Friday, July 30, 2010

புரியாத‌ புதிர்...

டீக்கடைகளில் ”கற்பூர நாயகியே கனகவல்லி”சத்தமாய் ஒலித்துக்கொண்டிருந்த இருள்வில‌கா அதிகாலை.

புறநகர் பகுதியில் உங்களை அன்புடன் அழைத்துக்கொண்டிருந்த காவேரி நகர் ஆர்ச்சினுள் நுழைந்து ”சாமிநாதன் எம்.காம்,நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர்” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த‌ இளம் பச்சை நிற காம்பவுண்ட் சுவ‌ர் வீட்டினருகே வந்து நின்ற டாட்டா சுமோவிலிருந்து இறங்கியவருக்கு ஐம்பதை கடந்த அரசாங்க உத்தியோகஸ்தர் தோற்றம். அனேகமாய் சாமிநாதன். அவரைத் தொடர்ந்து கசங்கிய பட்டுச் சேலையில் கன‌த்த சரீரத்தில் ஏகப்பட்ட நகைகளணிந்து கையில் தாம்பூலப் பையோடு மிகவும் களைப்பாய் இறங்கினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. பார்த்ததுமே தெரிந்தது அவரின் மனைவியென்பது . ஏதோ திருமணத்திற்கு போய்விட்டு வருகிறார்கள்போல.

கேட்டை திறக்கச் சொல்லும் விதமாக ட்ரைவர் காரிலிருந்தபடியே ஹாரன் ஒலியை பலமுறையடித்தும் உள்ளிருந்து யாரும் வ‌ராத‌தால், ”வள்ளி வள்ள்ள்ளீளீ..” என்று வீட்டிற்குள் இருக்கும் யாரையோ உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி.

மீண்டும் வீட்டிலிருந்து அமைதி,”சனிய இவ்வளோ சத்தம் போட்டும் அப்படியென்ன தூக்கம் அவளுக்கு” என்று அப்பெண்மணி களைப்பில் வெறுப்பாய் முணகியதிலிருந்தே வள்ளி வேலைக்காரியாய் இருக்கக் கூடுமென்பதை ஊகிக்க முடிந்தது,

“திவாகர்...திவ்யா டேய் யாராச்சும் கேட்ட திறந்து விடுங்கடா” என்று சாமிநாதனும் குரல் கொடுத்தார். ம்ஹும்,எந்தப் பலனுமில்லை. மொபைல் போனில் இரண்டு மூன்று தடவை டயல் செய்துவிட்டு “சுச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான், லேண்ட் லைனும் போக மாட்டேங்குது” என்றுவிட்டு, டிரைவரிடம் ”பழனி, காம்பவுண்ட் சுவரேறிக் குதித்து காலிங் பெல்லை அடி” என்றார்.

டிரைவர்,காம்பவுண்ட் சுவரில் ஏறுகையில் அருகில் படுத்திருந்த தெருநாய் குரைக்கத் தொடங்கியது.”ச்சூ போ ” என்றபடியே கீழே குனிந்து கல்லை எடுப்பதாய் டிரைவர் பாவனை செய்ததுதான் தாமதம் பெரிதாய் அடிவாங்கிய மாதிரி ”வீல்” என்றலரியபடியே ஓடத்தொடங்கிய அந்நாய்,` நானும் எரிகிறேன்` என்பதாய் சன்னமாய் எரிந்துகொண்டிருந்ததொரு தெருவிளக்கு கம்பத்தினருகே நின்றுகொண்டு மீண்டும் குரைத்துக்கொண்டிருந்தது.

பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் உள்ளிருந்து பெரும் அமைதியே நிலவியதால் கதவினை வேகமாய் தட்டியபடியே “தம்பி திவா கதவ திறங்கய்யா” என்று கத்திய டிரைவர் மெல்ல திரும்பி இப்போ நான் என்ன பண்ணட்டும் என்பதாய் தனது முதலாளியை நோக்க,” ஜன்னல் வழியா பாருப்பா” என்ற முதலாளியின் முகம் குழ‌ப்ப‌த்தில் ஆழ்ந்தது.

