Wednesday, November 26, 2008

காணாமல் போன பின்னணி பாடகர்கள்:

புதிது புதிதாக எத்தனையோ இளமை மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும் அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும் பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல் இப்பதிவு.




தீபன் சக்கரவர்த்தி:
பழம்பெறும் பாடகரான திருச்சி லோகநாதனின் கலைவாரிசான இவரின் இசைத்திறமையை பறைசாற்ற நிழல்கள் படத்தில் இடம்பெற்ற "பூங்கதவே தாழ்திறவாய்" பாடல் ஒன்று போதும்.நல்ல குரல் வளம் இருந்தும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையில் பாடியிருக்கிறார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் அண்ணன் டி.எல்.மஹாராஜனுக்கும் இதே நிலைதான்.ஆனாலும் இவர் பக்தி பாடல்கள் பாடுவதில் பிஸி.

தீபன் சக்கரவர்த்தி பாடிய சில பாடல்கள்:

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு -மெல்ல பேசுங்கள்
அரும்பாகி மொட்டாகி பூவாகி-எங்க ஊரு காவல்காரன்
தேவதை போலொரு பெண்ணிங்கு-கோபுர வாசலிலே

டி.எல்.மகாராஜன் பாடிய சில பாடல்கள்:


அந்திமழை மேகம் - நாயகன்

நீ கட்டும் சேலை மடிப்பிலே - புதிய மன்னர்கள்
பூவாட்டம் காயாட்டம் கன்னித் தோட்டம்-அரவிந்தன்காதல் யோகி - தாளம்


எஸ்.என்.சுரேந்தர்:
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் தனக்குப் பிடித்த குரல் என்ற பாராட்டைப் பெற்றவர்.1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர் விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில்
'பூவே பூவே பெண்பூவே' என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் "ஒயிட் லகான் கோழி" பாடலையும் பாடியிருக்கிறார்
.

இவரின் சில பாடல்கள்:
தேவன் கோவில் தீபம் ஒன்று -நான் பாடும் பாடல்
தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை
மாமரத்து பூவெடுத்து,கண்மணி நில்லு - ஊமை விழிகள்
பாரிஜாத பூவே - என் ராசாவின் மனசில

அருண்மொழி:
இசைஞானி இளையராஜாவிடம் புல்லாங்குழல் இசைகலைஞராக இருக்கும் அருண்மொழி ஒரு சிறந்த பின்னணி பாடகராகவும்,விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இடம் பெற்ற 'அரும்பும் தளிரே' என்ற பாடலை எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் பண்முகம் காட்டியவர்.நடிகர் பார்த்திபன் படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடியிருப்பார்.இளையராஜாவின் இசையில் பார்த்திபன் நடித்த "தாலாட்டு பாடவா" படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் பாடும் வாய்ப்பைப் பெற்றவர்.

இவரின் சில பாடல்கள்:
மேக வீதியில் நூறு வெண்ணிலா(மனோவுடன்)-வெற்றிக் கரங்கள்
வராது வந்த நாயகன்,நீதானா நீதானா -தாலாட்டுப் பாடவா
ஆத்துல அன்னக்கிளி - வீரா
தென்றலுக்குத் தெரியுமா - பாரதி கண்ணம்மா
உன்னைக் காணாமல் நானேது-கவிதை பாடும் அலைகள்
மனசுக்குள்ள நாயனச் சத்தம்-மல்லு வேட்டி மைனர்
புன்னை வனப் பூங்குயிலே- செவ்வந்தி
நானென்பது நீ அல்லவோ- சூரசம்ஹாரம்

மனோ
:

