Friday, July 31, 2009

பதிவர்களை கண்டுபிடியுங்கள் (week end விளையாட்டு).

1.தன் பெயரின் தொடக்கத்திலியே தொடக்கத்தை வைத்திருக்கும் இந்த பதிவரின் முதல் இரண்டெழுத்தில் நெடிலை குறிலாக்கி மூன்றாவதாக ஒரு எழுத்தைச் சேர்த்தால் கிடைப்பது இன்னொரு பிரபல பதிவர்.

2.மூவேந்தர்களில் சேரர்களை மட்டும் ஏனோ இந்த பதிவரின் பெயரோ , வலைப்பக்கமோ ஞாபகப் படுத்துவதில்லை .

3.இரு பாகங்களாக இருக்கும் இந்த பதிவரின் இரண்டாம் பாகத்தின் பெயரில் ஒரு எழுத்தை மாற்றினால் விஜயின் அடுத்தப் படப் பெயரின் சுருங்கிய வடிவம் .

4.இந்த பதிவரின் பெயரும் இரண்டு பகுதிகளாகவே இருக்கும் முதல் பகுதியின் முதல் எழுத்தையும் ,இரண்டாம் பகுதியின் கடைசி எழுத்தையும் சேர்த்தால் இரண்டாம் பகுதி முழுவதும் கிடைக்கும்.

5.பெயரின் முதல் பாதியில் உண்மையையும் இரண்டாம் பாதியில் விஜயகாந்த் நடித்த படத்தின் பெயரையும் கொண்ட பதிவர்.

6.புல்லாங்குழல் கடவுளின் பெயரைக் கொண்ட பதிவர். இவரின் முன் பாதியில் ஒரு எழுத்தைச் சேர்த்தால் ஆலயத்தோடு காட்சித் தருவார்.

7.குழந்தைகளின் ஃபேவரிட் கார்ட்டூன் கேரக்டரின் பெயரை தன் பயரில் கொண்டிருக்கும் செய்தி பரப்பும் பதிவர்.

8.இந்த பதிவரின் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் கொஞ்ச காலங்களுக்கு முன்பு சிறிது பிரபலமாய் இருந்து காணாமல் போன ஒரு நடிகரின் பெயர் கிடைக்கும்.

9.கடைகளுக்கு ரொம்ப அவசியமான பதிவர்,இவரின் பெயரில் ஒரு பத்திரிகைக் கூட வெளிவந்து கொண்டிருந்தது(இப்போதும் வருகிறதா தெரியவில்லை).

10.ரட்சகன் நாயகிக்கும்,ஆயிரத்தில் ஒருவன் நாயகிக்கும் உள்ள ஒற்றுமையையும் ,ஆங்கில அவளையும் சேர்த்தால் கிடைப்பது இந்த பதிவரின் பெயர்.

22 comments:

கோவி.கண்ணன் said...

//6.புல்லாங்குழல் கடவுளின் பெயரைக் கொண்ட பதிவர் இவரின் முன் பாதியில் ஒரு எழுத்தைச் சேர்த்தால் ஆலயத்தோடு காட்சித் தருவார்.//

கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு !
:)

கார்க்கி said...

1) ஆதி & அதிஷா

2) கார்த்திகைப்பாண்டியன்

10) சென்ஷி

மத்தவங்கள எனக்கு தெரியுமான்னு தெரியல

கோவி.கண்ணன் said...

//9.கடைகளுக்கு ரொம்ப அவசியமான பதிவர்,இவரின் பெயரில் ஒரு பத்திரிகைக் கூட வெளிவந்து கொண்டிருந்தது(இப்போதும் வருகிறதா என தெரியவில்லை).
//

நீதித்துறைக்கும்..!

டக்ளஸ்... said...

1. ஆதி / அதிஷா.
3. வட கரை வேலன்.
5. உண்மைத் தமிழன்.
6. பரிசல்காரன்.
7. லக்கிலுக்.
8. வெயிலான். (ரமேஷ்/ஹிமேஷ்/ ரித்திஷ்)
10. சென்ஷி.. (ஆயிரத்தில் ஒருவனை "மின்னலே"என்றாக்கினால் பொருந்தும். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு கதா நாயகிகள். மேலும் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவனும் உண்டு.)

டக்ளஸ்... said...

2. கார்த்திகை பாண்டியன்.
4. நையாண்டி நைனா.

Marathamizhan said...

Hi Ilakkiyan,

2.Karththikai Pandiyan
10.Senshi

Natpudan
Marathamizhan.

டக்ளஸ்... said...

9 மட்டும் தெரியல பாஸ்..!

நையாண்டி நைனா said...

(*லேபிளை காண்க*)

"பதிவர்களை" எண்ணிய உடனே, "மொக்கையும்" உங்க நினைவில் வந்த இந்த உள்குத்தை நான் வன்மையாக, மிக வன்மையாக கண்டிக்கிறேன்...

