Wednesday, December 9, 2009

நொறுக்குத் தீனி 09/12/09

ரயில் சினேகம்போல் அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எதிர்பாரா மனிதர்களைச் சந்திக்க நேரிடும். அப்படியான சந்திப்புகளில் சில நம்மில் ஆழமாய் தங்கிவிடும். அப்படி என்னுள் ஆழமாய் தங்கிவிட்ட நிகழ்வு இது, ஒருமுறை திருப்பூரிலிருந்து ஆழியாறு வரை எனது பெரியப்பா பையனும் நானும் டூவீலரில் ஒரு வீக் எண்ட் ட்ரிப் அடித்தோம். திரும்பி வரும்போது மிகவும் சோர்வாக உணர்ந்ததால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் தென்னை, பாக்கு மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் இருந்த பேருந்து நிழற்குடையில் ஓய்வெடுத்தபடியே, பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். பெரியவர் அந்த ஏரியாவில் உள்ள யாரோ ஒரு பெருந்தனக்காரரின் பண்ணையில் கூலிவேலை செய்வதாகவும், உடல் நலமின்றி இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தனது தாயார் தன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் ரொம்ப நாள் கழித்து அவரைக் காணச் செல்வதாகவும் அழகான கொங்குத்தமிழில் சொன்னார். அந்த பெரியவருக்கே கிட்டதட்ட எழுபது வயதிருக்கும். தனது தாய் விரும்பி சாப்பிடும் திண்பண்டங்களை வாங்கி வைத்திருந்தார். எனக்கு எங்க அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் கூடவே ”என்ர தாயாருக்கு நானெண்டா உசுருங்க” என்றபடி கண்கலங்கிய அந்த பெரியவரின் நினைவும் வந்துவிடும். அம்மா என்ற உறவுக்குத்தான் எத்தனை வலிமை..!
================

கொரியாவிற்கு சென்ற புதிதில் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது, வித்யாசமே தெரியாதது என இரண்டு விஷயங்கள் உண்டு.முதலாவது அந்நாட்டுப் பெண்களின் உடைகள். அம்மாதிரி நம்ம ஊரில் சினிமாவில் அணிந்து வந்தால் சென்சாரில் 'A' முத்திரை நிச்சயம். அந்த ஊர் அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க அதாவது அந்த ஊர் பொண்ணுங்களே முகம் சுழிக்கிற அளவிற்கு உடையணிந்து செல்பவர்களின் உடைகளை நம்ம ஊரில் திரைப்படங்களில்கூட போட முடியாது. முதலில் ஓரிரு வாரங்கள் ’குஷி’ விஜயாய் இருந்த எனது பார்வை பின்பு முட்டிக்கு மேலே ரொம்ப தூரத்தில் இருக்கும் உடையணிந்து ரம்பாவாவை விட தெம்பாய் இருக்கும் பெண்களின் அருகில் அமரும்போதும் கூட மிகவும் இயல்பாய் தெரிந்தது.

இரண்டாவது அவர்களின் முகம். பனிப்படர்ந்த மலை பிரதேசத்தில் நடந்த கம்பெனியின் ஆண்டு விழாவில் நிறைய விளையாட்டுப் போட்டிகள் வைத்தார்கள்.அதில் ஒரு போட்டியில் குறுக்கும் நெடுக்குமாக பதினாறு கட்டங்கள் உள்ள ஒரு தாளில் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு நபர்களின் கையெழுத்தை வாங்கி வரச் சொன்னார்கள். நான் ஒரே நபரிடம் நான்கு முறை சென்று கையெழுத்திடுமாறு கேட்டிருக்கிறேன் எனக்கே தெரியாமல்.ஒவ்வொரு முறையும் ஏற்கனவே போட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கோ குழப்பம். ஐந்தாவது முறையும் அவரை நோக்கி போகும்போது ”ஆர்.யூ.ஓகே” என்றார். பிறகு சில வாரங்கள் கழித்துதான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வித்தியாசத்தை அறியமுடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் என்னோடு இன்னொரு தமிழரும் வேலை பார்த்தார். எங்கள் இருவரின் முகச்சாயலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் கொரியன்ஸ் என்னிடம் சொல்ல வேண்டியதை அவரிடம் சொல்வார்கள்,அவரென்று நினைத்து என்னிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பார்வையில் இந்திய முகங்கள் ஒரே மாதிரி தெரிவதுதான் காரணம்.

==================

கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும்,தொலைக்காட்சித் தொடராகவும் கொண்டுவர செய்த முயற்சிகள் முயற்சிகளாகவே இருக்கும் வேளையில் பொன்னியின் செல்வனை அனிமேஷனில் கொண்டு வருவதற்கான ட்ரைலரை சமீபத்தில் யூடியூப் தளத்தில் பார்த்து அசந்துவிட்டேன். இதுவும் ட்ரைலரோடு நின்றுவிட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் முன்னோட்டமே அருமையாக இருக்கிறது. நீருக்குள் மீன்கள் கூட்டமாய் செல்லும் காட்சி பொற்கீரிடத்தில் வைரமாய்.



