Tuesday, July 21, 2009

நம்மிடையே எனக்குப் பிடித்த 10

1.என்னதான் நெருக்கமாக இருப்பினும் அதைத் தாண்டியும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அந்தரங்கம் இருப்பதை மறந்து,"எப்படி எங்கிட்ட நீ மறைக்கலாம், நாம அப்படியா பழகினோம்" என்றபடியே நண்பன், சொந்தம், சுற்றம் இப்படி எதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு அடுத்தவரின் அந்தரங்கங்களில் தலையிடுவோமே அது மிகப் பிடிக்கும்.

2.படர்வதற்குப் பிடி கிடைக்காமல் அலைபாயும் கொடியினைப் போல துக்கத்திலோ, பெரும் இழப்பிலோ,மன உளைச்சலிலோ அல்லாடி ஆதரவு கரத்துக்கு ஏங்குபவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் அறிவுரை கூறுவோமே அதுவும் மிக பிடித்த ஒன்றே.

3.வறுமை நிலையிலிருந்து உயர்ந்தவர்களைப் பார்க்கும் போது, "இவன் அந்த காலத்தில" என்று ஆரம்பித்து அவர்களின் இறந்த காலத்தை எள்ளி நகையாடுவோமே அது எவ்வளவு ஆனந்தமான விஷயம்.

4.திருந்தி வாழ முற்படுகிறவனின் பழைய வாழ்க்கையை குத்திக் காட்டியே அவர்களை உயிரோடு கொல்வோமே அதில் இருக்கும் சந்தோஷம் எதில் வரும்.(எப்போதும் பிளாக் அண்ட் ஒய்ட் ஃபோட்டோவப் பார்க்காதீங்கப்பா, கலர் ஃபோட்டோவ பாருங்க என்று நீங்க சொன்னது ஞாபகம் வருது சஞ்சய்).

5.சக மனிதர்களை பணத்தை அளவீடாக வைத்து மரியாதை/அவமரியாதை செய்வோமே அதுக் கூட நம்மிடையே இருக்கும் மிகச் சிறந்த பண்பே.

6.மகனாக/மகளாக அல்லது தம்பி/தங்கையாக பிறந்து விட்ட காரணத்திற்காக அவர்களுக்கென்று ஒரு விருப்பம்,சிந்தனை இருக்கும் என்பதை பற்றி யோசிக்காமல் அவர்களின் வாழ்க்கையை நாம வாழ்வோமே அது ரொம்பப் பிடிக்கும்.

7.அடுத்தவர் இடத்தில் நம்மை கொஞ்ச நேரம் யோசித்துப் பார்க்காமல் அவர்களைப் பற்றிப் புரளியை பரப்பி விடும் குணத்தை, தும்மலைப் போன்று அனிச்சை செயலாக்கி வைத்திருக்கிறோமே அதுக் கூட ரொம்பப் பிடிக்கும்.

8.எப்போதோ எதற்கோ சொல்கிற விஷயங்களை, "என் கண்ணாலப் பார்த்தேன்","எனக்கு அப்போதேத் தெரியும்" என்று சம்பந்தமே இல்லாத இன்னொரு நிகழ்விற்கு அழகாக மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் கச்சிதமாக முடிச்சிப் போட்டுப் பார்க்கும் சி.பி.சி.ஐ.டி மூளையை எப்படி பிடிக்காமல் போகும்.

9.ஒரு சின்ன விஷயமாகக் கூட இருக்கலாம் ஆனால் அதைப் பற்றி அறிந்திராமல், அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அனுகுபவர்களை," இதுக் கூடத் தெரியாதா" என்று ஆனந்தத்தின் எல்லையில் நின்று சிரித்து மற்றவரின் தாழ்வு மனப்பான்மைக்கு அஸ்திவாரம் போடுவோமே அந்த அழகை ஆஹா என்னவென்றுரைப்பேன்.அது அவ்வளோ பிடிக்கும்.

10.குறிப்பா இந்த விஷயத்திற்கு என்றில்லாமல், எங்கும் எதிலும் நிரம்பி வழியும் நமது தனித்திறன்களான ஈகோ,அலட்சியம்,பொறாமை இப்படி நீளும் இன்னும் சில விஷயங்களும் நம்மிடையே எனக்குப் பிடித்த விஷயங்களே.

24 comments:

நாஞ்சில் நாதம் said...

தனியொரு மனிதனின் ஆழ்மன வக்கிரங்கள். செவிட்டில் அறைஞ்ச மாதிரி சொல்லியிருக்கீங்க. வஞ்சபுகழ்ச்சியணி ஸ்டைல்ல

டக்ளஸ்... said...

