Wednesday, December 23, 2009

நொறுக்குத் தீனி 23/12/09

”படிக்காதவனுக்கு ஒரு இடத்தில் அசிங்கம், படிச்சவனுக்கு மூன்று இடங்களில்” இப்படி ஒரு சொலவடையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் குரூப் ஸ்டெடிக்காக எங்கள் வீட்டிற்கு என்னுடன் படித்த சக மாணவ,மாணவிகள் வருவது வழக்கம். உரச் சாக்குகளை படுதாக்களாய்(தார்ப்பாய்) தைத்துக்கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு பெரியவர் வருடத்திற்கு இரண்டு,மூன்று முறை எங்கள் ஊருக்கும் வந்து ஓரிரு வாரங்கள் தங்கி வேலை செய்வார். இரவில் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் படுத்துக்கொள்வார்.ஒரு முறை அவர் வந்திருந்த போது, நாங்கள் வழக்கமாய் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு மாணவன் வாசலில் கிடந்த மாட்டு சாணத்தை மிதித்துவிட்டு அவன் செய்த செயலைக் கண்டுதான் ”படிச்சவனுக்கு மூனு இடத்தில,படிக்காதவனுக்கு ஒரு இடத்திலங்கிறது சரியாத்தான் போச்சு” என்று சொன்னார். 1:3 கணக்கிற்கு அவரிடம் விடை கேட்டபோது, ”சாணிய மிதிச்ச உடனே உங்க கூட்டாளி என்ன பண்ணான், ஐயையே சாணிய மிதிச்சிகிட்டேன்னு சொல்லி கையால துடச்சானா,அப்புறம் கை நாறுதான்னு மோந்து பாத்தானா மொத்தத்தில கை,காலு,மூக்குன்னு மூனு இடமாச்சா ” என்று சொல்லிவிட்டு மேலும், ”இதே படிக்காதவனா இருந்தா மிதிச்சது சாணின்னு தெரிஞ்சதும் அப்படியே காலை தரையிலேயே தேய்ச்சுட்டு போயிருப்பான்,படிக்கிற புள்ளை அதான் ஆராச்சி பண்ணுது” என்றார்.

மேலே ‘அசிங்கம்’ என்று சொன்ன வார்த்தையை அவர் வேறுவிதமாக ஓரெழுத்து ஒரு மொழியில் சொன்னார்.

********************

பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ட்ரைலர்(ட்ரைலரே என்று சொல்லலாம்தான்) மிரட்டுகிறது. கார்த்தி இன்னும் பருத்தி வீரன் ஹேங் ஓவரில் இருப்பது போலவும் தெரிகிறது. இருப்பினும் படம் வரட்டும். இன்னும் அஃபிஷியலா ட்ரைலர் வெளியிடவில்லையாம்,அதற்குள் யூடியூபில் உலா வருகிறது.********************
கொரிய மொழிக்கும் தமிழுக்கும் கிட்டத்தட்ட 500 ஒத்த வார்த்தைகள் உள்ளதாக ஓரிரு வருடங்களுக்கு முன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எனக்குத் தெரிந்து வார்த்தைகளைத் தாண்டி கலாச்சார அடிப்படையிலும் கூட தென்னிந்திய பழக்க வழக்கங்களை ஒத்தே அவர்களின் குடும்ப அமைப்புகளும் இருக்கின்றது. குடும்ப உறவுகளை அழைக்கும் வார்த்தைகள் தமிழை ஒட்டியே இருக்கின்றது. குறிப்பாக தாய்,தந்தையரை அவர்களும் அம்மா,அப்பா என்றே அழைக்கிறார்கள். அவர்களிலும் பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்து அமேரிக்க கலாச்சார மோகத்தால் மறைந்திருக்கிறது.

********************

மலையாளத்தில் நெடுமுடி வேணு,சாரதா,தேவன்,பார்வதி நடிப்பில் 1987 ல் வெளிவந்த ஒரு ’ஒரு மின்னாமினிகின்டே நுருன்னு வெட்டம்’ என்னும் படத்தை சமீபத்தில் பார்த்து நெகிழ்ந்துபோனேன்.

ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் இல்லாத ஓய்வு பெற்ற ஆசிரியத் தம்பதி. அந்த ஆசிரியை முன்பு வேலை பார்த்த ஊரில் தங்கியிருந்த வீட்டு ஓனரின் மகள் ஆசிரியையின் வீட்டில் தங்கி படித்து வருகிறாள். அந்தப் பெண்ணின் அப்பா அவளின் அம்மாவைக் கொலை செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காட்டுமிராண்டித்தனமானவன். அப்படி ஒரு இடத்தில் வளர்ந்த அவளை பிள்ளைகள் இல்லாத ஆசிரியத் தம்பதி தங்களது மகளாகவே நேசிக்கிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில்தான் தெரிகிறது அவளை அவளின் அப்பா அங்கே கொண்டு வந்து சேர்த்தற்கான காரணம் காதல் என்று. அவளை நேசிப்பவன் நல்லவன் என அறிந்து அவளின் அப்பாவை எதிர்த்து ஆசிரியத் தம்பதி காதலர்களைச் சேர்த்து வைக்கிறார்கள். காதலன், வேலை விஷயமாக அமேரிக்கா சென்றுவிட தலைப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள் அந்தப் பெண். துடித்து ஓடிவரும் காதல் கணவன் தன் கைக்குழந்தையோடு அமேரிக்கா செல்ல முயல்கிறான். அவனால் குழந்தையை வளர்க்க முடியாது என்பதை பக்குவமாகச் சொல்லி அக்குழந்தையை தாங்களே வளர்க்கிறார்கள் ஆசிரியத் தம்பதி.குழந்தைக்கு ஐந்து வயது வந்ததும் குழந்தையின் தந்தை இனிமேலும் அவனை பிரிந்து தன்னால் இருக்க இயலாது மேலும் அவன் படிப்பும் அமேரிக்காவில் தொடர்ந்தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று கேட்கும்போது போக மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை மனசில்லாமல் அவனோடு வேறுவழியின்றி அனுப்புகிறார்கள். தங்களது சொத்துக்களை அக்குழந்தையின் பெயரிலேயே எழுதிவைத்து,தங்களின் இறுதிச் சடங்கை அக்குழந்தைதான் செய்ய வேண்டும் என்று கேட்பதோடு படம் முடிவடையும்.

ஆசிரியத் தம்பதியாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவுக்கும் சாரதாவுக்கும் இப்படம் நடிப்பில் ஒரு மைல்கல். பார்வதி இவர்களை அம்மா,அப்பா என்று அழைக்கும்போது நெடுமுடி வேணுவும் சாரதாவும் காட்டுகிற எக்ஸ்பிரஷன்கள் சிறிதும் மிகை நடிப்பின்றி அத்தனை யதார்த்தம். மகளின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் சூன்யமாகிப்போன வாழ்க்கையைப் பூரணமாக்க வந்த அக்குழந்தையை தங்களது கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு அகலாதவை. இப்படத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
youtube-ல் காண இங்கே கிளிக்கவும்:


********************

இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்:

5.பொய் சொல்லப் போறோம்:
+ முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள்,மௌலி மற்றும் நாசரின் நடிப்பு
- நாடகத்தனம்

4.ஈரம்:
+ ஒளிப்பதிவு,கிராபிக்ஸ் காட்சிகள்
- முடிவு தெரிந்த பின்னர் நீளும் இறுதிக் காட்சிகள்

3.நாடோடிகள்:
+ திரைக்கதை வேகம்
- சேர்த்து வைத்த ஜோடிகள் சேர்ந்தேதான் இருக்க வேண்டுமென்பது போன்ற கடைசி நேர வசனங்கள்.

2.பேராண்மை:
+அட்வென்சர் காட்சிகள்
- ஹிரோவிற்கு தெரியாத விஷயமே இல்லை என்பது போன்ற கதாபாத்திர அமைப்பு.

1.பசங்க
+ எல்லாமே

இவ்வாண்டில் மொத்தமே பத்து படங்கள்தான் பார்த்திருப்பேன்.அதில் எனக்குப் பிடித்தவை இவை.இப்பட்டியலில் சேர்க்காமல் விட்ட பொம்மலாட்டமும் எனக்குப் பிடித்தப் படமே.

26 comments:

ரோஸ்விக் said...

பழமொழி, ஆயிரத்தில் நான் ஒருவன் ட்ரெயிலரும், கொரியாவின் தகவலும் மிக அருமை.

பழமொழிகள் தற்போது பயன்படுத்தப் படாமல் கிடக்கிறது. ஒரு பெரிய கருத்தை சின்ன வரிகளில் சொல்லப்படும் பழமொழிகளும் கவிதைகள் போல தான்.

மிக நன்று நண்பா.

பிரபாகர் said...

ம்... கலக்குங்க நண்பா...

தகவல்கள் அருமை.

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

பழமொழி அர்த்தம் சொன்னது பிடிச்சு இருந்ததுங்க.

செல்வராகவன் படம் பற்றி ஒன்றும் தெரியாதுங்க. அதனால அதைப் பற்றி நோ கமெண்ட்.

மலையாளப் படம் கிடைச்சுதுன்னாப் பார்க்கணும். ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.

கொரியா பற்றிய தகவல்கள் எனக்கு புதுசு. இதுவரை கேள்விப் பட்டதில்லை. நன்றி.

இந்த ஆண்டின் சிறந்த படம் பற்றிய தேர்வு - ஒரு படமும் பார்க்கவில்லை, அதனால் நோ கமெண்ட்.

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர் said...
ம்... கலக்குங்க நண்பா... //

அப்படியே முடிஞ்சா எனக்கும், பிராபகர் அண்ணனுக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்பி வைங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

கதம்பமாக பல தகவல்கள்....
ரசிக்கும்படி இருந்தது...

கலக்குங்க......

ஸ்ரீமதி said...