==================

பதிவுலகம் நல்லதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் மேலும் சிறப்பு சேர்க்க ஈரோடு பதிவர் சங்கமம் வரும் 20 தேதி ஈரோடில் நடக்க இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.மேலும் விபரங்களுக்கு இங்கே.

==================
”பேராண்மை” மற்றும் “பொம்மலாட்டம்” ஆகிய படங்களை சென்ற வாரம் பர்த்தேன். நல்ல படங்கள்.பேராண்மை குறித்து ஆரம்பத்தில் வெளியான சில பதிவுலக விமர்சனங்களால் படத்தை பார்க்காமல் இருந்தேன். இதைவிட மோசமாக லாஜிக்கே இல்லாத வேறு மொழி படங்களைக் கொண்டாடும் நாம், தமிழில் இப்படியான நல்ல முயற்சிகள் வரும்போது சில குறைகள் இருப்பினும் பாராட்ட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். த(ல)ளபதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற இப்படியான முயற்சிகளை வரவேற்போம் .

”பொம்மலாட்டம்” ஓடியிருக்க வேண்டிய படம். அருமையான திரைக்கதையமைப்பு. நானா படேகரின் கேரக்டர், அநாயசமாய் அவர் வெளிப்படுத்தும் சின்ன சின்ன ரியாக்ஷன்கள்,உடல் மொழியென மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். பாரதிராஜாவிடம் இன்னும் பெரிய எதிர்பார்ப்பை தூண்ட வைத்திருக்கிறார். பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.
==================
இறுதியாக கவிதை மாதிரி ஒன்று ,
எதுவுமே சாத்தியம்
சச்சினின் சதத்தைக் கொண்டாட
சத்தியத்தில் ’உன்னைப்போல் ஒருவன்’,
நள்ளிரவு வீடு திரும்பி
உறக்கம் வாராமல்
பொன்னியின் செல்வனை
புரட்டிக் கொண்டிருக்கையில்
கண்கள் சொக்க,
சச்சின் அடித்த சிக்சரை
பூங்குழலியோடு பயணிக்கும் கமல்
கச்சிதமாய் பிடித்தார்..!

39 comments:

ஈரோடு கதிர் said...

அம்மா... நெகிழ்ச்சியான பகிர்வு...

பொன்னியின்செல்வன் - யூ ட்யூபில் நானும் பார்த்தேன் அருமை

பதிவர் சங்கமம் பகிர்வுக்கு நன்றி பாரி...

பேராண்மை எனக்கு பிடிக்கவில்லை... ஜனநாதனை அப்படி எதிர்பார்க்கவில்லை

பொம்மலாட்டம் மிகவும் ரசித்த படம்

க.பாலாசி said...

//”ஆர்.யூ.ஓகே” என்றார்//

எனக்கும் வெள்ளக்காரங்கள பார்த்தா ஒண்ணும் பெரிய வித்யாசம் தெரியாது (முகம்)

கவிதை ஒரு வித்யாசமான முயற்சி...நன்றாயிருக்கிறது....

butterfly Surya said...

அருமை.

பகிர்விற்கு நன்றி நண்பா.

vasu balaji said...

/அம்மா என்ற உறவுக்குத்தான் எத்தனை வலிமை..!/

சத்தியம்.

நன்றாக இருக்கிறது இலக்கியன் மாதிரி கூட

தமிழ் said...

பொன்னியின் செல்வன் விழியம் அருமை
பகிர்வுக்கு நன்றி நண்பரே

/இதைவிட மோசமாக லாஜிக்கே இல்லாத வேறு மொழி படங்களைக் கொண்டாடும் நாம் தமிழில் இப்படியான நல்ல முயற்சிகள் வரும்போது சில குறைகள் இருப்பினும் பாராட்ட வெண்டிய சூழலில்தான் இருக்கிறோம்./

நானும் பேராண்மை பார்த்தேன்.தங்களின் கருத்தே என்னுடையதும்.

thamizhparavai said...

அப்பாடா... ஒருவழியா நொறுக்குத்தீனி வந்துடுச்சு.. நேத்து சாட்லயே கேட்க நினைச்சேன்.
அம்மா பகிர்வு அழகு...
‘பேராண்மை’ மேட்டர் உங்களுடன் ஒத்துப் போகிறேன்...(இரும்புத்திரைக்குத்தான் ஆகலை)...

கவிதை நன்றாக இருந்தது ரசித்தேன்...(இதே போல் ஒரு காட்சி ‘சென்னை 28’இல் வருமே...)

thamizhparavai said...

