Tuesday, November 25, 2008

ஐந்து வழி மூன்று வாசல்................!

இலக்கியம் குறித்து பெரிதாக (சுத்தமாக) பரிச்சயம் இல்லாத எனக்கு,எது இலக்கியம் என்பது பற்றியும்,எந்த கட்டமைப்புக்குள் எழுதுவது இலக்கியகக் கட்டுரைகளாக பார்க்கப்படுகின்றன என்பது பற்றியும் சரியான புரிதல் இன்றுவரை இல்லை,இதற்கு சரியான வாசிப்பனுபவம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

சில படைப்புகளில் கையாளப்படும் சொற்கள் ஒரு புரியாத புதிராகவே உள்ளது,குறிப்பாக புனைவு,கயமை,பின்நவீனத்துவம்,படிமம் இப்படி,இவற்றில் சில சொற்களுக்கு பொருள் புரிவது போலவும், சமயங்களில் புரியாதமாதிரியும் இருக்கிறது.


கல்யாண்ஜி, வண்ணதாசன், பிரமிள், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன் இப்படியாக நீளும் இலக்கியவாதிகளின் பெயர்களை கேட்க நேரிடும்போது அவர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.ஆனால் வெகு சாமாண்ய நடையில் எழுதப்படும் சில கவிதைகளையும், கட்டுரைகளையும் படிக்கும் போதே பாதி புரிவதில்லை அப்படியிருக்க இவர்களின் படைப்பு எனக்கு புரிந்துகொள்ள முடியுமா என கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும்.

இலக்கியத்தைப் பற்றி அறிய ஆவலாக இருக்கும் எனக்கு யாரின் படைப்பிலிருந்து ஆரம்பித்தால் எளிதாக இருக்கும் என உங்களுக்கு தெரிந்த படைப்புகளை எனக்கு பரிந்துரை செய்வீர்களாக.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்,இலக்கியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத காலத்தில் நான் வாசித்த புத்தகம்தான் "ஐந்து வழி மூன்று வாசல்" ஒரு சரித்திர நிகழ்வையும்,நிகழ்கால நிகழ்வு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான த்ரில்லர் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி இறுதியில் இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அற்புதமாக கதையை முடித்திருப்பார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். இந்த நாவலில் இடம்பெற்ற ராஜேந்திரன்,மீனாட்சி, ஜம்னாலால் ஆகிய காதாபாத்திரங்கள் படித்து பல வருடங்கள் ஆனபின்பும் இன்னும் மனதைவிட்டு அகலாதவை.

இந்த புத்தகம் படித்த ஆர்வத்தால் அடுத்து நான் படித்தது கல்கியின் "பொன்னியின் செல்வன்",வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" மற்றும் "கி.ராஜநாராயனின் கதைகள்" என சொற்ப எண்ணிக்கையிலேயே அடக்கிவிடலாம்.

டிஸ்கி:ரொம்ப ஆர்வக் கோளாரில் இருக்கும் எனக்கு நல்ல படைப்புகளை அறிமுகப் படுத்துங்கள் என்பதற்காகவே இந்த பதிவு.

13 comments:

தமிழ் said...

/ரொம்ப ஆர்வக் கோளாரில் இருக்கும் எனக்கு நல்ல படைப்புகளை அறிமுகப் படுத்துங்கள் என்பதற்காகவே இந்த பதிவு./

அதற்காக இப்படியா

நாடோடி இலக்கியன் said...

திகழ்மிளிர் said...


//அதற்காக இப்படியா//

வாங்க திகழ்மிளிர்,
மொக்கை போடணும்னு முடிவாச்சு,அப்புறம் என்னத்துக்கு பெருசா யோசனை.அதான் இப்படி.
ரத்தம் வந்திடுச்சோ...!

Anonymous said...

எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் வலைப்பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே இலக்கிய கலைச் சொற்கள் என்று ஒரு பட்டை (லேபில்) இருக்கும். படித்துப் பாருங்கள், கொஞ்சம் புரியலாம். அதில் அறிவியல் புனை கதைகள், சிரு கதைகள், கட்டுரைகள், இலக்கியம் எல்லாம் உண்டு. அவர் வலைப் பக்கத்தை தொடர்ந்து வாசித்து வருவதே எனது இலக்கிய ஆர்வத்தை தூண்டுகிறது. மூளைக்கும், மனசிற்கும் சரியான தீனி.

நாடோடி இலக்கியன் said...

வாங்க நவீன் பிரகாஷ்,
தகவலுக்கு மிக்க நன்றி.

புருனோ Bruno said...

//டிஸ்கி:ரொம்ப ஆர்வக் கோளாரில் இருக்கும் எனக்கு நல்ல படைப்புகளை அறிமுகப் படுத்துங்கள் என்பதற்காகவே இந்த பதிவு.//

ருத்ரவீணை
பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்
விடாது கருப்பு

Anonymous said...

