Tuesday, March 11, 2008

இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்:

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான அனேக பாடல்கள் குறிப்பாக எண்பதுகளில் அவரது இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை மதிமயங்க வைத்தவை.
என்னுடைய தெரிவுகளாக நான் இங்கே கொடுத்திருக்கும் பாடல்கள் ஒருசில பாடல்களைத் தவிர அனைத்துமே 90 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களே.இவை அனைத்துமே அதிராத இசையில் காதல் ரசம் சொட்டும் இனிமையான வரிகளை கொண்ட மெலடிகள்.இரவு நேரத்தில் கேட்டு மகிழ உகந்த பாடல்கள்.அனைத்து பாடல்களுமே இருவர் இணைந்து(duet) பாடும் வகையில் இருக்கும்.

1.ஓ பட்டர் ஃபிளை -மீரா
http://youtube.com/watch?v=vRohhh7k5x0

2.கண்ணாலே காதல் கவிதை -ஆத்மா

http://youtube.com/watch?v=nyHAw42NzT4

3.மழை வருது மழை வருது குடை கொண்டு வா -ராஜா கைய வெச்சா

http://youtube.com/watch?v=GT2GFeN6Pos

4.காதல் கவிதைகள் படித்திடும் நேரம்- கோபுர வாசலிலே

http://youtube.com/watch?v=lR8BrvAOK-g

5.சொர்க்கத்தின் வாசற்படி- உன்னைச் சொல்லி குற்றமில்லை

http://youtube.com/watch?v=SDj6mbu1mr0

6.சுந்தரி கண்ணால் ஒரு சேதி -தளபதி

http://youtube.com/watch?v=H_6WG2r5maI

7.கல்யாணத் தேனிலா -மௌனம் சம்மதம்

http://youtube.com/watch?v=XKbSmts29Y0

8.உன்னை எதிர் பார்த்தேன்- வனஜா கிரிஜா
http://youtube.com/watch?v=g5MaB3ofgVQ

9.வா வா அன்பே அன்பே- அக்னி நட்சத்திரம்
http://youtube.com/watch?v=DEL6MdpqtOg

10.தூங்காத விழிகள் ரெண்டு -அக்னி நட்சத்திரம்
http://youtube.com/watch?v=UBZNVcvCtcU&feature=related

11.ஆகாய வெண்ணிலாவே -அரங்கேற்ற வேளை
http://youtube.com/watch?v=oGFKxduCbB0

12.நீ பாதி நான் பாதி கண்ணே- கேளடி கண்மணி

http://youtube.com/watch?v=UnUlNrIAp94&feature=related

மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இதே மாதிரி பாடல்களான கீழே குறிப்பிட்ட பாடல்களும் அதிராத இசையிலேயே இருக்கும்.

13.ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்- இதய தாமரை
http://youtube.com/watch?v=FbZ84XheNLQ

14.சங்கீத ஸ்வரங்கள்- அழகன்

http://youtube.com/watch?v=vmCi2HVQXr0&feature=related

15.தோடி ராகம் பாடவா- மாநகரக் காவல்
http://youtube.com/watch?v=adTVia0vbtk

இந்த மாதிரி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது.உங்களுக்கு தெரிந்த இதே மாதிரியான பாடல்கள் இருந்தால் சொல்லிட்டு போங்க.

15 comments:

mohammed said...

very good collection, if u have like this, pls send me: uyire4u@gmail.com

Thanks
bye

thanjavurkaran said...

பாடல்கள் நல்ல தேர்வு.

ஆறாவது பாடலின் இசை சந்திரபோஸ்.

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் நண்பரே!
ஆறாவது பாடலாக இருந்த மாநகரக் காவல் படத்தின் பாடலை கிழே மாற்றிவிட்டென்.
ஆம்,அந்த பாடலின் இசையமைப்பாளர் சந்திரபோஸ்தான். இதுநாள் வரை அது இளையராஜாவின் இசையில் வந்த படமென்று நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி.
ஆமாம் நீங்க தஞ்சாவூரா,நானும் தஞ்சாவூர்தான்.

thanjavurkaran said...

மிகவும் மகிழ்ச்சி.
உங்களது profile இப்போதுதான் பார்த்தேன்.
ஆம். தஞ்சாவூரேதான். கரந்தையில் தான் வீடு, வாசல், நட்பு, சொந்தம் எல்லாமே.இப்போது பகரினில் வசிக்கிறேன்

நீங்கள்?

நாடோடி இலக்கியன் said...

வாங்க mohammed,
உங்கள் கருத்துக்கு நன்றி,
இதே மாதிரியான பாடல் தொகுப்பு நிறைய இருக்கிறது,கண்டிப்பாக மின்மடலிடுகிறேன்

Chandravathanaa said...