கொரியப் பெண்கள்...
நானும் யோசித்ததுண்டு இதுபோல்...
அவர்களும் இப்படித்தான் யோசிக்கிறார்களா?... ஙே....

‘my sassy girl' ஹீரோயின் எப்படி?

ஆரூரன் விசுவநாதன் said...

கருத்து கதம்பம் அருமை.

பதிவர் சந்திப்பை பகிர்ந்தமைக்கு நன்றி

அன்புடன்
ஆரூரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முக ஒற்றுமை விசயம் எல்லாருமே அப்படி உணர்வது தான் :)

பொன்னியின் செல்வன் காட்சி இப்பத்தான் பார்க்கிறேன்.. நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

அருமையான பதிவு.

அதுவும் பொன்னியின் செல்வன் பார்த்து விட்டு பாராட்ட வார்த்தைகள் இல்லை. :) அதை உருவாக்கும் தோழர்களுக்கு வாழ்த்துகள்

Anonymous said...

நல்லா இருக்கு பாரி.

Naresh Kumar said...

நல்ல பதிவு!!!

பேராண்மை பற்றிய உங்களது கருத்துடன் முழுக்க ஒத்துப்போகின்றேன்....

பொம்மலாட்டம் நானும் மிக ரசித்துப் பார்த்த படம்...

நரேஷ்
www.nareshin.wordpress.com

Unknown said...

அம்மா

பொன்னியின் செல்வன் பாக்கமுடியல இங்க.. :(( ஆனா எனக்கு அதில் பிடிச்ச கேரக்டர் வானர குல வீரன் தான்... ம்ம்ம் அவன் கேரக்டர சொதப்பாத ஒரு நடிகர் தமிழில் கிடைப்பது அரிது... :((

கவிதை நன்று. :))

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்.

நன்றி பாலாசி.

நன்றி சூர்யா.

நன்றி வானம்பாடிகள்.

நன்றி திகழ்

நன்றி தமிழ்ப்பறவை(சென்னை 28ல் வருமா :( ,ஞாபகம் இல்லையே நண்பா. ’my sassy girl' நான் பார்க்கவில்லை நண்பா).

நன்றி ஆரூரன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி முத்துலெட்சுமி.

நன்றி நான் ஆதவன்.

நன்றி அண்ணாச்சி.

நன்றி நரேஷ் குமார்.

நன்றி ஸ்ரீமதி (அந்த ட்ரெய்லரை மிஸ் பண்ணாம பார்த்திடுங்க)

நன்றி ரவிஷங்கர்.

Unknown said...

கலப்படம் இல்லா முகம் என்பார்கள்
அந்த இனத்தை அடுத்தவர் கலக்கவில்லை
நாம் அப்படியல்ல,நம் மீது படையெடுத்தவன் எல்லாம் நம் பாட் டி,தாத்தாவாகிவிட்டனர்

வரதராஜலு .பூ said...

//அம்மா என்ற உறவுக்குத்தான் எத்தனை வலிமை..!//

ஆம்.

☼ வெயிலான் said...

நல்லாருக்கு பாரி!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நல்ல பதிவுங்க..., பேராண்மை பத்தி சொன்னது ரொம்ப சரியானது..,

நாடோடி இலக்கியன் said...

நன்றி மோகன்.( :( )

நன்றி வரதராஜுலு.

நன்றி வெயிலான்.

நன்றி பேநா மூடி.

Kumky said...

:--))

அய்யா,
பதிவு படித்தேன்.
நன்றாக இருந்தது.
மிக்க நன்றி.

பாரி: அவ்வ்வ்..இந்தாளு திருந்தவே மாட்டான்யா....ஒழிஞ்சு போட்டும்.

Kumky said...

பாரி,
ஜனநாதன் மிகுந்த எதிர்பார்பை உருவாக்குவதும், பின்னர் ஒரு 25சதவிகித திருப்தியுடன் நாமே சமாதானமாகிவிடுவதுவும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சகிக்கவே முடியாத ஒரு விஷயம் பலவுண்டு..அதிலொன்று...
போகிற போக்கில் கீச்சுக்குரலில் கம்யூனிசம் பேசிக்கொண்டிருப்பதும் அதை அந்த ஷாட்டில் இருக்கும் எந்த கேரக்டரும் கவனிக்காமலிருப்பதும்தான்.

அதைவிட உச்சம்...எதிரிகளுக்கும் சேர்த்து இவரே ப்ரொக்ராம் பிக்ஸ் செய்து கொடுத்துவிட்டது போல... இந்தப்பக்கம் வந்து அவர்கள் ...சா போகிற இடம் வரைக்கும் சொல்லிக்கொண்டு போவதுதான்...இப்படி சொதப்பல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுக்கிறார்கள்...அதில் சில நூறு பேர் பணிபுரிகிறார்கள்....மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்...அனாலும் நம்ம கிராமத்து ஆட்களுக்கு தெரிகின்ற சின்ன சின்ன லாஜிக் கூட ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை...?

