மூணார் செல்லும் திட்டம் பல முறை ட்ராப் ஆகியதால், இந்த முறை வெயிலான் சொன்னதும் மிஸ் பண்ணக் கூடாது என்று உறுதியோடு இருந்தேன். பிளான்படி திருப்பூரிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக் கிழமை மாலை, மூணார் நோக்கிய எங்கள் பயணம் இனிதே துவங்கியது.
*பல்லடம் டூ உடுமலைப் பேட்டை சாலையின் இருமருங்கிலும் இருந்த ராட்சத காற்றாடிகளை (காற்றாலை மின்சாரம்) அருகில் சென்று பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. வெயிலான் காற்றாலை மின்சாரத் தயாரிப்புக் குறித்து ஏதோ கூறிக் கொண்டிருந்தார், அண்ணாச்சி வாங்கி வந்த கிரில்டு சிக்கன் கம்பாகவும், நான் காஞ்ச மாடாகவும் ஆகிப் போனதில் வெயிலான் சொல்லிக் கொண்டிருந்ததற்கெல்லாம் மையமாக தலையாட்டி வைத்தேன்.
*உடுமலைப் பேட்டையை அடைந்தபோதே நன்றாக இருட்டிவிட்டதால் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். சின்னாறு செக்போஸ்ட்டை தாண்டியதும் யானைகளின் நடமாட்டம் ஜாஸ்தியாக இருக்கும் என்றும், இருட்டுவதற்கு முன்பே வனப் பகுதியைக் கடந்திருக்க வேண்டுமென்றும் பீதியைக் கிளப்பினார் டிரைவர்.இருந்தாலும் யானைகளை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை,ஏனெனில் எங்க கூடத் தான் கும்க்கி இருந்தாரே..!
*யானைக்கு பதிலாக காட்டெருமையை லைவா பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. யானையைக் கூட முன்பொரு முறை பரம்பிக் குளத்தில் பார்த்திருக்கிறேன் (கோயில் யானையைச் சொல்லவில்லை). முதன் முறையாக காட்டெருமையை இப்போது தான் பார்க்கிறேன், பயங்கர த்திரில்லாக இருந்தது. (வெயிலான், இந்த இடத்தில ”அடடா ஒரு காட்டெருமையே காட்டெருமையை பத்தி .....! !” என்றுத் தோணுமே, அது ரொம்ப பழைய மொக்கை, சரியா ).
*நள்ளிரவு ஒரு மணியளவில் மூணாரின் ’த்ரீ ரிவர்’ தங்கும் விடுதியை அடைந்தோம். வீடு பெரிதாக இருப்பினும் ஆறு பேர் படுக்கை வசதி மட்டுமே இருந்தது, நாங்களோ எட்டு பேர். அட்ஜெஸ்ட் பண்ணி தூங்கியதில் விடிய விடிய கட்டிலில் ஃபுட் போர்ட் அடித்து தூ(தொ)ங்க வேண்டியதாகிப் போச்சு.(இடையில் யாருய்யா அது தலகானியை உருவியது).
*அடுத்த நாள்,காலை உணவை முடித்து கிளம்புவதற்கு மணி பதினொன்றாகிவிட்டது, கும்க்கி அவர்களின் ஆலோசனையின்படி மூணாரில் இருந்து தேனி, கம்பம் தெரியும் ’டாப் ஸ்டேஷன்’ வியூ பாயிண்ட்டுக்கு போக முடிவானது. ”வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு” என்ற பாடல் வரிகளுக்கேற்ப வழியெங்கும் அழகான தேயிலைத் தோட்டங்கள். காரில் போய்க் கொண்டிருந்த போதே ”குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தைப் பற்றி அண்ணாச்சி, கடற்கரைகாரன் சிவா ஒரு அணியிலும், கும்க்கி அவர்கள் தனியாகவும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். (கும்க்கி அண்ணா நீங்க விவாதித்த விதம் பிடித்திருந்தது, படத்தை பற்றிய உங்க பார்வை எனக்கு வித்தியாசமாகப் பட்டது).
