விஜய் ஒரு நல்ல நடிகர் என அறியப்பட்ட ‘பூவே உனக்காக’ காலத்திற்கு முன்பே வெளியான ’தேவா’, ’கோயமுத்தூர் மாப்ளே’ காலத்திலிருந்தே விஜயை எனக்குப் பிடிக்கும். குருவி,வில்லு ஆகிய படங்களைப் பார்த்தப் பிறகு விஜயைப் பிடிக்கும் என்பதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடுத்தமுறை சரி செய்துவிடுவார் என்று சுய சமாதானம் செய்து கொண்டான் எனக்குள் இருக்கும் விஜய் ரசிகன் (கட் அவுட்,பாலாபிஷேகம் டைப் ரசிகன் இல்லை, ஜஸ்ட் பிடிக்கும்). ஆனால் ”இதுக்கு மேலயும் நீ சுய சமாதானம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?” என்று குமுற ஆரம்பித்திருக்கிறான் அதே ரசிகன். (முடியல).
சரி கதைக்கு(?) வருவோம்,எத்தனையோ படத்தில் பார்த்து பார்த்து சலித்துப்போன சிட்டியில் அட்டகாசம் செய்யும் தாதாவை ஒழிப்பதுதான். திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியிலிருந்து சென்னைக்கு வந்து வதம் செய்தார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து அவதாரம் எடுக்கிறார்.இம்மாதிரியான கதைகளில் இருக்கும் பரபரப்பான திரைக்கதை இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். படத்தின் முக்கியத் திருப்பமாக வரும் இடத்தில் வில்லன் சலிம்கௌஸ் விஜயிடம் தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் காட்சி ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாய் இருந்து போகப்போக எஸ்.பி.முத்துராமன் காலத்துக்கெல்லாம் அழைச்சிட்டுப்போய் கொட்டாவி விட வைக்கிறது. காதல் காட்சிகளிலிருந்து ஆக்ஷன் காட்சிகள் வரை ஒரு கண்டினியூட்டி இல்லாதது போலவே தெரிந்தது.
விஜயின் அறிமுகக் காட்சி நன்றாகயிருந்தது அதைத் தொடர்ந்து வரும் சில குளோசப் காட்சிகளிலும் விஜய் அழகாய் தெரிந்தார்.தூத்துக்குடியில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் விஜய் செய்யும் கலாட்டாக்கள் ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் ரசிக்கலாம். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. காதல் காட்சிகளில் விஜய்க்கென்றே இருக்கும் சில மேனரிஸங்களையே செய்திருந்தால் கைதட்டல் வாங்கியிருக்கும் இடங்களில் ரஜினியை இமிடேட் செய்து சொதப்பியிருக்கிறார். வில்லனை சந்திக்கும் காட்சிகளிலும் பாட்ஷாவை ஃபாலோ பண்ணியிருக்கிறார்.
விஜய் படங்களில் முக்கிய பங்காற்றும் நடன அமைப்புகளில் இந்த படம் மிகப் பெரிய ஏமாற்றம். ’சின்னத்தாமரை’ பாடலில் விஜயின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள முடியாத அளவுக்கான ஹேர்ஸ்டைல். (என்ன கொடுமை ஸார் அது). அனுஷ்காவை வில்லன் கடத்தி வைத்திருக்கும்போது வில்லனிடம் விஜய் பேசும் ”என்னமோ பேசனும்னு சொன்னியே” காட்சி மட்டும்தான் விஜய் இருப்பிற்கான அடையாளம்.
குருவி ரயில்வே பிரிட்ஜ் ஜம்ப் அளவிற்கு காமெடி இல்லாவிட்டாலும் கைவிலங்கோடு போலிஸிடமிருந்து தப்பிக்கும்போது ஓடிக்கொண்டே விலங்கை வாயில் சாவியை வைத்து நொடிப்பொழுதில் திறப்பது,பிரமாண்ட உயர அருவியிலிருந்து குதிப்பது என இதிலும் சில காட்சிகள் அந்த வகையில் இருக்கிறது. என்னவோ பால்காரன்,பேப்பர் போடுகிறவன் போல் சர்வ சாதாரணமாய் வில்லனின் வீட்டுக்கு போயிட்டு வருவதெல்லாம் ரொம்ப ஓவர். ஹிரோயிச துதிபாடும் காட்களிலெல்லாம் ’தான்’ என்ற ஆங்காரத் தோரணை விஜயிடம்.(ண்ணா கொஞ்சம் அடக்கியே வாசிங்க). ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக் அதிகமாக இல்லை.
அனுஷ்கா வழக்கமான விஜய் படத்தின் கதாநாயகிகள் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார். தொழிலதிபரை மணக்கும் வயதில் இருப்பது போன்று தெரிவதால் அனுஷ்கா- விஜய்” சோடி பொருத்தம் அம்புட்டு ஒன்னும் சொகமாயில்லை”. பொண்ணு என்னா உயரம்(சிங்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாமே காம்பினேஷன் காட்சியிலெல்லாம் ஸ்டூல் தேவை படும்),சிரிக்கும்போது மனசை அள்ளுகிறார்.
