Monday, July 20, 2009

எங்க ஊரில் கிளிக்கியவை---- 3

நட்டு சில நாட்களில் இருக்கும் சோளப் பயிர்.


குன்றிமணிச் செடி(பேச்சு வழக்கில் குண்டுமணி,எலக்ஷன் சமயத்தில் தி.மு.க வுக்கு இயற்கை பிரச்சாரம் செய்யும் செடி,கருப்பு பாதியும், சிவப்பு பாதியுமாக இருக்கும் இந்த குண்டுமணிகளை உதய சூரியன் வடிவில் ஒட்டி வைப்பார்கள், முன்பு நிறைய இடங்களில் காணக் கிடைக்கும் இச்செடி இப்போது ஆபூர்வமாகிவிட்டது)

நடப்பட்டு சில நாட்களான இளம் சவுக்குக் கன்றுகள்


தூக்கணாங் குருவிக் கூடு,தொங்க கண்டேன் மரத்திலே

காட்டாமணக்குச் செடி(இதன் இலையை கிள்ளி அதன் காம்பில் வடியும் பாலை ஊக்கின்(சேஃடி பின்) நுணியில் நிரப்பி ஊதினால் அழகான குமிழ்களை பறக்க விடலாம்,சோப்பு நுறையைப் போல அவ்ளோ கலர்புஃல்லா இருக்கும்)இதனை 'சம்பு' என்று அழைப்போம்(கோரைப் புல் வகையைச் சேர்ந்தது,நீரில் வாழக்கூடியது, இதன் தோகையை கூரை வேய்வதற்கு பயன்படுத்திக் கொள்வர்,இங்கே படத்தில் இருக்கும் அதன் பூக் காம்பை நாட்டு வெடி தயாரிப்பில் ராக்கெட் மாதிரி செல்லும் வெடிகள் தயாரிப்பிற்கு இந்தக் குச்சிகளை பயன்படுத்திக் கொள்வர்).
இதன் பேரைச் சொல்வதற்கே ஒரு மாதிரி இருக்குங்க (மயிர் மாட்டிக் காய்),இந்தக் காயை தலையில் அடித்துவிட்டால் முடிகளில் சிக்கிக் கொண்டு பிரித்தெடுப்பது படு சிரமமாக இருக்கும்.பள்ளி நாட்களில் இதுதான் எங்களுக்கு பழிவாங்கும் கேடயம்.கருவக்காய்( மாடுகளின் ஆல்டைம் ஃபேவரைட் டிஷ், கட்டுத் தறியை அறுத்துக் கொண்டு சன்டித்தனம் பண்ணுகிற மாடுகளைக் கூட இந்தக் காயை வைத்து எளிதாக மடக்கி விடலாம்).
துவரைச் செடி(இதன் பயன்பாடு அனைவரும் அறிந்ததே).


வளர்ந்து விட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா?உன்னை வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் அன்பு முத்தமா?(அறுவடைக்கு காத்திருக்கும் நெல் வயல்).

23 comments:

நாஞ்சில் நாதம் said...

படங்கள் அனைத்தும் அருமை. அடிக்கடி ஊருக்கு போவீங்க போல.

துபாய் ராஜா said...

அனைத்து படங்களும் அருமை.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா............

சி. கருணாகரசு said...

உங்களின் ரசனையை வியக்கிறேன். படங்கள் மிக அருமை...எனக்குள்ளும் எதோ செய்கிறது அந்தப்படங்கள். நீங்கள் குறிப்பிடிருப்பதில் ஒரு தவறு... அது "சோளச் செடியல்ல" "சோளப் பயிர்" . சரி அதில் உள்ள தூக்கனாங்குருவி கூட்டை நான் சுட்டுக்களாமா? நன்றி. பராட்டுகள்.

வடுவூர் குமார் said...

சிலவற்றை நான் கேள்விப்பட்டது கூட இல்லை.பகிர்ந்தமைக்கு நன்றி.

லவ்டேல் மேடி said...

படங்களும் ... அதன் விளக்கங்களும் அருமை தோழரே......!!!!

ஸ்ரீமதி said...

Super anna :))

எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான படங்கள். நேரில் பார்க்கும் ஆசையை ஊட்டுகின்றன.

சவுக்குக் கன்றுகளை எங்கு நடுகிறார்கள்? அதன் பயனென்ன? அது இருக்குமிடத்தில் வேறு எந்த மரங்களையும் வளரவிடாமல் எல்லா நீரையும் உறிஞ்சிக் கொள்ளுமென்பது உண்மையா?

அந்த சம்புச் செடியில் அழகாக நீண்டிருக்கும் பூக்களை பெரிய சாடிகளில் வீட்டுக்குள் வைப்போம். மிக அழகாகவும் வாடாமலும் இருக்கும்.

துவரைச்செடி? பயன்பாடுகள் என்ன?

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில்நாதம்,(அடிக்கடி போறதில்லீங்க,போன முறை எடுத்த ஃபோட்டோஸ்தான் மூன்று பதிவா போஸ்ட் பண்ணிட்டிருக்கேன், இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு,இதெல்லாம் சம்மர்ல எடுத்தது வின்ட்டர்ல இன்னும் பசுமையா இருக்கும்,அப்போ ஊருக்கு போகணும்).

நன்றி துபாய் ராஜா,(ஆமாங்க,சொந்த ஊருக்கு ஈடு இணை எதுவும் கிடையாது)

நன்றி கருணாகரசு,(சோளப் பயிரென்று மாற்றிவிட்டேன் நண்பா,குருவிக் கூட்டை சுட்டுக்கோங்க).

நன்றி குமார்.

