Saturday, November 21, 2009

நொறுக்குத் தீனி 21/11/09

சிங்கைக்கு வந்த புதிதில் நான் மிரண்ட விஷயம் பெரிய சைஸ் கிளாஸில் தழும்ப தழும்ப குடித்த டீ தான். ஒரு டீ வாங்கினால் நம்ம ஊரில் ஒரு ஃபேமிலியே சாப்பிடலாம் அவ்வளவு இருக்கும். இதைப் பார்த்ததும் பேராவூரணிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றதுதான் நினைவுக்கு வந்தது. எனது உறவினர் ஒருவரின் பூர்வீகம் அந்தக் கிராமம்,ஒரு முறை அங்கே என்னையும் அழைத்துச் சென்றார்.ரொம்ப நாட்களுக்குப் பிறகு சென்றதால் அங்காளி, பங்காளி வீடுகளில் உறவினருக்கு ஏகப்பட்ட மரியாதை. ஒவ்வொரு வீட்டிலும் தேனீர் கொடுத்து ஒரு வழி செய்துவிட்டார்கள். ”பரவாயில்லைங்க இப்போதான் டீ குடித்தோம்” என்றாலும் கேட்காமல் எல்லோர் வீட்டிலும் தேனீர் அதுவும் பெரிய சைஸ் லோட்டா மாதிரியான டம்ளரில். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வீட்டில் கொடுத்த டீ குடிக்கவே முடியாத அளவிற்கு வித்தியாசமாய் இருந்தது, நான் உறவினரைப் பார்க்க அவர் ”எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து குடிச்சிடு” என்று கிசுகிசுத்தார்.பிறகு அங்கிருந்து கிளம்பியதும் சொன்னார் ”அது தேங்காய் பாலில் போட்ட டீடா தம்பி” என்று. பால் இல்லாவிட்டால் தேங்காய் பாலில் டீ போடுவது அந்த பகுதியின் வழக்கமாம்.(நல்ல வேளை பஸ் ஸ்டாப் வருகிற வழியில் ஒரு ஏரி இருந்தது).

******************************

சென்ற வாரம் நண்பர் ஒருவரை (ஒருவரையா?,ஒருத்தரையா?) பார்க்க மெரினா பே(Bay) சென்றிருந்தேன். அப்போது அலைபேசியில் மற்றொரு நண்பர் அழைக்க அட்டெண்ட் செய்து ரொம்ப சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கையில் திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றால் போதுமான பேலன்ஸ் இல்லையென்றது. “அட நேற்றுதானப்பா ரீசார்ஜ் பண்ணேன்” என்று குழம்பியபடி நிற்கவும், நண்பர் சொன்னார், ”போன் செட்டிங்ஸ் ஆட்டோமேட்டிக்ல இருக்கா பாருங்க,இங்கே இந்தோனேஷியா நெட்வொர்க் கவராகும் ஒரு வேளை ரோமிங்ல பேசிட்டீங்க போல” என்றார். உடனே சிக்னலை செக் பண்ணினால் axis நெட்வொர்க் இந்தோனேஷியான்னு இருக்கு. முற்றிலும் என்னுடைய கவனக்குறைவு, நெட்வொர்க் மாறியதற்கான குறுஞ்செய்தியை நான் கவனிக்கவில்லை. பிறகு ஒரு பட்டியலே கொடுத்தார்கள் எந்த ஏரியாவுக்கெல்லாம் போனால் அண்டை நாடுகளின் நெட்வொர்க் அல்வா கொடுக்குமென்று.

******************************

நண்பர் ஒருவருடன் சற்று முன்பு சாட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் ஐ.டிக்கே போய்விட்டீர்களா? என்றார். நானும் Donkey கெட்டா ல் little wall என்றேன். உடனே அவர் ”CHILD WHO TEMPLE SALT MOTHER NEEDLE GONE !” என்று சாட்டி இதற்கான தமிழாக்கம் கேட்டார். திங்கோ திங்குன்னு திங்கியும் தெரியாததால் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்.நீங்களும் முயற்சி பண்ணி ட்ரான்ஸ்லேட்டுங்களேன்.(மரண மொக்கை, ஏற்கனவே தெரிஞ்சவங்க கம்முன்னு கண்டுக்காம இருங்க).

******************************

“குயில் பாட்டு ஓ வந்ததென்ன”,”பூத்தது பூந்தோப்பு”,”மல்லியே சின்ன முல்லையே”, ”இந்த மாமனோட மனசு”இப்படியான பாடல்களை எங்க ஊர் பக்கம் மினிபஸ்களில் கேட்டிருக்கிறேன்.சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இருக்கும் எனது அறையில் அமர்ந்து இந்த இடுகை எழுதுகையில் அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வரிசையாக இப்படியான பாடல்களை கேட்டபடியே எழுதுகிறேன்.லிட்டில் இந்தியாவில் இருப்பது சொந்த நாட்டில் இருப்பதைக் காட்டிலும் சொந்த கிராமத்தில் இருப்பதைப் போன்று இருக்கிறது.
******************************
ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.

ரகுநாதன்:இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.

சே.குமார்:கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:
விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

19 comments:

அன்புடன் நான் said...

