இந்த இடுகையில் கொடுத்திருக்கும் பாடல்களும் முதல் பதிவைப் போன்றே டூயட் பாடல்களே.
பாடல்களின் மேல் கிளிக்கி கேளுங்கள்,
ஒரு போக்கிரி ராத்திரி - இது நம்ம பூமி
காத்திருந்தேன் தனியே - ராசா மகன்
நினைத்த வரம் கேட்டேன்- காதல் ரோஜாவே
அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா
உடல் தழுவ தழுவ - கண்மணி
கண்ணே இந்த கல்யாண- ஆணழகன்
எனது பதின்மம் 90களில் அமைந்ததாலோ என்னவோ எப்போதும் இந்த சமயத்தில் வந்த பாடல்கள்தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.மேலும் 80 களில் வெளிவந்தப் பாடல்களின் தொகுப்பு பெரும்பாலான இளையராஜாவின் ரசிகர்களிடம் இருக்கும், ஆனால் நான் கொடுத்திருக்கும் பாடல்கள் பெரும்பாலானோரிடம் இருப்பதில்லை. அவர்களின் கலக்ஷனிலும் இந்தப் பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காகவே இந்தப் பதிவு.
முதல் தொகுப்பு யூ டியூப் இணைப்புடன் இங்கே: இரவில் கேட்க இதமான காதல் பாடல்கள்
21 comments:
:))))
உங்கள் பதிவைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன். கிட்டத்தட்ட உங்கள் ரசனைதான் எனக்கும். 90களில் வந்த இளையராஜாவின் கானமழையில் சொட்ட சொட்ட நனைந்திருக்கிறேன். இன்னும் நனைந்து கொண்டிருக்கிறேன். எனது மடிக்கணிணியில் கிட்டத்தட்ட 1GB க்கு மேல் இளையராஜாவின் 90கள் கலக்சன் வைத்திருக்கிறேன். சில 90களின் பாடல்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
உங்களுடைய இந்தக் கலக்சனில் வெண்ணிலவில் மல்லிகையில்...பாடல் நான் திரும்ப திரும்பக் கேட்பது. இதுவரை வேறெங்கும் கேட்டதில்லை (ஒரே ஒரு முறை இலங்கை FMல் கேட்டதாக ஞாபகம்). அதுபோல் உடல் தழுவதழுவ...பாடலும் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்!
செம்ம கலெக்சன் :))))
ரொம்ப நன்றி நாடோடி இலக்கியன்!
நல்லதொரு தொகுப்பு..
அதிலும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதிசுகம் காதல் சுகம் அந்தக் கவிதை சுகம்... பாடல் குறைந்தது ஐநூறு முறை கேட்டிருப்பேன்..
நன்றி..
ரசனையான கலெக்ஷன்.! தேங்க்ஸ்..
இப்போது வேலைப் பளு காரணமான நேரமின்மையால் பாட்டுக்கள் கேட்பது கூடக் குறைந்துவிட்டது...
நாடோடி இலக்கியன்... உங்களிடம் வெண்ணிலவில் மல்லிகையில் பாடல் இருந்தால் என்னுடன் பகிரமுடியுமா...
நன்றிகள்..
வா காத்திரிக்க நேரமில்லை அடிக்கடி பார்க்கவும் பிடிக்கும்.
வெண்ணிலவின் மல்லிகையில் ரோஜா கலக்கல்.
நன்கு கவனித்துப் பாருங்களேன்.
இந்த பாடல்கள் எல்லாமே இசைக்கு ஏற்ற காட்சிப்படுத்தலோ, படத்தில் வரும் இடமோ சொதப்பலாக அமைந்ததால் கவனிக்கப் படமால் போனவையாகவே இருக்கின்றன.
நன்றி நாஞ்சில்நாதம்,(தனி மெயிலிட்டு சில நண்பர்கள் 90 களின் பாடல்களை கேட்டிருந்ததால் இந்தப் பதிவு,இது மாதிரி அவ்வப்போது வரும் கண்டுக்காதீங்க).
நன்றி பனங்காட்டான்(உங்கள் ரசனைக் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பா,நானும் இலங்கை வானோலி மூலமே இந்த மாதிரி பாடல்களைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 90 களில் வந்த 90% பாடல்கள் என்னுடைய கலக்ஷனில் இருக்கிறது.அதர்மம் படப் பாடலான "முத்துமணி முத்துமணி" பாடலையும் கூட இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். வருகைக்கு மிக்க நன்றிங்க)
நன்றி சென்ஷி.
