Thursday, December 24, 2009

மலையாள சினிமாவின் அம்மாக்கள்

இந்திய அளவில் சிறந்த நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் நிறைய மலையாள நடிகர்கள் இடம்பெறுவார்கள். மோகன்லால், மம்முட்டி, நெடுமுடி வேணு, திலகன், ஜெகதி ஸ்ரீகுமார் என திறமையான ஒரு பெரிய நடிகர் கூட்டம் அங்கே இருக்கிறது.

இவர்கள் மட்டும் எப்படி எந்த கதாபாத்திரமானாலும் அப்படியே மாறிவிடுகிறார்கள் என்பதற்கு என்னளவில் காரணமாய் நினைப்பது, பொதுவாக மலையாளப் படங்கள் அதிகபட்சம் ஒரு மாதத்தில் எடுத்துவிடுவார்கள். எனவே மோகன்லால்,மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களே வருடத்திற்கு ஏழு,எட்டு படங்கள் செய்துவிடுகிறார்கள்.(இப்போது எண்ணிக்கை சிறிது குறைந்திருக்கிறது). மற்ற குணச்சித்திர நடிகர்களாக இருக்கும் நெடுமுடி வேணு, சமிபத்தில் மறைந்த முரளி போன்ற ஒரு பத்து பதினைந்து நடிகர்களே மாற்றி மாற்றி எல்லா ஹிரோக்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள்.

இப்படி எண்ணிக்கையில் கூடுதலான படங்களில் நடிக்கும்போது நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் இயல்பாகவே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால் கிடைக்கும் அனுபவத்தில் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்துவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். இன்னொன்று பத்மராஜன்,பரதன்,சிபிமலயில்,சத்யன் அந்திக்காடு வேணு நாகவல்லி போன்று அவர்களுக்குக் கிடைத்த இயக்குனர்கள்.

இது நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் கேரள நடிகைகளுக்கும் மிகப் பொருந்தும், அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் மலையாள திரையுலகை நீண்ட வருடங்களாக அசத்திக்கொண்டிருக்கும் மூன்று நடிகைகளைப் பற்றியே இந்த இடுகை.

கவியூர் பொன்னம்மா:

மலையாள திரையுலகின் அம்மா என்று அழைப்படுபவர். சாந்தமான முகத்துடன் இவர் ஸ்கிரினில் வரும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் அம்மாவை நினைவுக்கு கொண்டுவந்துவிடுவார். திலகன் போன்ற தன்னைவிட வயசில் சீனியர் நடிகர்கள் தொடங்கி குஞ்சாக்கோ கோபன் போன்ற இன்றைய இளம் கதாநாயகர்கள் வரை எல்லோருக்கும் அம்மாகியிருக்கிறார். மோகன்லாலின் அம்மா யாரென்றால் இவரின் முகம்தான் நினைவுக்கு வரும்,அந்த அளவிற்கு மோகன்லாலின் பெரும்பான்மையான படங்களில் இவர்தான் அம்மா. மலையாள திரையுலகின் பெஸ்ட் அம்மா-பையன் காம்பினேஷனும் மோகன்லால்- கவியூர் பொன்னம்மாதான். தமிழில் சத்யா படத்தில் அமலாவின் அம்மாவாக வருவார்.

கே.பி.ஏ.சி.லலிதா:


இயக்குனர் பரதனின் மனைவியான இவரை மலையாளத் திரையுலகி
ன் மனோரமா எனலாம். இரு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கும் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகலகலா வல்லி. தமிழில் காதலுக்கு மரியாதைப் படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்திருப்பார்.மலையாளத்தின் லோக்கல் ஸ்லாங்குகள் அனைத்திலும் பேசி நடிக்கக் கூடியவர். வெகுளித்தனம், வில்லி,வேலைக்காரி, ஆர்வக்கோளாறு, திமிர்த்தனமான கதாபாத்திரம் என எதிலும் பெஸ்ட் என நிரூபித்துக்கொண்டிருப்பவர். பெரிய நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடிப்பார் ஒரு சீனில் தலைக்காட்டிப் போகும் குணச்சித்திரங்களுக்கும் ஜோடியாக நடிப்பார். வாய்ஸ் மாடுலேஷனிலும் டைமிங் சென்சிலும் இவருக்கு நிகர் இவர்தான்.



