது மொக்கைன்னா மொக்கை செம மொக்கைடா சாமி.

பட்டிக்காட்டான்.. said...

//.. இந்த இடுகையைப் படித்து யாருக்கும் சிரிப்பு வரவில்லையென்றால் ..//

ஐயோ நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்.. அதனால.. ??!!

♠ ராஜு ♠ said...

\\ஸ்ரீமதி said...
அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :)))\\

ரசிச்சு சிரிச்சேன்..!
:-)

SanjaiGandhi said...

//\\ஸ்ரீமதி said...
அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :)))\\//

ஸ்ரீ, இந்த டெம்ளெட் பின்னூட்டம் எங்க புடிச்ச? ரொம்ப நல்லா இருக்கு. எங்க போனாலும் இது தானா? :)

இரா.சிவக்குமரன் said...

/// SanjaiGandhi said...
//\\ஸ்ரீமதி said...
அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :)))\\//

ஸ்ரீ, இந்த டெம்ளெட் பின்னூட்டம் எங்க புடிச்ச? ரொம்ப நல்லா இருக்கு. எங்க போனாலும் இது தானா? :)

22 September, 2009 4:57:00 PM IST
///

அந்த டெம்ப்ளேட் காப்பிய, எனக்கு கொஞ்சம் மெயில முடியுமா?

கும்க்கி said...

ரைட்டு.....

நாஞ்சில் நாதம் said...

:))

Thekkikattan|தெகா said...

:-)) நல்லா சுத்தி சுத்தி கதை சொல்லுறீங்கப்பா...

பிரியமுடன்...வசந்த் said...

அடங்க மாட்டேன்றீகளே ராசா...

மதுவதனன் மௌ. / cowboymathu said...

பாத்துங்க... இதையே படம் வந்தபிறகும் போடவேண்டி வந்தாலும் வரலாம்... நல்லாயிருந்திச்சு..

ஆதிமூலகிருஷ்ணன் said...

பேசாம தலைப்பையே வடைக்காரன்னு வச்சிருக்கலாம். செம கலக்கல்.

ஒரிஜினல் படம் இதையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிடும். நீங்கல்லாம் எந்த மூலைக்கு.?

Anbu said...

அண்ணா..சூப்பரோ..சூப்பர்...

ஜோசப் பால்ராஜ் said...

இப்ப வர்ற படத்து கதைகளுக்கு இந்த கதை எவ்வளவோ மேல் . ஆனா நீங்க ரொம்ப ஸ்பீடா கதை சொல்லியிருக்கீங்க, இந்தக் கதைய அப்டியே இன்னம் கொஞசம் தட்டி இழுத்தா ஒரு ஒரு ப்ரேமையும் ஒரு எபிசோடாக்கி, கோலங்கள மிஞ்சுறளவுக்கு மெகா சீரியலாக்கிடலாம்.

வால்பையன் said...

ஏன் இந்த கொலைவெறி!

கார்க்கி said...

சும்மா..பின்னூட்டங்கள் பெறுவதற்காக

நிஜமா நல்லவன் said...

:))

நிஜமா நல்லவன் said...

/ஆதிமூலகிருஷ்ணன் said...

பேசாம தலைப்பையே வடைக்காரன்னு வச்சிருக்கலாம். செம கலக்கல்.

ஒரிஜினல் படம் இதையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிடும். நீங்கல்லாம் எந்த மூலைக்கு.?/


ரிப்பீட்டு:)

ஸ்ரீமதி said...

//இரா.சிவக்குமரன் 22 September, 2009 5:01:00 PM IST
/// SanjaiGandhi said...
//\\ஸ்ரீமதி said...
அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :)))\\//

ஸ்ரீ, இந்த டெம்ளெட் பின்னூட்டம் எங்க புடிச்ச? ரொம்ப நல்லா இருக்கு. எங்க போனாலும் இது தானா? :)

22 September, 2009 4:57:00 PM IST
///

அந்த டெம்ப்ளேட் காப்பிய, எனக்கு கொஞ்சம் மெயில முடியுமா?//

கொஞ்சம் செலவாகும் பரவால்லயா?? ;)))

ஸ்ரீமதி said...

//SanjaiGandhi said...
//\\ஸ்ரீமதி said...
அருமை அண்ணா.. :)))) அசத்திட்டீங்க... :)))\\//

ஸ்ரீ, இந்த டெம்ளெட் பின்னூட்டம் எங்க புடிச்ச? ரொம்ப நல்லா இருக்கு. எங்க போனாலும் இது தானா? :)//

எங்கயும் புடிக்கல... நானே கண்டுபுடிச்சேன்... :P

சந்தோஷ் = Santhosh said...

நல்லா இருந்திச்சி நாடோடி..

prabhu r said...

"Good imagination " but This is Truth .

சாமி தாங்க முடியல தயவு செய்து கொஞ்சமவுது விஜய் ஸ்டைல்'ல மாத்தனும் இல்லனா இருக்குர இடமே தெரியாது (நானும் விஜய் ரசிகன் -விஜய் கிட்ட நிறைய எதிர் பார்க்கிறோம் ஆனால் முடியல பிளஸ் மாத்துங்க )

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெயிலான்,(ஹி ஹி).