நன்றி லவ்டேல் மேடி,

நன்றி ஸ்ரீமதி,

நன்றி ரிஷான்,(சவுக்கு முன்னெல்லாம் நீர் பற்றாக் குறையாக இருக்கும் வறண்ட பகுதிகளில் வளர்ப்பார்கள்,ஆனால் இப்போது எல்லா இடங்களிலுமே வளர்க்கிறார்கள்,வீடு கட்ட, பந்தல் போடுதல், விறகு போன்றவற்றிகு பயன் படுத்துகிறார்கள்.நீர் உறிஞ்சும் தன்மை சவுக்கிற்கு அதிகம் என்பதை நானும் கேள்விதான் பட்டிருக்கிறேன், உறுதியாகத் தெரியாது.

சம்புச் செடி கோடையில் கிளிக்கியதால் அதன் முழு அழகும் வெளிப்படவில்லை,மழை காலத்தில் அதன் பூக்கள் இன்னும் அழகாக இருக்கும்.

துவரை செடியிலிருந்துதான் துவரம் பருப்பு கிடைக்கிறது சாம்பாரில் சேர்ப்பார்கள்)

SanjaiGandhi said...

படங்களை எல்லாம் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க்ணே.. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி.

சூரியன் said...

/இதன் பேரைச் சொல்வதற்கே ஒரு மாதிரி இருக்குங்க (மயிர் மாட்டிக் காய்),இந்தக் காயை தலையில் அடித்துவிட்டால் முடிகளில் சிக்கிக் கொண்டு பிரித்தெடுப்பது படு சிரமமாக இருக்கும்.பள்ளி நாட்களில் இதுதான் எங்களுக்கு பழிவாங்கும் கேடயம்//

ஆமாண்ணே


//வளர்ந்து விட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா?உன்னை வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் அன்பு முத்தமா?//

சூப்பர்ணே வரிகள்

Anonymous said...

குன்றிமணிச்செடியைப்பாத்து ரொம்பநாள் ஆச்சு. பக்கத்து ஊர் தோட்டத்துல இருக்கும். அருமையான படங்கள்.

'இனியவன்' என். உலகநாதன் said...

அருமையான படங்கள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திகழ்மிளிர் said...

அருமையான படங்கள்
அழுகையாய் நினைவுகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

எந்த ஊருங்க தலைவரே நீங்க? படங்கள் அனைத்தும் அற்புதம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆபிஸ்ல படம் தெரியாது. வந்தது வந்துட்டேன். அட்வான்ஸ் பின்னூட்டம் போட்டுட்டு போயிடறேன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சஞ்சய்,(துவக்கி வைத்தது நீங்கதானே சஞ்சய்,உங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும்).

நன்றி சூரியன்,(அது பட்டுக்கோட்டையாரின் வரிகள் தம்பி).

நன்றி சின்ன அம்மிணி, (நானும் குன்றிமணிச் செடிக்குத் தேடி அலைந்துதான் இந்த ஃபோட்டோ எடுத்தேன்,அழிந்து வரும் நிலையில் இருக்கு).

நன்றி இனியவன் என்.உலகநாதன்.

நன்றி திகழ்மிளிர்,(கொங்கு வாசலில் இப்போது புகைப்படம் இடுவதில்லையா நண்பா,ஆழியார் ஃபோட்டோஸ் அசத்தல்).

நன்றி முரளிகுமார் பத்மநாபன்,(போன பதிவில் பின்னூட்டத்தில் தெளிவாச் சொல்லியிருக்கேன் நண்பரே).

நன்றி ஆதி,(இது இரண்டாவது முறை படத்தைப் பார்க்காமலேயே பின்னூட்டம், அன்பிற்கு நன்றி)

ரகுநாதன் said...

எங்கள் ஊரில் வயல் இல்லை. ஆனால் குருவிகள் இருந்தன. துவரை பயிரெல்லாம் பார்த்தது கிடையாது. ஆனால் துள்ளி துள்ளி வேலியில் அமரும் செம்பூத்தை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த தேன் சிட்டுகள் எங்கே, மைனாக்கள் எங்கே, வேலியில் போட்டி போட்டு ஓடும் ஓனான் எங்கே. குண்டுமணி செடி எங்கே, தினமும் காலையில் கோவைப் பழம் பறித்த செடிகள் எங்கே, எங்கள் வீடெதிரே இருந்த ஒரு மரங்கள் நிறைந்த வெளியின் மேல் அடர் சிக்கல் நிறைந்திருந்த இருப்பிடத்தில் தொங்கி கொண்டிருந்த ஒரே ஒரு தூக்கணாங்குருவி கூடு எங்கே.. எங்கே....கேள்விகள் ஏராளம், பதில்......????
கண்கள் கசிய வைத்த நாடோடிக்கு நன்றி. -:(

ஆதிமூலகிருஷ்ணன் said...

சொன்னதைச்செய்வோம்.. செய்வதைச்சொல்வோம்.. பார்த்துட்டோம் படங்களை.. பாராட்டுகளுக்குத் தகுந்தவை. அருமை.!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரகுநாதன், (பின்னூட்டத்திலேயே அசத்துறீங்களே நண்பா).

நன்றி ஆதி,(உங்க பொறுப்புணர்ச்சி புல்லரிக்க வைக்குதுங்க,பின்னூட்டம் போடாவிட்டாலும் நீங்க படங்களைப் பார்த்திருப்பீங்கன்னு நெனச்சேன்,கிராமம் சார்ந்த பதிவாச்சே..)

விக்னேஷ்வரி said...

படங்கள் மிக அழகு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி.

முனைவர் சே.கல்பனா said...

அழகான படங்கள் .......எங்கள் கிராமத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு நன்றி.

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றி முனைவர் சே.கல்பனா.