கன்னலும் தென்னையும் கொஞ்சும் ஒரு இளந்தென்றல் நேரம்(இது மாதிரியான கரும்புக் கொல்லைகளில்தான் சில குறும்பு கொள்ளைகளும் நடக்கும்)
கட்டு கட்டு கதிரு கட்டு(களத்து மேட்டுக்கு காத்திருக்கும் கதிர் கட்டுகளில் கருப்பாய் தெரிவது கரிச்சாங்குருவி)
எருக்கம் பிஞ்சும், பஞ்சும்(வெடித்துப் பறக்கும் எருக்கம் பஞ்சு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும்)
ஆறுமுகக் கள்ளி(படத்தில் தெரிவது போல் சுற்றிலும் ஆறு முள் தொடர்களை கொண்டிருப்பதால் இப்பெயர்,இதன் பூ வெண்மை நிறத்தில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் விதத்தில் இருக்கும்,தடித்து நீண்ட இதன் காம்பிலிருந்து பூவை கிள்ளிவிட்டால் காம்பைப் பார்ப்பதற்கு ஷேவ் பிரஷ் மாதிரி இருக்கும்)
வண்டிச் சுவடு (ஒரு சுவடு நீ, மறு சுவடு நான் , இடையில் பசுமையாய் நம் காதல்..! ஆஹா கவித கவித)
( பெண் பனை)
ஆண் பனை.
சென்ற மாதம் ஆனந்தவிகடனில் மதன் பதில்களில் கேட்டிருந்த கேள்வி ஒன்றில் தாவரங்களில் ஆண்?பெண் உண்டா என்று ஒருவர் கேட்டிருந்தார்,அதற்கான பதிலாக "இல்லை" என்று சொல்லியிருந்தார்.இங்கே இருக்கும் பனை மரங்களில் நொங்கோடு இருப்பதை பெண் பனையென்றும் மற்றொன்றை ஆண் பனையென்றும் எங்க ஊரில் சொல்வாங்க.(யாருக்காவது அறிவியல் விளக்கம் தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க மக்கா).
கிலுகிலுப்பைச் செடி,கிளுகிளுப்புச் செடி அல்ல(இதில் உள்ள விதைகள் கிலுகிலுப்பை போன்று சத்தம் கொடுக்கும்)
ஜோடித் தென்னை மரங்களைப் பார்த்து பொறாமையில் கருகியிருக்குமோ அந்த ஒற்றைத் தென்னை.(இடி தாக்கிய தென்னை)
16 comments:
வாவ்
அசத்தல்
ஆண் பனை பற்றி எங்கோ படித்திருக்கிறேன்.
nice photos
அசத்தல் போட்டோ. பாஸ் நீங்க எந்த ஊரு
ஆண் பனையில் பதநீர் எடுக்கலாம். அது மட்டும் தான் எனக்கு தெரியும்
நல்லாயிருக்கு நண்பா!
நன்றி முரளி,(ஆண் பனை பார்த்ததில்லையா?)
நன்றி நாஞ்சில்நாதம்,(தஞ்சாவூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்)
நன்றி நான் ஆதவன்,
///(தஞ்சாவூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்)
///
சிறிய கிராமத்துக்கெல்லாம் பேர் இருக்காதா? பேரை சொல்லுங்க பாஸு....
நன்றி சிவகுமரன்,(எங்க ஊரு பேரு முதலிப்பட்டி)
ஆண் பப்பாளி,பேரீட்ச்சை மரங்களும் இருக்கு.
கிளுகிளுப்பை காயை அமுக்கினா வெடிக்கும்.
எல்லாப் படங்களும் சூப்பரப்பு.. ஓய்.. கிராமத்தான்கள் கூட்டம் பெரிசா இருக்குடோய்.. :))
ரசனையான புகைப்படங்கள்.! (நம்மூரு வீடீயோ பாத்தீங்கதானே.!)
பனை மட்டுமல்ல, பப்பாளியிலும் ஆண், பொண் என்று உண்டு. சாதரணமக பூக்களில் மகர்ந்த குறியும் சுளகமும் ஒரே பூவிலேயே அமைந்திருக்கும். ஆனால் இவ்வாறான தாவரங்களில் மகரந்த்குறி ஒரு தாவரத்திலும் சுளகம் மற்றைய தாவரதிலும் இருக்கும். ஆண் பனை மற்றும் பப்பாளி காய்க்க மாட்டா. இதற்கு காரணம் இதுவே. இவை விலங்களை போல பால் வேற்றுமையுள்ளவையே.
நன்றி மனசு,(பப்பாளி பற்றித் தெரியும் பேரீச்சை பற்றியத் தகவல் எனக்கு புதிதுங்க).
நன்றி சஞ்சய்,(கிராமத்தாய்ங்க ஒன்னு கூடிட்டோம்ல,இனி ரகளைதான்).
நன்றி ஆதி,(உங்க வீடியோவை பற்றி எனது பதிவில் எழுதியும் இருக்கிறேன் ஆதி).
நன்றி காகிதப்பூ,(ஆம்,நானும் கூட +2 வில் படித்ததாக ஞாபகம்,தகவலுக்கு மிக்க நன்றிங்க)
//(யாருக்காவது அறிவியல் விளக்கம் தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க மக்கா//
ரொம்ப நாளா நம்ம மண்டையிலேயும் இந்த கேள்வி கிடக்கு.
அப்புறம் ஆண் பனைதான் நமக்கு இஷ்டம் முதல்ல ஏன்னா அதுலதான் நம்ம சரக்கு கள்ள இறக்கி தருவாங்க ஆனா இப்போ இல்ல . இப்பொ பெண் தான் ஊருக்கும் வெயில் காலத்தில் போகும் போகுது வெட்டி சரிச்சு நுங்க நொங்கிட்டு வராமல் இருப்பதில்லை..
/ஆண் பனையில் பதநீர் எடுக்கலாம்.//
நல்ல சொல்றாய்ங்கப்பா டீட்டெயிலு பதனீராம்ல சிருபுள்ளதனமா .. கள்ளு சூளுவா கிடைக்கும் போது அத விட்டுட்டு அதுல சுண்ணாம்பு போட்டு சுத்து சுளுக்கெடுத்த பதநீர் எடுக்கலாம்னு சொல்றார்.
நன்றி சூரியன்,
//ஏன்னா அதுலதான் நம்ம சரக்கு கள்ள இறக்கி தருவாங்க//
//கள்ளு சூளுவா கிடைக்கும் போது //
எப்போ பாரு கந்தனுக்கு புத்தி ----- மாதிரி உம்ம புத்தி அங்கதான் நிக்குது ...ஹிஹி.
mapla supper poga
Post a Comment