Tuesday, July 14, 2009

ஒரே சாயலைக் கொண்ட தமிழ் திரைப் பாடல்கள்

தமிழ் திரைப் பாடல்களில் ஒரே ராகத்தில் அல்லது கேட்பதற்கு ஒரே மாதிரி தோனுகிற சில பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.(ராகம் பற்றிய அறிவெல்லாம் எனக்குக் கிடையாதுங்க,நிறைய பாடல்கள் கேட்கும் பழக்கம் இருப்பதால் சும்மா தோனியதைச் சொல்கிறேன்).

1."என்னதான் சுகமோ நெஞ்சிலே" என்ற மாப்பிள்ளை பட பாடலும் "கண்ணா வருவாயா" என்ற மனதில் உறுதி வேண்டும் பாடலும் ஒன்றின் பல்லவியின் தொடர்ச்சியாக இன்னொரு பாடலின் சரணத்தைப் பாடிப்பாருங்கள் இரண்டு பாடல்கள் போலவே தெரியாது.

2."பிறையே பிறையே" பிதாமகன் பாடலும் "புத்தம் புது பூ பூத்ததோ" தளபதி பாடலையும் ஒப்பிட்டுக் கேட்டுப் பாருங்கள், ராகமா அல்லது பிண்ணனி இசையா என்ன ஒற்றுமை என்று சொல்லத் தெரியவில்லை, ஆனால் கேட்பதற்கு ஒரே மாதிரியே இருக்கும்.

3."குண்டு மல்லி குண்டு மல்லி" சொல்ல மறந்த கதையின் பாடல், "மனசுல என்ன நெனச்ச மழலையில் சொல்லிடய்யா" மற்றும் "தெற்குத் தெரு மச்சானே" ஆகிய இரண்டு பாடல்களை நினைவுபடுத்தும்.

4."உத்தம புத்திரி நானு" என்ற குரு சிஷ்யன் பாடல், "சிங்காரக் காத்து" என்றுத் தொடங்கும் நம்ம ஊரு நாயகன் பாடலை ஒத்திருக்கும்.

5.மாப்பிள்ளைப் படப் பாடலான "மானின் இரு கண்கள்கொண்ட மானே" பாடலின் சரணம் எவ்வித மாற்றமும் இன்றி, தேவாவின் இசையில் வெளிவந்த சோலையம்மா படப் பாடலான "தாமிரபரணி ஆறு" பாட்டின் சரணத்தில் வார்த்தைகள் மட்டும் மாறி இருக்கும்.

6."யாமினி யாமினி" ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படப் பாடலின் சரணமும், "நெஞ்சாங்கூட்டில் நீயே" டிஷ்யூம் படப் பாடலின் சரணமும் அப்படியே ஒரே மாதிரி இருக்கும்.

7."தவமின்றிக் கிடைத்த வரமே"பாடலைக் கேட்கிறபோது, "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" நிழல்கள் படப் பாடலின் சாயலிலேயே இருப்பதாகத் தோன்றும்.

8."கத்தாழங் காட்டு வழி" பாடலின் சரணமும்,"சந்திரனைத் தொட்டது யார்" பாடலின் சரணமும் ஒரே சாயலிலேயே அமைதிருப்பார் எ.ஆர்.ரகுமான்.

9.தெனாலியின் "ஜன்னல் காற்றாகி வா" பாடலின் "இடது கண்ணாலே" என ஆரம்பிக்கும் சரணமும்,12B படத்தின் "பூவே வாய் பேசும் போது" பாடலின் "நீ ஒரு வார்த்தை" என ஆரம்பிக்கும் சரணமும், பாடலை இடையில் இருந்துக் கேட்டால் எந்த பாடல் என்ற குழப்பம் வருமளவிற்கு ஒரே மாதிரியாகவே இருக்கும்.

10."தூங்காத விழிகள் ரெண்டு" அக்னி நட்சத்திரம் பாடலும்,"தங்க மகன் என்று" பாட்ஷா படப் பாடலும் ஏதோ சம் ரிஸம்புலன்ஸ் தெரிவது போல் தோன்றும்.

இங்கே கொடுத்திருப்பது கொஞ்சமே, இன்னும் இப்படியான ஒரே சாயல்களைக் கொண்ட பாடல்கள் நிறைய இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தவற்றைக் சொல்லிட்டு போங்க மக்கா.

(மேலே இருக்கும் பாடல்களை காப்பி அடித்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இங்கே நான் கொடுத்திருக்கவில்லை.)

14 comments:

raman- Pages said...

நெருங்கிட்டீங்க... இது மாதிரி நிறைய நேரம், ஒரு பாடலை கேட்கும் பொழுது, இன்னொரு பாடலின் நினைவுகள் வரும். நல்ல பதிவு, எனக்கும் இது மாதிரி தோணும், ஆனா, இதெல்லாம் பதிவா போட முடியுமான்ன்னு நினைப்பேன்.. நீங்க செய்துட்டீங்க..

நாஞ்சில் நாதம் said...

சினிமா பாடல்களில் ஏதாவது ஆராய்ச்சி பண்ணுறீங்களா :))))))))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ராமன்,

நன்றி நாஞ்சில்நாதம்,(ஏன் நண்பா அடிக்கடி பாடல் பற்றிய பதிவா இருக்கேன்னு கேட்குறீங்களா?இன்னும் வரும் உஷார்)

S J T Raja said...

"கொஞ்சும் மைனாக்களே.." கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட பாடல் கேட்கிறபோது, "ஜுலை மலர்களே ஜுலை மலர்களே" பகவதி பட பாடலும் ஒரே மாதிரி சாயலிலேயே இருக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

நமக்கும் இது மாதிரி நிறையத் தோணியிருக்கு.. கூடிய சீக்கிரம் பதிவாப் போடுறேன் நண்பா

நாடோடி இலக்கியன் said...

நன்றி S J T Raja, (ஆமால்ல லைட்டா சாயல் இருக்குங்க)

நன்றி கார்த்திகைப் பாண்டியன்,
உங்க இடுகைக்கு வெயிட்டிங்)

ச.முத்துவேல் said...

துல்லியமான, அட்டகாசமான கண்டுபிடிப்புகள். ரசனக்காரரா இருபீங்க போலருக்கே.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ச.முத்துவேல், (கண்டுபிடிப்பெல்லாம் இல்லைங்க நண்பா, அவதானிப்பு என்றால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்க கவிதைகளை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் நண்பா, நல்லா எழுதறீங்க).

ஸ்ரீமதி said...

:))))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி,
ஏன் சிரிக்கறீங்கன்னு புரியலியே ஸ்ரீமதி.

ஸ்ரீமதி said...

Naanume indha maathiri yosichadhundu but ezuthanumnnu ninaichadhilla anna... neenga ezuthinadhu enakku sandhoshamaa irundhadhu... adhaan sirichen.. :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,

Siva said...

இங்கே நான் கண்டேன் அனார்கலி-படம் சாதனை.
சொல்லாயோ சோலைக்கிளி- படம் அல்லி அர்ஜுனா.
ஒப்பிட முடியுமா? நண்பரே

Siva said...

பச்சை கிளிகள் தோளோடு-படம் இந்தியன்.
சுத்தி சுத்தி வந்தீங்க-படம் படையப்பா
ஒப்பிடலாமா?