நல்ல பாடல்கள்.
thanks

நாடோடி இலக்கியன் said...

Chandravathanaa said...
//நல்ல பாடல்கள்.
thanks//
வாங்க சந்திரவதனா!
முதல் வருகைக்கு மிக்க நன்றி!
பாடல் தொகுப்பு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

CVR said...

மிக நல்ல தேர்வுகள்!!
இவை அனைத்தும் எனக்கும் மிக விருப்பமான பாடல்கள் தான்!! :-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நாடோடி இலக்கியன்,

நண்பர் CVR வழிகாட்டலில் இங்கு வந்து பார்த்தால் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.

நான் இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை தமிழ் வானொலிகளில் இரவு 9.30இற்குப் பிறகு இதே அழகுடைய இடைக்கால மெல்லிசைப்பாடல்களை நள்ளிரவு வரை தினமும் ஒளிபரப்புவார்கள்.மிக அருமையாக இருக்கும்.அதிலும் பௌர்ணமி இரவெனில் நிலவு சார்ந்த பாடல்கள் வானலையில் பவனி வரும்.மிக அற்புதமாக இருக்கும் :)

உங்கள் இத்தேர்வுகளில் சிலதை போனவாரம்தான் நானும் தேர்வு செய்தேன் :)

http://radiospathy.blogspot.com/2008/03/blog-post_09.html

மிக அழகிய தெரிவுகள்.
நன்றி நண்பரே :)

நாடோடி இலக்கியன் said...

CVR said...
மிக நல்ல தேர்வுகள்!!
இவை அனைத்தும் எனக்கும் மிக விருப்பமான பாடல்கள் தான்!! :-)

வாங்க CVR,
முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உங்களை மாதிரி எனக்கும் மெலடி பாடல்கள்தாங்க விருப்பம்.எனக்கு குத்து பாட்டுன்னாலே அலர்ஜிங்க.

நாடோடி இலக்கியன் said...

வாங்க ரிஷான் ஷெரீப்,

முதல் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் கொடுத்திருந்த சுட்டியில் உங்களின் தெரிவுகளையும் பார்த்தேன்.
அருமையான பாடல்கள்.அதில் உள்ள "உடையாத வெண்ணிலா" பாடல்தான் என்னுடைய கைபேசியில் ring tone ஆக வைத்திருக்கிறேன். இந்த பாடலையும் என்னுடைய தெரிவில் இணைக்க நினைத்திருந்தேன் ஆனால் youtube தளத்தில் எவ்வளவு முயன்றும் அந்த பாடல் கிடைக்கவில்லை.
அதே மாதிரி "மாலையில் யாரோ", "என்னுள்ளே என்னுள்ளே","ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்" போன்ற பாடல்களை எனது அடுத்த பாடல் தெரிவில்(female solo) கொடுக்கலாமென்று இருந்தேன். இதே போன்று அருமையான ஆனால் அவ்வளவு பிரபலமாகாத நிறைய பாடல்களை அடுத்தடுத்த பதிவுகளில் தரலாமென்று இருக்கிறேன்.

உங்களின் அருமையான ரசனை குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பரே..!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் நாடோடி இலக்கியன்,

'என்னுள்ளே என்னுள்ளே' பாடல் யூ ட்யூபில் கிடைக்கிறது.இது எனக்கும் மிகப்பிடித்த பாடல்.கீழ்க்காணும் காட்சியில் சுவர்ணலதா நேரடியாக இப்பாடலைப் பாடும் காட்சியும் தொகுக்கப்பட்டிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=IFuzKsLrWvk&feature=related

'மாலையில் யாரோ...'
http://www.youtube.com/watch?v=xzLCUEXY3q8&feature=related

நன்றி நண்பரே :)

நாடோடி இலக்கியன் said...

சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க
ரிஷான் ஷெரீப்.

இதே மாதிரி "போறாளே பொண்ணுத்தாயி" பாடலின் பதிவோ அல்லது சுவர்ண லதா பாடுவது போன்றோ வீடியோ கிடைத்தால் சுட்டி தாருங்கள்.

நன்றி நண்பரே.!!

Prabakar said...

போறாளே பொண்ணுத்தாயி (சோகப்பாடல்):
http://www.youtube.com/watch?v=GxEmlZaOD4o

போறாளே பொண்ணுத்தாயி (காதல் பாடல்):
http://www.youtube.com/watch?v=4LxI-NY2cgQ

நாடோடி இலக்கியன் said...

@பிரபாகர்,
சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க.