Friday, July 10, 2009

டயலாக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

சென்னையில் வேலை தேடும் வேலையில் இருந்த இரண்டு நண்பர்களிடையே நடந்த மேன்ஷன் உரையாடல்.

நண்பர்1:டேய் எறுமை எழுந்திரிடா மணி பத்தாச்சு இப்படித் தூங்கதான் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கியா?

(தூக்கத்தில் இருந்த நண்பர் 2 மிகுந்த டென்ஷனோடு)

நண்பர்2:ஏன்டா பன்னி, இப்படி டெய்லியும் என்னை எழுப்பிவிடத்தான் நீ கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கியா?

நண்பர்1:?????


சாலையோரத்தில் நடந்து போகும் நண்பர் மீது டூ வீலர் ஓட்டி வரும் ஒரு டீன் ஏஜ் பையன் பேலன்ஸ் தவறி மோதியதும் நடந்த உரையாடல்.

பையன்:அண்ணே புது வண்டி இன்னிக்குத்தாண்ணே எடுத்துட்டு வந்தேன்,சாரிண்ணே இப்போதான் ஓட்டக் கத்துக்கிறேன் அதான் தெரியாம...

நண்பர்:என்னைப் பார்த்தா உனக்கு எலுமிச்சம்பழம் மாதிரி இருக்கா? எலுமிச்சம்பழம் ரவுண்டா மஞ்சளா சின்னதா இருக்கும் அதுல ஏத்து.

பையன்:?????

இரண்டு நண்பர்கள் ஷேர்ட் பர்சேஸ் செய்தபோது,சேல்ஸ்மேன் 600 ரூபாய் ஷேர்ட்டில் ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து இருனூற்றைம்பது ரூபாய் ஷேர்ட்டைக் காட்டியதும்,அதில் ஒன்றை செலக்ட் செய்த நண்பரிடம் மற்றொரு நண்பர் கிசுகிசுப்பான குரலில்,

நண்பன் 1: ஏன்டா நாதாரி, கடைசியா உங்கிட்ட எர‌னூத்தி அம்ப‌து ரூபாதான் இருந்திச்சா?

நண்பன் 2:கடைசியா இல்லடா, கடையில் நுழைஞ்சப்பலேருந்தே அவ்வளவுதான் இருந்துச்சு.

நண்பர் 1:?????

விடுதியில் தங்கிப் படிக்கும் மூன்று மாணவர்களுக்குள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பற்றி பேசிக்கொண்டது,

நண்பர் 1 :என்னடா ரிசல்ட் என்னாச்சு?

நண்பர் 2:ச்சே ஒரு பேப்பர்ல ஜஸ்ட் நாலு மார்க்குல போச்சுடா.

(அறையில் படுத்திருக்கும் மற்றொரு நண்பணிடம் நண்பர் 1)

நண்பர்1:உன்னோட ரிசல்ட் என்னாச்சுடா?

(மூன்றாவது நண்பர் பதில் சொல்வதற்குள் இரண்டாவது நண்பர் முந்திக்கொண்டு)

நண்பர் 2:எனக்காவது நாலு மார்க்குல போச்சு,அவன் எடுத்ததே நாலு மார்க்தாண்டா.(என்று சொல்லியபடியே ஹா ஹாவென சிரிக்க,டென்ஷனான மூன்றாவது நண்பர்)

நண்பர் 3:செத்தவன் காலு வடக்கே இருந்தா என்ன,தெற்கே இருந்தா என்ன?
மொத்தத்தில் ரெண்டு பேரும் ஃபெயிலு இதில என்ன உனக்கு கம்பேரிஷன் வேண்டிக்கிடக்கு.

(நண்பர் 1 சிரிக்க ,நண்பர் 2 முறைக்க நண்பர் 3 இழுத்து போர்த்திக் கொண்டு தூக்கத்தைக் கண்டினியூ செய்கிறார்.)

11 comments:

நாஞ்சில் நாதம் said...

யப்ப்ப்ப்பாட ஒரு நல்ல காமெடி பதிவு

நையாண்டி நைனா said...

:))

தினேஷ் said...

/என்னைப் பார்த்தா உனக்கு எலுமிச்சம்பழம் மாதிரி இருக்கா? எலுமிச்சம்பழம் ரவுண்டா மஞ்சளா சின்னதா இருக்கும் அதுல ஏத்து.//

கவுண்டர் ஸ்டைல்..

//ஏன்டா பன்னி, இப்படி டெய்லியும் என்னை எழுப்பிவிடத்தான் நீ கோயம்புத்தூரிலிருந்து வந்திருக்கியா//

நீங்க வாங்கின திட்டுதானே..

/கடைசியா இல்லடா, கடையில் நுழைஞ்சப்பலேருந்தே அவ்வளவுதான்டா இருந்துச்சு//

ஆவ்வ்வ்வ்வ் .. உண்மைங்கண்ணா..

/செத்தவன் காலு வடக்கே இருந்தா என்ன,தெற்கே இருந்தா என்ன?
மொத்தத்தில் ரெண்டு பேரும் ஃபெயிலு இதில என்ன உனக்கு கம்பேரிஷன் வேண்டிக்கிடக்கு//

அசால்ட்..

shabi said...

EXAM RESULT சூப்பர்

நாடோடி இலக்கியன் said...

சிரித்து மகிழ்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

சூரியன்,
//நீங்க வாங்கின திட்டுதானே.//

(அப்படியே உல்டாவா கேட்குறீங்களே நண்பா)

விக்னேஷ்வரி said...

:))))

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சுரேகா.

மங்களூர் சிவா said...

:)))))))

நாடோடி இலக்கியன் said...

நன்றி மங்களூர் சிவா,

Unknown said...

nalla kalakkal