கல்யாண்ஜி கவிதைகள் இயல்பானவை. ஒரு personal touch இருக்கும். இதிலிருந்து தொடங்கலாம்.
எனக்கும் பெரிசா தெரியாது, கொஞ்சமா படிச்சதிலிருந்து சொல்றேன்.

பாலாஜி-பாரி

நாடோடி இலக்கியன் said...

புருனோ Bruno said

//
ருத்ரவீணை
பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்
விடாது கருப்பு
//
வாங்க புருனோ,
தகவலுக்கு மிக்க நன்றிங்க.ஆமா இது எல்லாமே இந்திரா சௌந்தர ராஜன் எழுதியதோ?
சேது நாட்டு வேங்கை என்று கூட ஒரு சரித்திர தொடர் தினமணி கதிரில் தொடராக வந்தது.

நாடோடி இலக்கியன் said...

//கல்யாண்ஜி கவிதைகள் இயல்பானவை. ஒரு personal touch இருக்கும். இதிலிருந்து தொடங்கலாம்.
எனக்கும் பெரிசா தெரியாது, கொஞ்சமா படிச்சதிலிருந்து சொல்றேன்.

பாலாஜி-பாரி//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க பாலாஜி பாரி.
கல்யாண்ஜியின் ஓரிரு கவிதைகள் வாசித்திருக்கிறேன்,நீங்கள் சொல்வது போல ரொம்பவே இயல்பான சொற்களை கொண்டு எழுதியிருப்பார்.அவரின் இந்த கவிதை எனக்கு பிடிக்கும்.

"கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்து வீட்டைப் பெருக்கினாள்
வீடு சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு"

Unknown said...

தி.ஜானகிராமன்..காலத்தை வென்ற எழுத்துக்கள் அவை..'மோக முள்' அம்மா வந்தாள், மரப்பசு..வாசித்துப் பாருங்கள். புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், நகுலன், கோணங்கி, அ.முத்துலிங்கம், அம்பை என்று சொல்லிக் கொண்டே போகலாம், வெறும் fiction ஐ தாண்டி இவர்கள் எழுத்துக்களில் எல்லாம் நம்மில் ஏதோ மாயம் செய்துவிடும். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.. 'அ.முத்துலிங்கம் கதைகள்' என்று மொத்த தொகுப்பாக தமிழினி வெளியிட்டுள்ளது...நேரம் வாய்க்கும் போது வாசித்துப் பாருங்கள்..எளிமையான நடை, narrations style, எள்ளல் எல்லாம் கலந்து great flow இருக்கும்... தற்கால எழுத்தாளர்களில் தொடங்க விருப்பப்பட்டால் S.Ramakrishnan வாசியுங்கள்..பாஸ்கர் சக்தியின் 'பழப்பு நிற புகைப்படம்' மற்றும் 'அழகர்சாமியின் குதிரை' நல்ல சிறுகதைத் தொகுப்பு, 'வம்சி' பதிப்பத்தாரின் வெளியீடு. நீங்கள் ஒரு புள்ளியில் தொடங்குங்கள், வாசிப்பு அனுபவம் உங்கள் தேடலை விரிவுப்படுத்தும்..அது தானே உங்களை உள்வாங்கிக் கொள்ளும்...அதன் பிறகு உங்கள் பதிவுகளைப் போலவே அது அற்புதமாக இருக்கும்..வாழ்த்துக்கள் தோழர்.

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கும் நல்ல பல படைப்புகளை அறிமுகபடுத்தியதற்கும் மிக்க நன்றி சகோதரி.

Raajaguru said...

//இந்த புத்தகம் படித்த ஆர்வத்தால் அடுத்து நான் படித்தது கல்கியின் "பொன்னியின் செல்வன்",வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" மற்றும் "கி.ராஜநாராயனின் கதைகள்" என சொற்ப எண்ணிக்கையிலேயே அடக்கிவிடலாம்.//

இவைகளைப் படித்த நீங்கள் கல்கியின் மற்ற படைப்புகளையும், வைரமுத்துவின் மரபுக் கவிதைத் தொகுப்புகளாகிய "வைகறை மேகங்கள்", "என் பழைய பனை ஓலைகள்" போன்ற நூல்களையும் படித்தால் உங்களின் இலக்கிய ஈடுபாடு இன்னும் அதிகரிக்கும்.

மாதங்கி said...

எப்போதும் வாழும் கோடை-
கவிதை குறித்த கட்டுரைகள்
குழப்பமில்லாத நடையில்
எழுதப்பட்டிருக்கும்-
-மனுஷ்ய புத்திரன்
உயிர்மை பதிப்பகம்

ஆத்மாநாம் படைப்புகள்-
(கவிதைகள், நேர்காணல்,..)
பிரம்மராஜன் தொகுத்தது
காலச்சுவடு பதிப்பகம்

நாடோடி இலக்கியன் said...

நன்றி மாதங்கி.
ஆத்மநாம் படைப்புகளை பலரும் எனக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்,இப்போது நீங்களும் கண்டிப்பாக வாசிக்கிறேன் சகோதரி.