நண்பர் 1: ஆமா என்ன கொடுத்திட்டு இருக்க
நண்பர் 2: கர்சிஃப் தாண்ணே
நண்பர் 1: அப்படின்னா, தமிழில் சொல்லுய்யா
நண்பர் 2: (சிரித்துக்கொண்டே) கைக்குட்டைண்ணே
நண்பர் 1:ம்ம்,இதுக்கு பேரு கைக்குட்டையா ? விரல்குட்டைன்னு வேணா சொல்லிக்க.
நண்பர்2:??????
*************************
பதிவுலகில் சில நண்பர்கள் ரொம்ப அவசியமான சிந்திக்க வைக்கக் கூடிய விஷயங்களைப் பற்றிய டாப்பிக்கை எடுக்கிறார்கள்.ஆனால் அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்.சில விஷயங்கள் வயதின் ஓட்டத்திலும்,அனுபவ ரீதியாகவும் தான் புரிந்துகொள்ள இயலும் என்பது என் எண்ணம், வாசிப்பனுவத்திலேயே எல்லாத்தையும் அனுகிவிட முடியாது. அப்படியொரு நண்பர் தொடர்ந்து ஆழமான விஷயங்களை மேம்போக்காக என்று கூட சொல்ல முடியாதபடிக்கு எழுதிக்கொண்டிருக்கிறார். ஊடகங்களில் வரும் செய்திகளில் சுவாரஸ்யத்திற்காக சேர்க்கப்படும் யூகத்தின் அடிப்படையிலான செய்திகளையும் அப்படியே நம்புபவர் போல் இருக்கும் அவரின் தர்க்கங்கள். இந்த மாதிரி எழுதுபவர்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. அதைவிட இந்த இடுகைகளுக்கு வரும் ’அருமையாச் சொன்னீங்க’ என்பது போன்ற டெம்பிளேட் பின்னூட்டங்கள் இன்னும் பயமுறுத்தும் விஷயங்களா என் அளவில் தோன்றுகிறது.*************************
சிறுகதை பட்டறையில் டீ இடைவேளையில் சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிறுகதை எழுதும்போது வாசிப்பாளனுக்கு கதையின் நம்பகத் தன்மையை கூட்ட ஒரு சின்ன டிப்ஸ் சொன்னார் சுந்தர்ஜி , எடுத்துக்காட்டாக,”அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது” என்பதைக் காட்டிலும் ”அவன் கையில் கிங்ஸ் புகைந்து கொண்டிருந்தது” ,அணிந்திருந்த புதுச் சட்டை கசங்கியது என்பதைக் காட்டிலும் அந்த சேர்ட்டின் பிராண்ட் நேம் யூஸ் பண்ணலாம் அப்படி எழுதும் போது கதைக்கு எதார்த்தம் கூடும் என்றார். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம் ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.*************************
பிளாஸ்டிக் கப்பின் உபயோகத்தை தடைசெய்ய உத்தரவு பிறப்பித்தும் இன்னும் நிறைய டீக்கடைகளில் பிளாஸ்டி கப் பயன்படுத்துகிறார்கள்.நாட்டில் எவ்வளோ பிரச்சனை இருக்கு இப்போ இதுதான் முக்கியமான்னு நானும் சராசரியா யோசிச்சிட்டு போயிடுவது வழக்கம். சமீபத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகர நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் டீக்கடையிலேயே போலிஸாரும் வழக்கறிஞர்கள் சிலரும் பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்திக்கொண்டிருப்பதைப் பார்த்து சராசரிக்கும் சராசரி மனுஷனாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வந்தேன்.*************************
பிரபல பதிவர் ஒருத்தர் என்னிடம் சாட்டில் ” உறுபசின்னா என்ன தல” என்றார். ”தெரியலையே நண்பா” என்று நான் அனுப்பிய அடுத்த நொடியில் துள்ளி வந்தது அவரிடமிருந்து அடுத்த மெஸேஜ் ”அப்போ உங்க பேரின் பின் பாதியை கட் பண்ணிடுங்க” என்று.அதற்கு பதிலாக நான் டைப்பி அனுப்பாமல் விட்டது இங்கே ”நான் என் பேரின் பின்பாதியை கட் பண்ணிக்கிறேன் .நீங்க உங்க பேரின் முன் பாதியை கொஞ்சம் கட் பண்ணிக்கோங்க” . யாரந்த பி.ப ?
23 comments:
அருமையா சொன்னீங்க.
விரல் குட்டை... ஹா..ஹா...
//ஆனால் அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்//
இப்பிடி ஏகப்பட்ட பேர் கிளம்பியிருக்காய்ங்க...(பின்னூட்டுறவங்களையும் சேத்துத்தான்)
//யாரந்த பி.ப ?
//
பேரைச் சொன்னா சுவாரஸ்யமா இருக்கும்...