இவருக்கு அறிமுகம் தேவையில்லை,1990 களின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர். இப்போது இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லையெனினும் தெலுங்கில் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ரஜினிகாந்தின் முத்து மற்றும் சிவாஜி படங்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு பின்னணி பேசியவரும் இவரே.
இவரின் ஒரு சில பாடல்கள்(ரொம்ப பெரிய பட்டியல் போடவேண்டும் இருப்பினும் சில):
மலையாளக் கரையோரம்,மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா -பாண்டியன்
செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
அந்தியில வானம் - சின்னவர்
வீரபாண்டி கோட்டையிலே - திருடா திருடா
முக்காலா முக்காப்புலா-காதலன்
அழகிய லைலா- உள்ளத்தை அள்ளித்தா
தில்லானா தில்லானா- முத்து
ஓ பிரியா பிரியா- இதயத்தை திருடாதே
அதோ மேக ஊர்வலம்-ஈரமான ரோஜாவே

இவர்கள் தவிர ராசா மகன் படத்தில் இடம்பெற்ற 'காத்திருந்தேன் தனியே' பாடலை பாடிய சந்திரசேகர்(இவர் இளையராஜாவின் குழுவில் டிராக் பாடுபவர்), 'தாமர பூவுக்கும் தண்ணிக்கும்' மற்றும் 'மானா மதுர குண்டு மல்லிகை' ஆகிய பாடல்கள் பாடிய பாடகர் கிருஷ்ண சந்தர் ,'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' புகழ் கிருஷ்ணராஜ்(இவர் சமீபத்தில் பருத்தி வீரனில் ஐயய்யோ பாடலை பாடியிருக்கிறார்) ஆகியோரின் குரலும் வித்யாசமாய் இருக்கும்.
கொசுறு:ரொம்ப சீனியர் பாடகர்களான எஸ்.பி.பி, கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் என பெரும் சாதனையாளர்களை இந்த பட்டியலில் சேர்க்கக் கூடாது.

30 comments:

Tech Shankar said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

அவர்களில் தீபன் சக்கரவர்த்தியை ஏர்ட்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் காணமுடிந்தது குறித்து மகிழ்ச்சி.

எட்வின் said...

நல்ல பதிவு...எத்தனை புதியவர்கள் வந்தாலும் இவர்களை எல்லாம் மறக்கவியலாது.ஆனால் இசையை ரசிக்கும் இன்றைய இளைஞர்கள் கூட்டத்திற்கு தற்போதைய பாடகர்களின் பெயரே தெரிவதில்லை அதனை அறிந்து கொள்ளவும் முற்படுவதில்லை.பாட்டு ஆட்டம் போடும் படியா இருக்கா அவ்வளவு போதுமென்றிருக்கிறார்கள்.

RAMYA said...

பழைய நினைவுகள். அந்த எல்லா பாடல் வரிகளும் மனதை நெருடி சென்றது. உண்மைதான். இவர்கள் எல்லாம் இஅசை உலகத்தில் இருந்து மறைந்து விட்டார்கள். இசை உலகில் காற்றோடு காற்றாய் கரைந்துதான் போனார்கள். இவர்களின் குலை இவர்களே மறந்து விட்டார்கள். ஆனால் நாம் நினைவில் வைத்துள்ளோம்.

RAMYA said...

வாங்க நாடோடி இலக்கியன் முதன் முறையா வந்திருக்கீங்க, வந்து பிண்ணுட்டம் அளித்ததிற்கு மிக்க நன்றி.

மீ த பிரஸ்ட் :))))))

முரளிகண்ணன் said...

தலை அசத்துறீங்க

Anonymous said...

நல்ல பதிவுத்தொடர்....வாழ்த்துக்கள்.

பனிமலர்.

Unknown said...

நன்று :))

Anonymous said...

S N சுரேந்தர் இப்போது ஜெயா டிவியில் வரும் ‘சொக்குதே மனம்’ நிகழ்ச்சியில் வாரம் ஒரு பாடலாவது பாடுகிறார், சமீபத்தில் ‘காலம் மாறலாம், நம் காதல் மாறுமா’ என்கிற ‘வாழ்க்கை’ திரைப்படப் பாடலை அவர் பாடக் கேட்டு மகிழ்ந்தேன்!

