ராஜாவின் இசையில் 90களில் வெளிவந்த மெலடி பாடல்களின் தொகுப்புகளை இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள் பாகம் 1, பாகம் 2 என கொடுத்ததை அடுத்து இம்முறை சில கிராமத்து மெட்டுகளை தொகுத்திருக்கிறேன். இதுவும் கூட வழக்கம் போல் 90 களின் தொகுப்பே.
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் - பசும்பொன் - வித்யாசாகர்:
துள்ளலான இசை, குறும்பான வரிகள், நடனம் எல்லாவற்றும் மேலாக யுவராணியின் இளமை என எப்போதும் மயக்கும் பாடலிது. கன்னங்களை வருடும் நாயகனின் கைகள் மெல்ல கழுத்துக்குக் கீழே வரும்போது அவனிடமிருந்து விலகி ஓடும் நாயகியைப் பார்த்து நாயகன் பாடுவதாக வரும் "இந்த நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ளதா?" என்ற குறும்பு வரிக்காகவே இப்பாடலை பலமுறை பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறேன்.
ஆத்தங்கர மரமே - கிழக்குச் சீமையிலே - ஏ.ஆர்.ரஹ்மான்:
ரஹ்மான் இன்னும் கூட நிறைய கிராமத்து மெட்டுகளை தந்திருக்கலாமென கேட்கும் போதெல்லாம் ஏங்க வைக்கும் பாடல். "அத்தைக்குப் பிறந்தவளே" என ரகசியமாய் ஆரம்பித்து தடதடத்து ஓடும் ரயிலின் வேகமாய் பயணித்து ஹைபிட்சில் முடியும் மனோவின் குரலை ரொம்ப நாட்களாய் எஸ்.பி.பி.யின் குரலென நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி - இசைஞானி:
பள்ளிநாட்களில் பலமுறை கேட்டு ரசித்த பாடலிது. இப்பாடலில் வரும் ’கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ’என்ற வரியை இப்போதும் கூட அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
என்னைத்தொட்டு அள்ளிக்கோண்ட - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - இசைஞானி:
பள்ளிநாட்களில் நான் கார்த்திக் ரசிகன் அந்த வகையில் இப்பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன். ராஜாவின் இசை, எஸ்.பி.பி., சுவர்ணலதாவின் குரல்கள் , மோனிஷாவின் அழகு என எல்லாமே இந்த பாடலில் அசத்தலாய் இருக்கும். பாடலின் ஆரம்பத்தில் சொர்ணலாதாவும் இடையில் எஸ்.பி.பியும் பாடும் ஆலாபனை இப்பாடலுக்கு கூடுதல் வசீகரம்.
மல்லிக மொட்டு - சக்திவேல்- இசைஞானி:
அருண்மொழி மற்றும் சொர்ணலதா பாடிய இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமையாக இருக்கும். எப்போது ஊருக்கு போனாலும் மினிபஸ்ஸில் கேட்க கிடைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
சிவகாமி நெனப்பினிலே - கிளிப்பேச்சு கேட்க வா- இசைஞானி:
வார்த்தைக்குகொரு மாடுலேஷனோடு கலக்கியிருப்பார் எஸ்.பி.பி . டான்ஸில் மம்முட்டி பாக்யராஜை ஓவர்டேக் செய்த பாடலிது.
மத்தாளம் கொட்டுதடி மனசு - சிந்துநதி பூ - சௌந்தர்யன்:
பூவரச இலை பீபீ, எறுமை படகு, புளியங்கா அடித்தல், அய்யனாரு வெள்ளைக் குதிரை என இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கிராமத்தில் பால்யம் அமைய பெற்றவர்களின் மலரும் நினைவுகளை கிளரிவிடக் கூடியவை. பாடலின் தொடக்கத்தில் வரும் இசை ஆடாதவனையும் ஆடவைக்கும் என்பது போல் இருக்கும்.
சின்னப்பொண்ணுதான் வெட்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு- தேவா:
வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய இப்பாடலின் மூலம்தான் தேனிசை தென்றலுக்கு முதன் முதலாய் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.
கொசுறு:தங்கமனசுக்காரன் பட பாடலான ’பூத்தது பூந்தோப்பு ’ பாடலின் சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.
13 comments:
உண்மையிலேயே மிக அழகான பாடல்கள், வாழ்த்துக்கள் பாரி
அன்புடன்
ஆரூரன்
இதைப்பற்றியெல்லாம் நாம் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன் பாரி...
பிரபாகர்...
நல்ல பாடல்கள்:)
நன்றி ஆரூரன்,
நன்றி பிரபா,(உங்கள் கலெக்ஷன்ஸ் இன்னும் ரசனையானவையாச்சே, மறக்க முடியாத நாட்கள் பிரபா).
நன்றி வானம்பாடிகள்,(ஹி ஹி).
Good collection! Almost all the songs are in my hit-list!
நல்ல பாடல்கள்.
innum varattum.
நன்றி சிவராம் குமார்.
நன்றி சே.குமார்.
back to form...
தலை... கலக்கல் தொகுப்பு...
தாவணிப்பூவுக்கும் பாடல் முதலில் படத்தில் இல்லை..பின்புதான் சேர்த்தார்கள்...நீங்கள் சொன்னவரி , நானும் ரசித்ததுதான்..
‘ஆத்தங்கர மரமே’ பாடலை ருத்ரா என்ற அஸ்வினிக்காகவே ரசித்தேன்...
‘கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பொண்ணா மாறாதோ’-கலக்கலான கவி வரிகள்..கிராமத்து வாலிபனின் ஏக்கத்தையும், ஏகாந்தத்தையும் ஒருசேரச் சொன்ன மெட்டும், பாட்டும்...
‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’- மோனிஷாவின் மான் முகம் மனதில் இன்னும் அகலவில்லை...ஸ்வர்ணலதாவின் ஆலாபனையும் , இடையில் எஸ்.பி.பி ஆரம்பிக்கும், ‘என்னைத் தொட்டு’வும் நெஞ்சைவிட்டகலாதவை...
‘சிவகாமி நினப்பினிலே’-பாக்ய்ராஜுக்கு சரியான போட்டீயாளர்தான் மம்முட்டி... நல்ல பாடல்...
‘மததாளம் கொட்டுதடி மனசு’ ஊரையே கலக்கிய ‘சௌந்தர்ய’மான பாடல் அது...
‘சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது’ -தேவாவுக்கு தமிழ் சினிமாவில் ராஜ பாட்டை போட்டுத் தந்த பாடல்...அந்த காவேரி இன்னைக்கு ‘காஆஆஆஅவேஏஏஏரி’யாக நாடகங்களில் அழுவது கொடுமை... :-(
’மல்லிகை மொட்டு’-இனிமை.. அதில் வரும் ‘லல்லிலலிலோம்’ பிடிக்கும்...
’பூத்த்து பூந்தோப்பு’ தேடிப்பார்க்கிறேன் நண்பரே,...
90களில் நனைய விட்டதற்கு நன்றி நண்பரே...
நன்றி தமிழ்ப்பறவை,
உங்களுக்காகவே இந்த தொகுப்பு நண்பா.
பாஸ் சூப்பர். நீங்க சொன்ன எல்லா பாடல்களும் கிட்டத்தட்ட இதே வரிசையில் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து வைத்திருந்தேன். பழைய நினைவுகளுக்கு நன்றி.
http://www.youtube.com/watch?v=xBgJQMxnY8w
நன்றி நண்பன்.
நன்றி அகிலா,
Post a Comment