Saturday, September 5, 2009

இயற்கை எழில் கொஞ்சும் திரைப் பாடல்கள்..

சலித்துப்போன அன்றாட நிகழ்வுகளில் இருந்து விடுபட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்று தோன்றும் போது எங்காவது இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு போய்வர நினைப்போம்,அதில் முதல் விருப்பம் மலைப் பிரதேசங்களாக இருக்கும்.

மலைப் பிரதேசங்களில் காணும் இயற்கைக் காட்சிகளில் மனம் லயித்து கவலைகள் மறந்து, சிலு சிலுத்து ஓடும் சிற்றோடையாய், அருவியாய், வர்ணஜாலம் காட்டும் பூக்களாய், பாடிப் பறக்கும் புள்ளினங்களாய், துள்ளியோடும் மான்களாய், நீந்தித் திரியும் மீன்களாய் நம் மனமும் நாம் காணும் காட்சியை ஒட்டியே மாறத் தொடங்கும் அற்புத உணர்வை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம்.

இந்த அழகிய காட்சிகளைத் தமிழ்த்திரைப் பாடலாசிரியர்கள் திரை கதாநாயகர்களின் வாயிலாகத் தங்களது கவிதை வரிகளால் வர்ணித்திருக்கும் பாடல்களின் தொகுப்பே இப்பதிவில்.

”வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ” --
கண்ணதாசன்.
எத்தனை அற்புதமானக் கற்பனை, பாடலின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமான இயற்கைக் காட்சிகளுக்காகவும், குளோசப் ஷாட்டில் வரும் ஷோபாவின் எக்ஸ்பிரஷன்களை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவும் எத்தனை முறையானாலும் பார்க்கவும், கேட்கவும் சலிக்காதப் பாடல் இந்தச் செந்தாழம் பூவில்.

”கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே” ---
வாலி.
வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் இளநெஞ்சே வா என ஆரம்பிக்கும் இப்பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை அத்தனை வரிகளும் ஒன்றை ஒன்று விஞ்சக் கூடிய வகையில் கற்பனை நயம் கூத்தாடும். பாடலில் வரும் நேர்த்தியானக் குளோஸப் ஷாட்கள் ஒளிப்பதிவு பாலுமகேந்திரா என்பதைச் சொல்லாமல் சொல்லும். கற்பனைக் கொட்டிக் குவித்துக் கம்பனையே வம்புக்கிழுத்திருப்பார் வாலி இப்பாடலில்.

”தங்க மலைச் சாரல் எந்தன் ஊரோ
இங்கு என்னை கைது செய்வார் யாரோ”
மனசுக்குள் மத்தாப்புப் படத்தின் ஓ பொன்மாங்குயில் எனத் தொடங்கும் இப்பாடல் படத்தின் கதையோடு ஒட்டிய வரிகளைக் கொண்டிருப்பினும் இயற்கையை வர்ணிக்கும் சில அற்புதமான வரிகளைக் கொண்டிருக்கும். எஸ்.ஏ.ராஜ்குமார் இப்படியெல்லாமா பாட்டுகளைத் தந்தார் என்று ஆச்சர்யப் படுத்தும் மெட்டு. மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் மிகப்பிடித்தப் பாடலாக ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் வித்யாசாகர் சில பாடல்களைச் சொல்லியிருந்தார் அதில் இப்பாடலும் ஒன்று.

”ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லைத் தாருங்களே” --
வாலி
கவிஞன் இயற்கை அழகில் மயங்கிச் சிறகடித்துப் பறக்க நாரையிடம் சிறகைக் கேட்கும் இவ்வரிகள் பழமுதிர்ச் சோலை எனும் வருஷம் 16 படப் பாடலில் உள்ளவை. பாடலைப் படமாக்கியிருக்கும் விதமும், கார்த்திக்கின் உற்சாகமானத் துள்ளலும் பார்ப்பவர்களையும் உற்சாகப்படுத்தும்.