உறுபசி ந்னா காத்திருக்கும் பசியோ..? வினைத்தொகையோ...?(என் பேர்லயும் முன்பாதியைக் கட் பண்ண வேண்டி வருமோ...????? :-((( )
1. ஹி ஹி ஹி :))
2. ஹ்ம்ம்ம்ம்.... அருமையா சொன்னீங்க... ;))))))))))
3. எனக்கும் தான்... :))
4. :((
5. தெரியல.... :(((
///வாசிப்பனுவத்திலேயே எல்லாத்தையும் அனுகிவிட முடியாது///
யாரு பெத்த புள்ளைக்கோ?(இந்த உள்குத்து)(நான் இல்லல்ல)
//உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. //
பாரி,
வெறும் பசின்னு சொல்லாம ஏன் உறுபசின்னு சொன்னார்? பசி என்பது போக்கிவிடக்கூடியது. உறுபசி என்பது வறட்சியால் வருவது. தீர்க்க முடியாதது.
பேரைச்சொன்னாலே தீப்பொறி பறக்குமே அவரா?
பிராண்ட் நேம் எழுதுறது வாசகர்களை அன்னியப் படுத்துவதைத்தான் செய்கிறது..
உங்க டார்கெட் ஆடியன்ஸ் யாரோ அதப் பொறுத்தது அது.. பெருவாரியான மக்களுக்கு லூயி ஃபிலிப்..ரீட் அண்ட் டேய்லர் எல்லாம் தெரியாது நண்பா..
பத்தாம் நம்பர் பீடி...சுடர்மணி பனியன் அப்டின்னா.. எஸ்.. கண்டிப்பா பலனளிக்கும்..நான் சீரியஸா சொல்றேன்..
வேறு வழியில்லை நண்பரே "நாலு பேர் நம்மள படிக்கணும்னா நாப்பது பேருக்கு ஆஹா அருமைன்னு பின்னூட்டம் போடறது தப்பேயில்லை"
நம்ம முதுகை நாமளே சொறியரது கொஞ்சம் கஷ்டம், அதுனால நீங்க யாருக்காவது சொறிஞ்சு விட்டா, அவுங்க உங்களுக்கு சொறிஞ்சு விடுவாங்க..
இன்னொரு முக்கியமான விஷயம் - வெளிப்படையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளும் பதிவர்கள் வெகு குறைவு. அதையும் மீறி தாங்க முடியாம "என்ன சார் எழுதியிருக்கீங்கன்னு" கேட்டா அவ்வளவுதான் நீங்க காலி. பதிவுலகம் வட சென்னை மாதிரி - பல தாதாக்களும் அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி செய்யும் இடம்..
விரல்குட்டை..
ரசித்தேன்..
//.. யாரந்த பி.ப ? ..//
எனக்கு தெரியும். ஆனா, சொல்ல மாட்டேன்..!
//அருமாயா சொன்னீங்க’என்பது போன்ற டெம்பிளேட் பின்னூட்டங்கள் இன்னும் பயமுறுத்தும் விஷயங்களா என் அளவில் தோன்றுகிறது.//
அருமையா சொன்னீங்க....(நான் சொன்னது அந்த வார்த்தையில் உள்ள பிழயை)
சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்ற சிந்தனை பயனுள்ளது...
பிளாஸ்டிக் கப்பை பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் இருந்தாலும் நீங்க மட்டுமில்ல நானும் எனது வேடிக்கையை மட்டும்தான் விதைக்கிறேன்...
//அந்த கைக்குட்டை அநியாயத்திற்கு சின்னதா இருந்தது...//
அதெல்லாம் சும்மா நினைவுக்காக கொடுக்கறது. பெருசா கொடுத்தா பயன்படுத்திட்டு தூக்கிபோட்டுட்டீங்கனா? :)
உறுபசி என்னன்னு தெரிஞ்சா பகிர்ந்துக்கோங்க.
__________
http://groups.google.ge/group/Piravakam/msg/b1d1fe674c5968c5
"ஓடு மீன் ஓட உறு மீன் வருமள்வும்
வாடியிருக்குமாம் கொக்கு
என்பதில் உறு மீன் எனபது
தகுந்த தரமான என்று பொருள் படுகிறது
அது போல உறு பசி என்பது
ஞாயமான பசி ,ஞாயமான ஆசை
என்று கொள்ளலாம்"
ஆமா யாரந்த பிராபல பதிவர்!?
நொறுக்குத் தீனி அருமாயா இல்லை
சுவையாக இருக்கிறது
//விரல்குட்டைன்னு வேணா சொல்லிக்க.//
அவரு கேக்கலையா யாரோட விரல் குட்டைனு
//அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்//
உடன்படுகிறேன்...
ஆனாலும் கூட குப்பைகளை எழுதுவதைத் தவிர்த்து இந்த முயற்சி வரவேற்கத் தக்கது. காலம் அவர்களுக்கு ஆழ்ந்த புரிதல்களை கற்றுக்க்கொடுக்கும்
//யாரந்த பி.ப ?//
நானில்ல.. ஏன்னா... நான் பி.ப ஆகவே இல்லை
நன்றி ரவிஷங்கர்,(ரைட்டு).
நன்றி தமிழ்ப்பறவை,(வேல் ப்ரிண்ட்ஸ் சொல்லியிருக்கார் பாருங்க).
நன்றி ஸ்ரீமதி.