*ஒரு மணி நேர பயணத்தில் ஓரிரு நீர்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றைக் கடந்து வியூ பாயிண்ட்டை அடைந்தோம். என்ன ஒரு அற்புதமான இடம். இந்த இடத்தின் அழகைப் பற்றி சொல்லணும்னா எந்த கோணத்தில் கிளிக்கினாலும் போட்டொ ஷாப்பின் அவசியமிராத அசத்தலான போட்டோஸ் கிடைக்கும். நீண்டு கிடந்த பள்ளத்தாக்கில் ஆங்காங்கே ஆதிவாசியினர் குடியிருப்பு, எப்படி அவர்கள் எந்த வசதியுமில்லாமல் அங்கே இருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. பனிமூட்டம் அதிகமாதலால் தெளிவான வியூ கிடைக்காமல் தேனியையும், கம்பத்தையும் பார்க்க இயலவில்லை, மாறாக அருகே மலைத்தேன் விற்றவரைச் சுற்றி இருந்த தேனீக்களையும்,மரக் கம்பத்தையும் தான் பார்க்க முடிந்தது. (ஹி ஹி மொக்கைதான், முடியலைல ).
*வியூ பாயிண்ட்டில் போடப்பட்டிருந்த சேரில் இயற்கையை ரசித்தபடி அமர்ந்திருந்த போது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருத்தர் என்னிடம் வந்து “ஷெல் ஐ டேக் எ போட்டொகிராஃப் ?”என்றார். ஏன் என்னிடம் வந்து கேட்கிறார் என்று குழம்பியபடியே நம்மல எதுக்கு போட்டொ புடிக்கட்டுமான்னு கேட்கிறான், ஒரு வேளை நாம் அம்புட்டு அழகாவா இருக்கோம்னு கொஞ்ச நேரத்தில் மணிரத்னம் பட கனவெல்லாம் வந்து போச்சு.ஒரு மாதிரி இஞ்சி தின்ன எஃபெக்டோட ஓகே என்றதும் நான் அமர்ந்திருந்த சேரைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு அழகான நார்த் இண்டியன் குழந்தையை போகஸ் பண்ண ஆரம்பித்த உடன் தான் எனக்கு வெளங்குச்சு. (ப்ச் பல்புதான், இமேஜின் ஹார்ஸை நிறுத்திவிட்டு தொடருங்க).
*எங்கே என்னைத்தான் போட்டோ புடிக்கப் போறானோன்னு பொறாமையா பார்த்துகிட்டு இருந்த அண்ணாச்சி ”ஹா ஹா” என்று பயங்கரமா சிரித்துவிட்டு ”அதுக்கு நீங்க அவர்களிடமல்லவா பர்மிஷன் வாங்கணும்” என்று அருகில் இருந்த நார்த் இண்டியன் லேடியை கை காட்டினார். (அந்த குழந்தை செவ செவன்னு இருந்ததுங்க என்னத்த நெனச்சுகிட்டு எங்கிட்ட பர்மிஷன் கேட்டானோ).
*கும்க்கி அண்ணே, இள வயதிலேயே அம்மா வேஷம் போட்ட ஒரு நடிகையைப் பற்றி சொன்னீங்களே அவங்க திறமையான நடிகை,பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கணும்னு சொன்னதெல்லாம் நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். (எல்லாம் ஓகே கடைசியில் அவங்க நல்ல பியூட்டின்னு சொன்னீங்களே, அதுக்கு பேசாம என்னைய வியூ பாயிண்ட்டிலிருந்து புடிச்சு தள்ளிவிட்டிருக்கலாம்).
*மதிய சாப்பாடாக பிரியாணி என்ற பெயரில் வெள்ளை சாதத்தில் இரண்டு சிக்கன் துண்டுகளை புதைத்து கொடுத்தார்கள்.பந்திக்கு முந்திய எல்லோருக்கும் கிழங்கு கிடைத்தது, நான் லேட்டா போனதால் கிழங்கு போச்சேன்னு பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதா போச்சு. (ஏன்யா ஒரு கர்ட்டஸிக்காகக் கூடவா கேட்கக் கூடாது, நீங்க கிழங்கு திங்கும்போது என் நெலமையை நெனச்சு பார்த்தீங்களா ஹ்ம்).