பழமொழி, செல்வ ராகவன், கொரியா, மலையால படம்(எவ்ளோ பெரிய பேரு?? :O) இது எல்லாமே எனக்கு புதிய தகவல்கள். நன்றி அண்ணா. :)) சிறந்த படமா நீங்க சொன்ன "பசங்க" தான் என் சாய்ஸும். :))) அருமையான படம். அதிலும் அந்த "ஒரு வெட்கம்" பாடல் வரும்போதெல்லாம் எனக்கு மழைல நனைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்க்.. :)))) ரொம்ப பிடிச்ச பாட்டு.

PPattian : புபட்டியன் said...

சுவையான தீனி... கொரிய - தமிழ் தகவல் புதிது எனக்கு..

அத்திரி said...

சுவையா இருக்கு

க.பாலாசி said...

முதல்ல சொன்ன கதையை எனக்கும் எனது தமிழ் வாத்தியார் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் சொன்னார். நானே எனது இடுகையில் இதை எங்காவது குறிப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்குள் வடைபோச்சே.....

கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைக்கு இன்னும் சில வார்த்தைகளையும் மேற்கோள் காட்டியிருக்கலாம்.

நல்ல இடுகை..

வெயிலான் said...

ஆயிரத்தில் ஒருவன் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

// பசங்க //

nalla padamthaan

matthathellam ok :)

கும்க்கி said...

:--))

அய்யா,
படித்தேன்,
எல்லா தகவல்களும் நன்றாக இருந்தன.
மிக்க நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பகிர்வு தலைவரே.. குறிப்பா அந்த படத்தோட கதை ஈர்க்கும்படியா இருக்கு.. முடிஞ்சா பார்க்கணும்..

துபாய் ராஜா said...

நொறுக்குத்தீனி நல்ல சுவை நண்பரே..

சின்ன அம்மிணி said...

மின்னாமினியிண்டே நுருன்னு வட்டம் மாதிரி ஒரு அருமையான படம் பாக்க கொடுத்து வைச்சிருக்கணுங்க. நான் கல்லூரி படிக்கும்போது க்ளாஸ் மேட் ஒருத்தன் குடுத்தான் இந்தப்பட கேஸட். இன்னி வரைக்கும் வாழ்க்கைல மறக்க முடியாத படம்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை. படிக்காதவனைக் காட்டிலும் படித்தவனுக்கு பொறுப்புகள் அதிகம் என்பதை விளக்கும் பழமொழி இது. ஆனால் படித்தவன் முட்டள் என்ற திசையில் விளக்கப் பட்டுள்ளது. ஆனாலும் கருத்துக்கள் நச். நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பகிர்வு இலக்கியன் :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரோஸ்விக்.

நன்றி பிரபாகர்.

நன்றி ராகவன் நைஜிரியா(பார்சல் அனுப்பிவிடட்டுங்களா).

நன்றி ஆரூரன்.

நன்றி ஸ்ரீமதி(எனக்கும் அந்த பாட்டுதான் இவ்வருடத்தின் சாய்ஸ்).

நன்றி புபட்டியன்.

நன்றி அத்திரி.

நன்றி பாலாசி(நிறைய இருக்கு மறந்துபோச்சு).

நன்றி வெயிலான்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெற்றிக்கதிரவன்.

நன்றி கும்க்கி(உம்ம குசும்பு இருக்கே ..).

நன்றி கார்த்திகைப் பாண்டியன்(இதோ இப்போது யுடியூப் இணைப்புக் கொடுத்துள்ளேன் நண்பா).

நன்றி துபாய் ராஜா.

நன்றி சின்ன அம்மிணி(அந்த படத்தின் பெயரை எப்படி உச்சரிக்கிறதுன்னே தெரியலீங்க இப்போ உங்களை பார்த்து காப்பி அடிச்சு மாத்தியிருக்கேன்).

நன்றி பித்தனின் வாக்கு(உள்குத்தெல்லாம் எதுவும் இல்லீங்க நண்பரே).

நன்றி நான் ஆதவன்.

கானா பிரபா said...

நீங்கள் சொன்ன மலையாளப்படத்தைத் தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள், உங்கள் ரசனைப்பட்டியலில் ஈரமும், பேராண்மையும் நான் இன்னும் பார்க்கவில்லை

நாடோடி இலக்கியன் said...

நன்றி கானாபிரபா(ஏன் தேடி புடிக்குறீங்க,அதான் சுட்டியை பதிவிலேக் கொடுத்தாச்சே :)))) ).

சே.குமார் said...

நல்ல இடுகை

நாடோடி இலக்கியன் said...

நன்றி சே.குமார்

தமிழ்ப்பறவை said...

’பொய் சொல்லப் போறோம்’ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை பாஸ்...
டோட்டல் டிராமா...
‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டம் நல்லா இருக்கு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை(அதேதான், இருப்பினும் ரொம நாள் கழித்து நான் தொடர்ந்து சிரிச்சிட்டே இருந்தது அந்த படத்தைப் பார்த்தபோதுதான், அதனாலதான் விருப்பப் பட்டியலில் அதற்கும் ஒரு இடம்).

நாஞ்சில் நாதம் said...

தகவல்கள் அருமை.
மிக சிறப்பாக எழுதுகிறீர்கள். ஆமா நொறுக்கு தீனில வர்ற உங்கள் குசும்பு புடிச்ச நண்பர் எங்க காணோம்