வில்லனாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு சலிம்கௌஸ்(சின்னக் கவுண்டர் வில்லன்) , இவரின் கேரக்டரைசேஷன் ரசிக்கும்படி அமையாவிட்டாலும் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் வில்லத்தனங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளெல்லாம் அதரப் பழசானவை.இவரின் மகனாக இன்னொரு வில்லன் படம் நெடுக எரிச்சலைக் கிளப்புகிறார். அவரைப் பெண்பித்தனாய்க் காட்ட சித்திரித்திருக்கும் காட்சிகளெல்லாம் மகா மட்டமான சிந்தனை.
தேவராஜாக வரும் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது,ஆனாலும் கண்பார்வை இழந்த அவர் கிளைமேக்ஸில் விஜயோடு சேர்ந்து நல்லா காமெடி செய்திருக்கிறார்.(யப்பா டைரக்டரு எப்படி இப்படியெல்லாம்).
ஷாயாஜிஷிண்டே,கொச்சின் ஹனிஃபா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சத்யன் நட்பு சென்டிமெண்ட்டுக்காக.கொச்சின் ஹனிஃபாவின் அந்த ”ஆறு பேரு சேர்ந்து ....... என்னாகும்” ரொம்ப ஓவரு. (இருந்தாலும் நான் சத்தமாய் சிரித்தக் காட்சி அது ஒன்னுதான்).
இசை விஜய் ஆண்டெனி,பாடல்கள் ஏற்கனவே ஹிட். பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் நன்றாகவே செய்திருக்கிறார் குறிப்பாய் சண்டை காட்களில் பயன்படுத்தியிருக்கும் பறையடிப்பது போன்ற சத்தம்.பாடல்கள் ரகளையாக இருந்தும் காட்சிப் படுத்துதலில் சொதப்பியிருக்கிறார்கள்.
திரைக்கு மிக அருகில் அமர்ந்து படம் பார்த்ததால் ஒளிப்பதிவைப் பற்றி நான் பேசுவது கூடாது.
டைரக்ஷன் பாபு சிவன், இவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ”எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?” என்று கேட்பதைத் தவிர.
வேட்டைக்காரன் - ரஜினிகள் ஆசையால் போட்டுக்கொண்ட சூடு .
டிஸ்கி: ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது நீண்ட க்யூவில் தாய்குலங்கள் உட்பட செகண்ட்ஷோவிற்கு நின்றார்கள். இவ்வளோ ஆர்வமா வர்றவங்களுக்கு கமர்சியல் ஃபார்முலாவிலேயே விஜய் வேற ரூட் பிடிச்சா நல்லாயிருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு எழுதிய கற்பனை வேட்டைக்காரனின் விமர்சனம் இங்கே:
13 comments:
மல்லிப்பூ செண்டால சாஃப்ட்டா அடிச்சிருக்கீங்க..!
ஆனாலும் உஙக்ளுக்கு இளகின மனசு..
//ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக் அதிகமாக இல்லை//.
appom padatha pakalam !!!!!
நீங்க முன்னாடி எழுதின வேட்டைக்காரன் கதையே நல்லாயிருந்தது.
திட்டிகிட்டே பார்த்துடுவீங்களா:))
@உண்மைத்தமிழன்,
(வணக்கம் அண்ணா,
சாஃப்டா அடிச்சாலும் சரியாத்தானே அடிச்சிருக்கேன்,இப்போ அங்கங்கே கொஞ்சம் டிங்கரிங் பண்ணியிருக்கேன்).
@கேபிள் சங்கர்,(இப்ப கொஞ்சம் இறுகியிருக்கு சங்கரண்ணா).
@ ரமேஷ் கார்த்திகேயன்,(விதி வலியது).
@பாலாசி,(நானும் அதேதான் ஃபீல் பண்ணேன்).
@வானம்பாடிகள்,(இனியும் போவேNO).
உண்மையான விமர்சனம் என்று நினைக்கிறேன். படம் சூப்பர் ஹிட்டுன்னு சன் டிவி செய்தியில சொல்லுறாங்க இலக்கியன் என்ன கொடுமை பாருங்க.
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை .
ATM,வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.
விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.
ஆனா நாங்க (நாம) மாறிட்டோம்.
உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.
வேட்டைக்காரன் ... குருவி...வேட்டைக்காரன் ... குருவி... தலைப்பு தான் மாறி மாறி வருகிறது.
:)
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ஜென ரஞ்சக நடிகர்களுக்கு பார்முலா படங்கள் தான் எடுபடும். அது அவர்களே அமைத்துக் கொண்ட சுய வேலி.
@சே.குமார்,(தெனாவட்டு படத்தையே சூப்பர் ஹிட்டுன்னு சொன்னாங்க அதைவிடவா இது கொடுமை ).
@செந்தில்,(கில்லி மாதிரி வந்தால் பார்க்கலாம் என்பதுதான் என் விருப்பம்).
@கோவி.கண்ணன்,(அப்படியே அந்த வேலியை தியேட்டரைச் சுற்றியும் போட்டா நல்லாயிருக்கும்).
// க.பாலாசி :நீங்க முன்னாடி எழுதின வேட்டைக்காரன் கதையே நல்லாயிருந்தது.//
:)
ரிப்பீட்டு...
@பூங்குன்றன்,(ஹி ஹி).
@ஸ்ரீமதி,(போன இடுகையை (கீதாரி மக) படிக்கவில்லையா?பிடிக்கவில்லையா சகோ).
Post a Comment