அதே குரல், அதே இனிமை, ஆனால் வாய்ப்புகள்தான் இல்லை :(

- என். சொக்கன்,
பெங்களூர்.

Anonymous said...

நல்ல பதிவுங்க.

கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே”-கோழி கூவுது பாட்டு நல்ல பாட்டுங்க.

இவர்கள் எல்லோரும் ட்ராக் பாடகர்கள். அப்பப்ப வாய்ப்பு வரும் போது பாடுபவர்கள்.

Unknown said...

"நல்ல குரல் வளம் இருந்தும்" என்று சொல்கிறீர்கள். உங்கள் அணுகுமுறை "பாத சாரி"அணுகுமுறை . இசைஅமைப்பாளர் அணுகுமுறை வேறு.
நான். இ.அமை.அணுகு முறை.

நீங்கள் வீட்டில் செய்யப்படும் ரசம்வெளிரசம்,சப்புக்கொட்டிகொண்டுவித்தியாசம் துல்லியமாககண்டுபிடிப்போம்..அனுபவம். அதே மாதிரிதான் ,,,,,இ.அமைப்பாளர்களும் .

தீபன்
உற்று கவனித்தால் ஒரு சொர சொரபபுத்தெரியும்.எஸ்.பி.பி.போல் வெல்வெட் குரல் இல்லை. புது கதா நாயகர்களுக்கு பாட வைப்பார்கள். ஐயப்பன் பாடல்களுக்கு பொருந்தும்.

பனி விழும் மலர் வானம் பாட்டு இவர்தான்(தீபன்) பாடுவதாக இருந்தது. "உன் பார்வை ஒரு வரம" என்ற ஒரு கொஞ்சல் பிறகு ஒரு சிரிப்புஅதுவும் இந்த பாட்டில் சந்து பொந்தில் எல்லாம் பூந்து வெளியே வர வேண்டும்

. இவரால் முடியமா? சத்தியமாக முடியாது.இதே தான் மகாராசனும்.

மலேசிய வாசுதேவன்
இவருக்கு Romantic voice இல்லை."பாடுவேன் மங்கலம்"(ஆகாய கங்கை) ஒரு "பெரிசு" அல்லது "பெரியப்பா" குரல். தட்டும்.C.S.ஜெயா ராமன் குரல். "அருள்" அல்லது "லக்ஷணம்" இல்லை.

"பூவே இளைய பூவே" பாட்டில் ஒரு இனிமை வெளிப்படாமல் "பெரிசு" தெரியும்.கேளுங்கள்.
ஆனால் ஆசை நூறுவகை, நீதான அந்த குயில் பாடல்கள்பின்னிஎடுப்பார். பொருந்தி வருகிறது.

குரல் ஏற்றார் போல்தான் பாடல்கள் கொடுக்கிறார்கள். "சோலைக்குயிலே”(பொன்னு ஊருக்கு புதுசு) ஷைலஜா தட்டு தடுமாறி பாடுவார்.(மேல் ஸ்தாய்யில்)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நாடோடி இலக்கியன் said...

முதல் வருகை தந்திருக்கும் தமிழ்நெஞ்சம், Arnold Edwin, RAMYA மற்றும் என். சொக்கன் அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி,நன்றி,நன்றி.
இன்னொரு சந்தர்பத்தில் தனித்தனியாக உங்கள் பின்னுட்டங்களுக்கு , விரிவான மறுமொழி அளிக்கிறேன்.நேரமின்மை.

தொடர்ந்து வாசித்து வரும் முரளி கண்ணன்,பனிமலர்,ஸ்ரீமதி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

நாடோடி இலக்கியன் said...