*ஐந்தரை மணிக்கு விடுதியை அடைந்து கொஞ்ச நேரம் கேரள சேனல்களை மேய்ந்துவிட்டு (அண்ணாச்சி, நாம ரெண்டு பேரும் மலையாளச் சேனல்களை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணனையும், ஜாக்கியையும் நீங்க பார்த்திருக்கனுமே) மீண்டும் பத்து மணி வாக்கில் இரவு உணவிற்காக கீழிறங்கி வந்த போது எல்லா உணவகங்களிலும் கூட்டம், பெரியதொரு கையேந்தி பவனில் மியூசிக் சேர் முயற்சியில் அண்ணாச்சி,சிவா மற்றும் நான் எப்படியோ இடம் பிடித்து ஆப்பத்தை நிரப்பி ஏப்பத்தை விட்டு விட்டு, மற்றவர்களுக்கு பார்சல் கேட்டால் ”பார்சல் கொடுக்காம் பட்டில்யா” என்று கையை விரிக்க, அடுத்தடுத்த கடைகளிலும் பார்சல் கிடையாது என்று கூற மற்றவர்கள் பிஸ்கட், ஸ்னாக்ஸில் வயிறை ரொப்ப வேண்டியதாகிவிட்டது.
*அன்றிரவு உஷாரா இன்னொரு கூடுதல் பெட் வாங்கி கீழே படுத்துக் கொண்டேன், தூக்கத்தில் பயங்கரமாக உளறி சிரித்தேனாம்,காலையில் சிவா சொன்னார். (நானாவது தூக்கத்தில் தான் உளறினேன்). *காலையில் பனிமூடிய சாலையூடாக ஒரு பேரருவியை அடைந்தோம். என்னே ஒரு பிரமாண்டமான அருவி!, ஒரு பெரிய நீர்த்தேக்கத்தில் பாலை நிரப்பி வைத்து திறந்துவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு வெள்ளை வெள்ளம்.
*அருவியின் எதிரே இருந்த பாலத்தின் கீழிருந்த குன்றில் எல்லோரும் சிறிது நேரம் யோகாசனம் செய்துவிட்டு சில பல போஸ்களில் போட்டோஸ் எடுத்துக்கொண்டு மீண்டும் அடுத்த இடத்திற்கு பயணமானோம். (அண்ணாச்சி, உங்க தலைப்பா கட்டு, ஜெர்க்கின் காஸ்ட்யூமில் அப்படியே எங்க அண்ணனை நினைவு படுத்தினீங்க, ஜக்கம்மா முன்னேற்ற கழகத்தில் ஆள் தேடுறாங்களாம் :) ).
*தேயிலை எஸ்ட்டேட்டில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு நாளாவது தங்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை (கும்க்கி அண்ணனும் அதே தான் சொன்னார்). அந்த ஆசை இப்பயணத்தில் நிறைவேறியது. நண்பர் ராஜ் (வெயிலானின் அலுவலக நண்பர்) கண்ணன் தேவன் எஸ்டேட்டில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டின் எதிரே பல வண்ணங்களில் ஜினியா பூக்கள் மலர்ந்து வரவேற்றன. ராஜின் குடும்பத்தார் எங்களுக்கு அசர வைக்கும் வரவேற்பளித்தார்கள். அற்புதமான சுவையில் சிக்கனும், கேரள ஸ்பெஷல் மத்தி மீன் குழம்புமாக பெரிய விருந்தே கொடுத்து அசத்தி விட்டார்கள். (ராஜ்,நாடோடிகள் மேட்டரெல்லாம் சொல்லாமல் உங்களப் பத்தி பெருமையா சொல்லியிருக்கேன் அடுத்தத் தடவையும் பார்த்து செய்யுங்க, என்னா டேஸ்டுய்யா அந்த சாப்பாடு சான்சே இல்ல ராஜ்).