நன்றி பாலாஜி(ரெஜிஸ்டர்தானே பண்ணிடலாம்).

நன்றி கதிர்,(இது சும்மா அவ்வப்போது வரும்,கண்டுக்காதீங்க).

நன்றி ஸ்ரீமதி,(நான் சஞ்சய் பக்கம் தான் இந்த விஷயத்தில்).

நன்றி சூரியன்.

நன்றி சஞ்சய்,(:)).

நன்றி தஞ்சாவூரான்,(நம்ம ஊரு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதாண்ணா உங்களுக்கு).

நன்றி சிவா.

நன்றி ராஜு.

நன்றி பட்டிக்காட்டான்,(வட போச்சா).

நன்றி கும்க்கி.

நன்றி நாஞ்சில் நாதம்,(ஆரம்பிச்சிட்டீங்களா ஸ்மைலியை).

நன்றி தெகா,(உங்க முதல் வருகை ஒரு மொக்கை பதிவுக்கா இருக்கணும் ம்ஹும்..).

நன்றி ப்ரியமுடன் வசந்த்,(ஆஹா).

நன்றி மதுவதனன்.

நன்றி ஆதி,(ஆமாம்,அந்த மூளைக்கு நானெல்லாம் எந்த மூலை).

நன்றி அன்பு.

நன்றி ஜோஸப் பால்ராஜ்,(போயும் போயும் ஒரு சீரியல் தானா கிடைத்தது).

நன்றி வால்பையன்,(சும்மா ஒரு தமாசுக்கு).

நன்றி கார்க்கி,(இதை நீங்க சிரிச்சுகிட்டே கேட்டீங்கன்னா என் பதில் ஹி ஹி,சீரியஸா கேட்டீங்கன்னா திரட்டியில் இணைப்பதன் நோக்கம் என்ன? நல்லதோ கெட்டதோ நாலு பேர் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிக்கத்தானே சகா).

நன்றி நிஜமா நல்லவன்.

நன்றி சந்தோஷ்.

நன்றி பிரபு.

பித்தன் said...

நல்ல கற்பனை, ஆரம்ப காட்சிகள் எல்லாம் தெலுங்கு பட விமர்சனம் போல் உள்ளது. பின்னால் வரும் வசனங்கள் சூப்பர். இந்த கதைக்கும் எதுக்கும் உரிமம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் பின்னாளில் படமாக்கப்படும். இந்த படத்துக்கும் நம்ம பதிவர்கள் விமர்சனம் எளுதி முட்டிமோதிக் கொள்வார்கள்

Anonymous said...

SUPER JOKE

Anonymous said...

VIJAY S NEXT SUPER STAR ILLA PA

PRABA said...

சாமி தாங்க முடியல. விஜய்யின் 50 வது படத்துக்கு இன்னும் கதை கிடைக்கலயாம் பாத்துங்க........

சிவக்குமார் நேதாஜி said...

மிக அருமையான கற்பனை....

திரையில் பார்க்க துடிக்கிறேன்...

ஸ்ரீமதி said...

//நன்றி ஸ்ரீமதி,(நான் சஞ்சய் பக்கம் தான் இந்த விஷயத்தில்).//

சாரி எனக்கு பொய் சொல்ல தெரியாது.. நான் நிஜமாவே ரசித்தேன் அதை தான் பின்னூட்டினேன்..

நாடோடி இலக்கியன் said...

நன்றி பித்தன்.(ஹி ஹி)

நன்றி பிரபா.

நன்றி சிவக்குமார் நேதாஜி.

நன்றி ஸ்ரீமதி.(அட கொஞ்சம் கலாய்க விடமாட்டீங்களா,சஞ்சய் பாவம் சின்ன பையன் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கட்டுமேன்னுதான் :) )

கும்க்கி said...

நாடோடி இலக்கியன் said...

சஞ்சய் பாவம் சின்ன பையன் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கட்டுமேன்னுதான் :) )

ஹல்லோ..யாரப்பாத்து என்ன சொல்றீங்க...வார்த்தைகளில் கவனம்...

மங்களூர் சிவா said...

/
ஹீரோயின் வந்த பிறகு ஹீரோவை காக்காவை துரத்த வைப்பதா இல்லை ஹீரோயினைத் துரத்த வைப்பதா என்று இந்த இடத்தில் டைரக்டர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
/

ROTFL
:)))))))))))))

நாடோடி இலக்கியன் said...

நன்றி கும்க்கி,(ஹி ஹி இந்த பல்பெல்லாம் சஞ்சய்கிட்ட எரியாதுங்ணா).

நன்றி மங்களூர் சிவா.

mano said...

Good sense of humour.. hve told the truth..

நாடோடி இலக்கியன் said...

நன்றி மனோ.

karthikeyan said...

nalla irunthuchu paari, pesama 1st std bookla intha kathai ya potralam so many places i laughed, that hero intro & so on.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கார்த்திக்.