”தூரல் உண்டு மலைச்சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமாவது உண்டு”
வெயில் கூட ஈரமாகும் என்ன ஒரு அற்புதமானக் கற்பனை. மலைப் பிரதேசங்களின் கிளைமேட்டுக்கு இதைவிட இன்னொரு சிறப்பான வர்ணிப்பு வேறெந்த மொழியிலும் இருக்குமாங்கிறது சந்தேகமே. இந்த வரிகள் மட்டுமன்றிப் பாடலின் அத்தனை வரிகளுமே இயற்கையைப் பற்றியே இருக்கும். மனோவின் அட்டகாசமானக் குரல் சூப்பர் ஸ்டாருக்கு வெகு பொருத்தமாக அமைந்தப் பாடல் ராஜாதி ராஜாவின் இந்த மலையாளக் கரையோரம்”.

”இங்கே சூரியன் போல் சந்திரன் போல்
சுதந்திரமாய் திரிந்திடுவேன் நான்”

தென்றல் காற்றே ஒன்றாய் போவோமாஎன்று ஆரம்பிக்கும் அதர்மம் படப் பாடலில் நாட்டிற்குள் நிலவும் பேதங்களை வெறுத்து இயற்கையோடு இயைந்தக் காட்டு வாழ்க்கை வாழ ஏங்கும் இளைஞனின் ஏக்கத்தை மனோவின் குரலில் அருமையாக வேலைவாங்கியிருப்பார் இளையராஜா. பாடல் இதோ,


”வெள்ளி மேகங்கள் பள்ளித் தோழன் போல்
எந்தன் தோளைத் தீண்டி ஓடும் கூடும்
நானும் ஒரு காட்டருவி போல நடப்பேன்
நீல நிற நீரலையாய்ப் பொங்கிச் சிரிப்பேன்” ---
வாலி
மேகங்களைப் பள்ளித் தோழனாகக் கவிஞர் கற்பனைச் செய்தது அந்த உச்சிமலைக் காட்டைக் கேளு எனத் தொடங்கும் எங்க தம்பி திரைப் பாடலுக்காக. இப்பாடலில் எந்த வரிகளையும் சிறந்த வரிகளாக மேற்கோள் காட்டலாம். ஆனால் இப்படத்தில் வரும் வேறு சில பாடல்கள் வரிகள் வெகு சாதாரணமாக இருந்தும் அதன் மெட்டமைப்பினால் பெரிய ஹிட்டானதில் இப்பாடல் பெரிதாக எடுபடவில்லை. என்னுடைய வலைப் பூவின் கேப்ஷனாக வைத்திருக்கும் ”நாளை என்னும் நாளை எண்ணி என்னக் கவலை;நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை” என்ற வரிகளும் கூட இப்பாடலின் வரிகளே. பாடல் இதோ,



”மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது
மோகம் கொண்ட மண்ணை முத்தம் இடுது” ---
வாலி
’பாட்டு வாத்தியார்’ படப் பாடலில் இடம் பெற்ற இவ்வரிகளை கே.ஜே. ஏசுதாஸின் குரலில் கேட்கும்போது எந்த வறண்ட பிரதேசத்தில் இருந்தாலும் மனசுக்குள் சாரல் அடிக்கும்.சோலை மலரே” எனத் தொடங்கும் அப்பாடல் இதோ,


”இயற்கை தாயின் மடியில் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து”---
வைரமுத்து.
மூங்கில் காடுகளே சாமுராய் படப் பாடலின் வரிகளில் தனது ஆபாரமான கற்பனைத் திறத்தால் இயற்கையை மரியாதைச் செய்திருப்பார் வைரமுத்து.

டிஸ்கி: இதுவரை என்னுடைய பதிவுகளைப் படித்து எனக்குத் தொடர்ந்து உற்சாகம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. ஒரு சின்ன இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் ஓரிரு மாதங்களில் வருகிறேன்.

19 comments:

தமிழ் அமுதன் said...