*அத்தனை சிறிய இடத்தை அவர்கள் யுட்டிலைஸ் பண்ணியிருக்கிற விதம் அசர வைத்தது. அங்கிருந்து கிளம்பும் போது ராஜையும் அவரின் அண்ணனையும் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கச் சொன்னப்போ ராஜ் ரொம்ப தயங்கி அண்ணனை விட்டு கொஞ்சம் விலகியே நின்னார். சேர்ந்து நில்லுங்க என்று சொன்னதும் ராஜின் அண்ணன் டக்கென்று தன் தம்பியை அணைத்தபடி நின்று தம்பியை ஒரு பாச பார்வை பார்த்தார் பாருங்க, சே எனக்கு ஒரு மாதிரி சிலிர்த்துவிட்டது. ( சுத்தி போடச் சொல்லுங்கப்பா கண்ணு வச்சிட்டேன்).
* நாங்கள் இவ்வளவு ரகளையடித்துக் கொண்டிருக்க பதிவுலகிற்கு சம்பந்தமில்லாத நண்பர்களான கண்ணன் மற்றும் திரு.ரகுராம் இருவரும் தாமரை இலை நீர் போல ஒட்டி ஒட்டாமலே இருந்தார்கள்.( அனுஜன்யாவின் கவிதைகளைப் பற்றி பேசினால் பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள்).
*என்னடா திங்கிறத பற்றியே எழுதியிருக்கானே, மூணாரின் இயற்கையை வர்ணிக்கவில்லையேன்னு யோசிக்குறீங்களா. ”உனை பார்த்து பார்த்து வாழ நகக் கண்ணில் பார்வை வேண்டும்” என்ற பாடல் வரிகளைப் போன்று மூணாரின் அழகை ரசிக்க உடம்பெங்கும் கண்ணாக இருந்தாலும் பத்தாதுங்க. அதை எப்படி நான் எழுத்தில் கொண்டு வருவது. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் கண்டிப்பா ஒரு முறையேனும் மூணார் போய் வாருங்கள், சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அமைத்துக் கொண்டாவது போய் வாருங்கள்.(நண்பர்களா என்னை மூணாரிலேயே தொலைத்துவிட்டு வந்திருக்கலாம்).

*மீண்டும் உடுமலைப் பேட்டை வந்த உடன் நண்பர் ரங்ஸின் அன்பின் அழைப்பால் உடுமலைக்கு அருகே இருக்கும் அவரின் கிராமத்து வீட்டிற்குச் சென்றோம். அற்புதமான இயற்கைச் சூழலில் தென்னை மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் அவரின் வீடு. ரங்ஸின் வீட்டார் எங்களை அன்பு மழையில் நனைத்து விட்டார்கள். அங்கேயும் இட்லி, பூரி, உப்புமா, ஸ்வீட்ஸ், பழங்கள் என வெயிட்டான சாப்பாடு. (இந்த பதிவுலகம் என்ன செய்ததுன்னு யாராவது இனி கேட்பீங்க, "ரங்ஸ், மதிய நேரத்தில் வந்திருந்தால் நாட்டுக் கோழி ரெடியாக இருந்தது என்றீர்கள்,ஞாபகம் வச்சுக்கோங்க அந்த ஒரு விஷயத்திற்காகவே நம்ம ஃபிரண்ஷிப்பை தொடர்வதாக உத்தேசம்").
*என்னடா திங்கிறத பற்றியே எழுதியிருக்கானே, மூணாரின் இயற்கையை வர்ணிக்கவில்லையேன்னு யோசிக்குறீங்களா. ”உனை பார்த்து பார்த்து வாழ நகக் கண்ணில் பார்வை வேண்டும்” என்ற பாடல் வரிகளைப் போன்று மூணாரின் அழகை ரசிக்க உடம்பெங்கும் கண்ணாக இருந்தாலும் பத்தாதுங்க. அதை எப்படி நான் எழுத்தில் கொண்டு வருவது. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் கண்டிப்பா ஒரு முறையேனும் மூணார் போய் வாருங்கள், சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அமைத்துக் கொண்டாவது போய் வாருங்கள்.(நண்பர்களா என்னை மூணாரிலேயே தொலைத்துவிட்டு வந்திருக்கலாம்).
37 comments:
எல்லாரும் நல்லா இருங்க :)
//(நண்பர்களா என்னை அங்கேயே நீங்க தொலைத்துவிட்டு வந்திருக்கலாம்).//
நானும் இப்போ அதேதான் ஃபீல் பண்ணறேன் :)))

முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள்
படிச்சுட்டு பின்னாடி வருகிறேன்
ரொம்ப நல்ல இருக்கு
வெயிலான் அண்ணன் தொப்பிய காணோம்.
//*கும்க்கி அண்ணே, இள வயதிலேயே அம்மா வேஷம் போட்ட ஒரு நடியைப் பற்றி சொன்னீங்களே அவங்க திறமையான நடிகை,பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கணும்னு சொன்னதெல்லாம் ஒத்துக்குறேன்,//
யார் அந்த நடிகை.சொல்லுங்க நான் வந்து உங்களை கீழே தள்ளி விடுறேன்.
//.(ஹ்ம் நானாவது தூக்கத்தில் தான் உளறினேன்).
//
இதுல பெரிய உள்குத்து,வெளிகுத்து எல்லாம் இருக்கும் போல
//படிச்சுட்டு பின்னாடி வருகிறேன்//
கதிர் அண்ணே - இது தப்பாட்டம்
அழக்கான தொகுப்பு இலக்கியன்
ஆனாலும் நிஜமாய் நீங்கள் நீல வண்ண எழுத்தில் சொன்னதை விட
மனதிற்குள் பேசிய சிவப்பு வார்த்தைகள் அருமையோ அருமை
எப்பவுமே மனசு உண்மையை உள்ளபடியே பேசுகிறது
//விடிய விடிய கட்டிலில் ஃபுட் போர்ட் அடித்து தூ(தொ)ங்க வேண்டியாதாகிப் போச்சு.(இடையில் யாருய்யா அது தலகானியை உறுவியது).//
சிரித்து முடியவில்லை.
அடைப்புக்குறிக்குள் இருக்கும் வாசகங்கள் அருமை.
http://rajasabai.blogspot.com/2009/08/50.html
// வெயிலான் அண்ணன் தொப்பிய காணோம். //
காக்கா தூக்கீட்டுப் போயிடுச்சுபா :)
நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க சூப்பர்!
//நீண்டு கிடந்த பள்ளத்தாக்கில் ஆங்காங்கே ஆதிவாசியினர் குடியிருப்பு, எப்படி அவர்கள் எந்த வசதியுமில்லாமல் அங்கே இருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. //
உலகத்த நினைச்சேன்....சிரிச்சேன்! .............நல்ல காத்து இல்லாம, குடிக்க, கழுவ நல்ல தண்ணி இல்லாம, திருப்பூர்ல அந்த கான்க்ரீட் உலகத்துல இவங்க பாவம் எப்படி இருக்காங்களோ தெரியல என்று ஆதிவாசி சொன்னது எண் காதுல விழுந்தது, அதனால தான்.....சிரிச்சேன்.
---
ரொம்ப அருமையா எழுதிருக்கிங்க....அதுவும் அந்த சிகப்பு எழுத்து துணுக்குகள் ரொம்ப அருமையா இருக்கு....வாழ்த்துகள்!
///(அந்த குழந்தை செவ செவன்னு இருந்ததுங்க என்னத்த நெனச்சுகிட்டு எங்கிட்ட பர்மிஷன் கேட்டானோ)///
இதைத்தான் எங்க ஊருல ஊமைக்குசும்புனு சொல்லுவோம்.
///*ஐந்தரை மணிக்கு விடுதியை அடைந்து கொஞ்ச நேரம் கேரள சேனல்களை மேய்ந்துவிட்டு (அண்ணாச்சி நாம் ரெண்டு பேரும் மலையாளச் சேனல்களை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணனையும், ஜாக்கியையும் நீங்க பார்த்திருக்கனுமே)///
இவுங்க ரெண்டு பேரும் பேசினதுல முக்காவாசி மலையாள சேனல்/படத்தைப் பத்திதான்பா..
