Thursday, August 27, 2009

நன்றி நாஞ்சில் நாதம்....

வாசிப்பு என்பதெல்லாம் என்னவென்றே அறியாத தருணத்தில் தான் என் கைகளில் அந்த புத்தகம் வந்தது.முதலில் அதன் அட்டைப் படத்தால் தான் கவரப்பட்டேன்.

பழுப்பும்,கருப்புமான வரிகளை தோலாகப் போர்த்தியபடி கம்பீரமான பார்வையோடு மரங்கள் அடர்ந்த வனத்தில் படுத்திருக்கும் புலியின் படத்தை அட்டையில் அச்சிடப்பட்டிருந்த அந்த புத்தகம் என் கைகளுக்கு வந்த நாளில் பார்த்து ரசித்து, ரசித்துப் பார்த்து என அத்தருணம் வற்றா நதியின் கரைக் கசியும் நீர்த் தடம் போல இன்னும் என்னுள் ஈரமாய்.

புத்தகத்தின் உள்ளே என்ன செய்தி இருக்கிறதென்பதெல்லாம் திறந்து பார்க்கும் முன்பு அந்த புலியின் படத்தைப் பற்றியே அருகில் இருந்த நண்பர்களிடமெல்லாம் வியந்து பேசிக் கொண்டிருந்தேன். நண்பர்களையும் வியப்பில் ஆழ்த்தியது அப்புலி.

புத்தகத்தை முதன் முறை பிரித்தபோது எழுந்த வாசத்தை இப்பொழுதும் கூட என்னால் நுகர முடிகிறது. மண் தொடும் மழையின் வாசத்தை விடவும் அந்த புத்தக வாசம் என்னை கட்டிப்போட்டது.

ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் தான் அப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.ஒரு வகையில் படித்தே ஆக வேண்டிய கட்டாயம் கூட இருந்தது எனலாம். புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே தீண்டாமைக் குறித்த ஆழ்ந்த கருத்துக்கள்.

புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கத்தில் இருந்த குறும் பாக்கள் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.ஒவ்வொரு பாக்களுக்கும் ஏற்ற காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தது. அவ்வோவியங்கள்,பாக்களில் சொல்லப் பட்டிருக்கும் கருத்தைத் தாண்டியும் வாசிப்போருக்கு பல கதைகளைச் சொல்லும். அவ்வோவியங்களில் மனம் லயித்து தனியானதொரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்து அவற்றோடு வாழ்ந்த காலமெல்லாம் இப்போதும் கூட கனவில் அவ்வப்போது வந்து போகிறது. அத்தனை சக்தி படைத்த ஓவியங்கள் அவை.

சாப்பிடும் போது, தூங்கும் போது என எப்போதும் அப்புத்தகத்தைச் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தேன். என் அம்மா அப்போதெல்லாம் சொல்வார் ”காக்காய்க்கொரு மூக்குத்தியாம் அதை போடுமாம் கழட்டுமாம்” என்று.அந்த அளவிற்கு ஒரு பொக்கிஷம் போல் என்னுடனேயே வைத்திருந்தேன்.

புத்தகத்தை எனக்குத் தந்தவர் அடிக்கடி நான் அதை சரியாக வாசிக்கிறேனா என்பதை சில கேள்விகள் கேட்டு சரி பார்த்துக் கொள்வார். நான் அப்புத்தகத்தை ரசித்து ரசித்துப் படித்ததால் எந்த பக்கத்தில் என்ன இருக்கிறதென்பதை கிளிப் பிள்ளை போல் ஒப்பிக்கும் அளவிற்கு தயாராகிவிட்டிருந்தேன்.

எனக்கு இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது அப்புத்தகத்தில் இருந்த பாடலொன்று,

ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்.


ஹி ஹி நான் வாசித்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை இது. நண்பர் நாஞ்சில் நாதம் ஏதாவது புத்தகத்தைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை பதிவெழுத சொன்னார், அதான்.

21 comments:

இரும்புத்திரை said...

உஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...

Unknown said...

அண்ணா நீங்களுமா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... உலகத்துல எனக்குன்னு ஒரே ஒரு மொக்கை போடாத அண்ணா இருந்தார்.. அவரும் இப்போ... :((

Unknown said...

ஆனா, நானும் என்னமோ எதோன்னு ரொம்ப சீரியஸா வேற படிச்சிட்டேன்...

Unknown said...

பதிவு சூப்பர்... யூகிக்கவே முடியல இப்படி ஒரு மொக்கைய... :))

Unknown said...

//ஆனை ஆனை
அழகர் ஆனை//

எனக்கென்னமோ இது புக்ல இருக்கற பாடல் மாதிரி தெரியல அண்ணா... என் தாத்தா நான் சின்ன குழந்தையா இருக்கும் போது முதுகுல ஏத்திக்கிட்டு பாடிருக்கார் கேட்டிருக்கேன்.. ஆனா, படிச்சதில்ல... :((

தினேஷ் said...