வாங்க ரவி ஷங்கர்,
"பூங்கதவே ழ்திறவாய்","செவ்வந்தி பூக்களில்"ஆகிய பாடல்களை திரு.தீபன் சக்கரவர்த்தியின் குரலுக்காகவே பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன்.அவரிடம் நீங்கள் குறையாகச் சொல்லும் அந்த "கரகரப்பு" எனக்கு "நிறை"யாக தெரிகிறது,ரசனை என்பது நபருக்கு நபர் மாறுவது என்பது இயல்புதானே.
உங்களின் கூற்றுபடி ஒரு பாதசாரியின் பார்வையாகவே இருக்கட்டும் எனது பார்வை,என்னை போன்ற பாதசாரிகளின் ரசனையைத் தொடாத கலைவடிவங்கள் பெரிதாக அங்கீகரிக்கப் படாது என்பது என் எண்ணம்.

மற்றபடி சங்கீததில் உங்களுக்கு இருக்கும் ஞானம் எனக்கு கிடையாது,நல்ல பாடல்களை ரசிக்க தெரியும் அவ்வளவே.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

வாங்க டுபுக்கு டோங்கிரி,
அசிங்கமாக ஏதும் சொல்லாவிட்டாலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபருக்கு சங்கடம் நேரலாம் எனக் கருதி உங்கள் பின்னூட்டத்தை வெளியிடவில்லை. வருகைக்கு நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மனோ வை இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே.....


அவர் சதமடித்து ஓய்வெடுத்தவர். மற்றவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காதவர்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா..........

இதை யார் பாடுனா சூப்பரா இருக்கும்

Unknown said...

நானும் “பாதசாரி(பிளாட்பார சாரி?)”
இருந்துதான் ரசனையை வளர்த்துக்கொண்டேன். இதில் ஒரு புண்ணாக்கும் இல்லை சார்!


ம்லேசிய வாசு:
”ஆட்டுகுட்டி முட்டை இட்டு” விட்டு விட்டேன். பின்னி எடுப்பார்.அட்டகாசம்.

நாடோடி இலக்கியன் said...

வடகரை வேலன் said...
//நல்ல பதிவுங்க.

கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே”-கோழி கூவுது பாட்டு நல்ல பாட்டுங்க.

இவர்கள் எல்லோரும் ட்ராக் பாடகர்கள். அப்பப்ப வாய்ப்பு வரும் போது பாடுபவர்கள்//

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வடகரை வேலன்.

//கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே”-கோழி கூவுது பாட்டு நல்ல பாட்டுங்க.//
அப்படியா,புதுத் தகவலுக்கு நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

SUREஷ் said...
//மனோ வை இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே.....

அவர் சதமடித்து ஓய்வெடுத்தவர்.//

வாங்க சுரேஷ்,
மனோவை இந்த லிஸ்டில் சேர்த்தது யோசனையாகதாங்க இருந்தது,இருப்பினும் சதமடித்து ஓய்வு எடுத்தவர் என்று சொல்கிறீர்கள்,எஸ்.பி.பி. இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார் அவரைவிட
மனோ மிகவும் ஜூனியர்(கவனிக்க இங்கே இருவரது வயதைமட்டுமே ஒப்பிடுகிறேன்,திறமையை அல்ல).
ஓய்வு அவராக எடுத்துக் கொள்ளவில்லை,வாய்ப்புகள் குறைந்துவிட்டன.அதனாலாயே அவரை நினைவுபடுத்தும் விதமாக இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.

//மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா..........

இதை யார் பாடுனா சூப்பரா இருக்கும்//

ரவி ஷங்கர்கிட்ட இதற்கு எதாவது பதில் கிடைக்கக் கூடும் பார்க்கலாம்.

தொடர் வருகைக்கு மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

K.Ravishankar said...
//நானும் “பாதசாரி(பிளாட்பார சாரி?)”
இருந்துதான் ரசனையை வளர்த்துக்கொண்டேன். இதில் ஒரு புண்ணாக்கும் இல்லை சார்!//

வாங்க ரவி ஷங்கர்,
மருவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க,
மேலே சுரேஷ் கேட்டிருக்கும்
"மங்களத்த பெத்தவனே"பாடலை பற்றிய கேள்விக்கு உங்க கிட்ட ஏதாவது பதில் இருந்தா சொல்லிட்டு போங்க.