சுகுமாரி:

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். வேட்டைக்காரனில் கூட அனுஷ்காவின் பாட்டியாக வருபவர். மலையாள திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகே இவரின் திறமை எனக்கு தெரிய வந்தது. இவரும் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சோகம் அதற்கு நேர்மாறான காமெடி இரண்டிலுமே கலக்குவார். நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான இவர் பிரியதர்ஷனின் முதல் படமான ’பூச்சைக்கொரு மூக்குத்தி’ படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து ஆடும் டிஸ்கோ நடனம் இவரை அப்பாவி அம்மாவாகவே பார்த்து பழகியவர்களுக்கு ஆச்சர்யப்பட வைக்கும். திமிர் பிடித்த பணக்கார அலட்டல் அம்மாவாகவும் சர்வ சாதாரணமாக நடிப்பார்.இவரின் முக அமைப்பு கோடீஸ்வர லுக்கிற்கு ஒத்துவராதது போல் இருக்கும் ஆனால் நடிப்பில் அந்த நினைப்பையே மாற்றிவிடுவார். தமிழில் மலையாள இயக்குனர்கள் இயக்கிய மௌனம் சம்மதம்,வருஷம் 16,கோபுர வாசலிலே போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மலையாள வாடையே இல்லாமல் தெளிவாய் தமிழை உச்சரிக்கக் கூடியவர்.

30 comments:

☼ வெயிலான் said...

பதிவுக்கு முன்னான தகவல் திரட்டு பிரமிக்க வைக்கிறது.

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெயிலான்.

vasu balaji said...

அருமை அருமை பாரி.

Prathap Kumar S. said...
This comment has been removed by the author.
Prathap Kumar S. said...

சூப்பருங்க...நல்ல அலசல்... விஜயராகவன், லால் அலெக்ஸ், சாய்குமார் கூட மிகச்சிறந்த குணசித்திர நடிகர்கள்தான்.

சுகுமாரி, லலிதா, பொன்னம்மா மூன்று பேரும் மிகச்சிறந்த நடிகைகள் ஷீலா கூட அம்மா வேடங்களில் நடித்தார். ஆனால் இவர்கள் அளவுக்கு பெயர் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. சுகுமாரி மாடர்ன் உடைகள்கூட போட்டு பல பழைய படஙக்ளில் காமெடியில்கூட வெளுத்து வாங்குவார்.
வித்தியாசமான நல்ல பகிர்வு நன்றி நாடோடி இலக்கியன்.

துபாய் ராஜா said...

ஆகா, ஆகா.. அருமையான அம்மே ஆராய்ச்சி.. அப்படியே அச்சன், சேட்டன், சேச்சின்னு தொடருங்க.. :))

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவருமே சிறந்த குணச்சித்திர நடிகைகள்.

அப்பாவி முரு said...

நல்ல தகவல்கள்....

//சுகுமாரி://
பாசமலரில் வரும் உலக புகழ் பெற்ற "வாராயோ தோழி, வாராயோ" பாடலில் நடனமாடுவார் என்பது கூடுதல் தகவல்

நாடோடி இலக்கியன் said...

நன்றி வானம்பாடிகள்.

நன்றி நாஞ்சில் பிரதாப்.(விஜய ராகவன்,மம்மு கோயல், பப்பு, சங்கராடி,ஜனார்தனன் என நல்ல நடிகர்களின் பட்டியல் ரொம்ப பெரிய லிஸ்ட் டைம் கிடைத்தால் எழுதலாம்).

