Thursday, July 23, 2009

சினிமா பாடல் க்விஸ் (சும்மா டைம் பாஸ் மச்சி)

இன்றைய திரைப் பாடல்களில் கவிதை நயம் குறைந்து கொண்டே வரும் வேளையில், சில பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கவிதை நயமிக்க சில பாடல் வரிகளை இங்கே கொடுத்திருக்கிறேன். எந்த பாடல்களில் இடம் பெற்ற வரிகள் இவை என்பதுதான் போட்டி.

1.
"இதயம் ராத்திரியில் இசையால் அமைதிபெறும்

இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்புப் பாறையிலும் இசையால் நீர்க் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்"


2."எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்"

3."சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பச்சிகள் வாழும் கூடுகள்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு வின்னைத் தீண்டுதே"

4."ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றைப் போலே நெஞ்சை விட்டு போகுமா
அந்தி வந்து சேர்ந்த பின்னே நாள் முடிந்து போனதா
சந்தனம்தான் காய்ந்த பின்னே வாசமின்றிப் போனதா"

5."கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன்மின்னல்
நடந்து போகின்றது"

6."நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்"


7."மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்"

8."பறவைகள் பறந்து செல்ல
பள்ளம் மேடு வானில் இல்லை
நீயும் நானும் பறவை ஜாதியே
நிம்மதிக்கு தடைகள் இல்லையே"

9."கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது?
ஆகாயம் எங்கிலும்
நீலம் யார் தந்தது ?
இயல்பானது"

10."நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி"

35 comments:

நாஞ்சில் நாதம் said...

7.நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

ஒண்ணு தான் இப்போது கண்டுபிடிக்க முடிந்தது. மீதி பிறகு

Raju said...

இங்கயும் க்விஸா..?

Raju said...

\\7."மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்"\\

இது "மறுபடியும்" படத்துல வர்ற பாட்டுதான்..!
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்ன்னு ஆரம்பிக்கும்
அரவிந்த்சாமி கூட வீணை (ஆதுதான் வீணை..?) வாசிச்சுக்கிட்டே பாடுவாப்ல ஸாரி..வாயசைப்பாப்ல.

Raju said...

உஹூம்..இது வேலைக்காகாது..
கூப்டுங்கய்யா முரளி கண்ணன..!
அவர்தான் இதுக்கெல்லாம் சரியான ஆளு.
ஒரு கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லியிருக்கேன்.
பார்த்து ஏதாவது போட்டுக் குடுங்க இலக்கியன் அண்ணே.

நாடோடி இலக்கியன் said...

நாஞ்சிநாதம் மற்றும் டக்ளஸ் இருவருமே சொல்லியிருக்கும் விடை சரியே,மீதியையும் கண்டு பிடிங்க.

குரு said...

2. Thalattum Poongatru
3. Ila nenje vaa
6. Ellorum sollum pattu(!!)
7. Nalam Vaazha
9. Oru kadhal devathai
10. poo poo poo

Avlo thanga namma chinna arivuku therinchathu

Unknown said...

1. வானமழைப் போலே புதுப்பாடல்கள்- இது நம்ம பூமி.

2.தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா- கோபுர வாசலிலே

3.K.J.ஜேசுதாஸ் பாடின பாட்டு.. படம் வண்ண வண்ண பூக்கள்ன்னு நினைக்கிறேன்.. முதல் வரி நியாபகம் வரல.. :((

7. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்- மறுபபடியும்.

9. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்- இதயத் தாமரை.

Unknown said...

3. இள நெஞ்சேவா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்...

நாடோடி இலக்கியன் said...

குரு மற்றும் ஸ்ரீமதி இருவருமே சொல்லியிருக்கும் அனைத்து விடைகளும் சரியே,மீதியையும் கண்டு பிடிங்க.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கண்டுப்பிடிச்ச வரைக்கும் எதுவும் பொன்முடிப்பு கிடையாதா?? ;)))

Raju said...

அதென்னாதுங்க BTW...?

Unknown said...

By the way.. :))

Unknown said...

10. பூ பூ பூத்த- புது நெல்லு புது நாத்து.

Unknown said...

6. எல்லோரும் சொல்லும் பாட்டு - மறுபடியும்

Anonymous said...

எல்லாமே நல்ல பாடல்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

7.நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

9.ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

2.தாலாட்டு....,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நெரயா கார்த்திக் படம் மாதிரியே இருக்கு தல..,

ரஜினி, கமல், விஜயகாந்த் இந்தமாதிரி கேளுங்க தல...,

நாங்க நல்லா பதில் சொல்லுவோம்

நாடோடி இலக்கியன் said...

SUREஷ்,
சொன்ன மூன்று பாடல்களும் சரியே. அடுத்த பதிவுல வெறும் ரஜினி சாங்ஸா அடிச்சு விட்டுடலாம்.

M.Rishan Shareef said...

சற்றுத் தாமதமாக வந்துவிட்டேன்.போட்டி இன்னும் முடியவில்லைதானே? மூன்றுக்கு விடை தெரியவில்லை. கேட்டிருக்கிறேன். சட்டென்று எந்தப் பாடலெனத் தோன்றவில்லை. யோசிக்க வேண்டும்.

இப்போதைக்கு தெரிந்த விடைகள் கீழே...

1. வான மழை போலே புது பாடல்கள்

2. தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

3. இள நெஞ்சே வா

4.

5.

6. எல்லோரும் சொல்லும் பாட்டு

7. நலம்வாழ எந் நாளும் என் வாழ்த்துக்கள்

8.

9. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

10. பூ பூ பூ பூப்பூத்த சோலை

அருமையான பாடல் தெரிவுகள் !

நாடோடி இலக்கியன் said...

இப்போதுதான் கமெண்ட் மாடரேஷனை எடுத்தேன் ரிஷான்.
சொல்லியிருக்கும் அனைத்து விடைகளும் மிகச் சரியே.இன்னும் மூன்று பாடல்கள்தான்.ட்ரை பண்ணுங்க.

நாடோடி இலக்கியன் said...

1. வான மழை போலே புது பாடல்கள்-இது நம்ம பூமி.

2. தாலாட்டும் பூங்காற்று நானல்லவா-கோபுர வாசலிலே

3. இள நெஞ்சே வா-வண்ண வண்ண பூக்கள்

4.மணிக்குயில் இசைக்குதடி- தங்கமனசுக்காரன்

5.கஸ்தூரி மானே கல்யாணத் தேனே- புதுமைப் பெண்

6. எல்லோரும் சொல்லும்- மறுபபடியும்.

7. நலம்வாழ எந் நாளும் என் வாழ்த்துக்கள்-மறுபபடியும்

8.தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க - புதிய தென்றல்

9. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்-இதயத் தாமரை.

10. பூ பூ பூ பூப்பூத்த சோலை-புது நெல்லு புது நாத்து.

பதிவிட்ட சிறிது நேரத்திலேயே பாதிக்கு மேல் விடைகளை கண்டுபிடித்த குரு மற்றும் ஸ்ரீமதி உங்களின் இசையார்வம், வரிகளையும் ரசிக்கும் ரசனைக் குறித்தும் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
அனைவருக்கும் பரிசாக எனது எல்லையில்லா அன்புகள்.(ரொம்ப முக்கியம்).

ஊர்சுற்றி said...

//போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
அனைவருக்கும் பரிசாக எனது எல்லையில்லா அன்புகள்//

அப்போ லேட்டா வந்த என் போன்றோருக்கு...?!

நிஜமா நல்லவன் said...

அச்சச்சோ...போட்டி முடிஞ்சுடுச்சா:(

நிஜமா நல்லவன் said...

ஒரு பணிவான வேண்டுகோள். அடுத்தமுறை போட்டி வைக்கும் போது ஒரு சில நாட்களாவது மாடரேஷன் வைங்க. ஆர்வம் உள்ள அதே நேரத்தில் தாமதமாக உங்கள் பதிவை பார்வை இடுவோர்களும் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்குமே!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஊர்சுற்றி,(அந்த ரெண்டாவது 'அனைவரும்'க்குள் நீங்களும் வந்துடுவீங்க ஊர்சுற்றி)

நன்றி நிஜமா நல்லவன்,(உங்க வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது,மைண்ட்ல வச்சிக்கிறேன்)

Sanjai Gandhi said...

எனக்கும் சிலது தெரியுதே.. :)

முன்னாடியே பார்க்காம் விட்டுட்டேன்.. என் தங்கச்சி எல்லாம் பதில் சொல்லி இருக்கா.. நான் விட்டுட்டேனே.. :(

நாடோடி இலக்கியன் said...

நன்றி சஞ்சய்,(அடுத்த முறை இன்ஃபார்ம் பண்ணிடுறேன்)

நிஜமா நல்லவன் said...

/நன்றி நிஜமா நல்லவன்,(உங்க வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது,மைண்ட்ல வச்சிக்கிறேன்)/

மிக்க நன்றி!

ஊர்சுற்றி said...

//நன்றி ஊர்சுற்றி,(அந்த ரெண்டாவது 'அனைவரும்'க்குள் நீங்களும் வந்துடுவீங்க ஊர்சுற்றி)//

உங்கள் அன்பை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். :)

Anonymous said...

1 என்னோட ஆல் டைம் பிடிச்ச பாட்டு: படம் இது நம்ம பூமி, வானமழை போல முகில்..

2. கோபுர வாசலிலே ; தாலாட்டும் பூங்காற்று....

9 இதய தாமரை : ஒரு காதல தேவதை
இவ்வளவு தான் என்னால் கண்டுபிடிக்க முடிஞ்சுது,பரிசு இருந்தா கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க :)

சிநேகிதன் அக்பர் said...

இரு பாடல்கள் கண்டுபிடிக்க முடிந்தது.

நல்ல தேர்வு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஊர்சுற்றி,

நன்றி mayil, (ஆஹா ரிசல்ட் வந்த பிறகு கொஸ்டின் பேப்பர் கேட்குறீங்களே..).

நன்றி அக்பர், (தாமதமாக வந்தாலும் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிங்க).