M.Rishan Shareef said...

மிக அருமையான பதிவு நாடோடி இலக்கியன்.
இப்பதிவை குழுமங்களில் உங்கள் பெயருடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

நாடோடி இலக்கியன் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//மிக அருமையான பதிவு நாடோடி இலக்கியன்.//

மிக்க நன்றி நண்பரே.

//இப்பதிவை குழுமங்களில் உங்கள் பெயருடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன்.//

தாரளமாக...

Unknown said...

நல்ல பதிவு... :))) அருண்மொழி அவர்கள் பாடினதுல என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்குற- படம் ராமன் அப்துல்லா நல்ல பாடல்.. ரொம்ப பிரபலமான பாடலான்னு தெரியல.. ஆனா, எனக்கு ரொம்ப பிடிக்கும்.. :))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி
வாங்க ஸ்ரீமதி,
அருமையான பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.இந்த பாடலில் அருண்மொழியுடன் சேர்ந்து பவதாரிணியும் கலக்கியிருப்பாங்க.

புதுகை.அப்துல்லா said...

நல்ல அலசல். இன்றைய பிண்ணனிப் பாடகர்களைப் பொருத்த அளவில் நீங்கள் பதிவில் குறிப்பிட்டு உள்ளவர்கள் பாடிய அளவிற்கு கூட பாடல்கள் எண்ணிக்கையில் கிடைக்காது என்பதே உண்மை.

நாடோடி இலக்கியன் said...

@புதுகை அப்துல்லா,
இப்போது பாடகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் என்னதான் திறமையிருப்பினும் அதிகபட்சமாக 500பாடல்கள் பாடினாலே பெரிய விஷயம்தான்.
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

Unknown said...

எண்பதுகளின் ஆரம்பம் ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தில் மென்மையான பாடல்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்"சோலைக் குயிலே காலைக் கதிரே"..... ....என்ற பாடல் S.P.சைலஜா எனும் புதிய இளம் குயில் பாட வானொலி எங்கும் 1978 ம் வருடம் காற்றோடு கலந்தது .. ஆம் பொண்ணு ஊருக்கு புதுசு என்கிற படத்தில் (இல்லை சோலைக் குயில் .சைலஜா ஊருக்கு புதுசு) இளையராஜா இவரை தமிழில் அறிமுகம் செய்தார். இந்த "சோலைக் குயிலே..காலை..கதிரே............... ' பாடலை பாடும் பொழுது சைலஜா 12.வயது சிறுமி

Unknown said...

செல்வமே ஒரே முகம் ..................................S P .சைலஜா - (அமரகாவியம்)
இந்த..செல்வமே...பாடல்.. கவியரசு-.கண்ணதாசன்...இயற்ற....மெல்லிசை..மன்னர்..MSV
இசையில் அன்று சிறுமி SP.ஷைலஜா மிக இனிமையாக பாடி முடிந்ததும்.....-கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை..மன்னர் MSV யும் .13 வயது... இசை இளவரசி SP.ஷைலஜாவை....பாராட்டியது குறிப்பிடத்தக்கது சிறு வயதானாலும் ஆர்பாட்டமில்லாமல் பாட்டினுல்லே சென்று மெல்லிய சோகத்துடன் இனிமையாக பாடிமுடிதிருப்பார். பாடலின் இறுதியில் சிறு அழுகை.அதுவும் ஓர் இனிமை பாடலை அந்த சிறு வயதிலும் SP.ஷைலஜா நன்றாக பாடியுள்ளார்.
திரை படத்தில்....... இறந்து போன தன் தாய் கற்று தந்த பாடலை பாடும் படி தந்தை சொல்லும் பொழுது 10 வயது சிறுமி பாடும் பாடலாக இடம் பெறுகிறது . 10 வயது சிறுமிக்காக அழகாக பின்னணி பாடிய 12 வயது சிறுமி சைலஜா பாராட்டப்படவேண்டியவர்
முதல் சரனத்தில் ... நான் பாடும் ராகம் .............என்று தாயின் நினைவலைகளை பாட்டினுள்ளே SP .ஷைலஜா நுழைந்து சோகமாக மென்மையான குரலில் பாடும் பொழுது எம்மை அறியாமல் அனுதாபம் ஏற்படுகிறது. பாடலின் கருத்தும் பாடலை உள்வாங்கி பாடும் பொழுது ஷைலஜாவை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பாடலின் இடையே சோகமும் பாடலின் முடிவில் ஷைலஜாவின் அழுகையும் இனிமையாக இருக்கும் .
இந்த பாடல் முன்னர் வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பான பாடல் . வானொலி அறிவிப்பாளர் விருப்பத்திலும் , இன்றைய நேயர் , தேர்ந்த இசை போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பாடலை SP .சைலஜா உள்வாங்கி உருகி பாடியிருப்பதாகவும் , மென்மையான குரலில் குழந்தை தனத்தையும் வெளிப்படுத்தி இனிமையாக பாடியுள்ளார் என்றும் கூறுவார்கள் . இந்த