நன்றி துபாய் ராஜா(விரைவில் சேடடன்கள் இடுகைதான், :))))))))) ).

நன்றி அப்பாவி முரு.(தவலுக்கு நன்றிங்க).

துளசி கோபால் said...

எண்டெ தெய்வமே...அம்மமாரைப் பற்றியதாணோ? கொள்ளாம்.

மூன்று அருமையான அம்மாக்கள். இதுலே கவியூர் பொன்னம்மாவைப் பார்த்தால் எனக்கு என் மாமியாரின் ஞாபகம் வந்துரும். வழமையான சாந்தஸ்வரூபியாய அம்மா.

சத்யாவில் அமலா வேலை செய்யும் கடையின் முதலாளி அம்மாவா வருவாங்க.

கே பி ஏ.ஸி. லலிதா தான் மூவரில் சூப்பர். இவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி ஒரு விதவிதமான நடிப்பு!

சுகுமாரி ஓக்கே ரகம்தான். நகைச்சுவைப் பகுதியில் வெளுத்துவாங்குவாங்க.

நாடோடி இலக்கியன் said...

நன்றி துளசி கோபால்.(மலையாளப் படங்களைப் பற்றி முன்பு எழுதியிருந்தப்போ வந்தீங்க இப்போ மறுபடியும்).

துளசி கோபால் said...

பின்னே? வராதிருக்கானொக்கோ!!!!

நாடோடி இலக்கியன் said...

@துளசி கோபால்,(டீச்சர் ஞான் கொறைய மோகன்லால் சினிமை குறிச்சு எழுதிட்டுண்டு நிங்கள் வாயிசிச்சோ).

துளசி கோபால் said...

எப்போள்? வாயிச்ச ஓர்மையில்லா!

நாடோடி இலக்கியன் said...

@துளசி கோபால்,(அங்கனையானோ, ஞான் நிங்கள் வாயிச்சி இருக்காம்ந்நு விஜாரிச்சு,சைடில் மலையாளம்ந்நு ஒரு லின்க் உண்டல்லோ அதை கிளிக்கெய்தா மதி).

துளசி கோபால் said...

நன்னி கேட்டோ :-)

வாயிக்காம்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு நன்றி நாடோடி இலக்கியன்

நாடோடி இலக்கியன் said...

மாதேவி said...

"அம்மாக்கள்" நல்ல தகவலான பதிவு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சே.குமார்.

நன்றி மாதேவி(உங்க பின்னூட்டத்தை தவறுதலா டெலிட்டிவிட்டேன்,அதான் மேலே மீண்டும் காப்பி செய்து பேஸ்டியிருக்கேன்).

malar said...

கே பி ஏ.ஸி. லலிதா நடித்த நல்ல நகைசுவை படங்கள் சமீபத்தில் அல்லது புதிய படங்கள் பெயர்கள் இருந்தால் சொல்லுங்கள்

பாஸித் said...

sugu mariyai patri oru koodutal tagaval ivar 2000 padangaluku mal nadituirukirar!!!!!!

பாஸித் said...

sugu mariyai patri oru koodutal tagaval ivar 2000 padangaluku mal nadituirukirar!!!!!!

நாடோடி இலக்கியன் said...

நன்றி மலர்,(மாடம்பியில் லாலேட்டனின் அம்மாவாகப் பார்த்தது,அதன் பிறகு புதுப்படங்கள் அவ்வளவாகப் பார்க்கவில்லை,பார்த்தப் படங்களிலும் அவர் இல்லை).

நன்றி பாஸித்(கூடுதல் தகவலுக்கு நன்றிங்க).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தொகுப்பு.. பின்னூட்ட மலையாளம் ரசித்தேன்.. ;)

thamizhparavai said...