///அன்றிரவு உஷாரா இன்னொரு கூடுதல் பெட் வாங்கி கீழே படுத்துக் கொண்டேன், தூக்கத்தில் பயங்கரமாக உளறி சிரித்தேனாம்,காலையில் சிவா சொன்னார்.(ஹ்ம் நானாவது தூக்கத்தில் தான் உளறினேன்).///
அப்புறம் தூக்கத்துல உளறுனதை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும்..குறிப்பா தஞ்சாவூரைப் பத்தி!!
///”உனை பார்த்து பார்த்து வாழ நகக் கண்ணில் பார்வை வேண்டும்” என்ற பாடல் வரிகளைப் போன்று மூனாரின் அழகை ரசிக்க உடம்பெங்கும் கண்ணாக இருந்தாலும் பத்தாதுங்க.///
எந்த படத்தில் வர்ற பாட்டு இது?
அந்த VIEW POINT பேரு 'டாப் ஸ்டேஷன்'-ங்க... ரொம்ப அருமையான இடம்... அப்படியே கீழே கொஞ்சம் தூரம் போனா 'ஆரஞ்சு County"-னு ஒரு இடம் வரும்... மூனாருல மறக்க முடியாத இடம்-ங்க அது...
அன்புடன்,
ஒவ்வாக்காசு.
எல்லா படங்களும்... இடங்களும் அருமை .....!!
//தேனியையும், கம்பத்தையும் பார்க்க இயலவில்லை//
மிஸ் பண்ணிட்டீங்க எங்க ஊருங்க தேனி ரம்மியமா பசுமையா இருக்கும்...
போட்டொ அண்ணாச்சி கேமராவுல பிடிச்சதா நல்லாயிருக்கு
எங்க பரிசல் அண்ணாச்சி வரலியா?
அருவி படம் நல்லாயிருக்கு!
pari ,
i really laughed a lot after reading ur comments, gud sense of humour, photos and so on, keep it up my ever & ever dude
karthik
நண்பரே பிறந்த நாள் வாழ்த்துகள்.
மூணார் - ஒரு அருமையான பயணக் குறிப்பு.
திருப்பூரில் பார்த்த போது நீங்க அதிகம் பேசவேயில்லை.
உங்கள் அன்புக்காகவே மறுபடியும் ஒரு முறை திருப்பூர் வர வேண்டும் என நினைக்கின்றேன்.
சிங்கப்பூர்ல நாங்க பதிவர் சந்திப்பு நடத்துறத விட நீங்க அதிகமா டூர் போறீங்க. பொறாமையா இருக்கு.
நானும் இந்த ஊருக்கு போகணும் போகணும்னு எம்புட்டு நாளா ஆவலா காத்திகிட்டு இருக்கேன். ம்... என்னத்த சொல்ல, நேரம் காலம் கூடி வரணுமே.
உங்கள் புகைப்படங்களைப் பார்த்ததும் பொறாமையாக இருக்கிறது. :)
மூணார் - ஒரு அருமையான பயணக் குறிப்பு.
பிறந்த நாள் வாழ்த்துகள் நாடோடி இலக்கியன்
நன்றி பாசகி,(பயணக் கட்டுரை எழுதினால் தான் இந்த பக்கம் வருவீங்களா நண்பரே).
நன்றி கதிர்(வாழ்த்துகளுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க,ஆக்சுவலா சோலைக் காடுகள் ஞாபகம் வந்துகிட்டே இருந்தது).
நன்றி அரவிந்த்(ஸ்ட்ரெய்ட்டா வெளிக்குத்துதான் :)) )
நன்றி துபாய் ராஜா.
நன்றி வெயிலான்.
நன்றி மங்களூர் சிவா.
நன்றி RR,(ரொம்ப சரிங்க).
நன்றி இரா.சிவக்குமரன்.(ஊமைக் குசும்பா அப்படின்னா?குழந்தை மாதிரி முகத்தை வச்சிகிட்டு கேட்கிறேன் :) ).
நன்றி ஒவ்வாக்காசு(டாப் ஸ்டேஷன் பெயரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே,ஆரஞ்ச் country மிஸ் பண்ணிட்டோம்,அடுத்த முறை ஞாபகமா பார்க்கணும்).
நன்றி லவ்டேல் மேடி.