தரமான, சிந்திக்க வேண்டிய ஒரு அவசியமான் பதிவு.
இப்போது போஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம்.
நடக்கும் இந்த தல, தளபதிகள் களேபரத்தில் அடிபட்டு விடக் கூடும்.
பிறிதொரு சமயத்தில் போஸ்ட் பண்ணியிருக்கலாம்.
சரியான சாட்டையடி. அருமை இலக்கியன்.

cheena (சீனா) said...

உண்மை உண்மை - மனிதனின் பொறாமை - வக்கிரம் - இவை இயல்பாகவே காட்டப்படும் குணங்கள் - ம்ம்ம் - என்ன செய்வது - நாம் திருந்தவே மாட்டோம்

ஜோசப் பால்ராஜ் said...

அருமை அருமை.
சாட்டையடி போங்க.

//இப்போது போஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம்.
நடக்கும் இந்த தல, தளபதிகள் களேபரத்தில் அடிபட்டு விடக் கூடும்.
பிறிதொரு சமயத்தில் போஸ்ட் பண்ணியிருக்கலாம். //

இப்டி எல்லாம் கவலப் பட வேண்டாம்.

அக்னி குஞ்சொன்று கண்டேன்,
அதை ஆங்கொரு காட்டினில் மரப் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
கழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

அதான் இதுக்கும். இங்க தள, தல, தளபதின்னெல்லாம் யாரும் கிடையாது. எல்லாம் மாயை.நல்லப் பதிவுகள் எல்லாராலும் போற்றப்படும்.

SanjaiGandhi said...

அடறா சக்க அட்றா சக்க... என்னாமா உள்குத்து விடறாரு.. :))

பேசாம ஜோசப் பேரை போட்டே சொல்லி இருக்கலாம்.. ;))

நிஜமா நல்லவன் said...

மிகச்சிறந்த பதிவு. ஆனா என்ன பண்ணுறது. மனிதனோட மனசு விசித்திரமானது ஆச்சே. திருந்திடுவோமா என்ன?

கும்க்கி said...

இதுக்குத்தான் சஞ்ஜெய் கூட சேரக்கூடாதுன்னு தலய தலய அடிச்சுக்கிட்டோம்......ஜென்ம சாபல்யம் அடைஞ்சாச்சு போங்க....

பிரபல பதிவர் நாமக்கல் சிபி said...

/வஞ்சபுகழ்ச்சியணி ஸ்டைல்ல/

கரெக்டா சொல்லீருக்காரு!

//ரமான, சிந்திக்க வேண்டிய ஒரு அவசியமான் பதிவு.
இப்போது போஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம்.
நடக்கும் இந்த தல, தளபதிகள் களேபரத்தில் அடிபட்டு விடக் கூடும்.
பிறிதொரு சமயத்தில் போஸ்ட் பண்ணியிருக்கலாம்.
சரியான சாட்டையடி. அருமை இலக்கியன்.//

:))

நல்ல பதிவுகள் எந்த களேபரத்திலும் அடிபடாது!

மின்னுது மின்னல் said...

ம்

எல்லாம் இருக்கு !

VSK said...

நம்மிடையே மண்டிக் கிடக்கும் அத்தனை நாற்றங்களையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், இலக்கியன்.

இவை அத்தனையுமோ, அல்லது ஒருசிலவோ இல்லாத மனிதரைக் காண்பதரிது.

ஒரு புத்தகத்தில் படித்தேன்.

'மன்னித்தல்' என்பது மனித குணமே அல்ல என.

வரவழைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாம்.

VSK said...

சொல்ல வந்ததைச் சரியா சொல்லிடறேன்.
மன்னித்தல் என்பது இயல்பாகவே மனிதனுக்கு விதிக்கப் பட்டிருக்கும் குணம் அல்ல.
கடுமையான பயிற்சியின் மூலமே அதை வரவழைக்க முடியும்.
அதையும் தக்க வைத்துக் கொள்வது என்பது இன்னமும் கடினமான ஒன்று.
கண்ணிமைப்பொழுதில் தறவிட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

எனவே தொடர்ந்த முயற்சி இதற்குத் தேவை.

cheena (சீனா) said...

ஆம் நண்பரே வீஎஸ்கே

மன்னிப்பு அலல் அலல மன்னித்தல் என்பது மனிதனின் குணமே அல்ல எனத் தான் தோன்றுகிற்து
இருப்பினும் வேறு வழியில்லாத போது பெருந்தன்மையுடன் மன்னித்தலைக் கடைப்படிக்கிறார்கள்\அவ்வளவு தான்

நட்புடன் ..... சீனா
------------------------------------------

சூரியன் said...