Unknown said...

செல்வமே ஒரே முகம் ..................................S P .சைலஜா - (அமரகாவியம்)
இந்த..செல்வமே...பாடல்.. கவியரசு-.கண்ணதாசன்...இயற்ற....மெல்லிசை..மன்னர்..MSV
இசையில் அன்று சிறுமி SP.ஷைலஜா மிக இனிமையாக பாடி முடிந்ததும்.....-கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை..மன்னர் MSV யும் .13 வயது... இசை இளவரசி SP.ஷைலஜாவை....பாராட்டியது குறிப்பிடத்தக்கது சிறு வயதானாலும் ஆர்பாட்டமில்லாமல் பாட்டினுல்லே சென்று மெல்லிய சோகத்துடன் இனிமையாக பாடிமுடிதிருப்பார். பாடலின் இறுதியில் சிறு அழுகை.அதுவும் ஓர் இனிமை பாடலை அந்த சிறு வயதிலும் SP.ஷைலஜா நன்றாக பாடியுள்ளார்.
திரை படத்தில்....... இறந்து போன தன் தாய் கற்று தந்த பாடலை பாடும் படி தந்தை சொல்லும் பொழுது 10 வயது சிறுமி பாடும் பாடலாக இடம் பெறுகிறது . 10 வயது சிறுமிக்காக அழகாக பின்னணி பாடிய 12 வயது சிறுமி சைலஜா பாராட்டப்படவேண்டியவர்
முதல் சரனத்தில் ... நான் பாடும் ராகம் .............என்று தாயின் நினைவலைகளை பாட்டினுள்ளே SP .ஷைலஜா நுழைந்து சோகமாக மென்மையான குரலில் பாடும் பொழுது எம்மை அறியாமல் அனுதாபம் ஏற்படுகிறது. பாடலின் கருத்தும் பாடலை உள்வாங்கி பாடும் பொழுது ஷைலஜாவை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பாடலின் இடையே சோகமும் பாடலின் முடிவில் ஷைலஜாவின் அழுகையும் இனிமையாக இருக்கும் .
இந்த பாடல் முன்னர் வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பான பாடல் . வானொலி அறிவிப்பாளர் விருப்பத்திலும் , இன்றைய நேயர் , தேர்ந்த இசை போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பாடலை SP .சைலஜா உள்வாங்கி உருகி பாடியிருப்பதாகவும் , மென்மையான குரலில் குழந்தை தனத்தையும் வெளிப்படுத்தி இனிமையாக பாடியுள்ளார் என்றும் கூறுவார்கள் . இந்த

j.abdurrahman said...

பூவே இளைய பூவே பாடியது மலேஷியா வாசுதேவன். கிருஷ்ணசந்தர் அல்ல