நன்றி சிவா,(யோவ் அது பிளாக் எழுதறவங்களௌக்குச் சொன்னேன், பிளாக் வச்சிருக்கவங்களுக்கு இல்லை :) ).
நன்றி வேல் ப்ரிண்ட்ஸ்,(தகவலுக்கு மிக்க நன்றிங்க).
நன்றி ரங்ஸ்,(வாசகனை தரம் பிரித்து கதை எழுத முடியாதுன்னு நினைக்கிறேன் நண்பா, நாம் எடுத்துக் கொள்கிற களத்திற்கேற்ற வார்த்தைகளை முடிந்தவரை இயல்பாய் தர வேண்டும் என்பதே அதில் சொல்ல வந்தேன்,ஆலன் சோலியை ஐ.டி போன்ற கார்பரேட் நிறுவனங்களில் கதை நடப்பதாய் இருந்தால் தாராளமாய் எழுதலாமே).
நன்றி நாகா,(ஆமாம் நண்பா, வெளிப்படியான விமர்சனத்தை சில நெருங்கிய நண்பர்கள் கூட வரவேற்பதில்லை, ஆனால் நான் ஏற்றுக்கொள்வேன் நீங்க தாராளமாய் சுட்டிக்காட்டலாம் :) ).
நன்றி பட்டிக்காட்டான்,(யாருங்க அது?).
நன்றி க.பாலாஜி,(திருத்திவிட்டேன் நண்பா).
நன்றி பாசகி,(எதற்கும் நீங்க வேல் ப்ரிண்ட்ஸின் பின்னூட்டத்தையும் சரிபார்த்துக்கோங்க).
நன்றி வால்பையன்,(சொல்ல மாட்டேன் :) ).
நன்றி கதிர்,(குப்பைகளை எழுவதைத் தவிர்த்தா அட குப்பைகளைவிட மோசமானதுங்க அது,நாளைக்கே அவர்களின் இன்றைய சீரியஸ் பதிவுகள் குப்பைகளாகத் தெரியப்போவதுதான் நிதர்சனம், அப்புறம் அந்த விரல்குட்டை ரொம்ப ரசித்தேன் கதிர்).
ஆக ரெண்டு பேருமே பேர மாத்துற எண்ணம் இல்ல....
நான் வேறு மாதிரி புரிந்துக்கொண்டேன்...நாடோடி இலக்கியன் பக்கம்தானே...உங்களுக்கென்ன வந்தது..?
இந்த மாதிரி எழுதுபவர்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது....
நம்மள பார்த்து யாரும் ஒரு சுட்டு கைக்குட்டை கூட நீட்ட முடியாது இந்த விடயத்தில்......
”அவன் கையில் கிங்ஸ் புகைந்து கொண்டிருந்தது”...
யோசித்தேன்....அவன் கொஞ்ச முன்பு குடித்த நெப்போலியனை துப்பிக்கொண்டிருந்தான்...1
ப்ளாக் டாக் சர சர வென தொண்டைக்குழிக்குள் இறங்கிக்கொண்டிருந்தது...2
ரொம்ப தூரத்தில் ஜானி வாக்கருடன் வருவது தெரிந்தது...3
இப்படி எழுதுனா பவரால்லிங்களா....நாடோடிகள்..?
"சால, உறு, தவ, நனி, கூர், கழி" இவையெல்லாம் அதிகம்/மிகைப்பு ஆகிய பொருளைத் தரும்.
அருமையாச் சொன்னீங்க.
கட்டுரை மிகவும் அருமை, ஆனா மேம்போக்கா எழுதற பதிவர்கள் யாருனு சொன்னா திருத்திக்குவாங்க இல்லை.(கும்மியடிக்கவும் சான்ஸ் இருக்கு). அப்புறம் பிளாஸ்டிக் கப் தடைனா எல்லா பிளாஸ்டிக் கப்பும் இல்லை. அது என்னவே அளவு சொல்லாறாங்க, அதுவரைக்கும் பயன்படுத்தலாம். நம்ம பாணில சொன்னா மிகவும் கனமான வெள்ளை பிளாஸ்டி கப் தடை. கொஞ்சம் ட்ரான்ஸ்பரண்டா இருக்க மெல்லிய கப்புக்கு தடை இல்லை.
நன்றி கும்க்கி,(ஓவர் குசும்பய்யா உமக்கு ).
நன்றி மருள்நீக்கி.(தகவலுக்கு மிக்க நன்றிங்க).
நன்றி மங்களூர் சிவா,( :) )
நன்றி பித்தன்,(ஆமாங்க பிளாஸ்டிக் கப் அந்த டீக்கடையில் உபயோகித்தது தடை செய்யபட்டதே. காரணம் தலைசொறிதலும்,ஹி ஹி சமாளிப்பு சிரிப்பும் இன்ன பிற சாமாச்சாரங்களையும் பார்த்துக்கொண்டு நின்றதால்தான் அதை குறிப்பிட்டேன்).
//அந்த டீக்கடை பையனிடம் லந்து அடித்தாரே அவரேதான்//
ஹா ஹா ஹா:))
Post a Comment