நன்றி மதுவதனன். மௌ,(என்னுடைய மடிக் கனிணியின் ஹார்ட் டிஸ்க் ஊத்திக் கொண்டதால் நிறைய பாடல்கள் திரும்பப் பெறாமுடியாமல் போய்விட்டது. அதில் ஒன்று நீங்கள் கேட்டிருந்த வெண்ணிலவில் மல்லிகையில் பாடலும் ஒன்று.இருப்பினும் மீண்டும் அவற்றை கலெக்ட் செய்துக் கொண்டிருக்கிறேன்.கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன் நண்பா)
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.
நன்றி முரளி கண்ணன்,(மிகவும் சரியாகச் சொன்னீர்கள்,இந்த பாடல்களில் சில பெரிதாக ஹிட்டாகாததற்கு காரணம் நீங்கள் சொன்னதேதான்)
கலெக்ஷன் நல்லாயிருக்கு
வேலைப் பளு காரணமான ஸ்மைலி போட்டுட்டு போய்விடேன்
நல்ல பாடல்கள்.. ஆனால் ஒன்றிரண்டு அஜால் குஜால் வகை..:-)))))
நன்றி நாஞ்சில் நாதம்,(பிடிக்கவில்லையோன்னு நெனச்சிட்டேன்)
நன்றி கார்த்திகைப் பாண்டியன்,(ஆக்சுவலா அடுத்தப் பதிவு 90 களில் வெளிவந்த இளையராஜாவின் அஜால் குஜால் பாட்டுகளைத்தான் பதிவிட இருக்கிறேன்.ஆனால் 'அந்த' மாதிரி நினைத்துக் கேட்காமல் ரசித்துப் பாருங்கள் ராஜா இந்த மாதிரி பாடல்களில் பயன்படுத்தியிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்)
நன்றி உங்கள் கவனத்திற்கு..
நன்றி மதுவதனன் மௌ
கலக்கல் லிங்ஸ் நாடோடியாரே...........
நன்றி செந்தழல் ரவி.
சூப்பர் கலெகசன், அந்த இது நம்ம பூமி பாட்டு உண்மையாவே ஆச்சரியம், நான் ஒரு யேசுதாஸ் பாட்டத்தான் நீங்க சொல்வீங்கன்னு நினெச்சேன். அப்புறம், நான் எற்கனவே உங்க மோஹன்லால் படங்களின் பதிவுகளின் ரசிகன், நல்லது பதிவ பின் தொடர்ந்தாச்சு... நிஜமாலுமே உங்க பதிவுகள் நல்லா இருந்தனாலதான் தொடர்கிறேன்...
நன்றி ராமன்,
நீங்க குறிப்பிட்டிருக்கும் அந்த ஜேசுதாஸ் பாடலை விரைவில் எழுதவிருக்கும் 90 களில் மேல் சோலோ கலக்ஷனில் கொடுக்கலாம் என்றிருந்தேன்.இங்கே கொடுத்திருப்பது டூயட் பாடல்கள் மட்டுமே.
குறிப்பிட்டிருக்கும் ஜேசுதாஸ் பாடலின் வரிகளைப் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லியிருப்பேன்.
அனைத்துப் பாடல்களும் எனது ரசனையோடொத்துப் போகிறது.
இவை நான் ரெகுலராகக் கேட்பவைதான்.இதில் வெண்ணிலவில் மட்டும் மிஸ் ஆகி இருந்தது. இனி அதையும் சேர்த்துக் கொள்கிறேன்...
ஆணழகன் படத்தில் வரும் ‘நில்லாத வெண்ணிலா’ பாடலும் அருமை.
இன்னொரு பதிவில் நீங்கள் சொல்லி இருந்த ‘தென்றலிலே மிதந்து வரும்’(தேவேந்திரன் பாடல்-ஏதோ புதிர்ப் பதிவில் என்று நினைக்கிறேன்). அதுவும் எனது ஃபேவரைட். ராஜாவின் பாடல்கள் தவிர்த்து பிறரின் பாடல்கள் எனது ஃபேவரை வரிசையில் வருவது மிகமிகச் சிலவே. அவற்றுள் இப்பாடலுக்குச் சிறப்பிடம்.இடைஇசை, கோரஸ் என எல்லாமே அழகாக, அளவாக இருக்கும்.(சிவரஞ்சனியும் கூடத்தான்)
நன்றி தமிழ்பறவை.(உங்களின் ரசனை குறித்து மிக்க மகிழ்ச்சி,சிவரஞ்சனியையும் சேர்த்து தான்,இந்த லிஸ்ட்டிலும் கூட சிவரஞ்சனி பாடல்கள் இருக்கே :) )
சூப்பர்
சூப்பர்
Post a Comment