திறந்தே இருந்த ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்த டிரைவர் உள்ளே லைட் எரியாததால் தனது செல்போன் வெளிச்சத்தை வீட்டினுள் பாய்ச்சிய அடுத்த நொடியில் ”ஸாஆஆ...ர் அந்த பொண்ணு வள்ளி ஃபேன்ல தொங்கிட்டுருக்கு” என்று பெரிதாய் அலறியபடியே தெரித்து ஓடிவந்தார்.

”அடிப்பாவி” என்று அலறிய அப்பெண்மணி தொடர்ந்து “என்னங்க உள்ளே நம்ம பசங்க “ என்று பயத்தில் நடுங்கியபடியே தனது கணவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

தெருமுனை டீக்கடையில், க‌ன‌க‌வ‌ல்லியை முடித்து ஏற்காட்டில் வீற்றிருக்கும் ஏகவல்லியை பக்தி பரவசத்தோடு அழைத்துக்கொண்டிருந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும்கூட அச்சூழலில் அச்சம் தருவதாய் இருந்தது. தெருநாய் இன்னமும் விட்டு விட்டு குரைத்தபடியே இருந்தது.

“பழனி, உள்ளே திவாகரும் திவ்யாவும் இருக்காங்களான்னு பாரு” என்றபடியே சாமிநாதனும் கேட்டின் மேல் சிரமப்பட்டு ஏறி குதித்து உள்ளே ஓடினார் .

"எக்ஸ்கியூஸ்மி , என்னுடைய‌ ஸ்டேஷ‌ன் வ‌ந்திடுச்சு" என்று சொன்ன‌ அந்த‌ இளைஞ‌னிட‌ம் ஓசியில் வாங்கி ப‌டித்துக்கொண்டிருந்த‌ பாக்கெட் நாவ‌லை கொடுத்துவிட்டு உங்க‌ளைப் போல‌வே நானும் முடிவு என்ன‌வாக‌யிருக்கும் என‌ யோசித்துக்கொண்டே ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தேன்.

22 comments:

Unknown said...

ஏற்கனவே படித்த கதை வரி மாறாமல் வருகிறதே என்று நினைத்தேன்..!!

நாடோடி இலக்கியன் said...

எழுதி ரொம்ப‌ நாளாச்சு,முடிவு இல்லாம‌ ஒரு க‌தையை அப்ப‌டியே விட‌வும் ம‌ன‌தில்லை மேலும் இந்த‌க் க‌தையை முடித்தால்தான் வேறு எதையாவ‌து புதிதாய் யோசிப்பேன்.

அப்புற‌ம் முடிவை ப‌ற்றி ஒன்றுமே சொல்ல‌வில்லையே ந‌ண்ப‌ரே.

Unknown said...

முடிவு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்துச்சுங்க..
என்னமோ எதிர்பார்த்து படிச்சு புஸ்ஸுன்னு போய்டுச்சு..

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி திருஞானசம்பத்.மா.,

கொஞ்ச‌மாத்தான் ஏமாற்ற‌மா? ஹி ஹி ப‌ர‌வாயில்ல‌.

எக்ஸ் ப‌ட்டிக்காட்டான் நீங்க‌தானா ந‌ண்பா?

Unknown said...

ஆமாங்க..
அந்த பேர பதிவுக்கு வெச்சுட்டு, நான் சொந்தப் பேருக்கு வந்துட்டேன்.. ஹி.. ஹி..

vasu balaji said...

அவசரமா எஸ்ஸானது தெரியுது:). ஆனா விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

'பரிவை' சே.குமார் said...

என்னடா இது இலக்கியன் மீள் பதிவு போட்டிருக்காரா என்று நினைத்தேன். உங்கள் முடிவும் கதையின் முடிவும் ஏமாற்றம் அளித்தது.

நண்பரே...
எனது பதிவுகள் எல்லாம் ஒரே இடத்தில். இங்கு வாங்களேன்.

http://www.vayalaan.blogspot.com

அன்பரசன் said...

கதை பயங்கரம் போங்க

Prathap Kumar S. said...