கும்மாங்குத்து பத்து

இரா.சிவக்குமரன் said...

///SanjaiGandhi 21 July, 2009 7:28:00 PM IST

அடறா சக்க அட்றா சக்க... என்னாமா உள்குத்து விடறாரு..
///

உள்குத்துன்னா என்னாங்க?

நட்புடன் ஜமால் said...

நாஞ்சிலார் சொன்னதை வழிமொழிகிறேன்.

இய‌ற்கை said...

உண்மை.. அருமை...

இய‌ற்கை said...

//எப்போதும் பிளாக் அண்ட் ஒய்ட் ஃபோட்டோவப் பார்க்காதீங்கப்பா கலர் ஃபோட்டோவ பாருங்க என்று நீங்க சொன்னது ஞாபகம் வருது சஞ்சய்).//சஞ்சய் சொல்றதெல்லாம் கோட்(code) பண்றீங்களே..அவ்ளோ அப்பாவியா நீங்க‌:-))))

ஸ்ரீமதி said...

:))))

ஸ்ரீமதி said...

me the 20 :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில்நாதம்,

நன்றி டக்ளஸ்,(யோசிச்சா எழுதிடனும்,எழுதிட்டா போஸ்ட் செய்திடனும் அவ்ளோதான் நம்ம பாலிசி,"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" ஓவரா இருக்கோ),

நன்றி சீனா சார்,("மாற்ற முடியாது எதுவுமே இல்லை","முயற்சி திருவினையாக்கும்" அப்படினெல்லாம் சொல்லுவாங்களே அப்போ அந்த ரூல்ஸ் இங்கே பொருந்தாதா,பயிற்சி எடுத்துகிட்டா எல்லாம் கைவரும்னு நினைக்கிறேன் சார்),

நன்றி ஜோஸப் பால்ராஜ், (பாரதியார் கவிதையெல்லாம் டைமிங்கா அடிச்சு விடுறீங்க,பொறந்த மண்ணு அப்படி),

நன்றி சஞ்சய்,(ஏம்பா நல்லாதானே போயிட்டு இருக்கு),

நன்றி நிஜமா நல்லவன், (கடுமையான பயிற்சியின் மூலம் சாத்திய படுத்திக் கொண்டால் எல்லோருமே நிஜமா நல்லவர்கள்தான் நண்பா),

நன்றி கும்கி,(முன்னமே தெரியாம போச்சே)

நன்றி பிரபலபதிவர் நாமக்கல் சிபி, (உங்க பின்னூட்டத்தைப் பார்த்தாலும் அதே 'அணி' மாதிரியல்லவா தெரியுது).

நன்றி மின்னுது மின்னல், (ம்ம்ம் இனி இருக்கக் கூடாதுக்கு என்ன பண்ணலாம் யோசிப்போம்),

நன்றி VSK,(மன்னிப்பு பற்றி அருமையான தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க)

நன்றி சூரியன்,(நீங்க போட வேண்டிய பத்து,வால்பையன் போட்டுட்டாரு :( )

நன்றி இரா.சிவக்குமரன், (சஞ்சய்கிட்ட கேட்டீங்களா சிவா,நேரில் கேட்டிருந்தால் பட்டய கிளப்பியிருக்கலாம்)

நன்றி நட்புடன் ஜமால்,

நன்றி இயற்கை,(சஞ்சய் சொன்ன அந்த ஒரு செய்தியை வைத்துதான் இந்தப் பதிவைப் பற்றி யோசித்தேன்,மற்றபடி சஞ்சய்கிட்ட உஷாராத்தான் இருக்கனும் :)) ).

நன்றி ஸ்ரீமதி.

நர்சிம் said...

மிக நல்ல பதிவு இலக்கியன்.ஆழ்ந்து சிந்திக்க வைத்த பதிவு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நர்சிம்,(செய் நன்றி மறத்தல்,செய்த உதவியை சொல்லிக் காட்டுதல்,ஒருத்தர் நாம் செய்யும் தவறை சுட்டிக் காட்டும் போது,"நீ மட்டும் ஒழுங்கா என நம் தவறை ஒத்துக் கொள்ளாமல் அடுத்தவரிடத்து குற்றம் காணுதல்" இப்படி இன்னும் கூட மாற்றிக் கொள்ள வேண்டிய பட்டியல் நீளமாக இருக்கிறது)

ஈரோடு கதிர் said...

நிஜம்தான் பாரி! :)

கும்க்கி said...

ஏனுங் மேயர்..,

இந்த வெளாட்டு நல்லாருக்கே...நானும் சேர்ந்துக்கட்டுங்களா..?