Kumky said...

கவிதை மாதிரியான் ஒன்று என்பதனால்...நோ கமெண்ஸ்..

கொரியா கூட பரவாயில்லை...இந்த சைனாக்காரர்களை பார்க்கும்போது நானும் இப்படித்தான் நினைத்துக்கொள்வேன்...ஆனா பெண்ணா என்று கூட சில நேரம் சந்தேகமாகவே இருக்கும்...

PPattian said...

அருமையான தீனி..

கொரிய பெண்கள் பார்க்க பார்க்கத்தான் பிடிபடுமோ..:)

நாடோடி இலக்கியன் said...

நன்றி கும்க்கி(
//அதைவிட உச்சம்...எதிரிகளுக்கும் சேர்த்து இவரே ப்ரொக்ராம் பிக்ஸ் செய்து கொடுத்துவிட்டது போல//

எனக்கும் இதே கருத்துதான் மேலும் துருவன் கதாபாத்திரத்திற்கு தெரியாத விஷயங்களே இல்லை என்பது போல் காட்டியிருப்பதும் ஒரு மாதிரிதான் இருந்தது.

//நம்ம கிராமத்து ஆட்களுக்கு தெரிகின்ற சின்ன சின்ன லாஜிக் கூட ஏன் இவர்களுக்கு தோன்றுவதில்லை...?
//

அப்போ தளபதிகளின் படங்களையெல்லாம் என்னன்னு சொல்லுவீங்க. :)

//ஆனா பெண்ணா என்று கூட சில நேரம் சந்தேகமாகவே இருக்கும்...
//

இதற்கும் கூட ஒரு சுவராஸ்ய கதை ஒன்று என்னிடம் இருக்கிறது கும்க்கி அண்ணா,நேரில் சொல்கிறேன், இல்லாவிடில் பிறிதொரு நொறுக்குத் தீனியில் எழுதுகிறேன்.)

நன்றி புபட்டியன்.(ஆமாங்க).

Sanjai Gandhi said...

பதிவும் கொரியப் பெண்கள் மாதிரி நல்லா இருக்குண்ணே.. :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி சஞ்சய்(இதில் ஏதும் வஞ்ச புகழ்ச்சி இல்லையே :) )

நாஞ்சில் நாதம் said...

நொறுக்குத் தீனி நன்றாயிருக்கிறது....

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்,(ஆணி ஜாஸ்தியா நன்பா)

"உழவன்" "Uzhavan" said...

//. அவர்களின் பார்வையில் இந்திய முகங்கள் ஒரே மாதிரி தெரிவதுதான் காரணம்.//
 
காக்காங்க அதுங்களுக்குள்ள அடையாளம் கண்டுக்கிடும் :-)

நாடோடி இலக்கியன் said...

நன்றி உழவன்,(இது நல்லாயிருக்கே).

அமுதா கிருஷ்ணா said...

எனக்கும் மலேஷியா போன போது முதல் இரண்டு நாள் அங்கு இருக்கும் சைனா பெண்களை வேடிக்கை பார்க்கவே நேரம் போதவில்லை..முகச் சாயல் விஷயம் நகைச்சுவை..ஓ,,அவர்களுக்கு நாம் முகச்சாடையில் ஒன்று போல தெரிவோமா?? yes...பொம்மலாட்டம் நல்ல படம்..ஓடாத படம்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா.(மலாய் பெண்களும் ஒரே மாதிரியாக இருந்து குழப்புகிறார்கள்).

ஜோசப் பால்ராஜ் said...

//பூங்குழலியோடு பயணிக்கும் கமல் //

கமல் தான் வந்தியத் தேவன் கேரக்டருக்கும், ராஜராஜன் கேரக்டருக்கும் சரியா இருப்பாரு.

அப்பறம் அந்த ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், கொடும்பாளூர் வேளார்,திருமழப்பாடி மழவராயர், குறிப்பா குந்தவை இந்த கதாப்பாத்திரங்களும் கூட அவரே செஞ்சுருவாரு.

ஜோசப் பால்ராஜ் said...

அம்மாவ பத்தி எழுதியிருந்தது மிகவும் நெகிழ வைத்தது.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஜோஸப் பால்ராஜ்,(வந்தியத்தேவனுக்கு ஓகே, ராஜராஜன் ரோலுக்குப் பொருந்துவாரா?உருவத்திற்குச் சொன்னேன் நடிப்பில் அல்ல).

Unknown said...

அட.., எனக்கும் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாக இருக்கிறது...
முதலில் என் ஆப்பிள் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கட்டும்..அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்..(நான் சரியாத்தான் பேசுறேனா..?)