பின்னாடி பெருசா ஏதோ வரும்னு எதிர்பார்த்தேன்... இருந்தாலும் ஓகே ... :))

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள், (இக்க‌தையை இன்னும் விறுவிறுப்போடு கொண்டுபோக‌ நினைத்திருந்தேன் ஆனால் அத‌ற்கு மேலும் ப‌த்து தொட‌ரும் போட‌ வேண்டியிருந்திருக்கும் என‌வே இப்ப‌டி முடித்து சிறுக‌தையாக்கிவிட்டேன்).

ந‌ன்றி சே.குமார்,(அடுத்த‌ முறை ஏமாற்ற‌த்தை ச‌ரிசெய்திட‌லாம். உங்க‌ ம‌ன‌சு வ‌லைப்ப‌திவை ரீட‌ரில் தொட‌ர்ந்து வாசிக்கிறேன் ந‌ண்ப‌ரே பின்னூட்ட‌ முடிவ‌தில்லை அலுவ‌ல‌க‌த்திலிருந்து,உங்க‌ளின் ச‌மீப‌த்திய‌ வ‌றுமையில்
//தூரத்து நட்சத்திரமாய்
பொருளாதாரம்...
வானத்து நிலவாய்
வளர்ந்து தேயும் வாழ்க்கை..!//
இந்த‌ வ‌ரிக‌ள் பிடித்திருந்த‌ன‌).

ந‌ன்றி அன்ப‌ர‌ச‌ன்,(ரொம்ப‌ க‌டுப்பாகிட்டீங்க‌ளோ).

ந‌ன்றி நாஞ்சில் பிர‌தாப் ,(ம‌கிழ்ச்சி ந‌ண்ப‌ரே).

ஆரூரன் விசுவநாதன் said...

விறு விறுப்பான எழுத்து நடை....

தொடருங்க நண்பா.....

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி ஆரூர‌ன் விசுவநாதன்.

Unknown said...

என்ன பாரி, பொசுக்குன்னு முடிஞ்சுடுச்சு? ..எழுதினவரை விறுவிறுப்புதான்...!

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி த‌ஞ்சாவூரான்,(நேர‌மின்மை ராஜாண்ணா).

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான முயற்சி. ரொம்ப நல்லாருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

புது மாப்பிள்ளைக்கு இன்னும் கல்யாணக் கிறுக்கு குறையலன்னு நினைக்கிறேன் :)))

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி விக்னேஷ்வரி,(அப்பாடா உங்க‌ளுக்கேனும் முடிவு பிடித்திருந்த‌தே).


ந‌ன்றி எம்.எம்.அப்துல்லா,( ஏண்ணே இப்ப‌டி சொல்றீங்க‌ :))))))))) ).

thamizhparavai said...

Nalla vaeLai naan ERkenavae padikkaathathaala , ippoo thikilaa irunthathu.....ithai siRukathai aakkiyathil makizchi...
:-)
ungka area vae veeRa naNparae..yatharththamthaan ungka palam..

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி த‌மிழ்ப்ப‌ற‌வை,(எல்லா ஏரியாவையும் முய‌ன்று பார்ப்போமே என்றுதான் ந‌ண்ப‌ரே).

க.பாலாசி said...

ரொம்பச்சின்னதா எழுதிட்டீங்களோன்னு தோணுது. பொசுக்குன்னு வந்த க்ளைமாக்ஸ் கொஞ்சம் நகைச்சுவையாவும் எதிர்பாராமலும் அமைச்சது அருமை...

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி பாலாஜி,(இன்னும் கொஞ்ச‌ம் இழுத்து இதே முடிவை வைத்திருந்தால் ரொம்ப‌ ஏமாற்ற‌மாக‌ இருக்குமென‌ நினைத்து இத்தோடு முடித்துவிட்டேன் பாலாஜி. இதை தொட‌ர் க‌தையாக‌ நினைத்து இர‌ண்டாம் பாக‌ம்கூட‌ எழுதிவிட்டேன் ஆனால் நேர‌மின்மையால் அதை அப்ப‌டியே விட்டுவிட்டு இந்த‌ முடிவை சொருகிவிட்டேன்).

Unknown said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .