Saturday, December 5, 2009

கல்லூரி நினைவுகள்

ஒவ்வொருவருக்கும் அவரவர் கல்லூரி கால நட்புகள்,கலாட்டாக்கள் போல மற்றவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற நினைப்பு இருக்கும்,எனக்கும் அப்படித்தான். ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் அவை.கொண்டாட்டங்கள், கலாட்டாக்கள், நெகிழ்ச்சியான தருணங்கள் என நினைத்தாலே இனிக்கும் எத்தனையோ நினைவுகள். துள்ளித்திரிந்த அக்காலத்தின் நினைவுகளில் ஒன்று இங்கே,

SAD(systems Analysis and Design) என்று ஒரு பாடம். பெயருக்கேற்றார்போல் மிகவும் து(தூ)க்கமான சப்ஜெக்ட். SAD லெக்சரரும் நன்றாக தாலாட்டுவார். மற்ற பாடவேளைகளில் விருப்பம் இல்லாவிட்டால் வெளியில் வந்துவிடலாம். ஆனால் இவரோ எங்களை வெளியில் விடாமல் தூங்கவைப்பதிலேயே ஆர்வமாய் இருப்பார். இவ்வளவுக்கும் அது ஃபுல் அண்ட் ஃபுல் தியரி பேப்பர், தியரி பேப்பரென்றால் பக்கங்களின் எண்ணிக்கைதான் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாக்கும் என்பது இரண்டரை வருட அனுபவத்தில் அறிந்து வைத்திருந்ததால் யாரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.

பெரும்பாலும் மூன்று பீரியடுகளுக்கு மேல் மாஸ்கட் அடிப்பது முதலாமாண்டிலிருந்தே ஒரு சம்பிரதாயமாக கடைபிடித்து வந்ததால் ஆறு மணிவரை நடக்கும் கல்லூரியில் நான்கு மணி ட்ரெயினுக்கே சீஸன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தோம்.அப்படியிருக்க SAD நான்காவது பீரியடாக இருந்தது.கடைசி செமஸ்டர் என்பதால் நாங்களும் ரொம்பவும் பொறுமையாய் நான்கு பாடவேளைகள் வரை இருந்து பார்த்தோம்.ஒரு வாரத்திற்கு மேல் முடியவில்லை, மனுஷன் பாடம் நடத்தும்போது தூக்கம் தூக்கும். “சார் முடியல பிளிஸ்”னு கெஞ்சி பார்த்தோம் மனுஷன் விடுவதாய் இல்லை. லெக்சரர் வேலைக்கு புதிது என்பதால் வேலையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு கடமையுணர்ச்சியின் உச்சத்தில் நின்று எங்களை கொன்றார்.

ஒரு நாள் கிராஃபிக்ஸ் லெக்சரர் வராததால் அந்தப் பீரியடையும் சேர்த்து SAD எடுக்கப்போகிறேன் என்றபடியே வகுப்பினுள் நுழைந்தார். “கண்ணுகளா இவரை இப்படியே விட்டோம்னா சரிவராது பொறுத்தது போதுமடா பொங்கி எழுங்க”என மனோகரா கண்ணாம்பாளாய் ஒருவன் மிமிக்ரி செய்ய, லெக்சரருக்கோ கோபம் தாறுமாறாய் எகிறிவிட்டது.மரியாதை செய்ய எழுந்து நின்ற எங்களை அப்படியே நிற்க வைத்து அவர் மனோகராவாய் மாறி ஒரு பத்து நிமிடம் கேப்பே விடாமல் பொங்கிவிட்டார்.பிறகு நிதானத்திற்கு வந்து ”இனி இப்படி நடந்துக்காதீங்க” என்று சொல்லிவிட்டு எல்லோரையும் உட்காரச் சொன்னார்.

எல்லோரும் அமர்ந்ததும் அவர் ஏதோ எழுத பிளாக் போர்ட் பக்கமாக திரும்பிய நொடியில் ”மியாவ்” என ஒருவன் கத்த,சட்டென்று திரும்பி ”யாருய்யா அது?”என்றார்.ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளைப் போல கைகளைக் கட்டியபடியே டெஸ்கின் கீழிருந்து ஒருவன் எழுந்து ”நான்தான் ஸார்” என்றான் பவ்யமாய்.

”இனிமேல் பூனை மாதிரி கத்துன நேரா பிரின்ஸிபால் ரூமுக்கு போகவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு ”உட்காருய்யா” என்றார் ஏக கடுப்பாக.

மீண்டும் எழுதுவதற்காகத் திரும்ப ”லொல் லொல்” என நாய் குரைப்பதைப் போன்று யாரோ குரைக்க செம்ம கடுப்பாகி, ”எவண்டா அது” என்றார். மீண்டும் அதே மாணவன் டெஸ்கின் கீழிருந்து கைகட்டி வாய்பொத்தி எழுந்து நின்றான்.

”என்ன நக்கலா?இப்போதானே சொன்னேன் பிரின்ஸ்பால் ரூமுக்கு நடையைகட்டு” என்றார்.

“நீங்க பூனை மாதிரி கத்துனாதானே பிரின்ஸ்பாலை பார்க்கனும்னு சொன்னீங்க, நான் நாய் மாதிரிதானே கொலச்சேன் இதெல்லாம் ரொம்ப அநியாயம் ஸார்” என்றான்.

“முதல்ல கிளாஸ் ரூமைவிட்டு வெளில போய்யா”என்றார்.

“இதுக்குத்தானே இவ்வளோ போராட்டமும்“ என்று முனுமுனுத்துவிட்டு ”ரொம்ப தேங்ஸ் ஸார்” என்றப‌டியே த‌ப்பிச்சா போதும்ங்கிற‌ மாதிரி ஓடினான்.

“இதெல்லாம் எங்கே உருப்படப் போகுது” என்றபடியே மீண்டும் திரும்பினார். முதல் பெஞ்சில் இருந்து கடைசி பெஞ்ச்வரை சொல்லிவைத்தார் போல் அத்தனை பேரும் “லொல் லொல்”என்று குரைக்க கையில் வைத்திருந்த நோட்ஸை கீழே வீசிவிட்டு “ஜென்மத்துக்கும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,H.O.D யோட வரேன்” என்றபடியே கிளாஸைவிட்டு வேகமாக வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு முன்பாக “மணி நாலாச்சுடா ட்ரெயின் வந்திடும் ஓடுங்க” என்றபடியே எல்லோரும் வெளியில் ஓடினோம். ”ஏய் ஏய்”என்று தெலுங்கு ப‌ட‌ வில்ல‌ன் ரேஞ்சில் கத்திக்கொண்டே இருந்தார். யாருமே அவரைக் கண்டுக்கவில்லை.

ம‌றுநாள் பிரின்ஸ்பால்,க‌ண்ட்ரோல‌ர்,H.O.D என‌ ஒரு ஐவ‌ர் குழு மிர‌ட்ட‌லாய் ஆர‌ம்பித்து பிற‌கு அன்பாய் அறிவுரை வழங்கி "இனி இது போன்று செய்ய‌ மாட்டோம்" என்று ம‌ன்னிப்புக்க‌டித‌ம் எழுதி கொடுக்கும்ப‌டிக் கூறி, "இவ‌ரின் வ‌குப்பில் இனி எதாவ‌து பிர‌ச்ச‌னை செய்தீர்க‌ளென்றால் பெற்றோர்க‌ளை அழைத்துவ‌ர‌ வேண்டியிருக்கும்"என்று முடித்த‌ன‌ர்.

ம‌ன்னிப்புக்க‌டித‌ம் முத‌லாமாண்டிலிருந்தே எழுதிக்கொண்டிருந்ததால் எப்போதுமே கைவ‌ச‌ம் நான்கைந்து வைத்திருப்போம்.அத‌னால் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் எல்லோரும் ம‌ன்னிப்புக்க‌டித‌ம் கொடுத்த‌தும் பிரின்ஸி குரூப் கிள‌ம்பிய‌து.

ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து SAD லெக்ச‌ர‌ர் மிக‌வும் வெற்றிப் புன்ன‌கையோடு வ‌ந்தார். எல்லோரும் அமைதியாக‌ இருந்த‌தைப் பார்த்து 'வ‌ச்சோம்ல‌ ஆப்பு என்ற‌ ரீதியில்' மிக‌ ச‌ந்தோஷ‌மாய் பாட‌ம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பித்தார். வ‌குப்பில் ஐந்து செம‌ஸ்ட‌ர்வ‌ரை இல்லாத‌ அள‌விற்கு பெரும் அமைதி. பாட‌ம் ந‌ட‌த்திவிட்டு வ‌ருகைப்ப‌திவை எடுத்து வ‌ழ‌க்க‌ம்போல் ஒவ்வொருத்த‌ரின் எண்ணைச் சொல்லி அழைத்தார். அப்போதும் அமைதியாக‌ எல்லோரும் உட்கார்ந்து அவ‌ரையே விடாம‌ல் பார்த்துக் கொண்டிருந்த‌தை க‌ண்ட‌தும்தான் "ஆஹா இவ‌னுங்க‌ அட‌ங்க‌ல‌,அட‌க்க‌வும் முடியாது போலிருக்கு" என்ப‌தை அறிந்து இறுதியில் அவ‌ரும் த‌ண்ணீர் தெளித்து எங்க‌ளை எங்க‌ள் வ‌ழியிலேயே விட்டுவிட்டார்.