நல்ல வித்தியாசமான பதிவு ரசனைக்காரரே...
நான் அவ்வளவா மலையாளப் படங்கள் பார்ப்பதில்லை...
சத்யன் அந்திக்காடு படங்கள் மட்டும் நான்கைந்து பார்த்திருக்கிறேன்,ராஜாவின் இசைக்காக...
நீங்கள் சொன்ன அம்மாக்களில் எனக்குப் பிடித்த அம்மா லலிதாதான்...
சேட்டன்கள் இடுகையை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக இன்னொசண்ட்.

Rajiv said...

Bhagayadevatha, is a must see malayam movie. In this film KPAC Lalitha just lived like a christian widowed mother in a low middle class family. Best ever acting of KPAC Lalitha I enjoyed recently. A nice story too.

Other actors, Jeyaram, Kanika, Nedumudi Venu, Vinitha, Innocent, Mammokoya etc.

கானா பிரபா said...

பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடிகர்கள் பட்டியலில் இன்னசெண்ட் ஐ தவற விட்டுவிட்டீர்களே

நீங்கள் குறிப்பிட்ட அம்மா நடிகைகளை விதவிதமான குணச்சித்திரத்தில் காட்டத் தெரிந்த வல்லமை மலையாள சினிமா இயக்குனர்களுக்கே தேர்ந்த வித்தை. எனக்கு கவியூர் பொன்னம்மாவை பார்த்தால் அப்படி ஒரு தாய்மை நேசம்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி முத்துலெட்சுமி, (நிங்களோட கொமெண்ட்ஸ் கண்டபோழ் வல்லிய சந்தோஷம் கேட்டோ:))))) ).

நன்றி தமிழ்ப்பறவை,(கண்டிப்பா எழுதுவேன் கொஞ்சம் லேட்டாகும் பரால்லையா.(தலை நகரம் வடிவேல் ஸ்டைலில் படிக்கவும்)).

நன்றி நாயர்,(பாக்யதேவதா இன்னும் பார்க்கவில்லை,பார்க்க வேணிடிய லிஸ்டில் இருக்கும் படம்,நினைவூட்டியமைக்கு நன்றிங்க).

நன்றி கானாபிரபா,(இன்னோசன்ட் எந்த அளவிற்கு நல்லா நடிப்பாரோ அதே அளவிற்கு ஓவர்நடிப்பில் சில படங்களில் மொக்கையைப் போடுவார் (எ.கா)கல்யாணராமன்,ஜெகதியும் சில படங்களில் ஓவர் ஆக்டிங்தான் இருப்பினும் எனக்கு அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும்.

கவியூர் பொன்னம்மா குறித்தக் கருத்து எனக்கும் அப்படியே).

நாஞ்சில் நாதம் said...

அருமையான தகவல்கள்.

Sudhar said...

//இப்படி எண்ணிக்கையில் கூடுதலான படங்களில் நடிக்கும்போது நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் இயல்பாகவே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால் // It may not be right. Tamil,Telugu etc also during that time everybody acted in many movies. Rajini did guru sishyan in 22 days, Chiranjeevi acted in 22 movies in one year. Main reason, major changes happened at the same time from all ends. Changing from sex film industry to high quality movies. it was a commandable effort. Lot of new thinking Directors, novels to cinema, script writers (MT, logi) and above all Mohanlal and Mammooty willing to act in those movie has changed the same. Till today i feel 80's Malayalam films are best in India. (not much known about Bengali). The kind of variety subject they have handled during that time.

I came to know your site thro kanapraba. Thanx to him.

your writings are very good. Enjoyed

Sudharsan

நாடோடி இலக்கியன் said...

@சுத‌ர்ச‌ன்,
//Lot of new thinking Directors, novels to cinema, script writers (MT, logi)//

மிக‌வும் ச‌ரி ந‌ண்ப‌ரே.

க‌ருத்துக்கு மிக்க‌ நன்றி.

கானா பிர‌பாவிற்கும் ஒரு நன்றி.