கலக்கல் கலெக்‌ஷன்ஸ்

Sanjai Gandhi said...

எல்லாமே சூப்பர் பாடல்கள்.

எதுக்கு ராசா ஒரு மாசம் இடைவெளி? ஒரு மாசம் சேர்த்தே எடுத்துக்கோங்க. அப்போ தான் நாங்களும் 4 பின்னூட்டம் வாங்க முடியும்.. :))

Thamira said...

GOOD.

ஈரோடு கதிர் said...

உழைப்பு மிகுந்த இடுகை என்பது தொகுப்பை பார்த்ததும் தெரிகிறது

வாழ்த்துகள் பாரி

//”நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை;நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை” //

அப்புறம் என்ன ஒரு மாதம் வெட்டாப்பு..

சீக்கிரம் வாங்க

தேவன் மாயம் said...

”வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ” -- கண்ணதாசன்.
எத்தனை அற்புதமான கற்பனை, பாடலின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமான இயற்கைக் காட்சிகளுக்காகவும், குளோசப் ஷாட்டில் வரும் ஷோபாவின் எக்ஸ்பிரஷன்களை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவும் எத்தனை முறையானாலும் பார்க்கவும், கேட்கவும் சலிக்காத பாடல் இந்த செந்தாழம் பூவில்.
//

அருமையான பாடல் ! இசைக்கருவிகளை உடைத்து காட்டுக்கத்தல் கத்துவோர் படிக்க வேண்டிய பாடம்!

venkat said...

சூப்பர்

venkat said...

சூப்பர்

Unknown said...

பதிவு நல்லா இருந்தது ஆனா டிஸ்கி தான் கஷ்டமா இருக்கு... இருந்தாலும்...

Unknown said...

//எதுக்கு ராசா ஒரு மாசம் இடைவெளி? ஒரு மாசம் சேர்த்தே எடுத்துக்கோங்க. அப்போ தான் நாங்களும் 4 பின்னூட்டம் வாங்க முடியும்.. :))//

அதுக்கு முதல்ல பதிவெழுதனும்.. ;))))))))

நாஞ்சில் நாதம் said...

Take Rest. Come zoon.

சிவக்குமரன் said...

good.

come back soon.

☼ வெயிலான் said...

சென்று வென்று வாருங்கள்!!!!!

சந்திக்கலாம்......

கார்க்கிபவா said...

மண்ணை முத்தமிட்டதால் கண்ணங்கள் சிவந்ததோ கேரட்டுக்கு வெட்கம் வந்ததோ..

கிச்சுகிச்சு யார் மூட்டிவிட்டதோ வெடித்து சிதறும் பருத்தி செடிகள்..

இது எனக்கு புடிச்ச வரிகள் சகா..

சரி, எங்க எஸ் ஆகறீங்க?

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜீவன்.
நன்றி சஞ்சய்.
நன்றி ஆதி.
நன்றி கதிர்.
நன்றி தேவன் மாயம்.
நன்றி வெங்கட்.
நன்றி ஸ்ரீமதி.
நன்றி நாஞ்சில் நாதம்.
நன்றி சிவக்குமரன்.
நன்றி வெயிலான்.
நன்றி கார்க்கி.

ஆரூரன் விசுவநாதன் said...

பாடல்களை தேடிப்பிடித்து கொடுத்த விதம் அருமை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

பாசகி said...

சூப்பர்ப் கலெக்‌ஷன்ஸ்-ஜி!

தலைப்பை பார்த்ததும் முதல்ல தோணின பாடல் 'மலையாளக் கரையோரம்' :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆரூரன் விசுவநாதன்.

நன்றி பாசகி.

ஜோதிஜி said...

பாடலை கேட்கும் போது கூட மனம் ஒரே நிலையில் லயிப்பது சுலபமல்ல. ஆனால் இது போல் வார்த்தைகளால் உள்வாங்கும் போது சுகமாகத் தான் இருக்கிறது.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜோதிஜி.