Monday, August 31, 2009

நானும் அவள்களும்.....2

இத்தொடரின் முதல் பகுதியை இங்கே படித்துவிட்டுத் தொடரவும்.

நித்யாவும் மலர்விழியும் என்னை மிக நெருங்கிவிட கோயிலின் வெளிப்புறக் கட்டைச் சுவரில் அமர்ந்திருந்தவன் எழுந்துவிட்டேன். சுற்றிலும் சிறு சிறு குன்றுகள் சூழ அமைந்திருந்த அக்கோயிலில் அந்த மெல்லிய மாலையில் சுகமான காற்று கொஞ்சம் பலமாகவே வீசிக்கொண்டிருந்தது.

”ஹாய் நவீன்” என்றபடியே நித்யா வர, அதுவரைச் சிரித்துப் பேசிக்கொண்டே வந்த மலர்விழியோ என்னைப் பார்த்ததும் கண்கள் படபடக்க நடையின் வேகம் குறைந்து என்ன உணர்ச்சியைக் காட்ட வேண்டுமென்று புரியாமல் தவித்ததிலேயே எனக்குப் புரிந்துவிட்டது, என்னை அவள் அங்கே எதிர்பார்க்கவில்லையென்பது. எனக்கும் அதே நிலைதான்.

என்ன நடந்தாலும் சரி இன்று நித்யாவிடம் என் காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்பதற்காகப் பார்த்து வைத்திருந்த அத்தனை ஒத்திகைகளும் அடித்த காற்றில் பழுத்த இலைகளாய் உதிரத் தொடங்கியது.

இவள் எங்கே இங்கே என நான் குழம்பியபடியே நின்றிருந்ததைப் பார்த்த நித்யா ”இது என்னோட கிளாஸ்மேட் அண்ட் திக் ஃப்ரெண்ட் மலர்” என்றதும், ”ஏய்” என்று நித்யாவைச் செல்லமாய் தட்டிய மலர்விழி, என்னிடம்” எப்படி இருக்கீங்க” என்றாள்.

என்னைப் பற்றியப் பேச்சு அவர்களுக்குள் ஏற்கனவே இருந்திருக்க வேண்டுமென்பதை சட்டென்றுப் புரிந்து சுதாரித்துக் கொண்டவனாய் ”நல்லா இருக்கேன் மலர்” என்றபடியே அவளின் நலனையும் விசாரித்தேன். பள்ளி நாட்களில் விலங்கினங்களில் பெயரைக் கொண்டு எனையழைத்தவளின் ஒவ்வொரு பதிலிலும் இப்போது “ங்க”ச் சேர்ந்திருந்தது.

நாங்கள் பேசுவதை குறுநகையை முகத்தில் சுமந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா. நித்யாவிடம் காதலைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதைத் தாண்டியும் அந்த இடத்தைவிட்டு எப்போடா கிளம்புவோம் என்கிற மாதிரி அவஸ்தையாய் அந்த சூழலை எதிர் கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.

எங்களிருவரின் நிலையை உணர்ந்தவளாய் நித்யா, ”மலர் நீ கொஞ்சம் கீழே வெயிட் பண்ணு நான் நவீனிடம் கொஞ்சம் தனியா பேசிட்டு வறேன்” என்றாள். குழம்பியவளாய் என்னிடம் விடைபெற்றுக்கொண்ட மலர் சென்ற வேகத்திலேயேத் தெரிந்தது என்னைவிட அவள் இந்தச் சூழலிலிருந்தெப்போது விடுபடுவோம் என்றிருந்தது.

நானும் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பி நித்யா என்னச் சொல்லப் போகிறாளோ என்று அவளைப் பார்க்க,

”நவீன் நீ யாரையாவது லவ் பண்றியா?” பட்டென்று கேட்டாள். சற்றும் எதிர்பாரா இக்கேள்வியால் தடுமாறிச் சிறிது பதற்றத்தோடே,” ஏன் அப்படி கேட்கிற” என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாய் என்னையேப் பார்த்தாள்.

கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்ததை என்னால் நேர்கொள்ள இயலாது, எங்கெங்கோ பார்வையை அலையவிட்டு ஒரு வழியாய் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு “ஆமாம் உன்னைத்தான் லவ் பண்றேன்” என்று சொல்ல எத்தணித்தபோது,

”மலர் உன்னை சின்சியரா லவ் பண்றா அதாவது உனக்குத் தெரியுமா?” என்று அடுத்த எரிகணையை வீசினாள். ”என்னது” அலறியேவிட்டேன்.

”ஏன் நீ அவளை லவ் பண்ணலையா?”என்றாள். இதற்கு நான் என்ன பதில் சொல்வதென்று எனக்கேத் தெரியவில்லை. இல்லைன்னு சொன்னா அது பொய், எனக்கு அவளிடம் பொய் சொல்ல விருப்பமில்லை. அதே நேரத்தில் ”இப்போது உன்னைத்தான் விரும்பறேன், முன்புதான் அவளை” என்று சொன்னாலும் அதைவிட அசிங்கம் வேறில்லை. இப்படியே பலவாறு குழம்பி நான் நிற்க, நித்யாவே தொடர்ந்தாள்.

மலரும், நித்யாவும் தோழிகளானதிலிருந்து என்னைப் பற்றிய பேச்சு வந்தது வரை எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்லி முடித்தாள். நான் முன்னெப்போதோ ஓரிரு முறை மலரின் ஊர்ப் பசங்களிடம் அவளைப் பற்றி எதார்த்தமாய் விசாரித்ததையெல்லாம் அவள் காதலாக இவளிடம் சொல்லியிருக்கிறாள். அவள் எங்கே படிக்கிறாள் என்பது கூடத் தெரியாமல் நானிருக்க,அவளோ என்னைப்பற்றி அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாள். எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

”நீ வந்திருக்கிறதச் சொல்லாமத்தான் அவள இங்கே அழைச்சிட்டு வந்தேன். உன்னைப் பார்த்ததும் அவ நடந்துக்கிட்ட விதத்திலேயே உனக்குப் புரியலையா அவ எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறான்னு” என்றாள்.

”ஏண்டி உன்னைப் பார்க்க இவ்வளோ தூரம் வந்து தவியா தவிச்சு நிக்குறேனே உனக்குப் புரியலையா ” என்று உள்ளுக்குள்ளே நினைத்துக்கொண்டே அவள் சொல்வதைத் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

”அவளை நீயும் விரும்புற என்பது அவளின் ஸ்ட்ராங்கான நம்பிக்கை, நீ எப்போ ப்ரபோஸ் பண்ணுவேன்னு அவ வெயிட்டிங்” என்றாள்.

ப்ரபோஸ் பண்ணத்தாண்டி போறேன் அவளிடம் இல்லை உன்னிடம்தான் என்று மலர்விழியை மறந்து நித்யாவால் நிரம்பியிருந்த இந்த மனசு ருத்ரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ”என்ன எதாவது சொல்லு” என்றாள்.

என்ன சொல்வதென்றே புரியாமல் ”எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றேன்.

”ஓகே, ஆனா சீக்கிரமாச் சொல்லிடு” என்றபடியே ஆல் தி பெஸ்ட் என்பதாய் கட்டைவிரல் உயர்த்தி வண்டியைக் கிளப்பினாள் நித்யா. மலர்விழி லேசாய் தலையாட்டியபடியே விடைபெற்றுக்கொண்டாள். என் பார்வை முழுதும் நித்யாவின் மேலேயே நிலைக் குத்தியிருந்தது.

(அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)

நிறைவுப் பகுதி இங்கே:

21 comments:

க.பாலாசி said...

//ப்ரபோஸ் பண்ணதாண்டி போறேன் அவளிடம் இல்லை உன்னிடம் தான் என்று மலர்விழியைப் பற்றி சுத்தமாய் மறந்துபோய் நித்யாவால் நிரம்பியிருந்த இந்த மனசு ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.//

என்னா வில்லத்தனம்...

ஆனாலும் படிக்கும்போது ஒருவித படபடப்பு மற்றும் எதிர்பார்ப்பு போன்றவை இயல்பாகவே உண்டாகிறது...படிக்க படிக்க சுவாரசியம்...மூன்றாம் பதிவில் முற்று பெறாது என்றே எண்ணுகிறேன்...

ஈரோடு கதிர் said...

இலக்கியன் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும்.

முதல் பகுதி மொக்கை என்று இருந்தது, ஆகவே அதை மொக்கை என்ற எண்ணத்துடனே படித்தேன்.

இப்போது புரிகிறது, அது மொக்கை அல்ல, அதையும் தாண்டி சுய அனுபவத்தை சிறிதேனும் கொண்டிருக்கக்கூடிய புனைவு என்று.

நித்யாவும், மலரும் இதயத்தை இட வலமாக இழுப்பதை உணர முடிகிறது


"ங்க" போட்டு அழைக்கும் மரியாதை

மலர் உங்களைக் காதலிக்கிறாள் என்ற திடுக்

//”எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”//

இயலாமையின் கோரதாண்டவம்
மற்றும் நித்யா இல்லாவிட்டால் மலர் கூட ஓகே தான் எனும் ஒரு குறுஞ்சமாதானம்

கொஞ்சம் சிக்கலான புனைவுதான்

முடிவுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருக்குமே

மூன்றாவதில் முடிந்துவிடுமா?

ஜானி வாக்கர் said...

நல்லா இருந்தது 2 பகுதியும், சொந்த கதையோ புனைவோ But தொய்வு இல்லாம பரபரப்பா போகுது இறுதி வரை. கடைசி பகுதிக்கு ஆவலுடன்....

thamizhparavai said...

நல்லா இருக்குது...
இது சிறுகதையெனில்,
//
என்ன சொல்வதென்றே புரியாமல் ”எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றேன்.//
இங்கேயோ அல்லது இதற்கு முந்தைய வரியிலேயோ முடிந்தது போல் உணர்வு..
இருந்தும் மூன்றாவது பாகத்துக்காக வெயிட்டிங்...

சிவக்குமரன் said...

யாரோ ஒருத்தர் 'வட போச்சே'னு, சொல்ல போறாங்க. யார் அந்த நிலவு?
ஹி ஹி...நமக்கு ஒரு சான்ஸ் கெடக்காதான்னுதான்....

Thamira said...

அடப்பாவிகளா, இதுவும் தொடருமா?

சிவக்குமரன் said...

///ஆதிமூலகிருஷ்ணன் said...
அடப்பாவிகளா, இதுவும் தொடருமா?
///

(அடுத்தப் பகுதியில் நிறைவு பெறும்)
இத நெனச்சி சந்தோசப்படுங்க..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கொஞ்சூண்டு தெலுங்கு வாடை சேர்த்தா நல்லா இருக்கும்..,

Unknown said...

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துடுங்க..

Karthikeyan said...

மாப்ள கதை நல்லா போகுது டா .....
பரபரப்பா போகுது டா ...

Unknown said...

அடுத்த பகுதி இன்னைக்கு மாலைக்குள் வந்துடும் தானே அண்ணா?? சஸ்பென்ஸ் தாங்கல...

Unknown said...

முதல் பகுதிய விட இந்த பகுதில சிரத்தை எடுத்து எழுதிருக்கறது தெரிஞ்சது... அது மொக்கையா எழுதனும்னே எழுதின மாதிரி இருந்தது.. இதுதான் ஒரு அழகான புனைவு மாதிரி இருக்கு.. :)))

நாடோடி இலக்கியன் said...

நன்றி பாலாஜி.(மூன்றாவது பகுதில் முற்று பெற்றுவிடும் இதுக்கே ஆதியின் கமெண்ட் பீதியை கிளப்புது).

நன்றி கதிர்,

//முடிந்துவிடுமா //

முடிக்க வேண்டும்,இல்லாவிடில் சிலர் நேரிலேயே வந்துவிடுவார்கள், அடிவாங்க என்னிடம் தெம்புலேது.

//இயலாமையின் கோரதாண்டவம்
மற்றும் நித்யா இல்லாவிட்டால் மலர் கூட ஓகே தான் எனும் ஒரு குறுஞ்சமாதானம்//

ரொம்பவும் ரசித்தேன்,ஏனெனில் சரியா எழுதவில்லையோன்னு நெனச்சேன் நீங்க சரியா உள்வாங்கியதில் மகிழ்ச்சி.

நன்றி ஜானி வாக்கர்.(அடிக்கடி வாங்க)

நன்றி தமிழ்ப்பறவை,(ஆமாங்க அத்தோடு முடிச்சிருக்கலாமோ).

நன்றி சிவா,(கண்டிப்பா அப்படி தான் முடியும்).

நன்றி ஆதி,(இனி இப்படியான தொடர் வராது என உறுதி கூறுகிறேன்).

நன்றி சுரேஷ்,(இப்பவே அப்படி தானே இருக்கு).

நன்றி பட்டிக்காட்டான்,(வந்திடுவோம்).

நன்றி கார்த்தி,(சந்தோஷம்டா மாப்ள).

நன்றி ஸ்ரீமதி,(முதல் பார்ட்டில் ஆதியின் கமெண்ட்டால் டரியலாகி இதைக் கொஞ்சம் சிரத்தையோடு எழுத வேண்டுமென எழுதினேன். ஆரம்பித்துவிட்டோமேன்னு எழுதிட்டு இருக்கேன்,என்னாலயே முடியல).

Thamira said...

நன்றி ஆதி,(இனி இப்படியான தொடர் வராது என உறுதி கூறுகிறேன்).//

நோ இலக்கியன்.. முடிவைத்தெரிந்துகொள்ளும் ஆவலிலேயே அவ்வாறு எழுதினேன். ஸ்ரீமதி சொல்லியதைப்போல முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி இன்னும் கவனமுடன் செதுக்கப்பட்டிருந்தது. வாழ்த்துகள். தொடர் பிடிக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம். பாருங்கள் பெரிதாக இருந்ததால் எனது சமீபத்திய கதையையும் இரண்டாகத்தான் நானும் போஸ்ட் செய்துள்ளேன்.)

தினேஷ் said...

முத்ல் பகுதி கிக் .. இது சப் ஒண்ணும் இல்லியே ...

அடுத்த பகுதி விக்குனு இருக்கனும் தல..

நாஞ்சில் நாதம் said...

:))

நாஞ்சில் நாதம் said...

சூப்பர். நல்லா எழுதுறீங்க.

// இந்த மனசு ருத்ர தாண்டவம் //

//அடித்தக் காற்றில் பழுத்த இலைகளாய் உதிரத் தொடங்கியது//

//பள்ளி நாட்களில் விலங்கினங்களில் பெயரைக் கொண்டு என்னை அழைத்தவளின் ஒவ்வொரு பதிலிலும் இப்போது “ங்க” சேர்ந்திருந்தது//


இந்த இடத்திலெல்லாம் ரசித்தேன் :)))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(கண்டிப்பா உங்க பின்னூட்டம் தான் இந்த கவனத்திற்குக் காரணம்,அடிக்கடி சுட்டிக் கொட்டுங்க).

நன்றி சூரியன்,(முடிந்த வரையில் எழுதுகிறேன்).

நன்றி நாஞ்சில்நாதம்.

சுட்டிப் பையன் said...

யாருங்க அந்த "நவீன்" ? "பாரி" Aka "நவீன்" ?

Unknown said...

//ஆரம்பித்துவிட்டோமேன்னு எழுதிட்டு இருக்கேன்,என்னாலயே முடியல//

அப்படி சொல்லாதீங்க அண்ணா.. ரொம்ப அழகான வர்ணனைகள், வார்த்தைகள் உங்களுக்கு இயல்பாவே வருது.. அது தான் நீங்க எழுதற எந்த பதிவா இருந்தாலும் எல்லாரையும் ஊன்றி படிக்க வைக்குது.. அது கதைக்குன்னு வரும் போது நல்லாவே வொர்க்கவுட் ஆகுது... சோ நீங்க தாராளமா எழுதுங்க... ஆனா, நீங்க எடுத்துக்கிட்ட கதைக்களம் உங்களுக்கு சிறிது அயர்ச்சிய தருதுன்னு நினைக்கிறேன்.. இதுவே உங்களுக்கு ஒரு சவால் தான்.. முக்கோண காதல் கதை முடிவு எப்படியும் ஒருத்தருக்கு பாதகமாவோ அல்லது வாசகர்கள் எதிர்ப்பார்க்காததாகவோ இருக்கனுங்கறதால நீங்க கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும் அவ்ளோ தான்.. :)) ஆல் தி பெஸ்ட் ஃபார் அடுத்த பார்ட்.. ;) ஆதி அண்ணா சொல்ல வந்ததும் இது தான்னு நினைக்கிறேன்.. :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி சுட்டிப் பையன்,(ஏன் சென்னிமலைக்கு வராமலா போவ :) )

நன்றி ஸ்ரீமதி,

//கதைக்களம் உங்களுக்கு சிறிது அயர்ச்சிய தருதுன்னு நினைக்கிறேன்//

அதே தான்.எப்படி முடிச்சாலும் எல்லோரையும் திருப்பதி படுத்த முடியாது,மூன்று முடிவுகள் யோசித்து வைத்திருந்தேன்.ஆனால் இந்த முடிவை கும்ம போறாங்கன்னு நினைக்கிறேன்.இயல்பா முடிக்க வேண்டும் என்று நினைத்தே இந்த முடிவு.பார்க்கலாம் ஃபேட்பேக் எப்படியிருக்குன்னு.