ஆமா நான் தெரியாமை தான் கேட்குறேன், என்னோட பதிவெல்லாம் உங்களுக்கு மொக்கையா?

நையாண்டி நைனா said...

/* :(வீக் end விளையாட்டு)*/
இதை கொஞ்சம் ஆழ்ந்து கவனிச்சா...
ஒன் மீனிங், டபுள் மீனிங், ட்ரிபுள் மீனிங்கா வருதே..!!!

நாடோடி இலக்கியன் said...

கார்க்கியின் இரண்டு விடைகளும் சரி,மற்ற பதிவர்களையும் உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

கோவியாரே என்ன குசும்பா?

டக்ளஸ், நீங்க கொடுத்திருக்கும் விடைகளில் பாதிதான் நண்பா சரி.

மறத்தமிழனின் இரு விடைகளுமே சரி.

ரொம்ப ஈஸியா கொடுத்திட்டேன் போலிருக்கு.
:)

டக்ளஸ்... said...

raittu..
Wait panreen.

நாடோடி இலக்கியன் said...

Enable transliteration பண்ணின வேலை,கவனிக்கல நையாண்டி சார்.இப்போ சரியாக மாற்றிவிட்டேன், இருந்தாலும் இப்படி ஒரு ஆராய்ச்சியா ஓவர் நக்கல்தாம்யா உமக்கு.

நாடோடி இலக்கியன் said...

இது ரொம்ப பழைய டெக்னிக் டக்ளஸ் & நையாண்டி,எதாவது புதுசா ட்ரை பண்ணுங்க கண்ணுகளா.

டக்ளஸ்... said...

6. கோவி.கண்ணன்

நாஞ்சில் நாதம் said...

1. ஆதிமூல கிருஷ்ணன் / அதிஷா
4. நையாண்டி நைனா
5. உண்மைத்தமிழன்
6. கோவி.கண்ணன்
8. கார்கி / ராம்கி
9. தராசு
10. சென்ஷி

நாடோடி இலக்கியன் said...

நாஞ்சில்நாதம் 1,4,6,9,10 சரியான விடைகள்,8வது பதில் நல்ல கெஸ் பட் பதில் வேற.

நாஞ்சில் நாதம் said...

1. ஆதி / அதிஷா
2. ---
3. பரிசல்காரன்
4. நையாண்டி நைனா
5. உண்மைத்தமிழன்
6. கோவி.கண்ணன்
7. தண்டோ.....ரா
8. கார்கி / ராம்கி
9. தராசு
10. சென்ஷி

நாடோடி இலக்கியன் said...

நாஞ்சில்நாதம்,
நண்பா 7வது பதிலும் மிகச் சரி.இதுவரை வந்த பதிலில் நீங்கதான் அதிகமான பதிவரை கண்டிபிடிசிருக்கீங்க.

நாடோடி இலக்கியன் said...

மூன்றாவது கேள்விக்கான பதில் இதுவரை டக்ளஸ் மட்டுமே சரியான பதிலை தந்திருக்கிறார்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

எனக்கு இதெல்லாம் பிடிக்காது, சீக்கிரம் பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ணுங்கய்யா..

நாஞ்சில் நாதம் said...

2.பொன்னியின் செல்வன்-கார்த்திகைப் பாண்டியன்
3.வடகரை வேலன் / வேடன்

நாடோடி இலக்கியன் said...

இந்த பதிவு நேற்று பதிவிட்ட நேரத்திற்கு முன்பாக தமிழ்மணத்தில் தோன்றிய பதிவர் பெயர்களை வைத்து திடீர் போஸ்ட்,இந்த வார கணக்கிற்கு எதாவது ஒரு போஸ்ட் போடுங்க என்று கேட்ட நண்பர் அர்விந்த்(இரும்புத்திரை) அவர்களின் விருப்பத்திற்காக பதிவிட்டது.

விடைகள் இதோ:
1.ஆதி/அதிஷா
2.கார்த்திகைப் பாண்டியன்(வலைப்பக்கப் பெயர் பொன்னியின் செல்வன்)
3.வடகரை வேலன்(வேட்டைக்காரன் - வேடன்)
4.நையாண்டி நைனா
5.நிஜமா நல்லவன்
6.கோவி.கண்ணன்
7.தண்டோரா
8.கும்கி(பதிவரோட பெயர் கும்க்கி --- ஒரு எழுத்தை மாற்றினால் ஒரு நடிகரை ஞாபகப் படுத்தும் அவரின் பெயர் என்று கொடுத்திருக்க வேண்டும்-- ராம்கி)
9.தராசு
10.சென்ஷி
அதிக பட்சமாக 8 பதிவர்களை நண்பர் நாஞ்சில் நாதம் கண்டுபிடித்திருக்கிறார்.போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் கோவி.கண்ணன்,கார்க்கி,டக்ளஸ்,
மறத்தமிழன்,நையாண்டி நைனா, ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் நாதம் அனைவருக்கும் மிக்க நன்றி.