இப்போது அவரின் நிலமையில் இருந்து யோசித்துப் பார்த்தால் ”சே” என்று இருக்கிறது,இருப்பினும் அந்த வயசுக்கு அதுக்கூட இல்லாட்டி எப்பூ..டி?

13 comments:

பிரபாகர் said...

நானும் ஆசிரியராய் இருக்கிம்போது இதே SAD பாடத்தை ரசிக்கும்படி எடுத்து நூறுசதம் பாஸ் செய்ய வைத்திருக்கிறேன். சுவராஸ்யமாய் பாடம் எடுத்து, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டால், நாம்தான் நல்ல வாத்தியார்.

அனுபவம் நல்லாருக்கு நண்பா...

பிரபாகர்.

thamizhparavai said...

பரவாயில்லை... நன்றாக இருக்கிறது நண்பரே....

'பரிவை' சே.குமார் said...

அனுபவம் நல்லாருக்கு நண்பா...

நாடோடி இலக்கியன் said...

நன்றி பிரபாகர்,(//சுவராஸ்யமாய் பாடம் எடுத்து, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டால், நாம்தான் நல்ல வாத்தியார்.
//

ஆமாம் நண்பரே, வாத்தியார் அனுபவம் எனக்கும்கூட இருக்கிறது ஆனால் பள்ளியில்).

நன்றி தமிழ்ப்பறவை,(பரவாயில்லையா?நல்லாயிருக்கா?எதாவது ஒன்றைச் சொல்லுங்க நண்பா).

நன்றி சே.குமார்.

Unknown said...

:))))

//அந்த வயசுக்கு அதுக்கூட இல்லாட்டி எப்பூ..டி?//

இருக்கலாம்தான்.. ஆனா அந்த சார நினைச்சா தான் கொஞ்சம் பாவமா இருக்கு :)). நானும் டீச்சரா போகனும்ன்னு ஆசைப்பட்டதுண்டு.. ஆனா, நான் படுத்தின பாட்ட எனக்கு யாரும் பண்ணுவாங்கன்னு அந்த எண்ணத்த கைவிட்டுட்டேன். :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,(சேம் பிளட்).

ரோஸ்விக் said...

அந்த வயசுக்கு அதுக்கூட இல்லாட்டி எப்பூ..டி?

:-))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரோஸ்விக்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்( :)))) )

mano said...

Hi ..

Really i laughed like anything .. superb :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி மனோ.

ஜோசப் பால்ராஜ் said...

எங்களுக்கு காலையில் முதல் வகுப்பு Atomic Physics. அந்த வாத்தியார் அமெரிக்காவுல படிச்சவரு. குழ குழன்னு பேசுவாரு. ஜன்னலுக்கு வெளில க்ரூப்பா நின்னு டாஸ் போட்டு உள்ள போலாமா, வெளில போலாமான்னு பார்ப்போம். வெளில போறதுக்கு விழலன்ன பெஸ்ட் ஆஃப் த்ரீ, பெஸ்ட் ஆஃப் பைவ் அப்டின்னு டாஸ் போட்டுக்கிட்டே இருப்போம். ஒரு நாளு என்னைய தனியா கூப்ட்டு, இனிமே டாஸ் எல்லாம் போடாதா, எதுக்கு அந்த காச அப்டி சுண்டிக்கிட்டு இருக்க? பெஸ்ட் ஆஃப் 50 போட்டாச்சும் நீ வெளில தான் போவ போற, அத முன்னாடியே செய்யி அப்டின்னாரு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜோஸப் பால்ராஜ்,(சூப்பருங்க,நம்ம காலேஜ்தான் பெஸ்ட் என்பேன்.ஓவரா சுதந்திரமும் கிடையாது,அதே போன்று ரொம்பவும் அடக்குமுறையும் கிடையாது இல்லையா).