இலக்கியன்.... நீங்களும் இங்கத்தானா????

நானும்...குட்டி இந்தியா பக்கம் தான் இருக்கிறேன் ( பேரர் பார்க் )

தொடர்புக்கு......................83371700

☼ வெயிலான் said...

”CHILD WHO TEMPLE SALT MOTHER NEEDLE GONE !”

நான் சொல்லட்டுமா?

க.பாலாசி said...

//பெரிய சைஸ் லோட்டா மாதிரியான டம்ளரில். //

எங்க வீட்டில் எனக்கு இந்த லோட்டாவில்தான் டீ வரும்.

தாங்கள் குறிப்பிட்ட பாடல்கள் அழகிய மெலோடிக்கள்.

கடைசியில் கவிதை நன்றாக உள்ளது.

கலகலப்ரியா said...

superb..! (child..temple..needle.. mandaiya udaichchikka naan thayaaraa illai... ennoda brain museum la vaikkarathukkaagap padaikkappattathu..)

மங்களூர் சிவா said...

nice!

நாகா said...

//(அங்கிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப் வருகிற வழியில் ஒரு ஏரி இருந்தது ரொம்ப வசதியாக இருந்தது).//

அங்க போயுமா??

விளை நிலங்களப் பத்தி நேத்துதான் ஒரு இடுகை போட்டேன்.. உங்க கவித நாலு வரியிலயே எல்லாத்தயும் சொல்லீருச்சு. அருமை..!

அப்பாவி முரு said...

விளைநிலங்களில் வீடுகளும் அங்கொன்று, இங்கொன்றாகத்தான் முளைக்குதா?

ஏன், இந்திய விளைநிலம் பாழ்பட்டுப்போச்சோ?

thamizhparavai said...

சுவையான நொறுக்ஸ்...

‘பிள்ளையார் கோயில் உப்புமா ஊசிப் போச்சு’--
:-)

thamizhparavai said...

விளைநிலம் நல்லா இருக்கு...

அன்பேசிவம் said...

வணக்கம் நண்பா, எப்படி இருக்கிங்க? எனக்கு பிள்ளையார் வரைக்கும் ஓக்கே அப்புறம் தெரியலை.
பதிவர் அறிமுகம் அருமை. இருவறையும் புதிதாக படிக்கிறேன். நன்றி

இராகவன் நைஜிரியா said...

டீ -- சூப்பர்..

child who salt flour needle gone - இப்படியும் சிலர் சொல்லுவாங்க...

// விளைநிலம்:
விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! //

சூப்பர்... சில வருடங்களுக்கு பின் நம் நாட்டின் நிலை இதுதாங்க

நாடோடி இலக்கியன் said...

நன்றி சி.கருணாகரசு.(பேரர் பார்க் தானா கண்டிப்பா மீட்டுவோம் நண்பரே).

நன்றி வெயிலான்(மூச்).

நன்றி க.பாலாஜி(:)).

நன்றி கலகலப்ரியா(ஹா ஹா).

நன்றி மங்களூர் சிவா.

நன்றி நாகா(கவிதை என்னோடது இல்லை நண்பா நண்பர் சே.குமார் அவர்களுடையது).

நன்றி அப்பாவி முரு (நண்பர் சே.குமார் அவர்கள்தான் சொல்லணும் நண்பா :) ).

நன்றி தமிழ்ப்பறவை(சரியா சொல்லிட்டீங்க முன்னாடியா தெரியுமா?வேற யாரேனும் சொல்றாங்களான்னு பார்த்துவிட்டு உங்க கமண்ட்டை ரிலிஸ் பண்றேன் நண்பா).

நன்றி முரளிகுமார் பத்மநாபன்(நலம் நண்பா,இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க,சொன்ன வரைக்கும் ஓகே).

நன்றி இராகவன் நைஜிரியா(salt வருமா?).

thamizhparavai said...

இல்லை நண்பரே... முதல் இரண்டு வார்த்தை தெரியவும் அதுபோல் முயன்றேன்..ஆனால் இதுபோல் பழமொழி கேள்விப்பட்டதில்லை..
டெம்ப்ளேட் கொஞ்சம் டல்லா இருக்கு...

Unknown said...

இடுகை நன்று. :))

Thamira said...

இந்தத் தொகுப்பைப் பார்க்கும் போது நீங்களும் படா சீனியர் பதிவர் ஆயிட்டீங்கன்னு தோணுது.! ஹிஹி..

Unknown said...

நல்ல தீனி..

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.

நன்றி ஆதி(அண்ணாத்த உள்குத்து என்னான்னு புரியலையே, நான் ஒரு டியூப்லைட்).

நன்றி பட்டிக்காட்டான்.

'பரிவை' சே.குமார் said...

நண்பர் நாடோடி இலக்கியனுக்கு,
என்னையும் எனது கவிதையையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உங்களைப் போன்ற உள்ளங்களால் இன்னும் சிரத்தையுடன் எழுதவேண்டும் என்ற எண்ணம் என்னுள் உலா வருகிறது. நன்றி.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்.

நன்றி சே.குமார்.(thodarnthu nalla idukaikalai thaarungal nanbare).