நன்றி பிரியமுடன் வசந்த்,(தேனிக்கு ஒரு முறை போயிருக்கிறேன், அருமையான லோகேஷன்ஸ்).
நன்றி வெங்கி ராஜா,(அப்போ எழுதியிருக்கிறது நல்லாயில்லன்னு சொல்றீங்க...)
நன்றி கார்த்தி,(ரொம்ப சந்தோஷமா இருக்கு கார்த்தி, வால்பாறையில் எடுத்த ஃபோட்டோஸ் உன்னிடம் இருக்கா?).
நன்றி ராகவன் நைஜீரியா,(கண்டிப்பா வாங்க ஸார்,அடுத்த முறை வரும்போது நிறைய பேசுறேன் :) ).
நன்றி ஜோஸப் பால்ராஜ்,(கண்ணு வச்சிடீங்களா?)
நன்றி ஊர்சுற்றி,(மிஸ் பண்ணிடாதீங்க,அருமையான ஊர் போய் சுற்றிவிட்டு வாங்க).
நன்றி நாஞ்சில் நாதம்,(நெல்லியம்பதி கட்டுரையின் சாயல் வரக் கூடாதுன்னு தான் கொஞ்சம் காமடியாக எழுத முயன்றேன்,அடுத்த பதிவில் கலக்கிடலாம்).
அண்ணா நல்ல போஸ்ட்.. :)) இவ்ளோ பெரிசா, நடந்தத மறக்காம எழுதவும் ஒரு திறமை வேணும், அதோட கொஞ்சம் பொறுமையும் வேணும்... U R Really great... :)) இன்னைக்கு தான் கொஞ்சம் பெரிய பதிவு போட்டேன்... அதுக்கே என்னால முடியல.. :((
நன்றி ஸ்ரீமதி,(இந்த கட்டுரையையும் படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க).
என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!
நன்றி பிரபா,(பார்த்துட்டா போச்சு).
வெயிலான் காற்றாலை மின்சாரத் தயாரிப்புக் குறித்து ஏதோ கூறிக் கொண்டிருந்தார் //
வெயிலான் இவ்வளவு தெரிந்த மாமேதை என எனக்குத் தெரியாமல் போனதே....
அட்ஜெஸ்ட் பண்ணி தூங்கியதில் விடிய விடிய கட்டிலில் ஃபுட் போர்ட் அடித்து தூ(தொ)ங்க வேண்டியதாகிப் போச்சு. //
ஹாஹாஹா....
எந்த கோணத்தில் கிளிக்கினாலும் போட்டொ ஷாப்பின் அவசியமிராத அசத்தலான ஃபோட்டோஸ் கிடைக்கும். //
அழகா சொல்லிருக்கீங்க.
அந்த குழந்தை செவ செவன்னு இருந்ததுங்க என்னத்த நெனச்சுகிட்டு எங்கிட்ட பர்மிஷன் கேட்டானோ ///
ஹாஹாஹா..... ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்.
அங்கேயும் இட்லி, பூரி, உப்புமா, ஸ்வீட்ஸ், பழங்கள் என வெயிட்டான சாப்பாடு //
எங்கே போனாலும் அதை மட்டும் விடாதீங்க.
நல்ல பேச்சுத் தமிழில் அழகான படங்களுடன், நல்ல பயணக் கட்டுரை. அடுத்து மூணாருக்கு போய்ட வேண்டியது தான்.
வயித்தால போக..
நன்றி விக்னேஷ்வரி,(மூணார் அவசியம் போய் பாருங்க).
நன்றி சஞ்சய்(அது அன்னைக்கே போச்சு :) )
நல்ல கட்டுரை..
மூணாறு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்..
நன்றி பட்டிக்காட்டான்.(கண்டிப்பா போய் வாருங்கள் நண்பா)
சே...இந்த பயணக்கட்டுரையை படித்ததிலிருந்து எனக்கும் மூணார் போக வேண்டும் போல இருக்கு.
நன்றி கும்க்கி,
யோவ்,என்ன நக்கலா,இந்த பின்னூட்டம் உங்க வேலையா இல்லை சஞ்சயா?
Post a Comment