Sunday, August 2, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க-03/08/09

கடந்த வாரம் சனிக்கிழமையன்று திருப்பூரில் வழக்கமாகச் செல்லும் சலூனில்(இன்னும் கொஞ்ச நாள்தான் அப்புறம் அங்கே எனக்கென்ன வேலை) தலையை முடி வெட்டுபவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஆட்டிவைத்தப்படியே ஆடிக்கொண்டிருந்தேன்.

சன் தொலைக்காட்சியில் எம்டன் மகன் ஓடிக்கொண்டிருந்தது. முடி திருத்துபவர் என் தலையில் கண்ணும் தொலைக்காட்சிப் பெட்டியில் கருத்துமாக வெட்டிக் கொண்டிருந்தார்."அண்ணே டீவியைப் பார்த்துக் கொண்டே சிகைச் சேதத்திற்கு பதிலா சிரச்சேதம் பண்ணிடாதீங்க" என்ற
என் வேண்டுகோளை ஏற்று ஒருவழியா தலையை முடித்துவிட்டு, முகச் சவரத்திற்கு வந்தார்.

டீவியில் நாசர் ஃபுல் மப்பில் பரத்திற்கு சிக்கனை மல்லுக் கட்டி ஊட்ட முயலும் போது,"எனக்கு ஈரல் பிடிக்காதுப்பா" என்று பரத் சொல்லச் சொல்ல கேளாமல்,
" நீ இதை சாப்பிட்டே ஆகணும்" என நாசர் அலும்பு பண்ண அருகில் இருக்கும் வடிவேல் "இப்போ என்ன அந்த ஈரலை சாப்பிடணும் அம்புட்டுதானே இப்படி கொடுங்க நான் சாப்பிடுறேன்" என்று கேட்க சற்றும் எதிர் பாரா நேரத்தில் நாசர் பளீரென வடிவேலுக்கு அறைவிட கன்னத்தில் கைவைத்தப் படியே வடிவேல், "ரைட்டு" என்றதும் பார்பர் அண்ணன் பொங்கி வந்தச் சிரிப்பை மிகுந்த சிரமத்தோடு அடக்கியபடியே ஷேவ் செய்து கொண்டிருந்தார்.அவருடைய ஃபேஸ் ரியாக்ஷனைப் பார்த்த என்னால் சிரிப்பைக் கன்ட்ரோல் பண்ணமுடியாமல்
வெடித்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன், பார்பரும் என்னைவிட பயங்கரமாக சிரித்துக் கொண்டே கையில் கத்தியோடு சலூனை விட்டு வெளியிலேயே ஓடிவிட்டார். நான் பாதி ஷேவ் செய்யப்பட்ட முகத்தோடும், கழுத்தில் சுற்றப் பட்ட துணியோடும் சலூனில் நின்று சிரித்துக் கொண்டிருந்த போது சாப்பிட போயிருந்த இன்னொரு பார்பரும் வந்துவிட்டார். "என்னண்ணே இப்படிச் சிரிக்கறீங்க" என்று எங்கள் இருவரிடமும் கேட்டதற்கு," ஒன்றுமில்லை" என்ற படியே மீண்டும் ஷேவ் பண்ண ஆரம்பித்தார்.

மீண்டும் சிறிது நேரத்திலேயே சொல்லி வைத்தார் போல் இருவருக்கும் அடக்க முடியாமல் சிரிப்புவர, மீண்டும் அவர் வெளியில் ஓட எதுக்கு இப்படிச் சிரிக்கிறோம் என்றேத் தெரியாத இன்னொரு பார்பரும் எங்கள் இருவரையும் பார்த்து கண்ணில் நீர்வர பயங்கரமா(உண்மையிலேயே பயங்கரமா) சிரிக்க ஆரம்பித்துவிட்டார். வேலை விஷயமாக அலைந்து கொண்டே இருந்ததில் மிகுந்த டென்ஷனோடு இருந்த நான், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு படு ரிலாக்ஸ்டாக ஃபீல் பண்ணினேன். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகிவிட்டால் வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரஸ்யமாகிவிடுகிறது.


==================================
பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு விரிவுரையாளர் பணிக்காக சமீபத்தில் ஒரு தினசரியில் வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்து அதில் கொடுத்திருந்த அலைபேசிக்கு தொடர்பு கொண்டு என்னுடைய நண்பர் தன்னுடைய விபரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே எதிர் முனையில் இருந்தவர் கொஞ்சம் கூட சிரத்தையில்லாமல், "ம்ம் சீக்கிரம் சொல்லுங்க" என்று எதையும் முழுதாகச் சொல்ல விடாமல் நக்கலடிக்கும் தோரணையில் ,"சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்குறீங்க" என்றிருக்கிறார். எதிர்பார்ப்பைச் சொன்னதும்," நீங்க இப்போ பார்க்கிற வேலையையே பாருங்க அவ்வளோ சம்பளமெல்லாம் கொடுக்க முடியாது " என்று பட்டென்று இணைப்பைத் துண்டித்திருக்கிறார். இந்த மாதிரி ஆளுங்க வைத்து நடத்தும் கல்லூரிகளின் தரத்தைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அனேகமாக அவர் இதற்கு முன்பு தேங்காய் வியாபாரியாய் இருந்து ஸ்ட்ரெய்ட்டா இந்த புது வியாபாரத்திற்கு வந்திருக்கக் கூடும். நல்ல வேளை நேரில் செல்லவில்லை,நேரில் மாட்டு வியாபாரி மாதிரி துண்டை கையில் போட்டு சம்பளம் பேசியிருந்தாலும் பேசியிருப்பார்.

==================================
gtalk கில் என்னுடைய ஸ்டேட்டஸ் மெஸேஜாக "குழல் இனிது யாழ் இனிது என்பர், நான் பேசிக் கேளாதார்" என்று வைத்திருந்ததற்கு உல்டாவாக நண்பர் லக்கிலுக் அவர்கள் "குழலினிது யாழினிது என்பார் - நடுநிசி தூக்கத்தில் தம் மழலை சொல் கேட்டவர்!" என்று வைத்திருந்தார்.பதிவுலகில்தான் எதிர் பதிவு,எதிர் கவுஜ என்றுப் பார்த்தால் இங்கேயுமா, முடியல. (குட்டீஸ் தூங்கவே விடுவதில்லையா நண்பா).

==================================
டைமிங் சென்ஸ் சிலருக்குக் கை வந்த கலையாக இருக்கும். எதைச் சொன்னாலும் அதிலிருந்து காமெடி செய்வார்கள். அதுவும் நண்பர்கள் கும்பலாக இருக்கும் இடத்தில் அசால்ட்டாக வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். நம்ம பதிவுலகத்தை இந்த மாதிரி நிறைய டைமிங் சென்ஸ்காரர்கள் விரவிக் கிடக்கும் இடமாகப் பார்க்கிறேன். ரொம்ப சீரியஸாக எழுதியிருப்போம், ஜஸ்ட் லைக் தட்னு நாம நினைத்துப் பார்த்திராத அளவிற்கு மனதும் நோகாமல் எல்லோரும் ரசிக்கும்படி வார்த்தைப் பகடி செய்துவிட்டு போயிருப்பார்கள் பின்னூட்டத்தில்.

ஆனால் இதே டைமிங் சென்ஸ் தங்களுக்கு மட்டும்தான் வரும் என்கிற மாதிரி சிலர் சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் சீரியஸ்னஸ் புரியாமல் தங்களது திறமையை காட்டுகிறேன் பேர்வழியென்று எரிச்சலைக் கிளப்புவார்கள். அதுவும் இந்த மாதிரி நபர்களின் ஓரிரு ஜோக்கிற்கு சிரித்துவிட்டால் போதும், அவ்வளவுதான் அதன் பின் நாம் என்ன பேசினாலும் அவர்களின் கவனம் முழுவதும் வெறும் வார்த்தைகளிலேயே(ஓட்டுவதற்கு) இருக்குமேத் தவிர என்ன சொல்கிறோம் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் டைமிங் சென்ஸ் என்ற பெயரில் மொக்கை போட ஆரம்பித்துவிடுவார்கள், பழகிய தோஷத்துக்கு நேரடியாக சொல்ல முடியாமல் விதியேன்னு கேட்க வேண்டியதாய் இருக்கும்.

சமீபத்தில் என்னுடைய நண்பர்கள் சிலரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் இப்படித்தான் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தார், இவ்வளவுக்கும் அவர் நல்ல புத்திசாலி, திறமையானவர். எனக்குத் தெரிந்து அங்கிருந்த அனைவருமே பக்கா டைமிங் சென்ஸ் உடையவர்கள்.ஆனாலும் சூழ்நிலையின் காரணமாக அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொண்டார்கள் அந்த குறிப்பிட்ட நண்பரைத் தவிர. சில சமயம் அவரின் வார்த்தைகளிலிருந்து வேறு யாரேனும் அவரை மடக்கினால் ஒரு மாதிரி டென்ஷனானார். அடுத்தவர்களை நக்கலடிக்கும் அவர் தன்னை யாரும் அப்படி செய்தால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை. நல்ல சிந்தனையாளர் இருப்பினும் அவரிடம் இப்படி ஒரு ஆட்டிடியூட்.(ப்ச் என்ன பண்றது கேவலம் மனுஷ பிறவியா பிறந்தாச்சு, இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு விஷயத்தில் கண்ட்ரோல் இல்லாமல்தான் இருந்து விடுகிறோம் சமயங்களில்).

அடிப்படையில் நாம் நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பொது இடங்களில் நமது பிகேவியரை வைத்துத்தான் நமது கேரக்டர் தீர்மானிக்கப்படும், "ஐயோ நீங்க தவறாக புரிந்து கொண்டுவிட்டீ
ர்கள்" என்று பிறகு விளக்கம் கொடுப்பதைவிட இயன்றவரை நம்மை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நலம்.

==================================
இறுதியாக இந்த வாரம் படித்ததில் பிடித்தப் பதிவு , நண்பர் கதிர் ஈரோடு அவர்களின் மூன்றாம் உலகப் போர் பதிவு. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டியதின் அவசியத்தை சுவாரஸ்யமான நடையில் அவரின் அன்றாட நிகழ்வுகளோடு இணைத்து எழுதியிருந்தது மிகவும் பிடித்திருந்தது.கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவும் கூட.கதிர் அவர்களைப் போன்று நன்றாக எழுதும் பல பதிவர்களின் வலைப் பக்கங்கள் இப்போதுதான் என் கண்ணில் சிக்குகிறது. தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தாருங்கள் நண்பரே,வாழ்த்துகள்.

14 comments:

வெங்கிராஜா said...

//எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தார், இவ்வளவுக்கும் அவர் நல்ல புத்திசாலி, திறமையானவர்.//
அது நீங்க தானே பாசு?

வெங்கிராஜா said...

//எதுக்கு இப்படிச் சிரிக்கிறோம் என்றேத் தெரியாத இன்னொரு பார்பரும் எங்கள் இருவரையும் பார்த்து கண்ணில் நீர்வர பயங்கரமா(உண்மையிலேயே பயங்கரமா) சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.//
ஃபிரண்ட்ஸ் விஜய்-வடிவேலு காட்சி நினைவுக்கு வருது.. நல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க பாசு..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இப்போ என்ன அந்த ஈரலை சாப்பிடணும் அம்புட்டுதானே//

சிலர் அப்படித்தான் பிரதர்...,

இதுக்கும் கடைசிக் கதைக்கும் ஏதாவது தொடர்பு...,

லவ்டேல் மேடி said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

கதிர் - ஈரோடு said...

//இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகிவிட்டால் வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரஸ்யமாகிவிடுகிறது.//

நிதர்சனமான உண்மை... அருமையாக கோர்த்திருக்கிறீர்கள்

//இறுதியாக இந்த வாரம் படித்ததில் பிடித்தப் பதிவு , நண்பர் கதிர் ஈரோடு அவர்களின் மூன்றாம் உலகப் போர் பதிவு.//

நன்றி நாடோடி இலக்கியன்...
நண்பர்கள் தின பரிசாக இந்த கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்...

கதிர் - ஈரோடு said...

//நேரில் மாட்டு வியாபாரி மாதிரி துண்டை கையில் போட்டு//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருகு பாஸ்

ஸ்ரீமதி said...

நல்லா இருக்கு அண்ணா :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெங்கிராஜா.
நன்றி சுரேஷ்.
நன்றி லவ்டேல் மேடி.
நன்றி கதிர்.
நன்றி நாஞ்சில் நாதம்.
நன்றி ஸ்ரீமதி.

அனுஜன்யா said...

நல்ல சுவாரஸ்யம். கதிர் பதிவு படிக்க வேண்டும். நல்லா எழுதுறீங்க இலக்கியன்.

அனுஜன்யா

நாடோடி இலக்கியன் said...

நன்றி அனுஜன்யா(உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு (பார்ப்பதற்கு) ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க).

செல்வேந்திரன் said...

கொங்கு மண்டல பெருந்தனக்காரர்களுக்கு இப்போதெல்லாம் கவுரவத்தின் அடையாளங்களுள் ஒன்றாகக் கருதுவது 'கல்வி நிறுவனங்களையே'. என்னதான் பணக்காரனாக இருந்தாலும் சொந்தமாக ஒரு கல்லூரி இருந்தால்தான் ஆச்சு. இந்த மாதிரி கல்லூரிகளில் விரிவுரையாளராக வேலை பார்க்க நினைப்பதே தவறு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி செல்வேந்திரன்,

//இந்த மாதிரி கல்லூரிகளில் விரிவுரையாளராக வேலை பார்க்க நினைப்பதே தவறு.//

:(