Saturday, May 8, 2010

புரியாத புதிர்..

டீக்கடைகளில்கற்பூர நாயகியே கனகவல்லிசத்தமாய் ஒலித்துக்கொண்டிருந்த இருள்விலகா அதிகாலை.

புறநகர் பகுதியில் உங்களை அன்புடன் அழைத்துக்கொண்டிருந்த காவேரி நகர் ஆர்ச்சினுள் நுழைந்துசாமிநாதன் எம்.காம்,நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர்என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்தஇளம் பச்சை நிற காம்பவுண்ட் சுவர் வீட்டினருகே வந்து நின்ற டாட்டா சுமோவிலிருந்து இறங்கியவருக்கு ஐம்பதை கடந்த அரசாங்க உத்தியோகஸ்தர் தோற்றம். அனேகமாய் சாமிநாதன். அவரைத் தொடர்ந்து கசங்கிய பட்டுச் சேலையில் கணத்த சரீரத்தில் ஏகப்பட்ட நகைகளணிந்து கையில் தாம்பூலப் பையோடு மிகவும் களைப்பாய் இறங்கினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. பார்த்ததுமே தெரிந்தது அவரின் மனைவியென்பது . ஏதோ திருமணத்திற்கு போய்விட்டு வருகிறார்கள்போல.

கேட்டை திறக்கச் சொல்லும் விதமாக ட்ரைவர் காரிலிருந்தபடியே ஹாரன் ஒலியை பலமுறையடித்தும் உள்ளிருந்து யாரும் ராததால், ”வள்ளி வள்ள்ள்ளீளீ..” என்று வீட்டிற்குள் இருக்கும் யாரையோ உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி.

மீண்டும் வீட்டிலிருந்து அமைதி,”சனிய இவ்வளோ சத்தம் போட்டும் அப்படியென்ன தூக்கம் அவளுக்குஎன்று அப்பெண்மணி களைப்பில் வெறுப்பாய் முணகியதிலிருந்தே வள்ளி வேலைக்காரியாய் இருக்கக் கூடுமென்பதை ஊகிக்க முடிந்தது,

திவாகர்...திவ்யா டேய் யாராவதும் கேட்ட திறந்து விடுங்கடாஎன்று சாமிநாதனும் குரல் கொடுத்தார். ம்ஹும்,எந்தப் பலனுமில்லை. மொபைல் போனில் இரண்டு மூன்று தடவை டயல் செய்துவிட்டுசுச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான், லேண்ட் லைனும் போக மாட்டேங்குதுஎன்றுவிட்டு, டிரைவரிடம்பழனி, காம்பவுண்ட் சுவரேறிக் குதித்து காலிங் பெல்லை அடிஎன்றார்.

டிரைவர்,காம்பவுண்ட் சுவரில் ஏறுகையில் அருகில் படுத்திருந்த தெருநாய் குரைக்கத் தொடங்கியது.”ச்சூ போஎன்றபடியே கீழே குனிந்து கல்லை எடுப்பதாய் டிரைவர் பாவனை செய்ததுதான் தாமதம் பெரிதாய் அடிவாங்கிய மாதிரிவீல்என்றலரியபடியே ஓடத்தொடங்கிய அந்நாய்,` நானும் எரிகிறேன்` என்பதாய் சன்னமாய் எரிந்துகொண்டிருந்ததொரு தெருவிளக்கு கம்பத்தினருகே நின்றுகொண்டு மீண்டும் குரைத்துக்கொண்டிருந்தது.

பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் உள்ளிருந்து பெரும் அமைதியே நிலவியதால் கதவினை வேகமாய் தட்டியபடியேதம்பி திவா கதவ திறங்கய்யாஎன்று கத்திய டிரைவர் மெல்ல திரும்பி இப்போ நான் என்ன பண்ணட்டும் என்பதாய் தனது முதலாளியை நோக்க,” ஜன்னல் வழியா பாருப்பாஎன்ற முதலாளியின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

திறந்தே இருந்த ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்த டிரைவர் உள்ளே லைட் எரியாததால் தனது செல்போன் வெளிச்சத்தை வீட்டினுள் பாய்ச்சிய அடுத்த நொடியில்ஸாஆஆ...ர் அந்த பொண்ணு வள்ளி ஃபேன்ல தொங்கிட்டுருக்குஎன்று பெரிதாய் அலறியபடியே தெரித்து ஓடிவந்தார்.

அடிப்பாவிஎன்று அலறிய அப்பெண்மணி தொடர்ந்துஎன்னங்க உள்ளே நம்ம பசங்கஎன்று பயத்தில் நடுங்கியபடியே தனது கணவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

தெருமுனை டீக்கடையில்,ஏற்காட்டில் வீற்றிருக்கும் ஏகவல்லி மாரியை பக்தி பரவசத்தோடு அழைத்துக்கொண்டிருந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும்கூட அச்சூழலில் அச்சம் தருவதாய் இருந்தது. தெருநாய் இன்னமும் விட்டு விட்டு குரைத்தபடியே இருந்தது.

“பழனி, உள்ளே திவாகரும் திவ்யாவும் இருக்காங்களான்னு பாரு” என்றபடியே சாமிநாதனும் கேட்டின் மேல் சிரமப்பட்டு ஏறி குதித்து உள்ளே ஓடினார் .

"எக்ஸ்கியூஸ்மி , என்னுடைய‌ ஸ்டேஷ‌ன் வ‌ந்திடுச்சு" என்று சொன்ன‌ அந்த‌ இளைஞ‌னிட‌ம் ஓசியில் வாங்கி ப‌டித்துக்கொண்டிருந்த‌ பாக்கெட் நாவ‌லை கொடுத்துவிட்டு உங்க‌ளைப் போல‌வே நானும் முடிவு என்ன‌வாக‌யிருக்கும் என‌ யோசித்துக்கொண்டே என் ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தேன்.

கொசுறு: இந்த‌க் க‌தையை தொட‌ர் க‌தையாக‌ எழுத‌ நினைத்து தொட‌ரும் போட்டிருந்தேன் நேர‌மின்மையால் இப்ப‌டியே முடித்துவிட்டேன்.

10 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

தொடரும்னா முதல்லயே சொல்றதுக்கென்ன, மொத்தமா படிச்சுக்குவோம். வர்ட்டா.?

PPattian : புபட்டியன் said...

அசத்தல் ஓப்பனிங் பாஸ்.. கன்டினியூ.. கொஞ்சமாய் பாக்கெட் நாவல் வாடை :)

Chitra said...

நல்ல எழுத்து நடை. தொடருங்கள்.

ஈரோடு கதிர் said...

என்ன்ன்ன்னாது.... தொடருமா!!!!!????

சே.குமார் said...

நல்ல எழுத்து நடை. தொடருங்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரு அழைப்பு இருக்கிறது நண்பரே, ஏற்றுக்கொள்ளுங்கள்.

http://www.aathi-thamira.com/2010/05/blog-post_12.html

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்குங்க. சீக்கிரம் தொடருங்க.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(அப்போ ப/பிடிக்கலையா?).

நன்றி புபட்டியன்,(அதேதான்).

நன்றி சித்ரா.

நன்றி கதிர்,(ஆமாம்).

நன்றி குமார்.

நன்றி கண்ணன்.(விரைவில் எழுதிடுறேங்க)

கவிநந்தன் !!! said...

final touch enakku theriyumae !!!

நாடோடி இலக்கியன் said...

நன்றி கவிநந்தன்,(அப்படியா,எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க நண்பரே,எப்படி முடிக்கிறதுன்னு தெரியாமத்தான் இருக்கேன் :))))))))))))))))) )