Tuesday, September 1, 2009

நானும் அவள்களும்.....3

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

சிறிது நேரம் அவர்கள் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அந்த கட்டைச் சுவரிலேயே அமர்ந்துவிட்டேன்.

கூடு திரும்பும் பறவைகள் தன்னைத்தான் விரட்டி வருகிறதென்றெண்ணியோ என்னவோ பிஞ்சுக் கதிர்களை வீசிக் கொண்டிருந்த அந்திச் சூரியன் வேகமாக மறைந்து கொண்டிருந்தான்.

என்னன்னவோ நெனச்சேனே இப்படி பண்ணிட்டாளே என்று நித்யாவின் செயலை நினைத்து எரிச்சலாக இருந்த அதே நேரத்தில் மலரின் காதலை என்னால் நம்பவே முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மலர்விழியின் நினைவுகளில் என்னையுமறியாது மூழ்கி மலரின் காதலுக்கு எந்த வகையிலும் நான் உண்மையாக இல்லை அப்படியிருக்க அவளின் காதலை ஏற்றுக் கொள்வது சரியா? இப்படியாக பலவித சிந்தனை, ”சே இப்போ ஏன் அவளைப் பற்றிய நினைவு” என என் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது.

யோசித்துக் கொண்டே இருந்ததில் நன்றாக இருட்டிவிட்டிருந்தது, என்னைத் தேடி கபிலனே அங்கு வந்துவிட்டான். அவனோடுக் கிளம்பி, பஸ்டாண்ட் வருகிற வரைக்கும் மலர்விழியின் தாய் மாமனில் ஆரம்பித்து அன்று கோயிலில் நடந்தது வரை எல்லாவற்றையும் புலம்பிக் கொண்டே வந்தேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வந்த கபிலன்,

”மாப்ள, ஸ்கூல் டேஸ்ல நித்யாவும் உன்னை லவ் பண்ணறாளோன்னுதான் நெனச்சேன், ஆனா இப்போ என்ன சொல்றதுன்னேத் தெரியல, ஊருக்கு போயிட்டு நல்லா யோசி” என்றபடியே என்னை வழியனுப்பிவிட்டான்.

கல்லூரியில் குளோஸ் ஃபிரண்ட்ஸ் சிலரிடம் டிஸ்கஸ் பண்ணியும் எல்லோரும் மலரின் காதலுக்கே ஃபேவரா இருந்தானுங்க. கூடவே ”நித்யாதான் உன்னை லவ் பண்ணல போலிருக்கே அப்புறம் ஏண்டா கன்ஃப்யூஸ் ஆகிற” என்றார்கள்.

நான் இருக்கிற சீரியஸ்னஸ் புரியாம ஒருத்தன் ”காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என்று ஏகத்துக்கும் டென்ஷனைக் கிளப்பியதில் அவனை பட்டென்று அறைந்தேவிட்டேன்.

நித்யா என்னை காதலிக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, அதே நேரத்தில் மலரின் காதலுக்கு நான் தகுதியில்லாதவன் என்ற நினைப்பும் என்னுள் தொடர்ந்ததால் குழப்பத்தின் உறைவிடமாகிப் போனேன்.

ஆறேழு மாதம் கழித்து நித்யாவிடமிருந்து எனக்கொரு கடிதம்,

நவீன்,

கபிலனிடம் எல்லா விஷயங்களையும் அறிந்து கொண்டேன், ஸ்கூல் டேஸில் எனக்கும் உன்மேல் சின்னதாய் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. உன்னையும் என்னையும் சேர்த்து பசங்க கிண்டல் செய்யும் போது சந்தோஷமா இருக்கும். உன் புத்தகங்களில் என்னுடைய பெயரை நீ எழுதி வைத்திருந்ததெல்லாம் நானும் அறிவேன். நாங்கள் அந்த ஊரைவிட்டு வந்த பிறகு எனக்கு சுத்தமாக உன் நினைவே வரவில்லை, உன்னை மறந்தே விட்டேன் என்றே சொல்லலாம்.

ஆனால் மலர் உன்னை ஆழமாக நேசிக்கிறாள், உனக்கு என்னவெல்லாம் கனவு இருக்கிறதென்பதை ஓரளவிற்கு நான் அறிவேன், உன் அத்தனை ரசனைகளுக்கும் அப்படியே தன்னை மாற்றி வைத்திருக்கிறாள் மலர்.