இப்டியெல்லாமா?

தினேஷ் said...

புலி படம்ன்னவுடனேயே மண்டைல ஏதோ சின்ன வயசுல் படிச்ச தமிழ் புக்குனு உள்ள குத்துச்சு ,ஆனாலும் அண்ணன் அத சொல்ல மாட்டார்னு நம்பி படிச்சா கடைசில ரிவிட்டு..

முடியல..

க.பாலாசி said...

ஞானம் சிலபேருக்கு எங்ககிருந்து வேணும்னாலும் வரும்... உங்களுக்கு ஒன்னாம் வகுப்பிலேர்ந்து வந்திருக்கும்போல...

இத படிக்கிறவங்கதான் கொஞ்சம் பாவம்...

ஈரோடு கதிர் said...

இரண்டாவது பத்தி படிக்கும்போதே இது ஏதோ ஒரு 'பில்டப்' எனத் தெரிந்துவிட்டது,
ஆனாலும்
//சாப்பிடும் போது, தூங்கும் போது என எப்போதும் அப்புத்தகத்தைச் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தேன்.//

நான் புத்தகத்தோடு அந்த மாதிரி உறங்கும் குட்டிக் குழந்தைகள் கண்முன்னே வந்து போனார்கள்.

//நண்பர் நாஞ்சில் நாதம் ஏதாவது புத்தகத்தைப் பற்றி//

நாஞ்சிலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பாரி... மீண்டும் சொல்கிறேன்
உங்கள் எழுத்துநடை அருமை

Unknown said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நேர்ல சிக்காமயா போவ?

நர்சிம் said...

//ஹி ஹி நான் வாசித்த ஒன்றாம்//

அவர் சொன்னா ஹிஹி தான்..

கலக்கல்.

சிவக்குமரன் said...

///ஸ்ரீமதி 27 August, 2009 2:18:00 PM IST
ஆனா, நானும் என்னமோ எதோன்னு ரொம்ப சீரியஸா வேற படிச்சிட்டேன்...///

புள்ள என்னடா பொறுப்பா நமக்கு புடிச்ச விஷயமா எழுதிக்குதேன்னு படிச்சினே வந்தா,, ஆனை ஆனை அழகர் ஆனையாம்..
ம் ம் ம்

☼ வெயிலான் said...

இருக்குப்பே உனக்கு.......

என்கிட்டயும், நாஞ்சில் நாதத்துகிட்டயும்.

பாசகி said...

நல்லாருங்க ஜி :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி அரவிந்த். (இதுக்கேவா இன்னும் இருக்குல்ல).

நன்றி ஸ்ரீமதி.
//நானும் என்னமோ எதோன்னு ரொம்ப சீரியஸா வேற படிச்சிட்டேன்//

ஹைய்யா,நான் பாஸாயிட்டேன்.

நன்றி சூரியன்.(இதுக்கே முடியலியா?அப்போ அடுத்தடுத்து வரிசையா வரப்போகுதே :) )

நன்றி பாலாஜி,(யாருங்க அந்த ஞானம் :) )

நன்றி கதிர்,(இந்த பதிவெல்லாம் கண்டும் காணாதது போல போயிட்டே இருக்கணும்,சரிங்ளா கதிர்,சீக்கிரமா நல்ல பதிவு வரும்.. :) )

நன்றி சீனு,(ஆஹா,அண்ணே நீங்க எந்த ஊருங்கண்ணே சொன்னா கொஞ்சம் உஷாரா இருக்கலாம் :) ).

நன்றி நர்சிம்,(மொக்கை போட்ட தான் நம்ம பக்கம் வருவீங்களா நண்பா).

நன்றி சிவா.(ஹி ஹி)

நன்றி வெயிலான்,(நான் எங்க ஊருக்கு போயிட்டேன்).

நன்றி பாசகி.(ரொம்ப வலிக்குதா :) )

கார்த்திகைப் பாண்டியன் said...

நாஞ்சில் நாதம் அண்ணே.. எல்லாரோட ப்ளாக்லயும் பண்ற மாதிரி ஸ்மைலி போட்டுட்டு போகாம ஏன் இப்படி பண்ணினீங்க.. பாருங்க... இலக்கியனுக்கு என்னமோ ஆகிப்போச்சு..

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

:)))

Venkatesh Kumaravel said...

எந்த சப்ஜெக்டையும் வச்சு மொக்கை பண்றது...ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.(ஹி ஹி).

நன்றி சந்தனமுல்லை.

நன்றி வெங்கிராஜா,(தமிழ் சப்ஜெக்ட் மட்டும் தானே எடுத்திருக்கேன் :) )

நாஞ்சில் நாதம் said...

என்னைய டரியல் பண்ணிபுட்டீங்களே

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில்நாதம்,(ஹி ஹி இதெக்கே இப்படின்னா இன்னும் இருக்கே :) )