Friday, August 13, 2010

ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை

ஆட்டோ ராஜா பட‌ பாட‌லான‌ ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை மெட்டுக்கு வ‌ரிக‌ள் எழுத‌ முய‌ன்ற‌த‌ன் விப‌ரீத‌ விளைவு கீழே.

ஆண்:என்செய்தாய் ஏதேதோ செய்தாய்
என்னைத்தான் நீ சொல்லடி.
கண்வைத்தேன் கண்ணுக்குள் வைத்தேன்
உன்னெஞ்சில் எனைத் தள்ளடி (எனை என்செய்தாய்)

ச‌ர‌ண‌ம் 1

பொன் தேகம் நான் தீண்டும் வேளையில்
வெட்கப்பூ நீ சூடுவாய்
சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்
பொன்னந்தி .... நிறம் அள்ளி
நாணத்தால் புதுக் கோலம் பூணுவாய்..
பாவத்தால் எதிர் காலம் காட்டுவாய்..

ச‌ர‌ண‌ம் 2:
பெண்:என்னை நீ பார்க்கின்ற‌ வேளையில்
என்னுள் தீ எழுகின்ற‌தேன்
பின்னால் நீ தொட‌ர்கின்ற‌ வேளையில்
என் கால்க‌ள் ந‌டை ம‌ற‌ந்து போவ‌தேன்?
அன்பே உன்........ பொன்மார்பில்....
நான் சாயும் நாள் பார்த்துச் சொல்லிடு
மஞ்சத்தில் எனைச் சேர்த்துக் கொன்றிடு..

கண்ணோடு கண் பேசும்போது
மௌனம்தான் மொழியானதோ
பூவைதான் பூவைக்கும்போது
பூவாய்த்தான் நான் மாறவோ

கொசுறு:பாட‌லில் மூன்று ச‌ர‌ண‌ம் இருக்கும் இந்த‌ இர‌ண்டு ச‌ர‌ண‌த்திற்கே உங்க‌ளுக்கு க‌ண்ணைக் க‌ட்டியிருக்கும் என்ப‌தால் இத்தோடு ரூமை காலிசெய்து வ‌ந்துவிட்டேன்.:))‌

13 comments:

அன்பேசிவம் said...

arumai nanbaaa, ini intha paadalakalai munumunukkum pothu bichchayam ungala varikal varappovathu nichchyam.:-)

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி முர‌ளி.

Thamira said...

:-))

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி ஆதிமூலகிருஷ்ணன்,
:-))

ஆயில்யன் said...

நல்லா டிரை செஞ்சிருக்கீங்க :) சூப்பர்

//பொன் தேகம் நான் தீண்டும் வேளையில்
வெட்கப்பூ நீ சூடி ஒளிகிறாய்
சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்//

இதுல என் வர்ஷனா இருந்தா

வெட்கப்பூ நீ சூடினாய் & ஒரு தாயாய் எனைக்கொஞ்சினாய்ன்னு மாத்தியிருப்பேன் ! :)

சிவராம்குமார் said...

Nice one!

'பரிவை' சே.குமார் said...

Super. Nice one!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆயில்யன்,(
//கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ//

வெட்கப் பூ நீ சூடினாய் என்பது மெட்டில் அமைகிறது,ஒரு தாயாய் எனைக் கொஞ்சினாய் மெட்டில் உடகாரவில்லையே நண்பரே.முன் எப்போதோ கேட்டதை ஹம் பண்ணிக்கொண்டே எழுதினேன் அதனால் இரண்டு இடங்களிலும் ”நம்பிவிடவோ” என நம்பி எழுதிவிட்டேன் :))))))))) ).

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிவராம் குமார்.

நன்றி குமார்.

மாணவன் said...

அருமை நண்பரே,

அழகாகவும் எழுதியுள்ளீர்கள்..

தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள்...

“பயிற்சியும் முயற்சியும் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்...

நன்றி........

நாடோடி இலக்கியன் said...

நன்றி மாணவன்.

thamizhparavai said...

நான் ரொம்ப லேட்டோ...
இருந்தாலும் நான் எக்ஸ்குளூசிவா கேட்டதுதானே இது..
:-)
//சிறு கோபம் நான் கொண்டு திரும்பினால்
ஒரு தாயாய் எனைக் கொஞ்சி அணைக்கிறாய்//
குட் தலைவரே...

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி த‌மிழ்ப்ப‌ற‌வை.(ஆமாம் அதேதான் ந‌ண்ப‌ரே).