அவள் உன்னை நேசித்த அளவிற்கு நீ அவளை நேசிக்கவில்லை என்றும், இடையில் என்மீதான ஈடுபாடும் தானே உன்னை குழப்பும் விஷயங்கள்,இதில் குழம்புவதற்கு ஒன்றுமே இல்லை. மலர்விழி மீதும் சரி, என் மீதும் சரி உனக்கு உள்ளது காதலே இல்லை. அது வெறும் ஈர்ப்பு என்பதை சரியாக புரிந்து கொள். இல்லையென்று மறுக்காதே என் மீது உனக்கு காதலென்றால் மலர்விழியின் காதலை ஏற்றுக் கொள்ளலாமாங்கிற குழப்பமே உனக்கு வந்திருக்காது.

அதற்காக நீ ஏதோ பெரிய தவறு செய்ததைப் போல் குற்ற உணர்வெல்லாம் வேண்டாம், கூடப் பழகும் எதிர் பாலரிடம் ஈர்ப்பு வருவது இயல்பான ஒரு விஷயம்தான். அந்த ஈர்ப்பு ஒருத்தர் மேல்தான் வருமென்றெல்லாம் இல்லை.

அப்புறம் அவளுடைய தாய் மாமா விஷயத்தையும் கபிலன் சொன்னான். மலர்விழியின் மாமாவிற்கு எப்போதோ மேரேஜ் ஆயிடுச்சு, அது சும்மா சிறு வயதில் கிண்டலடிப்பார்களாம். அவ்வளவுதான்.

மேலும் அன்று உன்னை காலேஜில் பார்த்தபோதே ஒரு வேளை என்னைப் பார்க்கத்தான் வந்திருப்பாயோன்னும் ஒரு சந்தேகம் இருந்ததால்தான் கோயிலில் முந்திக் கொண்டு மலர் உன்னை நேசிப்பதைச் சொன்னேன்.

நீ என்னைப் பார்க்கத்தான் வந்தாய் என்பது தெரிந்தால் மலர் கண்டிப்பாக தவறாக எடுத்துக் கொள்வாள், நான் பொய் சொல்லி நடித்ததாய் நினைத்துக் கொள்வாள். எங்கள் நட்பு தொடர்வதும் உன் கையில்தான் இருக்கு. அதே போல் அவளின் காதலை நீ ஏற்றுக் கொண்டால் உங்களைவிட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அவளின் காதல் ஜெயிக்கணும்.

தேவையில்லாத குழப்பத்தைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும்.

அன்புத் தோழி,

நித்யா

இப்படி எழுதி முடித்திருந்தாள், ”சே பொண்ணுங்கதான் எவ்வளோ சீக்கிரமா மெச்சூரிட்டியா யோசிக்குறாங்க” என்று பத்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளில் மூழ்கியிருந்தவன்,

“அம்மா,ஆண்ட்டி வந்துட்டாங்க” என்றபடியே கத்திக் கொண்டு வீட்டினுள் ஓடிய என் மகனின் சத்தத்தில் நினைவு கலைந்தேன்.

ஆறு மாதக் குழந்தையான என் மகளை பார்ப்பதற்கென தன் கணவனோடு வந்து கொண்டிருக்கிற நித்யாவைப் பார்த்துவிட்டுதான் அந்தச் சத்தம்.

சிறு குழந்தையென துள்ளியபடியே ஓடி வந்த நித்யா என் கையில் இருந்த என் மகளை வாங்கியபடியே ”அப்படியே குட்டி மலர்விழிடா, நவீன்” என்றாள்.

(முற்றும்)

டிஸ்கி: மூன்று பகுதியையும் பொறுமையா படிச்ச உங்கள நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்குங்க.

32 comments:

Unknown said...

//”சே பொண்ணுங்க தான் எவ்வளோ சீக்கிரமா மெச்சூரிட்டியா யோசிக்குறாங்க”//

இது உண்மை தான் அண்ணா.. ஏனோ பசங்களுக்கு மட்டும் எத்தனை வயசானாலும் மெச்சூரிட்டியே வரதில்ல.. ;)))))))))))

Unknown said...

கதைய ரொம்ப அழகா முடிச்சிட்டீங்க.. :)))

Unknown said...

நித்யா சொல்றத பார்த்தா நீங்க சாரி நவீன் ரெண்டு பேரையுமே காதலிக்கலியா?? ஹ்ம்ம்ம் ஓகே மத்த மக்கள் எல்லாம் என்ன சொல்றாங்கன்னு பார்த்திட்டு நான் வரேன்.. ;)))

க.பாலாசி said...

//பிஞ்சுக் கதிர்களை வீசிக் கொண்டிருந்த அந்திச் சூரியன் வேகமாக மறைந்து கொண்டிருந்தான்.//

நல்லதொரு....கற்பனை வடிவம்...

சொன்ன மாதிரியே முடிச்சிட்டீங்க...

கடைசியில கொஞ்சம் சீக்கிரமா முடிக்கணும்னு எழுதுனமாதிரி தெரியுது...(சபதத்தை நிறைவேற்றவா?)

இருந்தாலும் ஒரு நாவலைப்படிக்கம்போது ஏற்படுகிற ஒரு ஆர்வம் போன்று உங்களது கதையிலும் உண்டாகிறது...படித்தேன் ரசித்தேன்....

சிவக்குமரன் said...

இது போங்கு ஆட்டம். நல்லாதான போய்க்கிட்டு இருந்தது.

முடிக்கனுங்கற கட்டாயத்துல முடிச்ச மாதிரி எனக்கு தோணுது.

கதை passenger-ல வந்த மாதிரியும் முடிவு express- ல வந்த மாதிரியும் இருக்கு.

நாஞ்சில் நாதம் said...

//கூடு திரும்பும் பறவைகள் தன்னைத் தான் விரட்டி வருகிறதென்றெண்ணியோ என்னவோபிஞ்சுக் கதிர்களை வீசிக் கொண்டிருந்த அந்திச் சூரியன் வேகமாக மறைந்து கொண்டிருந்தான்//.

இந்த உவமை நல்லாயிருக்கு. கதையும் நல்லாயிருக்கு:))

தினேஷ் said...

நல்ல கதை முடிவு..

//இது உண்மை தான் அண்ணா.. ஏனோ பசங்களுக்கு மட்டும் எத்தனை வயசானாலும் மெச்சூரிட்டியே வரதில்ல.. ;)))))))))))//

ஏண்ணா பசங்களுக்கு எப்பவுமே குழந்தை மன்சுதான்..

தினேஷ் said...

இன்பேக்ஸுவேசனுக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நித்தியாவின் கடிதத்தில் சொன்னது அருமை

மஞ்சூர் ராசா said...

கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் கடைசிப்பகுதியில் கொஞ்சம் அந்த சுவாரஸ்யம் போய்விட்டது என்பதே உண்மை. நித்யாவின் கடிதம் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களால் மட்டுமே எழுதமுடியும். அதனால் அங்கு ஒரு செயற்கைத்தனம் இழையோடுகிறது. முடிவு கிட்டத்தட்ட எதிர்ப்பார்த்தது தான்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,(//மெச்சூரிட்டியே வரதில்ல// சொந்த செலவிலேயே ஏற்பாடு பண்ணிகிட்டேனா,:( )

நன்றி பாலாஜி,(இனி கொஞ்சம் கவனமாக எழுதுகிறேன் நண்பரே).

நன்றி சிவா,(அடுத்த பதிவில் நிவர்த்தி செய்துவிடலாம்).

நன்றி நாஞ்சில்நாதம்.

நன்றி சூரியன்,(ஸ்ரீமதி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்).

நன்றி மஞ்சூர் ராசா,(மிகவும் சரியாச் சொன்னீங்க நண்பரே,அந்த கடிதத்தை யார் மூலமா சொல்வது என ஒரு லெக்சரரையோ அல்லது ஒரு அக்கா கேரக்டரையோ நுழைக்கலாமா, அல்லது கடிதம் ஒரு மூன்று வருடம் கழித்து வருவதாய் எழுதுவோமான்னு பெரிதாய் குழம்பி பிறகு தெரிந்தே செய்த மிஸ்டேக் அது.

அப்புறம் முடிவு நான் எந்த திருப்பமும் வைக்க நினைக்கவில்லை, முடிவு இரண்டாம் பகுதியிலே தெரிந்தது தான் அதனாலேயே சுவாரஸ்யம் குறைந்துவிட்டது,படிக்கும் போது நானும் அதை உணர்ந்தேன்,மிக்க நன்றிங்க உங்க கருத்திற்கு. இனி இன்னும் கவனமாக இருப்பேன்).

கார்த்திகைப் பாண்டியன் said...

மூணு பாகத்தையும் ஒண்ணாப் படிச்சேன் நண்பா.. சும்மா சொல்லக் கூடாது.. தூள் கிளப்பி இருக்கீங்க.. கதையை கொண்டு போன விதம் அருமை.. வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

//பிஞ்சுக் கதிர்களை வீசிக் கொண்டிருந்த அந்திச் சூரியன்//

ஆஹா.. இந்த வரிகள் கவிதை இலக்கியன்

//எல்லோரும் மலரின் காதலுக்கே ஃபேவரா இருந்தானுங்க//

அவங்க எப்பவுமே அப்படித்தாங்க

//”அப்படியே குட்டி மலர்விழிடா நவீன்” என்றாள்//

ஓ... அதெல்லாம் சரி மலர்விழியத்தான் கல்யாணம் பண்ணீட்டீங்களா!!!???

இஃகிஃகி

முதல், இரண்டு பகுதியில் இருந்த சுவையையும், ஒரு குறுகுறுப்பும் கொஞ்சம் குறைந்ததாக நான் உணர்கிறேன்.

Unknown said...

//சூரியன் 2 September, 2009 11:51:00 AM IST
நல்ல கதை முடிவு..

//இது உண்மை தான் அண்ணா.. ஏனோ பசங்களுக்கு மட்டும் எத்தனை வயசானாலும் மெச்சூரிட்டியே வரதில்ல.. ;)))))))))))//

ஏண்ணா பசங்களுக்கு எப்பவுமே குழந்தை மன்சுதான்..//

Exactly... ஆனா, எப்பவுமே குழந்தையாவே பிஹேவ் பண்ணா அதுக்கு பேர் வேற.. :)))

தினேஷ் said...
This comment has been removed by the author.
தினேஷ் said...

//Exactly... ஆனா, எப்பவுமே குழந்தையாவே பிஹேவ் பண்ணா அதுக்கு பேர் வேற.. )//

எதா வேணா இருந்துட்டு போகட்டும் .. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் மனசுதான் குழந்தை மூளை இல்லை..

இன்னும் எதாச்சும் சொன்னா பல கண்டனங்கள் வரும் என்பதால் அப்பீட்டுக்கிறேன்

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருந்தது. அப்படியே கதைக்குள்ள ஐக்கியமாகிட்டேன். :) Good story flow.

Unknown said...

நான் முடிவ வேற மாதிரி எதிர் பார்த்தேன்..

நித்தியாவதான் கல்யாணம் பண்ணிப்பானு..!!

நாடோடி இலக்கியன் said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்.

நன்றி கதிர்,(மலர்விழியின் காதல் தான் சக்சஸ் ஆகுமென்பது ஓரளவிற்கு 2ம் பாகத்திலேயே தெரிந்துவிட்டதால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதுன்னு நினைக்கிறேன் நண்பரே,2மற்றும் 3 ம் பாகங்களை ஒரே இடுகையாக பதிவிட்டிருந்தால் இந்த குறை தெரிந்திருக்காதுன்னு நினைக்கிறேன்).

நன்றி ஸ்ரீமதி.

நன்றி சூரியன்.

நன்றி விக்னேஷ்வரி,

நன்றி பட்டிக்காட்டான்.(நான் எந்த சஸ்பென்சும் மெயிண்டைன் பண்ணலை நண்பா,முடிவு ஓரளவுக்கு 2ம் பாகத்திலேயே சொல்லிவிட்டேன்).

*****************************
மூன்று பகுதியையும் சேர்த்து படித்தவர்களுக்கு விறுவிறுப்பாய் தெரிந்திருக்கும் போல,இரண்டாம் பகுதியை முடித்துவிட்டு 3ம் பகுதியை காத்திருந்து படித்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியவில்லை. :(

ஆரூரன் விசுவநாதன் said...

எளிமையான நடை, கதை சொல்லும் பாங்கு அற்புதம். தொடருங்கள்.........
அன்புடன்
ஆரூரன்

anujanya said...

மூன்று பாகங்களையும் ஒரு சேரப் படித்தேன். புனைவு மட்டும் என்ற கோணத்தில் பார்த்தால் இரண்டாம் பாகத்தில் வந்த 'கொஞ்சம் யோசிக்க டைம் கொடு' என்பதோடு கதை அழகாக முடிந்திருக்கும்.

ஆனா, நீங்க சொல்ல வந்த கதை (?) வேற :)

நடை சரளம். அதிலும் முதலிரண்டு பாகங்கள் நல்ல சுவாரஸ்யம். சினிமா, டிவி என்று ட்ரை பண்ணுங்க. நல்லா எழுதறீங்க.

அனுஜன்யா

thamizhparavai said...

இரண்டாம் பாகத்தில் நான் சொன்னதேதான் இங்கும்...
உங்ககிட்ட இன்னும் நல்லா எதிர்பார்க்கிறேன்...
(சின்னு கதை படித்திருக்கிறேன், மினிபஸ் பயணக் கட்டுரை படித்திருக்கிறேன். உங்கள் ஸ்டேண்டர்ட் தனி. இக்கதை கொஞ்சம் அமெச்சூர்தனம்தான்..)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆரூரன் விசுவநாதன்.


நன்றி அனுஜன்யா,(மூன்றாம் பாகம் டோட்டலா வேஸ்ட்னு சொல்றீங்க புரியுது,இனி கவனமாக இருப்பேன், கருத்துக்கு மிக்க நன்றிங்க).

நன்றி தமிழ்ப்பறவை,(தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே).

நித்யன் said...

ப்ரிய இலக்கியன்,

அனைத்து பாகங்களையும் ஒன்றாகப் படித்தேன். மிக சரளமான சுவாரஸ்யமான நடை. ப்ரமாதம்.

இப்படி நித்யாவ விட்டுட்டீங்களே...

காயத்ரி, மீனாட்சி மற்றும் அமராவதியெல்லாம் ஞாபகத்துக்கு வந்துட்டு போனாங்க. பழைய நினைவுகளை அசைபோட உதவியமைக்கு ந்ன்றிகள் பல.

அன்புடன்,
நித்யன்

நாடோடி இலக்கியன் said...

நன்றி நித்யன்,

அந்த நி்த்யா போனாலென்ன இந்த நித்யா(ன்) மீண்டும் நம்ம பக்கம் வந்திருக்கீங்களே அதுவே பெரிய சந்தோஷம்.

Unknown said...

Screenplay is too gud..Keep going..:)-

செந்தில்குமார் said...

kadhai romba azhagaaga irukkiradhu...
nanri...
thiramaiyai innum valarthukkollungal...
vazhthukkal....

நாடோடி இலக்கியன் said...

நன்றி swiss.

நன்றி hihihi.

Unknown said...

நான் இருக்கிற சீரியஸ்னஸ் புரியாம ஒருத்தன் ”காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்”
This one is master piece...

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜெயா.

Unknown said...

arumaiyaan kathai 3 paakaththaiyum ore moochchil padicchuttuthaan intha pinpathivu. appuram ithai oru thiraippadamaa eduththaa nallaa odumaa? mm nallaa odum theatera vittu odum. padikkurathula irukkura sukam paakkurathula varaathu.

நாடோடி இலக்கியன் said...

நன்றி பஃருதீன்,

//mm nallaa odum theatera vittu odum.//

ஹா ஹா,ரசித்தேன்.

ஆனாலும் இக்கதையை ஒரு படமாக எடுத்தால் என்னவாகும் என உங்களை யோசிக்க வைத்ததையே ஒரு வெற்றியாக நினைக்கிறேன். மேலும் .

மூன்றாம் பாகம் மொக்கையாக இயல்பைவிட்டு விலகி அமெச்சுர் தனமாக இருப்பதை நானே அறிவேன்.இக்கதையை எழுதிய நேரத்தில் முடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் இப்படி முடிக்க வேண்டியதாகிவிட்டது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே.

manjoorraja said...

மூன்று பகுதிகளையும் மொத்தமா படிச்சேன். அருமை